Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா! – 4

வஞ்சிப்பதோரும் பேரவா! – 4

அத்தியாயம் 4

மெத்தையில் உள்ள பூவிதழ்கள், கட்டிலை சுற்றியும் சுவரிலும் அலங்கரிக்கப்பட்ட மலர்ச்சரங்கள், இருளை விரட்டியடிக்க மின்சாரத்தை மிச்சப்படுத்தும் வகையில் ஒளிர்ந்து கொண்டிருந்த வாசனை மெழுகுவர்த்திகள், மேலும் மனதை மயக்கச் செய்யும் காற்றில் கலக்கப்பட்ட வாசனை திரவம் என்று முதலிரவிற்கென்றே பிரத்யேகமாக தயாரானது அந்த அறை!

அங்கு எங்கும் உட்கார முடியாத சூழலில், அந்த அறையில் பால்கனியில் சென்று நின்று கொண்டான் ஹர்ஷவர்தன்.

சில நொடிகளில், அந்த அறையின் கதவு திறந்து மூடப்படும் சத்தம் கேட்க, மெல்ல திரும்பியவனின் விழிகளை தன்னை விட்டு விலக முடியாதபடி பார்த்துக் கொண்டாள் பாவை.

அதற்கென அவள் செய்து வந்த அலங்காரத்துடன், அவள் வதனத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்ட நாணமும் சேர்ந்து கொள்ள, அவனால் அவளை விடுத்து மற்றவற்றை கவனிக்க முடியுமா என்ன?

அவளும் சூழலும், அவனை மந்திரித்து விட, பேசக்கூட மறந்து போய் மௌனியாக அவள் முன் வந்து நின்றான் அவன். வாய் அதன் வேலையை மறந்தாலும், கால்கள் அவன் மூளையின் உத்தரவை சரியாக நிறைவேற்றியது போலும்!

அவளோ அவன் பார்வை கண்டு வெட்கி தலை குனிந்து நிற்க, தன் ரசனையை தடுத்தவளைக் கண்டு பொய் கோபத்துடன், அவள் நாடி பற்றி முகத்தை உயர்த்தினான் பிடிவாதத்துடன்.

அப்போதும் ஆவல் நிறைந்தவனின் முகத்தை காண இயலாதவளாக கண்களை அவள் மூடிக்கொள்ள, அவனோ இதழோர சிரிப்புடன் மெல்ல அவள் காதருகே குனிந்து, மீசை முடி அவள் செவியை தொட்டு குறுகுறுப்பு மூட்டும் தொலைவில் நின்றவாறு, அவர்களுக்கு மட்டுமே உரிய அந்தரங்க உரையாடலை மேற்கொள்ள, அதில் அவளின் காது ரத்த நிறத்திற்கு மாறியது!

அவன் கூறியதைக் கேட்டு நாணம் கொண்டு அவள் சிணுங்க, அதில் அவன் மயங்க, சரியாக அதே சமயம், மெழுகுவர்த்திகள் தங்களின் இறுதி வெளிச்சத்தை கக்கி விட்டு மடிந்தன.

அதற்கு மேலும் பொறுமை இல்லாதவனாக, அவளை தள்ளி, அவள் மீது படர ஆரம்பிக்க, அவளின் வளையல் சத்தத்துடன், “ஹர்ஷு…” என்ற அவள் சிணுங்கலும் சேர்ந்து அந்த மயான அமைதியை போக்க, பட்டென்று கனவிலிருந்து வெளி வந்தான் ஹர்ஷவர்தன்.

‘ஷிட்! என்ன மாதிரி யோசனை இது? அதுவும்… மௌனி… ச்சே, எனக்கு மட்டும் ஏன் இப்படி? இவ்ளோ கேவலமானவனா நான்! ஹையோ, என்னால முடியலையே!’ என்று உள்ளுக்குள் மறுகினான் ஹர்ஷவர்தன்.

‘ப்ச், இவ்ளோ நாள் நல்லா தான் இருந்தேன். இந்த கல்யாண வேலை எப்போ ஆரம்பிச்சதோ, அப்போ இருந்து தான் இப்படி தேவையில்லாத எண்ணங்கள் எல்லாம் எனக்குள்ள வருது. ம்ச், இதுக்கு தான் கல்யாணமே வேண்டாம்னு இருந்தேன். யாரு கேட்டா? இப்போ இன்னொரு பொண்ணோட வாழ்க்கையோட, என்னோட மன நிம்மதியும் போச்சு!’ என்று மனதிற்குள் ஹர்ஷவர்தன் புலம்பிக் கொண்டிருந்த சமயம் தான், நண்பனிற்கு வாழ்த்தலாம் என்று அழைத்த பிரஜன் அவனிடம் மாட்டிக் கொண்டது!

பிரஜனின் அழைப்பை துண்டித்த நொடி, உள்ளே நுழைந்தாள் பிரியம்வதா.

அவளை பார்த்தபோது ஹர்ஷவர்தனிற்கு மனைவி என்ற எண்ணம் தாண்டி, குற்றவுணர்வே எஞ்சி இருந்தது. அது சற்று முன்னர் அவன் கற்பனையால் இன்னும் மிகுதியானது என்று தான் கூற வேண்டும்.

அவளோ எவ்வித பதற்றமும் இல்லாமல் சாதாரணமாக தான் இருந்தாள். இந்த நொடிக்காக, அவள் எடுத்திருந்த பயிற்சியின் விளைவாக இருக்குமோ?

மனதை இளகச் செய்யும் பீச் வண்ண சாஃப்ட் சில்க்கில், அதிக அலங்காரங்கள் இல்லாமல், நேர்த்தியாக இருந்தவளை, சாதாரணமாக கூட பார்க்க முடியாமல் கண்களை தாழ்த்திக் கொண்டான் ஹர்ஷவர்தன்.

பிரியம்வதா அதை கவனித்தும் பெரிதாக கண்டு கொள்ளாமல், “ஹாய் ஹர்ஷா, சாரி, உங்க ரெஸ்ட்லெஸ்நஸ் எனக்கு புரியுது. நான் இந்த ரூம்ல இருக்குறது உங்களுக்கு அன்கம்ஃபர்டபிளா இருந்தா, ஒரு அரை மணி நேரம் பொறுத்துக்கோங்க. கெஸ்ட்ஸ் எல்லாரும் கிளம்பிடுவாங்க. இப்போவே நான் வெளிய போனா, ஏதாவது பேசுவாங்க.” என்றாள்.

ஹர்ஷவர்தனோ ஒரு பெருமூச்சுடன், “இதெல்லாம் அவசியமா? இதுக்கு தான் கல்யாணமே வேண்டாம்னு இருந்தேன்.” என்று முணுமுணுக்க, அவளோ மீண்டுமா என்ற பார்வை பார்த்துவிட்டு, கண்ணாடி முன் நின்று அதிகப்படியான நகைகளை கழட்ட ஆரம்பித்தாள்.

இறுதியில், அவன் கட்டிய தாலி மட்டும் இருக்க, அதோடு அவ்வறையில் மேஜையுடன் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

அவன் கண்கள் அவ்வபோது அவளை தொட்டு மீண்டாலும், எதுவும் சொல்லவில்லை. இருவருக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை.

அடுத்த அரை மணி நேரம் இப்படியே அவஸ்தையாக கழிய, அதற்கு மேல் அங்கு நிலவிய சங்கடமான சூழலில் உழல விரும்பாதவளாக, “நான் வெளிய போய் எல்லாரும் போயிட்டாங்களான்னு பார்க்குறேன்.” என்று எழ, அத்தனை நேரம் எதையோ யோசித்தவனாக, “மத்தவங்க போனாலும், மிசஸ். வள்ளி இருப்பாங்க தான. அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்களா?” என்று அவளை பார்க்காமல், சுவரை வெறித்தபடி கேட்டான் அவன்.

அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவள் விழிக்க, “வெளிய போய் அது பேச்சா வர வேண்டாம்.” என்று அவனே கூற, “ஆனா, நீங்க…” என்று சொல்ல தெரியாமல் அவள் இழுக்க, “ஹ்ம்ம், உன் பிரசன்ஸை நான் பழகணும் தான? எத்தனை தவிர்க்க முடியும்?” என்று கூறியவனை நோக்கி லேசாக இதழ்களை விரித்தாள் பிரியம்வதா.

அப்போதும் அவன் பார்வை அவளிடம் முழுவதுமாக படியாமல் இருக்க, புருவம் சுருக்கி யோசித்தவள், அதற்கான காரணத்தை கண்டு கொண்ட பாவனையில், கழுத்தில் இருக்கும் தாலியை தன் உடைக்குள் தள்ளி முழுவதுமாக மறைத்தவளாக, “இனி, நீங்க என்னை பார்த்து பேசலாம் ஹர்ஷா.” என்றாள் இலகுவாக.

ஹர்ஷவர்தனிற்கே அவளின் செயல் ஆச்சரியத்தை தந்தது. அவனின் மனம் உணர்ந்து அவள் செய்த செயல், மற்ற எண்ணங்களை தற்காலிகமாக தூர விலக்கி, அவளைப் பற்றி சிந்திக்க உந்தியது.

மேலும், அவளே, “என்னை உங்க ரூம் மேட்டா நினைச்சுக்கோங்க ஹர்ஷா. அப்போ உங்களுக்கு ரொம்ப ஆக்வர்ட்டா இருக்காது.” என்று கூற, அவனும் அத்தனை நேரமிருந்த இறுக்கம் தொலைத்து, புன்னகைத்தான்.

இருவருமே இருவரை நோக்கிய முதல் படியை அவர்கள் அறியாமலேயே எடுத்து வைத்திருந்தனர்.

ஹர்ஷவர்தனை இயல்பாக்க பிரியம்வதா அவளாலான முயற்சிகளில் இறங்கினாள் என்றால், அதற்கான காரணமாக அமைந்தது ஹர்ஷவர்தன் அவளை வெளியே செல்ல வேண்டாம் என்று கூறியது.

இப்படியே சென்றால், இயல்பாகவே அவர்களுக்குள் புரிதல் உண்டாகி, அவர்களின் வாழ்வும் சிறக்கும். ஆனால், அவர்களின் போக்கில் விட்டால், விதியென்ற ஒன்று எதற்கு இருக்கிறது?

*****

இருட்டில் அமர்ந்து கண்ணீர் சிந்தியபடி தன் குறிப்பேட்டில் நிகழ்வுகளை எழுதிக் கொண்டிருந்த மௌனிகாவை கலைத்தது அந்த வாகன சத்தம்.

பெரிதாக எவ்வித சத்தமும் இல்லாததால், தூரத்தில் நிறுத்திய வாகன சத்தம் கூட தெளிவாகவே கேட்டது.

அது யஷ்வந்த்தின் வாகன சத்தம் என்பதை உணர்ந்த மௌனிகாவோ வேகவேகமாக குறிப்பேட்டை மூடி அதனிடத்தில் ஒளித்து வைத்தவள், விளக்கை அணைத்து அவளிடத்தில் சென்று அமைதியாக படுத்துக் கொண்டாள்.

கணவனை எதிர்நோக்கும் அளவிற்கு அவள் மனநிலை இல்லை என்பதை அறிந்ததால் இத்தனை பதற்றம் அவளிடம்.

ஆனால், அவளின் பதற்றத்திற்கு காரணமானவனோ அவளை தொந்தரவு செய்யாமல், எட்டி மட்டும் பார்த்து விட்டு, அவர்களின் அறையை விட்டு வெளியேறினான்.

தூங்காமல் விழித்திருக்கும் மனைவிக்கு கணவனின் செயல் குழப்பத்தை கொடுக்க, அவளின் மனமோ வேறொரு காட்சியை மனக்கண்ணில் காட்டியது.

*****

திருமணம் முடிந்த இரண்டாம் மாத துவக்கம் அது…

தூக்கத்தை தொலைத்து, மோகத்தில் சஞ்சரித்து, ஒருவருக்கொருவருள் மூழ்கி முத்தெடுத்த களைப்பில், தொலைத்த தூக்கத்தை இழுத்துப் பிடித்து துயில் கொள்ளும் வேளையில், அருகே அவளின் ஆசைக்கணவனை காணாமல், இழுத்த தூக்கத்தை தூர விரட்டி, கண்களை முழுவதுமாக திறந்தாள் மௌனிகா.

உறக்கம் தொலைத்த விழிகள் சிவந்திருக்க, அதை பொருட்படுத்தாமல், கணவனை தேடி சுற்றிலும் விழிகளை சுழல விட்டாள் மௌனிகா.

“யஷு, எங்க இருக்கீங்க?” என்றவளின் குரல் சோம்பலாக வெளிவர, அதற்கு எவ்வித மறுமொழியும் இல்லாமல் போக, கீழே சிதறியிருந்த ஆடைகளை அணிந்து கொள்ள சோம்பியவளாக, தன்மீது போர்த்தியிருந்த போர்வையை உடலை மறைக்க சுற்றிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.

அது, பிரம்ம முகூர்த்தம் என்பதால், சுற்றியிருந்த கண்ணாடி ஜன்னல்கள் வழியே லேசாக ஊடுருவிய வெளிச்சத்தை ஆதாரமாக கொண்டு, அந்த தளம் முழுவதும் தேடினாள் மௌனிகா.

மெல்லிய குரலில், “யஷு…” என்றவாறே ஒவ்வொரு அறையாக தேடியபடி அவள் நடக்க, அவள் தேடியவனோ இரண்டாம் தளத்திலிருந்து வேகவேகமாக இறங்கி அவளை நோக்கி வந்தான்.

மூச்சிரைக்க ஓடி வந்தவன், “பேபி, என்ன அதுக்குள்ள எழுந்துட்ட?” என்று வினவ, “எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் யஷு!” என்று செல்லமாக சலித்துக் கொண்டாள் மௌனிகா.

அவனோ அவளை அங்கிருந்து நகர்த்தியபடி, “நான் என்ன பண்ணேன் பேபி?” என்று அவளின் இடையை இழுத்து அணைத்தபடி விஷமத்துடன் வினவ, “ஆஹான், எதுவுமே பண்ணலையா நீங்க?” என்று சிணுங்கினாள் மௌனிகா.

“இல்லையே, இன்னைக்கு கோட்டாக்கு இன்னும் எதுவுமே பண்ணலையே.” என்றவன், அவளுடன் மெத்தையில் விழ, அதற்கு பின்னர், அங்கு இருவரின் முனகல்கள் மட்டுமே காற்றை நிறைத்தது.

கணவனின் செயல்களில், அவன் எங்கு சென்றான் என்பதை கேட்க மறந்து தான் போனாள் மௌனிகா.

*****

இப்போது யோசித்து பார்த்தால், அன்று மட்டுமல்ல, இரவில் அவனை காணாமல் தேடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும், இப்படி அவளை திசை திருப்பி, அவனை கேள்வி கேட்காமல் பார்த்துக் கொண்டான் கணவன் என்பதை புரிந்து கொண்டாள்.

ஆனால், அதற்கான காரணம் மட்டும் எவ்வளவு யோசித்தாலும் புலப்படவில்லை மௌனிகாவிற்கு. இப்போதைய அவளின் மனநிலை, கண்டிப்பாக அந்த காரணம் நல்லதாக இருக்காது என்று கட்டியம் கூற, அதைப் பற்றி மேலும் யோசிக்கவே பயந்தாள் அவள்.

மேலும், அவன் இரண்டாம் தளத்திலிருந்த அறையிலிருந்து வெளிவந்ததை அன்றே கவனித்திருந்தாள் மௌனிகா.

‘அப்படி அந்த ரூம்ல என்ன தான் இருக்கு? இதுவரை என்னை அந்த ரூமுக்குள்ள அலோவ் பண்ணதே இல்ல.’ என்று சிந்தித்தவளிற்கு, ஒருமுறை அங்கு சென்று பார்த்தபோது, அந்த அறை பூட்டப்பட்டிருந்ததும், அதற்கான சாவியை அவன் எப்போதும் தன்னிடமே வைத்துக் கொள்வதும் இப்போது நினைவிற்கு வந்தது.

அதுவே, அந்த அறையில் மறைந்து கொண்டிருப்பது நல்லதாக இருக்காது என்று கூற, மௌனிகாவின் இதயம் மத்தளம் போல சத்தமிட ஆரம்பித்தது.

இப்போது அவன் சென்றது கூட அந்த அறைக்குள் தான் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவள் முட்டாள் அல்லவே!

துடிக்கும் இதயத்தை பெருமூச்சு விட்டு அடக்கியவளாக, மெதுவாக மெத்தையிலிருந்து எழுந்தவள், சத்தம் வராமல் நடக்க ஆரம்பித்தாள்.

ஒவ்வொரு அடியையும், அவளின் மனம் கடந்த காலங்களை, கணவனோடு கழித்த பொழுதுகளை அசைபோட்டபடி எடுத்து வைக்க, அவளின் மனமோ, ‘பிளீஸ், நான் நினைக்குறது தப்பா இருக்கணும் கடவுளே!’ என்ற கோரிக்கையை கடவுளிடம் வைத்தது.

ஆனால், கடவுள் அவளின் கோரிக்கையை எப்போதோ நிராகரித்து விட்டார் என்பது அவளிற்கு தெரியவில்லை.

இரண்டாம் தளத்தை அடைந்தவள், கண்களை இருட்டிற்கு பழக்கிக் கொண்டு சுற்றிலும் ஒருமுறை பார்வையை சுழற்ற, அந்த அறையிலிருந்து லேசாக கசிந்த வெளிச்சம், யஷ்வந்த் அங்கு தான் இருக்கிறான் என்பதை தெரிவித்தது.

மெதுவாக அந்த அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தவளின் மனம் வேகமாக அடித்துக் கொண்டது. அந்த சத்தம் வெளியே கேட்டு விடுமோ என்று அஞ்சியவளாக, நெஞ்சில் கைவைத்து தன்னைத் தானே அணைத்துக் கொண்டு கதவை நெருங்கினாள்.

அப்போதே சிறிதாக சிலரின் பேச்சு சத்தம் கேட்டது.

‘வாவ், செமையா இருக்கே!’

‘அட்மின் ஜி, லைவ் எல்லாம் பத்தாது. ஃபுல் வீடியோ எப்போ கிடைக்கும்?’

‘சரியா சொன்னீங்க ப்ரோ. ஒரு முறை பார்த்தா பத்தாது. பார்த்துட்டே செ**ணும்!’

‘கேமரா ஆங்கில் சரியில்ல அட்மின். கிளியரா தெரிய மாட்டிங்குது. அடுத்த முறை இதை சரி பண்ணுங்க.’

‘உஷ், கொஞ்ச நேரம் பேசாம இருங்க… மூட் ஸ்பாயில் ஆகுதுல.’

இவை போன்ற வாக்கியங்கள் காதில் கேட்க, மௌனிகாவின் மூளை எக்குத்தப்பாக சிந்திக்க, மனமோ ‘அப்படி இருக்கக் கூடாது!’ என்று பயமும் பதற்றமும் கலந்தபடி, நடுங்கும் விரல்களால் லேசாக திறந்திருந்த கதவை மேலும் திறக்க, அங்கு பெரிய திரையில் தென்பட்ட காட்சியை பார்த்தவளின் விழிகளுடன் இதழும் விரிந்து கொண்டன!

தொடரும்…

12 thoughts on “வஞ்சிப்பதோரும் பேரவா! – 4”

 1. Kalidevi

  Ena nadakuthu antha room kulla namma yosanaium vera mari tha pochi aana ava pathu sirikira na wait to read next epi

   1. Avatar

    Harsha side la nalla change. Ava presence ah palaganum ninaikuran. Pri avana beautiful ah handle pannuran.
    Antha room la enna da nadakuthu. Camera angle live ennada nadakuthu. Oru vela kolaiya live ah pannurana. Ivan tha killer ah. Bakku bakku nu iruku da

    1. Avatar

     Happa ipoyavadhu avana hero nu othukuringala 😉😉😉
     Pri – heroine na apdi dhan 😍😍😍
     Antha room la… Adhu secret next epi la solren 😊😊😊
     Killer ah… Athukum mela 😝😝😝

  1. Avatar

   ஆமா பணக்காரன்னு பார்த்து கல்யாணம் பண்ணி இப்போ வருத்தப்பட்டா என்ன செய்ய?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *