“ஒன்றுமில்லை வா டா என்று விட்டு சித்து தனது தம்பியை அழைத்துக் கொண்டே படிகளில் இறங்கி வந்தான்..”
“கீழே இறங்கிய பிறகு தான் சித்து ஹரிணி இங்கு இருப்பதை பார்க்க செய்தான். ஹரிணியை பார்த்து விட்டு வா மா என்றான். ஹரிணியும் கை கொடுக்க வந்தாள்.”
“சித்து கையெடுத்து கும்பிட்டு விட்டு என்ன மா செய்கிறாய் என்ன வேலை என்று கேட்டு விட்டு ஒரு சில வார்த்தைகளில் முடித்துக் கொண்டான் “..
“அப்பொழுது சித்துவை அமைதியாக பார்க்க செய்தாள் இவர் ஜாலியாக பேசுவார் என்று மகி சொன்னானே ஆனால் இவர் ஒரு மாதிரி இருக்கிறார்”..
“ஒருவேளை அவருக்கு என்னை பிடிக்கவில்லையோ? என்று எண்ணினாள்”..
பிறகு “ஹரிணி ஒரு அரை மணி நேரம் வீட்டில் உள்ள மற்றவர்களிடம் பேசிவிட்டு மகிவுடன் அவளது வீட்டிற்குச் சென்று விட்டாள் “
“மகி ஹரிணியை வீட்டில் விட்டு விட்டு வந்த பிறகு மகி பெற்றவர்கள் அபிராமி சித்துவிடம் என்ன டா என்று கேட்டதற்கு ஒன்றுமில்லை என்று விட்டு அமைதியாக அவனது அறைக்கு சென்று விட்டான்”.
” மகி வந்தவுடன் அபிராமி தான் ஏண்டா அவன் ஒரு மாதிரி இருக்கிறான் என்ன ஆச்சு”..
” ஏன் ஹரிணி இங்கு வந்ததோ ,இல்ல நீ ஹரிணியை விரும்புவதோ ? உன் அண்ணனுக்கு பிடிக்கவில்லையா ?என்று கேட்டார் “…
“ராசு தான் அபிராமி அந்தப் பெண் வருவதற்கு முன்பே அவன் அப்படித்தான் இருந்தான் என்றவுடன் என்ன ஆச்சு அவனுக்கு பிறந்தநாள் அதுவுமா காலையில் கோவிலுக்கு செல்லும் போது நன்றாக தானே இருந்தான் என்றார் “..
“ஒரு சில நிமிடம் அமைதிக்கு பிறகு நான் ஒரு விஷயம் சொல்வேன் ஆனால் நீங்கள் இருவரும் அண்ணனிடம் இதைப் பற்றி கேட்கக்கூடாது என்றான்”
“என்னடா என்று கேட்டதற்கு அண்ணன் ஒரு பெண்ணை விரும்பி இருக்கிறான் என்றவுடன் இருவரும் மகிழ்ச்சியாக என்ன டா சொல்கிறாய்”..
“ஏன் அந்த பெண்ணை பற்றி சொல்லியிருந்தால் நாம் அந்த பெண் வீட்டில் சென்று பெண் கேட்டு விட்டு வரலாமே”..
” நாம் உன் அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற எண்ணத்தில் தானே இருக்கிறோம் உன் அண்ணன் தானே திருமணத்தை தள்ளி போட்டு கொண்டு இருக்கிறான் “
“அம்மா நான் சொல்வதை முழுமையாக கேளுங்கள் என்றான் சரி டா சொல் என்ற பிறகு அண்ணன் ஒரு பெண்ணை விரும்பினார் அந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது போல “..
“இவர் அந்த பெண்ணிடம் தன் விருப்பத்தை சொன்னாரா? இல்லை சொல்லி இருவரும் காதலித்த பிறகு அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டதா ? என்று எனக்கு தெரியவில்லை “..
“இன்று தான் சொன்னார் .அந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது என்று நான் நினைக்கிறேன். எனக்கு தெரியவில்லை .ஆனால், இனி என் காதல் கை கூடாது என்று சொன்னார்”
“சரி டா அவனை இதிலிருந்து கொண்டு வர வேண்டும் உடனடியாக அவனுக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றார் அபிராமி “..
அப்பொழுது ,”மகிக்கு முன்பாகவே ராசு தான் அபிராமி ரொம்ப அவசரப்படாதே !இப்பொழுது ,தான் அவன் ஒன்றிலிருந்து வெளிவர நினைக்கிறான் “..
“அவனுக்கு சிறிது நேரம் காலம் கொடு அதிலிருந்து வெளிவந்து வேறொரு பெண்ணை ஏற்றுக் கொள்வதற்கு ஒரு வருடம் போகட்டும் என்றார் “..
“நீங்க என்னங்க பேசுறீங்க என்றார் அபிராமி. நான் சொல்வதை கொஞ்சம் கேளு என்றார் பிறகு சரி ஏதோ செய்யுங்கள் “..
“எனக்கு தேவை எனது மகன் அதிலிருந்து வெளிவந்து திருமணம் செய்து கொண்டு குடும்பமாக வாழ வேண்டும் அவ்வளவுதான்” என்று விட்டு அமைதியாக சமையல் அறைக்குள் புகுந்து கொண்டார் ..
சரி என்று விட்டு ராசு ,அபிராமி, மகியும் கூட அதைப்பற்றி மேற்கொண்டு பேசவில்லை .இப்படியே நாட்கள் சென்று இருந்தது அதன் பிறகு “சித்து தான் தனது தம்பியிடம் மகி அந்த பெண் வீட்டில் சென்று பேச வேண்டியது இல்லையா” என்றான்.
“அண்ணா உனக்கு திருமணமாகாமல் டேய் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என் திருமணத்திற்கு பிறகு கூட நீ திருமணம் செய்து கொள் நான் அதைப் பற்றி சொல்லவில்லை”..
ஆனால் ,”அந்த பெண் வீட்டில் நீங்கள் இருவரும் விரும்புகிறீர்கள் என்று சொல்ல வேண்டும் அல்லவா ?அது அடுத்தவர்கள் மூலம் தெரிந்தால் அந்த பெண்ணுக்கும் கஷ்டம் அவர்கள் குடும்பத்திற்கும் கஷ்டம் தானே “என்றான்..
“அபிராமியும் அதை உணர்ந்ததால் ஆனால் ,உனக்கு திருமணமாகாமல் அவனுக்கு செய்ய மாட்டோம் என்றார்கள்”..
” எனக்கு ஒரு ஆறு மாதம் போகட்டுமே என்றான் மகியும் சிரித்துக் கொண்டே சரி டா அண்ணா என்றான்.பிறகு அடுத்து இரண்டு மூன்று நாட்களில் குடும்பத்துடன் சென்று ஹரிணி வீட்டிலும் பேசினார்கள்”..
“ஹரிணியின் வீட்டிலும் ஒரு சில நிமிடம் தங்களது மகளைப் பார்த்தார்கள் அவளும் கண்மூடி திறந்தவுடன் ஹரிணி வீட்டில் காதலுக்கு எதிரி இல்லை என்பதால் சரி உங்கள் பெரிய மகனுக்கு திருமணம் முடித்துவிட்டு வந்து பேசுங்கள்”..
” அவள் ,இப்பொழுதுதான் வேலைக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறாள் ஒரு வருடம் போகட்டுமே அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளட்டும் என்றார்கள்”..
” நான் இப்பொழுது தான் வேலைக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறேன். நான் ஒரு வருடம் முடித்த பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் .ஆனால் உங்கள் பெரிய மகனுக்கு திருமணம் முடிப்பதற்கு எப்படியும் ஒரு வருட காலம் ஆகும் அல்லவா? என்றாள்..
“ஏனென்றால் ,அவள் மனதில் எண்ணியது மகி மூலமாக அவர் ஏதோ ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்திருந்தது”..
“ஆகையால் அதிலிருந்து அவர் வெளிவர ஆறு மாதம் ,ஒரு வருடமும் தேவைப்படும் என்பதால் அவ்வாறு கூற செய்தாள் இதை மகி வீட்டிலும் உணர்ந்து இருந்ததால் சரி என்றார்கள்”.
“மகி ,ஹரிணி காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்த பிறகு சித்துவிற்கு திருமணம் ஆகிய பிறகு அடுத்த மூன்று மாதங்களில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று பேசிவிட்டு சித்து குடும்பத்தினர் அவர்கள் வீடு நோக்கி சென்று விட்டார்கள்”..
இப்படியே ஒரு வருடம் சென்று இருந்தது .”ஒரு வருடங்களுக்குப் பிறகு சித்துவிற்கு பெண் பார்க்க வேண்டும் என்று வரும்போது சித்து இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்றான்”..
“டேய் நீ சொன்னாய் என்று தான் ஒரு வருடத்திற்கு முன்பே ஹரிணி வீட்டில் சென்று பேசி விட்டு வந்திருக்கிறோம் நீ அப்போது என்ன சொன்னாய் என்றார்கள்”..
பிறகு “தனது தம்பிக்காக என்று எண்ணி சரி நாம் திருமணம் செய்து கொண்டால் தான் தனது தம்பியின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று எண்ணினான்”..
“அப்பொழுது, ஜோசியரிடம் சென்று சித்துவிற்கு இப்பொழுது திருமணம் செய்யலாமா ?என்று கேட்க சென்ற போது குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்துவிட்டு வாருங்கள் குடும்பத்துடன்”.
“அதன் பிறகு ,பெண் பாருங்கள் நல்ல வரன் அமையும் என்று கூறியிருந்ததால் சரி என்று விட்டு அபிராமி குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் செல்லலாம் என்று வீட்டில் வந்து சொன்னார்”..
“அனைவருமே சொல்லலாம் என்று முடிவு செய்தார்கள் குலதெய்வ கோவிலுக்கு நல்ல நாள் பார்த்துவிட்டு அபிராமி கோயிலுக்கு செல்வதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் சொன்னார்”..
அப்பொழுது ,”மகி தான் தனக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு முக்கியமான மீட்டிங் இருக்கிறது தான் அங்கு செல்ல வேண்டுமே என்றான்”..
“டேய் ஏற்கனவே சொல்லித்தானே இருந்தேன் அப்புறம் என்ன அதுவும் உன் அண்ணனுக்காக தான் என்று தெரிந்தும் இவ்வாறு சொல்கிறாய் “என்றார் ..அபிராமி .. “அம்மா நீ சொல்லவேண்டுமா ?சித்துவிற்காக கோவில் போகிறோம் என்று எனக்கே தெரியும் தானே வேண்டும் என்றே நான் இவ்வாறு சொல்வேனா”.. ” நான் உண்மையாகவே முக்கியமான கிளைன்ட் மீட்டிங் தான் சென்றாக வேண்டும் எனக்கு பதில் நான் வேறு ஒருவரை கூட அனுப்பி வைக்க முடியாது “என்றான்.. “சித்து தான் அம்மா விடு அவனுக்கு வேலையும் முக்கியம் தானே? அவன் வேலையை பார்க்கட்டும். நாம் மூவரும் சென்று விட்டு வரலாம் என்றான்”. ” குடும்பத்துடன் சென்று விட்டு வர சொன்னார் இவன் வராமல் எப்படி டா சரி அவன் இங்கிருந்து சாமியை மனதில் நினைத்து கொள்ளட்டும் “.. டேய் என்றார். “சரி இன்னும் ஒரு வாரம் கழித்து அதன் பிறகு குடும்பத்துடன் சென்று விட்டு வரலாம் இல்லை ஒரு வாரம் பொறுங்கள் என்றான்”..
“கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவு செய்துவிட்டு தடைப்பட வேண்டாம் அவன் வேண்டும் ஆனால் இருக்கட்டும் நம் மூவரும் சென்று விட்டு வரலாம் என்றார் அபிராமி ஒரு மனதாக “. “சரி என்று விட்டு இரண்டு நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் அவர்கள் சொந்த ஊருக்கு சென்று குலதெய்வ கோயிலை வழிபட்டு வரலாம் என்று முடிவு செய்துவிட்டு மகியிடம் சரிடா பார்த்துக் கொள் என்று விட்டு தங்கள் சொந்த ஊரை நோக்கி குலதெய்வ கோயிலை வழிபட விடியற்காலை கிளம்பினார்கள்”.. “விடியல் காலையில் கிளம்பினால் தான் ஒரு 7 மணி அளவில் கோவிலுக்கு செல்ல முடியும் என்பதால் காரில் தான் சென்றார்கள் மூவரும் குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்துவிட்டு அபிஷேகம் செய்துவிட்டு சாமியை தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் என்பதால் இரண்டு நாட்கள் தங்கி விட்டு வரலாம் என்று ஏற்கனவே முடிவு இருந்தது “..
“பொங்கல் வைத்துவிட்டு தங்கி விட்டு வரலாம் என்று முடிவு செய்து இருந்ததால் சரி இருந்து விட்டு வாருங்கள் என்று சொல்லி இருந்தான் மகி”.. “மகி அவனுக்கு மீட்டிங் இருந்ததால் மீட்டிங் அட்டென்ட் செய்துவிட்டு இரவு போல் தனது அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான் வெளியே ஓரிடத்தில்”.. ” தன் வீட்டில் தான் இப்பொழுது யாரும் இல்லையே இரவு கொஞ்ச நேரம் கழித்து கூட சென்று விடலாம் என்று அப்போது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது தான் அவனுடைய நண்பர்கள் மச்சி உனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் செட் ஆயிடுச்சு போல “.. “உன் அண்ணனுக்கு திருமணம் நிச்சயம் ஆனால் உனக்கு திருமணம் போல என்று கேட்டார்கள். டேய் என்னடா இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் உங்களுக்கு தான் ஹரிணி பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேனே”..
இருந்தாலும்,” நீ இன்னும் உன் வயதிற்கு ஏற்ப இல்லையே என்று கேலி செய்தார்கள் .என்ன டா நான் என் வயதுக்கு ஏத்த மாதிரி இல்லை”.. “இப்போது நம் வயதில் இருக்கும் பசங்க எல்லாம் திருமணத்திற்கு முன்பே காதலிக்கும் போது டேட்டிங் போகிறார்கள் “.. “நீ என்ன ஒரே பொண்ண ரெண்டு வருஷமா காதலிக்கிற ஒன்னும் நடக்கலன்னு சொன்னா நம்ப சொல்றியா இல்ல அனைத்தையும் முடித்து விட்டாயா? இல்லை என்று இழுத்தார்கள்”..
“மகி அவ்வாறு பேசிய நண்பனின் சட்டையை பிடித்து நான் அவளது உள்ளத்தை தான் விரும்பினே தவிர உடலை அல்ல ..என்னுடைய காதல் உண்மை என்றான்”.. ” நாங்கள் மட்டும் என்ன பொய்யாகவா நேசிக்கிறோம் என்று மகியின் வேறொரு நண்பன் தனது இன்னொரு நண்பனின் சட்டையின் மேல் இருக்கும் மகியின் கையை எடுத்துவிட்டு சும்மா இருடா மச்சான் “.. “இப்ப எல்லாம் இது சகஜமான விஷயம் என்றான். உங்களுக்கு சகஜமாக தெரியலாம் என்னுடைய வளர்ப்பு அப்படி இல்லை என்று விட்டு இரண்டு அடி அடித்து விட்டு நகர்ந்தான்”.. அப்போது “மகியின் நண்பர்கள் அனைவரும் மகியை பார்த்து சிரிக்க செய்தார்கள் இவன் ஒரு கோழை டா “
“இவனுக்கு பஸ்ட் ஆண்மை இருக்கிறதா? என்று தெரியவில்லை. அதற்குள் இவ்வாறெல்லாம் பேசுக்கிறான் என் வீட்டில் இப்படி வளர்க்கவில்லை நான் ஒழுக்கம் உள்ளவன் என்று”.. ” நாமெல்லாம் என்ன ஒழுக்கம் கெட்டவனா தினமும் ஒரு பெண்ணோட நாம் இருந்து விட்டு வரோமா? நாம் காதலிக்கும் பெண்ணுடன் அவ்வப்போது முத்தம் கொடுப்பது சிறிய தொடுகை அவ்வளவு தானே “.. ” அதற்கு இவன் ஒழுக்கம் கெட்டவன் என்று சென்று விட்டு செல்கிறான் இவனுக்கு சுத்தமாக அதற்கு தைரியம் இல்லை, ஆண்மையில்லை என்பதற்காக உணர்ச்சி இல்லை என்பதற்காக நம்மை ஒழுக்கம் கெட்டவன் என்று சொல்கிறான் என்று சொல்லி சிரித்தார்கள் “.. “மகிக்கு அவ்வளவு கோபம் தனது நண்பர்கள் அருகில் வந்தவன் அனைவரும் இவன் தங்களை அடிக்கப் போகிறான் என்று எண்ணினார்கள்”.
ஆனால் ,”அவன் அவர்கள் இவ்வளவு நேரம் குடித்துக் கொண்டிருந்த சரக்கை எடுத்து அவர்கள் மேல் இருந்த கோபத்தில் முழுவதாக குடித்து விட்டான்”.. ” முதல் முதலாக கோபத்தில் குடித்த குடி அவனது வாழ்க்கையை எவ்வாறு தலைகீழாக மாற்றப் போகிறது” என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.. அன்புடன்
தனிமையின் காதலி
7 thoughts on “விருப்பமில்லலா மணமேடை விரும்பியவளோடு 13”
ஆத்திக்காரனுக்கு புத்தி மட்டு….ஆத்திரம் வரும்போது புத்திக்கு வேலை கொடுக்கணும்… ஆனா, இவன் புத்தி மழுங்கி போயிட்டான்.
Avanunga etho solatumnu amaithiya iruka vendiyathana nee ethuku kudikira
இவர்கள் நண்பர்கள் தானா
👍👍👍
Nice epi
Sema sema interesting epi
சூப்பர் சூப்பர்