தன் கைகளிலிருந்த குறிப்பேட்டின் பக்கங்களை மெதுவாக திருப்பிய ஹர்ஷவர்தனின் கரம், சில பக்கங்களில் காய்ந்து கிடந்த அவளின் கண்ணீர் துளிகளை வேதனையுடன் தடவிப் பார்க்க, அவன் விழிகளோ அதிலிருந்த வரிகளைக் கண்டு கோபத்தில் சிவக்க, அவன் உதடுகளோ சில பல கெட்ட வார்த்தைகளை முணுமுணுத்தன.
இனி, நேரத்தை கடத்தக் கூடாது என்று எண்ணியவன், அபிஜித்திற்கு அழைத்தவாறு, அந்த மாளிகையிலிருந்து வந்த வழியே வெளியேற முயற்சித்தான்.
“ஹலோ சார், நான் நினைச்சது சரி தான். மௌனி காணாம போனதுக்கு அந்த பா**** தான் காரணம். அதுக்கு ஆதாரமா மௌனியோட டைரியை கண்டுபிடிச்சுட்டேன்.” என்று ஹர்ஷவர்தன் கூற, “வாட்? நீ இப்போ எங்க இருக்க ஹர்ஷா? நீ அவன் இடத்துல இருக்கன்னு மட்டும் சொல்லிடாத.” என்ற பதற்ற குரலுக்கு சொந்தக்காரன் அபிஜித் தான்.
“சாரி சார்.” என்று ஹர்ஷவர்தன் கூறும்போதே அவன் எங்கிருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட அபிஜித்தோ, “இடியட்! அங்க போகாதன்னு நான் அவ்ளோ சொல்லியும் கேட்காம அங்க போயிருக்க! இது நாளைக்கே உனக்கு எதிரா திரும்பலாம் ஹர்ஷா. ஏன் அதை புரிஞ்சுக்க மாட்டிங்குற?” என்று அபிஜித் கூற, சரியாக அதே சமயம் ஹர்ஷவர்தனிற்கான வலை அந்த மாளிகையின் கீழ் தளத்தில் விரிக்கப்பட்டது.
மௌனிகாவின் அறை பால்கனியிலிருந்து சற்று கீழே நீட்டியிருந்த விதனாத்தில் குதித்த ஹர்ஷவர்தன், பக்கவாட்டிலிருந்த குழாய் மூலம் கீழே இறங்கினான்.
இவை அனைத்தும் அவன் அபிஜித்துடன் செவிப்பொறி மூலம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் நிகழ்ந்திருந்தது.
ஆனால், இருவரும் எதிர்பார்க்காததோ, சரியாக ஹர்ஷவர்தன் கீழ் தளத்தில் கால் வைத்த சமயம், அவனை நோக்கி வந்தனர் இரு காவலர்கள் மற்றும் யஷ்வந்த்.
கோபமும் பதற்றமும் நிறைந்த குரலில், “சார், நான் தான் சொன்னேன்ல, என் மனைவி இவனோட தான் போயிருப்பா. இதோ, இவனும் திருட்டுத்தனமா அவ ரூம்ல இருந்து வரான். இவனை விசாரிச்சா, அவ எங்க இருக்கான்னு தெரிஞ்சுடும் சார்.” என்று தெலுங்கில் கூறினான் யஷ்வந்த்.
அவன் அடுக்கிய குற்றச்சாட்டில் ஒருநொடி திகைத்து நின்று விட்ட ஹர்ஷவர்தனோ, “வாட் தி **!” என்று கத்த, அந்த காவலர்களோ, “மிசஸ். மௌனிகா யஷ்வந்த் காணாம போன வழக்குல உங்களை விசாரிக்கணும் மிஸ்டர். ஹர்ஷவர்தன். சோ, ஸ்டேஷன் போலாம் வாங்க.” என்று கையோடு அவனை அழைத்து சென்றனர்.
அங்கு நடப்பதை அலைபேசி வழியே கேட்ட அபிஜித்தோ, “இது மாதிரி நடக்கும்னு தான் அப்போவே கேர்ஃபுல்லா இருக்க சொன்னேன்!” என்று முணுமுணுத்தபடி கிளம்ப ஆயத்தமானான்.
Wowwww… Teaser semmaiya irukku… Skrama story ah start pannunga sis…
Tq so much sis 😍😍😍 Seekirama story oda varen 😁😁😁
Super start👏
Tq so much sis 😍😍😍
Super interesting tea da. Yaru ivanugal la hero
Tq so much akka 😍😍😍 Hero va adha ippove sollita epdi 😉😉😉
Superb starting. Thrilling story ah
Tq so much sis 😍😍😍 Aama sis Murder Mystery, Crime Investigation type story
Nice starting intresting👌👌👌
Tq so much sis 😍😍😍
சூப்பர்
நன்றி 😍😍😍