Skip to content
Home » விலகும் நானே விரும்புகிறேன்-10

விலகும் நானே விரும்புகிறேன்-10

அத்தியாயம்-10
 
    சாந்தனுவை அழைத்து கொண்டு வீட்டில் விட்டுவிட்டு அட்சரன் கிளம்பினான்.

     “எங்கப்போறிங்கனு கேட்க கூடாது. ஆனா எங்கிருந்து வருவிங்க?” என்று கேட்டாள்.

    “ஹேய்.. சும்மா ஒர் லாங் டிரைவ் போயிட்டு வர்றேன்” என்று மென்னகை புரிந்து சென்றான்.

     மேகா தனது உடமைகளை அள்ளி முடித்து தயாராக அட்சரன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

   கமலேஷும் மனோஜூம் இருந்தார்கள்.

     இருவருமே மேகா வந்ததை தடுக்கவில்லை. அதே நேரம் வரவேற்காமல் நின்றனர்.

     அவர்களை பொறுத்தவரை இது அட்சரன் வீடு. இவள் அட்சரன் மனைவி. அப்படியிருக்க எதுவும் கூறாமல் அமைதியாய் ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்து கொண்டனர்.

     மேகாவோ நேராக அட்சரன் அறைக்கு சென்று கதவை தாழிட்டாள்.

      இங்கு காரில் லாங் டிரைவ் வந்தவன் சரியாக கணித்தபடி நிஷாந்த் இருந்த இடம் நோக்கி காரை நிறுத்தினான்.

    அட்சரன் வருவதை அறியாமல் கடலை வெறித்து கொண்டிருந்தான் நிஷாந்த்.

     மாலை நிழல் முன்னே தெரிய தன்னருகே யாரோ நிற்பதை கண்டு திரும்பினான்.

    அட்சரன் என்றதும் எழுந்திட முனைய, “இன்னும் மூன்று நாள் தான்டா. என் மேல இருக்கற கோபத்தை புதைச்சிட்டு போ. அந்த கோபம் வன்மம் இரண்டையும் பிளைட் ஏற்றி கூட்டிட்டு போய் அங்க போயும் நிம்மதி இல்லாம இருக்காதே. ஆறுதல்படுத்த கமலேஷோ மனோஜ் பாலாவும் அங்க இருக்க மாட்டிங்க.

   நீ புது நண்பர்களையும் உடனே அக்சப்ட் பண்ண மாட்ட. உனக்குள்ளயே வருத்தி மனசை அழுத்தத்துல இருப்ப.

     என்ன கோபம் என்றாலும் என்ன திட்டு, அடி, திரும்ப நண்பனா பாரு.

    நண்பர்களுக்குள்ள அடிச்சிட்டு சேரமாட்டாங்களா என்ன? நாம எப்பவும் பஞ்ச பாண்டவர்கள் டா. ப்ரிய முடியாது.  காலேஜ் வாழ்க்கையில நாலு வருடத்தை என்னால என் மேல கோபத்தால மற்ற இனிய நினைவுகள் அழிச்சி கானல்நீரா நினைச்சிடாதே.

   நினைச்சி பார்க்க நிறைய ஸ்வீட் மெமரிஸ் இருக்கு.” என்றதும் நிஷாந்த் கண்கள் கலங்கியது.

     “இப்பவும் எனக்கு நம்ம செட்ல உன்னை ரொம்ப பிடிக்கும் டா. கஷ்டப்பட்டு படிப்ப, பணத்தை வாங்க அப்படி யோசிப்பியா, அப்பா கூட ரொம்ப செல்ப் கான்பிடன்ஸ் உள்ளவன் நல்ல பையன் டா தூக்கிவிட யாராவது துணையிருந்தா உன்னை விட நல்லா வருவான்னு அப்பா அடிக்கடி சொல்வார்.

    நான் ஏன் நம்ம பிரெண்டுக்கு ஹெல்ப் பண்ண கூடாதுனு தான் எல்லாம் முன்ன இருந்து செய்தேன். ஆனா அது உன்னை இன்னும் குறைச்சி காட்டும்னு நினைக்கலை. எனிவே சாரி டா நிஷாந்த்.

    அப்பறம் மேகாவுக்காகவும் மன்னிப்பு கேட்டுக்கறேன்.

    கிராமத்துல வளர்ந்த பிள்ளையா… மனசுல வச்சிக்க தெரியாம திட்டறா. உன்னை பார்த்து எரிந்து விழறா. அப்பா இல்லாம வளர்ந்த பொண்ணு டா. அதான் அவ வாழ்க்கையை யார் இப்படி விளையாடறானு தாம்தூம்னு குதிக்கறா.

    அம்மாவோட கண்டிப்புல அடங்கிட்டு இங்க நானும் உன் மனதை சரிபண்ணிட்டு கூப்பிட்டுக்கறேன்னு சொன்னதை ஏற்க முடியாம திட்டறா.

     சின்ன பொண்ணு தானே மன்னிச்சிடு.

    நிறைய பேசி உன்னை ரிலாக்ஸ் பண்ணி பேசணும்னு இருந்தேன். இப்ப எதுவும் பேசமுடியலை. ஆனா இனி எதுவும் பேச வேண்டாம் டா. இந்த இடைப்பட்ட நாட்களை மட்டும் ஸ்கிப் பண்ணிட்டு நாம பழையபடி பேசி சந்தோஷமா இருப்போம்.

    எனக்கு நீ சந்தோஷமா போகணும்னு ஆசைடா நிஷாந்த்.” என்றதும் நிஷாந்த் கண்ணீர் கோடுகள் கன்னம் தாண்டி வழிந்தது.

       “டேய்… என்னை மன்னிக்காத. அடி… நாலடி அடி.” என்று நிஷாந்த் கத்தினான்.

    “நான் மன்னிக்கவும் மாட்டேன் அடிக்கவும் மாட்டேன். என்னை பொறுத்தவரை மன்னிக்கிற அளவுக்கு நீ தப்பு பண்ணலை. முதல்ல வீட்டுக்கு வா. எப்பவும் போல எல்லாரிடமும் பேசு. பாலா கமலேஷ் மனோஜிடம் எங்களுக்குள்ள சண்டை நாங்களே சமாதானம் ஆகிடுவோம். நீங்க பேசுங்கடானு உரிமையா கேளு.” என்றதும் நிஷாந்த் அட்சரனை அணைத்து அழுதான்.

    “டேய் அழாத.. இட்ஸ் ஹர்டிங் டா.” என்று அட்சரன் கூறியும் நெடுநேரம் அணைத்து அழுதான்.

   அட்சரன் கடல் நீரில் முழ்கும் சூரியனை கண்டான். நிஷாந்தின் கோபங்கள் வன்மங்கள் தன் நெஞ்சோடு புதைக்கட்டும் என்று தேற்றினான்.

    “சரி வா வீட்டுக்கு போகலாம்” என்று அழைத்தான்.
 
     “வேண்டாம் டா… நான் ஏதாவது ஹோட்டல் ரூம்ல தங்கிக்கறேன். நம்ம பிரெண்ட்ஸ் யாருக்கும் என்ன பிடிக்கலை.” என்று மறுத்தான்.

    “ஹோட்டல் ரூம்லயா? அடிச்சிடுவேன்டா. நம்ம பிரெண்ட்ஸிடம் நீ தான் கோபத்தை குறைச்சிட்டு போகணும். நாளைக்கு உன் ட்ரீட் தான். வெயிட்டா கவனி.” என்றான் அட்சரன்.

    “அவங்க வேற கோபமா இருப்பாங்க.” என்று மேகாவை எண்ணி கூறினான்.

      “அவங்களா… எவங்க… ஓ… மேகாவா… அவளை எல்லாம் நான் பார்த்துப்பேன்.” என்றான்.

    “ஹாப்பி மேரீட் லைப் டா.” என்று கட்டி பிடித்து குலுங்கினான்.
  
    “மச்சி… பிரெண்ட்ஸ்லயே நீ தான் டா முதல்ல வாழ்த்திருக்க. அந்த பக்கி பாலா கூட பஸ்ட் நைட் தான் நடந்துச்சானு கேட்டான். இல்லையென்றதும் விஷ் பண்ணலை.” என்றதும் நிஷாந்தோ தலைகுனிந்தான்.

   “சாரிடா… உன் மேரேஜை யாருக்கும் சொல்ல விடாத வகையில சதி பண்ணிட்டேன். நல்ல வேளை அங்கிள் அவங்களுக்கே மேரேஜ் பண்ணி வச்சார். அவங்களும் உன்னை ரொம்ப பாசமா பார்த்துக்கறாங்க.” என்றான் நிஷாந்த்.

   இப்படியே பேசிக் கொண்டு காரில் ஏறக்கூறினான்.

    நிஷாந்த் தயங்க, முன்னிருக்கையில் அமர வைத்து அழைத்து வந்தான்.

      வீட்டுக்கு வந்து கார் கதவை திறக்க, வாசலில் நிலாவும் விஸ்வாவும் அட்சரன் காரிலிருந்து நிஷாந்த் கூட வருவதை கண்டனர்.

    விஸ்வாவோ முகம் கறுத்து “மேகா வந்தா எதுவும் தடை பண்ணாதே. நான் வித்யாதரன் அங்கிளிடம் பேசறேன்.” என்று சென்றான்.

    வாசலில் கார் சத்தம் கேட்டதும் மூன்று குரங்கு பொம்மைகள் போன்று ஹாலில் அமர்ந்திருந்த பாலா மனோஜ் கமலேஷ் எட்டிபார்த்தனர். ஜன்னலில் நிஷாந்தோடு வரும் அட்சரனை கண்டு அதிர்ந்தனர்.

    “என்னடா இவன் ஒரே கார்ல நிஷாந்தை கூட்டிட்டு வர்றான். இங்க என்னடானா அந்த தங்கச்சி மூட்டை முடிச்சி கட்டிட்டு அவன் ரூம்ல இருக்கா. என்ன நடக்க போகுதோ.” என்று மனோஜ் பேசினான்.

     “என்னடா சத்தமேயில்லாம இருக்கிங்க. மச்சான்ஸ் நாளைக்கு நிஷாந்த் ட்ரீட் நாம எல்லாரும் வெளியே போறோம்” என்று கூறினான்.

     மூவரும் அட்சரன் அறைக்கதவை பார்த்து திரும்பினார்கள்.

      “என்னடா?” என்று அட்சரன் கேட்டு திரும்ப, அக்னி குழம்பாய் மேகா நின்றாள்.

     “ஏய்… நீ என்ன இங்க. என் ரூம்ல என்ன பண்ணற?” என்று கேட்டதும், “ஹலோ இது என் வீடு. நான் வாழப்போற வீடு. நான் இனி இங்க தான் இருக்க போறேன். எவனுக்காவது குத்துச்சினா குடைஞ்சிதுனா அவனுங்க போகட்டும்.” என்றவளை கோபமாக எட்டுக்கள் வைத்து அட்சரன் செல்ல, நிஷாந்த் தடுத்தான்.

      “விடுடா… என்ன பேசறா.. அவனுங்கனு… அடிச்சி துவைச்சி அப்படியே ஊருக்கு அனுப்பிடுவேன்.” என்று கர்ஜித்தான்.

    “மச்சி… அவங்க என்ன மட்டும் தான் சொல்லறாங்க. மத்த பிரெண்ட்ஸை இருக்காது. நான் தப்பா எடுத்துக்கலை. பீல் பண்ணலை. விடு.. அன்னைக்கு மாதிரி கை நீட்டிடாதே.” என்று தடுத்தான் நிஷாந்த்.

     “அதென்ன உன்னை சொன்னா விட்டுடணுமா. ஏய் நாலு நாள் கழிச்சி இங்க வா. இப்ப போ” என்றான் அட்சரன்.

     “என்னது… அப்ப வா இப்ப போவா… ஹலோ… ஊர் அறிய தாலி கட்டினிங்க. உங்களோட தான் தங்க முடியும். அது கிராமம் கல்யாணம் ஆனப்பின்னவும் எங்க வீட்ல எப்படியிருக்க? ஆஹ்.. உங்க வீட்ல இருந்தா மட்டும் பையனோட அனுப்பலையானு கேட்க மாட்டாங்களா. இதோ பாருங்க நான் இங்க தான் இருப்பேன். என்னை வெளியே போக சொன்னிங்க மொத்தமா போயிடுவேன்.” என்று மிரட்டினாள்.

   இம்முறை நிஷாந்தோ “அட்சரன் போதும் அவங்க அவங்க ரூம்ல தானே இருக்க போறோம். நான் எந்த வன்மத்தையும் மனசுல ஏற்றிக்கலை. நீ அவங்களை சமாதானப்படுத்த பாரு” என்றவன் அட்சரன் மறுக்க அறைக்குள் தள்ளினான் நிஷாந்த்.
  
    பின்னர் மற்ற நண்பர்களிடம் “டேய் மன்னிச்சிடுங்க டா. நான்…” என்றதும் கமலேஷ் அவனின் அறைக்குள் அடைந்தான்.

     பாலாவும் மனோஜூம் மாறி மாறி பார்த்துவிட்டு, “உனக்கு தப்பை செய்துட்டு அதை அக்சப்ட் பண்ணவே இத்தனை நாள் ஆச்சு. எங்களுக்கு உன்னை மன்னிக்க நாள் தேவைப்படாதா? நீ வேண்டுமின்னா பாரினுக்கு போ. அதுக்காக தப்பை மறந்துடுங்க நாளைக்கே ட்ரீட் தர்றேன் அதுயிதுனு வந்து பேசாதே. அவன் மன்னிக்கறான்னா இந்த இடைப்பட்ட காலத்தில் நீ செய்த விஷயத்தை ஜீரணிச்சிட்டான். நாங்க அப்படியில்லைப்பா.” என்று பாலா கோபமாக கத்தி விட்டு சென்றான்.

    மனோஜோ ஆமோதிப்பதாய் அவனும் இடத்தை காலி செய்தான்.

      நிஷாந்தோ எதுவும் கூறாது அறைக்குள் அடைந்தான்.

அட்சரன் அறைக்குள் “உங்களுக்கு நான் முக்கியமில்லை. பிரெண்ட்ஷிப் தான் முக்கிய.” என்ற வார்த்தை முழுமையடைய வில்லை.

    வன்மையாய் மேகாவின் மென்னுதட்டை சிறை செய்திருந்தான் அட்சரன்.

    மூச்சு முட்ட முத்த தாகம் தீர்த்து வைத்தப்பின் விடுவித்தான்.

     “நல்ல மூட்ல இருக்கேன் மேகா. நிஷாந்திடம் ரொம்ப நாள் கழித்து நிம்மதியா பேசினேன். நீ எதுவும் பேசி வைக்காதே. உனக்கென்ன என் கூட இருக்கணும் அவ்ளோ தானே. இங்கயேயிரு ஆனா நொய்நொய்னு அவனை பேசறதோ, இந்த குத்தி காட்டி குட்டு வைக்கிறதோ கூடாது சரியா.” என்றதும் மேகா முகம் தூக்கி வைக்க, அவள் தாடை பற்றி திருப்பி, ‘சரினு சொல்லுடி’ என்று கன்னம் பற்றி கெஞ்சி கேட்டான்.

  தலையை ஆட்டிக் கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்தாள் மேகா.

2 thoughts on “விலகும் நானே விரும்புகிறேன்-10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *