
Credits: Pntrst
Thank you for reading this post, don't forget to subscribe!அதுக்காக அடியேன் செய்த வேலைதான் வெப்சைட்/ஃபாரம் எனப்படுகிற எழுத்துத் தளத்தில் எழுத வந்தது.
தெரிந்தவர், தெரியாதவர் அனைவருக்கும் வணக்கம். நான் மது. டாக்டர். பகுதிநேர எழுத்தாளர். எண்ணி நாலே நாலு நாவல் எழுதியிருக்கேன். மீதியெல்லாம் மருத்துவப் படிப்புக்காக கிடப்பில் போடப்பட்டுவிட்டன. வாட்பேடில் கொஞ்சம் பிரபலம். மற்ற இடங்களில் தெரியல. பிரவீணா அக்கா எனக்கு கொரோனா கால சினேகிதம். இளம் எழுத்தாளர்களை வளர்க்க நினைக்கும் நல்ல உள்ளம். அவங்க சைட்ல எழுதுறது சந்தோஷம். முதல் கதை என் பர்சனல் பேவரிட். “நீயன்றி வேறில்லை” படித்துப் பாருங்கள். பிடித்தால் பிற கதைகளை அமேசானில் தேடலாம். காட்டில் இல்லைங்க, கதை புக் விக்கும் வலைதளம்தான். மருத்துவமனை வேலை முடித்து வெட்டியா இருக்கும் நேரம் எல்லாம், அடியேனை நெட்டில் பிடிக்கலாம். Madhu_dr_cool என்ற பெயரில் எந்த சோஷியல் மீடியாவில் தேடினாலும் ஆத்தர் அகப்படுவார். நன்றி!!!