Skip to content
Home » ரைட்டர் பிளாக் சரிசெய்வது எப்படி?

ரைட்டர் பிளாக் சரிசெய்வது எப்படி?

    இந்த முறை ரைட்டர் பிளாக் எப்படி சரிசெய்வது? நிறைய ரைட்டர் இதுக்கு ஒரு போஸ்ட் போட்டு பார்த்திருக்கேன்.

   எழுதணும்… ஆனா எழுத ஒருமாதிரி இருக்கு. ஸ்டக் ஆகுது. மூடே சரியில்லை. என்ன பண்ணுவிங்க.?

  நான் என்ன பண்ணுவேன். எனக்கு இதுவரை அப்படி ஆச்சுனா அந்த கதையை கிடப்புல போட்டுட்டு புதுகதை எழுத ஆரம்பிச்சிடுவேன்.
   இந்த பார்முலா எல்லாருக்கும் செட்டாகாது.
   நல்ல வாசிப்பு எழுத்தோட்டத்தை தரும். அதனால தரமான எழுத்தாளர் கதையை எடுங்க வாசிங்க. ஏற்கனவே படிச்ச பிடிச்ச கதையா இருந்தா கூட மீண்டும் வாசிக்கலாம்.
  இப்ப ஒரே பாடலை பல முறை இதமா இருக்குனு கேட்ப்போம்ல. நான் எல்லாம் 90’பட பாடலை ஒலிக்க விட்டு தான் டைப்பே பண்ணுவேன். நல்ல மனதற்கு இனிய பாடலை இசையை ஒலிக்க விடலாம்.
  நான் பாட்டை போட்டு வீட்ல அத்தை வந்தாங்கன்னா அவங்க கூட பேசிட்டே டைப் பண்ணுவேன். ஒரு பக்கம் அடுத்தடுத்த கதைக்கு அவங்களிடம் கன்டெண்ட் மனசு எடுத்துக்கும்.
 
     புத்தகமும் வாசிக்க பிடிக்கலை பாட்டும் கேட்க பிடிக்கலை, என்றால் ஓவியம் வரைவிங்கன்னா வரையுங்க. உங்களோட மற்ற டெலண்ட் என்னவோ அதுல கொஞ்ச நேரம் செலவழியுங்க. வீட்ல கிட்ஸ் இருந்தா அவங்களோட விளையாடுங்க.
  போனை எடுத்து பழைய போட்டோ எல்லாம் பாருங்க. காலேஜ் டேஸ் பிரெண்ட்ஸ் அல்லது ஸ்கூல் பிரெண்ட்ஸிடம் போன் போட்டு ஒரு அரைமணி நேரம் பேசுங்க.
    அதையும் மீறி நான் தனிமை விரும்பினு எனக்கு வேற டிப்ஸ் தாங்கன்னா, காலார வாக்கிங் போங்க. ஸ்கூட்டி இருந்தா பெட்ரோல் பில் பண்ணிட்டு உங்க ஏரியாவுல சும்மாவே ரவுண்ட் அடிங்க. எங்கங்க தெருதெருவா சுத்தவானு கேட்காதிங்க.   ஷாபிங் போங்க. சும்மா விண்டோஷாபிங் கூட போகலாம். அப்படியே போறவர்ற மக்களை கவனியுங்க. அவங்களோட முகமும் வேலையும் செயலும் இப்படி எல்லாம் பார்க்கறப்ப சிறுகதை வாசிக்கற மாதிரி  இருக்கும்.
      எத்தனை மனிதர்கள் எத்தனை முகங்கள் எத்தனைவித முரணான வாழ்க்கை. இதெல்லாம் திங்க் பண்ணுங்க. காதல் ஜோடி இருந்தா ரசிங்க. திட்டாதிங்க.. உங்க கதாபாத்திரம் போல இருக்கா என்று சிந்திங்க. இப்படி எல்லாம் சிந்திச்சாலே நம்ம மனசுல இருக்கற அழுத்தம் கொடுக்கிற அந்த விஷயங்கள் எழுத தடையா இருக்கறது எல்லாம் லைட்டா இலகுவானது போல உணரலாம்.

  அதையும் மீறி எழுத தடையா பேமிலி சிட்டுவேஷன் பிராப்ளம் அதுயிதுனு பெர்ஸனல் இருந்தா கண்ணை மூடி, டீச்சரா இருந்தா ஷனஸ்கூல்ல போய் கிளாஸ் எடுக்க மாட்டேன்னு சும்மா இருப்பிங்களா? ஐடி பீல்டுல போய் கம்பியூட்டர் முன்ன வேலைசெய்யாம இருப்பிங்களா? எந்த வேலையும் இயல்பா அதுபாட்டுக்கு நடக்கும். நம்ம எழுதறதும் எழுதுவோம்னு முயற்சி பண்ணுங்க. இல்லைனா ஏன் எதுக்கு என்ற காரணம் அறிந்து வீட்டு பிரச்சனையை சால்வ் பண்ணிட்டு பிரஷ்ஷா எழுதுங்க. ஆஹ்.. நல்லா ஷவர்ல குளிச்சிட்டு எனர்ஜிட்டாகா மாறிட்டு கூட எழுதலாம். குற்றாலத்துல நிற்க பீலிங்ல ரிலாக்ஸ் பண்ணணும்.
  நீங்க சாப்பாட்டு ப்ரியர் என்றால் பிடிச்சதை செய்து சாப்பிட்டு, இல்லை கடையில வாங்கி கூட சாப்பிடலாம். நமக்கு பிடிச்சதை செய்யணும். அதான் விஷயம் 

   இதையெல்லாம் மீறி எழுத வரலை என்றால், அந்த கதை எழுத இன்னமும் உங்கள் மூளைக்குள் தேவையான விஷயங்கள் இல்லைனு அர்த்தம். மூளையில்லைனு அர்த்தம் இல்லை. அந்த கதைக்கு தேவையான விஷயம் உங்களுக்கு இன்னமும் ப்லோவா எழுத தெரியவில்லைனு அர்த்தம். அனுபவமோ அதற்கு ரிலேட்டிவான  விஷயங்கள் மூளைக்குள் இல்லைனு அர்த்தம்.

   இதைமீறி எழுதவரலைனா கொஞ்ச நாள் கேப் விடுங்க. அதுக்காக ஒரேடியா ஒருவருஷம் ஒளிந்து கொண்டு வரக்கூடாது. அப்பறம் வாசகர் “யார் நீ? ரைட்டாரா சொல்லவேயில்லை?” என்று கேட்க ஆரம்பிச்சிடுவாங்க. மினிமம் பத்து இருபது நாட்களுக்குள் உங்களை நீங்களே தட்டிக் கொடுத்து எழுத வரணும்.

ஆல் தி பெஸ்ட் 🤝
கற்றதை பகிர்வோம்.
பிரவீணா தங்கராஜ்
   
   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *