Skip to content
Home » விமர்சனத்தை கையாளும் முறை

விமர்சனத்தை கையாளும் முறை

Thank you for reading this post, don't forget to subscribe!

    *விமர்சனம் கையாளும் முறை: யாராவது உங்க கதையில கருத்து வேறுபாட்டை முன் வைத்தால், அதற்கு உங்க தரப்புல காரணம் சொல்லுங்க.
காரணம் சொன்னா போதும். அதை அவங்க ஏற்றுக்கணும்னு என்று திணிக்க கூடாது. அதே போல வாசகர் இதை சொல்லிட்டாங்க. அப்ப நாம மாத்தணுமா? இல்லையானு குழம்பாதிங்க. உங்கள் பாயிண்ட் ஆப் வியூல எந்த நோக்கத்திற்காக கதையின் கருவை தயார் செய்து முழுமை கொடுத்திங்களோ அது சரியென்றால் விட்டுடுங்க. யாரோட கருத்தும் எல்லாருக்கும் உடன்படணும்னு அவசியம் இல்லை.
  ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கருத்துமாறுபாடு உண்டு.

   சிலர் நல்ல கதையை வேண்டுமின்னே மட்டம் தட்டுவாங்க. ஒன்ஸ்டார் போடுவாங்க. அவங்களிடம் காரணம் கூறினாலும் தேவையற்றது. அதை சிரிப்போட கடந்துடுங்க. அது பழிவாங்கும் முதலைகள் வேலை. நமக்கு முதலைகள் வேண்டாம். எறும்பு மாதிரி உழைப்பை மட்டும் கவனிப்போம்.

நல்லா கவனிச்சா மட்டம் தட்டும் ஆட்கள் மட்டமான கதையா வாசித்திருப்பாங்க. அவங்க டேஸ்ட் தெரியும். நல்ல வாசகர்கள் சரியான நிறை குறையை கரெக்டா சொல்வாங்க.

  அதை மீறி முகநூல்ல வம்பிழுத்தா அப்பவும் வாசகரை ரைட்டரை ஆட்களை சேர்த்து கூட்டமா போய் பதில் தராதிங்க.
   தனியா காரணம் போட்டுட்டு வந்துடுங்க. அகைன் அண்ட் அகைன் வந்தா விளக்கம் முதலிலேயே கொடுத்தாச்சு. திரும்ப திரும்ப வாதம் செய்ய விருப்பமில்லைனு சொல்லுங்க.
   உங்க கதை வாசித்த பலருக்கும் உங்க தரப்பு தெரியும். அதை விளக்கி விம்போட அவசியமில்லை.
   ஆனா முகநூல்ல ஒரு பொங்கல் போட்டா கும்பலா படையோட வர்றாங்கப்பா. ஆத்தர் & வாசகர் என்று திரட்டி அதை பத்தி பேச ஒருவாரம் இழுத்துக்கராங்க. சிம்பிளி டைம் வேஸ்ட். ஆனா சில எழுத்தாளர் அதையும் தனக்கு சாதகமாக அமைந்து கொள்வார்கள்.
    இன்றைய நண்பன் நாளைய எதிரி ஆகலாம். இன்றைய எதிரி நாளை நண்பனாகலாம்  என்னடா எதிரி நண்பன்னு பயங்கர டயலாக்கா இருக்கா.
   இங்கே போட்டியும் உண்டு பொறாமையும் உண்டு. பிரித்தறிந்து ஆரோக்கியமான போட்டில கடந்து போறவங்க ரேர்.

    நான் ஒரே விஷயத்துல தான் எமோஷனல் ஆவேன். என்னடா இது அடுத்த தலைமுறைக்கு கேவலமான எழுத்தை சிபாரிசு பண்ணறாங்க. வளரும் எழுத்தாளர் அதையே பாலோவ் பண்ணாதிங்க. அப்பறம் வாசிப்பு என்றாலே கேவலமான விஷயமா போயிடக்கூடாது என்ற நோக்கம் மட்டுமே.

உயர்வும் தாழ்வும் மாறி மாறி வரும். 😊
 பிரபலமானவர்கள் பிரபல மற்றவர்கள் என்ற எந்த பாகுபாடும் ஆன்லைன் எழுத்தில் கிடையாது.


-கற்றதை பகிர்வோம்.
பிரவீணா தங்கராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *