அத்தியாயம்-11
அதிகாலை காலையில் எழுந்து காபி போட்டு அட்சரனுக்கு கொடுக்க கிச்சனை அதகளப்படுத்தியிருந்தாள்.
“பாலா அண்ணா… காபி” என்று மேகா உரிமையாய் கொடுக்க, “அதென்ன பாலா அண்ணா… மனோஜ் அண்ணா தான் சாப்பாட்டுல முதல்ல” என்று பாலாவுக்கு கொடுக்க வைத்த காபியை பிடுங்காத குறையாக எடுத்து கொண்டான்.
மேகாவோ போனால் போகட்டுமென்று மீண்டும் பாலாவுக்கு கலந்து கொடுத்தாள்.
“டேய் எனக்கு ஒரு கப் காபியை தரச்சொல்லு டா” என்று கமலேஷ் பாலாவிடம் சென்று மேகாவிடம் கேட்க வற்புறுத்தினான்.
பாலாவோ “சிஸ்டர் இன்னொரு காபி” என்றதும், மேகா திரும்ப, கமலேஷ் பாலாவின் பின் மறைந்தான்.
“என்னை நீங்க சைட் அடிச்சிங்க தானே? பச்சை தண்ணி தரமாட்டேன்.” என்று பொங்கிவிட்டு மேகா அட்சரனுக்கு காபி கொண்டு வர சென்றாள்.
பாலாவோ, “டேய் நீ என்ன பண்ணி வச்சிருக்க?” என்று கோபமாய் கேட்டான்.
”பாலா… பக்கத்து வீட்ல ஒரு பொண்ணு இருந்தா வயசு பையன் மனசு என்னடா தோணும். சைட் அடிச்சேன். எனக்கென்ன ஜோசியமா தெரியும் அவ அட்சரன் மனைவினு. உனக்கு தெரிந்ததும் தங்கச்சினு சொல்லிட்ட. எனக்கு இங்க நிற்குது சொல்ல வரலை. ஆனா இப்ப எல்லாம் சைட் அடிக்கலைடா. தப்பாவும் பார்க்கலை.” என்று கமலேஷ் கூறவும் அட்சரன் சிரித்து கொண்டே வந்தான்.
மேகாவோ, “சிரிக்கறிங்க.. ஏன்டா பார்த்தனு கண்ணை நோண்ட வேண்டாமா?” என்றதும் அட்சரனை கண்டும் அவளை கண்டும் நண்பர்கள் மூவரும் திரும்பினார்கள்.
கமலேஷ் வெகுவாய் பயந்து நின்றான்.
மேகாவோ, “நீங்க தான் வாழ்க்கையை அழித்தவருக்கே ஒன்னும் பண்ணலை.” என்று கூறவும் அட்சரன் “இதுக்கு தான்டி உன்னை இப்ப வராதேனு சொன்னது.” என்றதும் அட்சரன் கோபம் கண்டு வாயை மூடினாள்.
அட்சரன் சொல்லாமலேயே காபி கலந்து கமலேஷிடம் நீட்டினாள்.
“ஐ அம் ரியலி சாரி சிஸ்டர். இனி என் பார்வை எப்பவும் தப்பாகாது.” என்றதும் அந்த காபியை எடுத்து நிஷாந்திடம் கொடுத்தான் அட்சரன்.
“மேகா… கமலேஷுக்கு கலந்து கொடுத்திடு” என்று கூறினான்.
நிஷாந்த் வாங்க மறுத்து தவிக்க, அட்சரன் “பிடிடா.” என்று அதட்டவும் வாங்கினான்.
மேகாவோ மீண்டும் கலந்து கமலேஷிடம் கொடுக்கவும் கமலேஷ் “தேங்க்ஸ்ங்க” என்று பெற்றுக் கொண்டான்.
“சரி இன்னிக்கு லீவு நாம எங்க போகலாம்?” என்று அட்சரன் பேச, “நம்ம காலேஜிக்கே போகலாமா?” என்று கேட்டான் நிஷாந்த்.
அவனுக்கு தொலைந்த நேசத்தை எங்கு பெற வேண்டுமென தெரியவில்லை. அட்சரனே தன்னை மன்னித்தாலும், மற்ற மூவர் மன்னிக்காமல் இருப்பது கவலையை தந்தது.
அட்சரனோ “போகலாம் டா ஏய் உங்களுக்கு ஓகே தானே போலாம் டா. கெட் ரெடி” என்று விரைவுப்படுத்தினான்.
அட்சரனுக்காகவும் விடுமுறையில் மேகாவோடு தங்கவும் இயலாது நண்பர்கள் கிளம்பினார்கள்.
நிஷாந்திடம் கேள்விக் கேட்கவும் கடிந்திடவும் கிளம்பினார்கள் என்றால் அது சரியாக இருக்கும்.
காரை கிரவுண்டில் விட்டுவிட்டு சீனியர் என்ற அடையாளத்தோடு செக்கியூரிட்டியிடம் சொல்லி கல்லூரி முதல்வரை காண வந்தார்கள்.
அவர் ஐவரையும் கண்டு மகிழ்ச்சியுற்று கல்லூரிக்குள் இரண்டு மணி நேரம் பேசி நேரம் கழித்திட அனுமதி தந்தார்.
ஐவரும் தங்களுக்கு மிகவும் பிடித்த புங்கை மரத்தடிக்கு வந்தனர்.
மரத்தை ஒட்டி சுவரும் சிமெண்ட் பெஞ்சும் இருக்க அங்கிருந்த ஜீனியரை விரட்டி விட்டு அமர்ந்தனர்.
நீண்ட நேரம் மௌனத்தை கடைப்பிடித்தனர் பாண்டவர்கள்.
அட்சரனோ “எத்தனையோ மெமரிஸ் நாம பேசிக்காம பேச வைக்குதுடா. பார்றேன்… எனக்கு என்னவோ கண் முன்ன இப்ப தான் மீட் பண்ணி, பிரெண்டாகி, கேன்டீன்ல வம்படிச்சு, கிளாஸ்ல சேட்டை செஞ்சு, அதுவும் அந்த கல்சுரல் அப்போ டேன்ஸ் பண்ணி, ஸ்டேஜ்ல கரண்ட் கட் ஆனப்பின்னும் நம்ம பெர்பாமன்ஸ் தூள் கிளம்பினோமே.” என்று இனிய நினைவலைகளை மீட்டினான்.
“ஒரு முறை கேன்டீன் புட் சரியில்லைனு போராட்டம் பண்ணினோம் நினைவுயிருக்காடா” என்று மனோஜ் கூறவும், பாலாவோ “பார்டா.. எது நினைவு வச்சிருக்கானு?” என்று சிரித்தான்.
“ஆமா நீ கூட சந்தியானு ஒரு பொண்ணிடம் லவ் சொன்னியே.” என்று கேட்டதும் “அடேய் அது நான் இல்லை கமலேஷ் தான். காலேஜ்ல லவ்வுனு சுத்தியது கமலேஷும் நிஷாந்தும் தான்.” என்று பாலா பேசிவிட்டு, அமைதியானான்.
“மச்சான் என்னை எல்லாரும் மன்னிச்சிடுங்க டா. என்னால முடியலை. மனசுல இருந்த வக்கிரம் எல்லாம் ஒரு சூழ்நிலையில கொட்டறதுக்கு தவிச்சப்ப வித்யாதரன் அங்கிள் அனுப்பின கொரியர் லெட்டர் வந்துச்சு.
அதை உபயோகப்படுத்தினா யாருனு தெரியாதுனு அப்படி விளையாடிட்டேன்.
இப்ப எல்லாம் தவறுனு புரியுது டா. அட்சரன் மன்னிச்சிட்டான். நீங்களும் மன்னிச்சிடுங்க டா.
சத்தியமா பாரின்ல ஜாப் என்று முன்ன அவ்ளோ சந்தோஷம் கிடைக்கும். இப்ப கொஞ்சம் கூட சந்தோஷம் இல்லை டா. நிம்மதியும் இல்லை.
செய்த தப்பு புரியுது. அதுக்கு தண்டனையா என்னை அடிச்சிடுங்க டா. ஆனா முடியலை… நாலு வருடம் பழக்கத்துல தெரியாத நம்ம சிநேகிதம். இந்த பிரிவுல ரொம்பவே படுத்துதுடா.
தற்கொலை பண்ணிக்கலாமானு கூட தோன்றுச்சு.” என்றதும் கமலேஷ் பதறினான்.
அட்சரனோ பாலாவை தட்டி “பேசு டா” என்பது போல முன்னே தள்ளினான்.
“இப்ப எதுக்கு தேவையில்லாம பேசற?” என்று கடிந்தான் பாலா.
சிமெண்ட் பெஞ்சில் மாறி மாறி அருகே வந்தனர்.
கமலேஷ் நிஜமாகவே நிஷாந்தை இரண்டறை அறைந்தான்.
அடித்த கையோடு அணைத்து கொண்டான்.
“நான் அந்த பொண்ணை மேகாவை சைட் அடிச்சிட்டேன் டா. சாரி கேட்டதும் மன்னிச்சிட்டாங்க. தப்பு சிறிதோ பெரிதோ மன்னிப்பு கேட்டாச்சு. மன்னிச்சாச்சு. அட்சரன் சந்தோஷமா இருக்கறதுக்காகவாது உன்னிடம் பேசுவேன். மேபீ நாளடைவில் உன்னோட எப்பவும் போல பழக வந்துடும்” என்று அணைத்தான்.
“டேய் ட்ரீட் வையு… அதென்ன நல்ல வேலையில இருக்க நல்ல சம்பளம். என்னவோ அவன் ‘டம்’ பண்ணறான்னு தானே சொன்ன. இன்னிக்கு செலவை இழுத்து வைக்கிறேன் பாரு.” என்று பேசினார்கள்.
ஒரு மணி நேரம் ஒருவர் மாற்றி ஒருவர் கிண்டலும் கேலியும் செய்து மகிழ்ந்தார்கள். இம்முறை நிஷாந்த் எந்த கிண்டல் கேலிக்கும் மனதிற்குள் வன்மம் வளர்த்துக் கொள்ளவில்லை.
மாலை கல்லூரி கேன்டீனில் சிற்றுண்டி சாப்பிட ஆர்டர் தந்து அமர்ந்து சாப்பிட்டனர்.
“மச்சான் ஜூனியர் பொண்ணுங்க பார்க்கறாங்க டா.” என்று மனோஜ் ஆர்வமாய் இருந்தான்.
“எங்க.. எங்க.. பார்க்கறாங்க…” என்று பாலா தள்ளி கொண்டு தேடினான்.
“அடேய்… உங்களை இல்லை… நிஷாந்தையும் அட்சரனையும்.” என்றதும் “ஹலோ கேர்ள்ஸ் இவன் மேரிட் நாங்க எல்லாம் தான் பேச்சுலர்.” என்று கமலேஷ் கூறவும், அட்சரன் அவன் கத்தியதை கண்டு சிரித்துவிட்டான்.
“மச்சான் இனி எங்க போனாலும் இதை க்ளியர் பண்ணிடணும் டா. அட்சரனை லிஸ்ட்ல இருந்து தூக்குங்க டா.” என்றான் பாலா.
“ஏன்டா பார்த்தா என்ன தப்பு.” என்றதும் நிஷாந்தோ, “மச்சி… அந்த புள்ள பட்டாசாட்டும் வெடிக்குது. பார்த்துடா.. கண்ணை நோண்டிட போறா. என்னை எல்லாம் முறைக்கிறதுல நான் பஸ்பம் ஆகலை.” என்று நிஷாந்த் கூறினான்.
அதில் கவலையும் இருந்ததை அறிந்தாலும் ஏதோ இந்தளவு பேசி நிலைமையை சுமூகமாக செல்வதில் நிம்மதியடைந்தனர்.
இரவு வந்ததும் மேகாவே உணவை தயாராக்கி வைத்திருந்தாள். அட்சரன் ஐவருக்கும் சமைக்க கூறி கட்டளையிட்டிருந்தான்.
ஐவரும் ஹோட்டல் போகலாமென நிஷாந்த் கேட்க, “மச்சி சாரிடா.. சர்பிரைஸா இருக்கட்டுமேனு மேகா சமைக்கவா என்று கேட்டதும் சமைக்க சொல்லிட்டேன். உனக்கு ஹர்ட் ஆச்சுனா ஹோட்டலுக்கே போகலாம்.” என்று அட்சரன் கேட்டான்.
“நிஜமா சமைச்சாங்களா… அய்யோ அப்ப ஹோட்டல் வேண்டாம். பிறகு செய்து வைத்தது வேஸ்டாச்சுனு நான்ஸ்டாப்பா திட்டுவாங்க.” என்றான் நிஷாந்த் பயந்தவாறு.
“பாருடா… இவன் பயப்படறானாம்.” என்று சிரித்தபடி வீட்டிற்கு வந்தார்கள்.
வீட்டில் நிலாவும் மேகாவும் கிச்சனில் உருட்டும் சத்தம் கேட்டது.
“என்ன சொல்லு… நீ அட்சரன் என்றாலே அச்சுனு உருகிடற. அதான் யோசிக்காம இத்தனையும் சமைக்க சொல்லறார்.” என்று நிலா பேசியவள் அடுத்து அட்சரனை கண்டதும் “மேகா நான் அப்பறம் வர்றேன்.” என்று சாந்தனுவை எழுப்பி செல்ல ஓட்டமெடுத்தார்.
“மிஸ்ஸஸ். நிலா உங்க பையன் சாந்தனு இருக்கட்டும். எங்களோட சாப்பிடட்டும்.” என்று கூறவும் நிலா தலையாட்டி செல்ல முயன்றாள்.
“அண்ணி அண்ணி… இது அண்ணாவுக்கும் உங்களுக்கும்” என்று கொடுத்து நன்றி நவில்ந்தாள் மேகா.
ஐவரும் வாசம் பிடித்து உண்ண அமர்ந்தனர்.
மேகாவோ பரிமாற பிடிக்காமல் தனியாக நின்றுவிட்டாள். அட்சரனும் பரிமாற எல்லாம் வற்புருத்தவில்லை. அப்படி செய்து நிஷாந்த் சாப்பிடும் நேரம் எதையாவது கொட்டினாலோ முகம் திருப்பினாலோ அவன் வேதனை கொள்வான். மேகாவுக்கும் சங்கடமான நிலையென தவிர்த்தான்.
“எனக்கு அவிச்ச முட்டை பிடிக்காது டா. நீயே வச்சிக்கோ” என்று நிஷாந்த் மனோஜ் தட்டில் வைக்க அட்சரனோ “மேகா ஆம்லேட் செய்து தாயேன் ப்ளிஸ் மா” என்று கேட்டான்.
மேகாவோ முனங்கிக் கொண்டே அடுப்பை பற்ற வைத்தாள். “வேண்டாம் டா அவங்களை ஏன் வேலை வாங்கற” என்று நிஷாந்த் அஞ்சினான்
அட்சரன் செய்யட்டும் டா.” என்று பேசிக்கொண்டிருக்க சூடாக ஆம்லேட் வந்து நிஷாந்த் முன் வைத்தாள்.
“சிஸ்டர் எனக்கும்” என்று கமலேஷ் கேட்க, “தங்கச்சி எனக்கு” என்று பாலாவும், “என்னிடம் எல்லாம் கேட்க கூடாது. தானா இந்நேரம் தட்டுல வச்சி நீட்டணும். நான் உங்களுக்கு தம்பி மாதிரி” என்றான் மனோஜ்.
“ஆத்தி… இதென்ன தம்பியா… அண்ணாவாவே இருங்க” என்று மடமடவென ஐந்து ஆம்லேட் செய்து தட்டில் வைத்தாள்.
நெடுநேரம் நண்பர்களோடு அரட்டை அடித்து கொண்டிருந்தான் அட்சரன். நிஷாந்த் இரண்டு நாளில் செல்வதால் இந்த பேச்சு வார்த்தை அரட்டை தவிர்க்க இயலவில்லை.
அட்சரனின் போன் மெஸேஜ் டோன் மூலமாக மேகா நொடிக்கு ஒரு முறை வாட்ஸப் செய்தாள்.
“தூங்கலையா…”
”இப்ப வரமாட்டிங்களா.”
“எவ்ளோ நேரம் பேசுவிங்க.”
“நமக்கு கல்யாணமாகிடுச்சு”
“குட்நைட். நான் தூங்கறேன் போதுமா”
“குட்நைட் கூட சொல்ல மாட்டேங்கறிங்க” என்று தொடர்ந்து அனுப்பவும் நிஷாந்தோ “டேய்.. போய் தூங்கு… காலையில பேசலாம்.” என்றதும் தான் மற்றவர்களும் ‘குட் நைட் மச்சான்’ ‘குட்நைட்டா மாப்பிள்ளை’ என்று பிரிந்து அவரவர் அறைக்கு சென்றனர்.
“இப்ப எதுக்கு வீட்டுக்குள்ளயே இருந்து போன்ல பேசற.” என்று அட்சரன் அறையில் மெதுவாய் வந்து மெத்தையில் அமர்ந்திடவும் கோபமாய் திரும்பி படுத்தாள்.
“இப்படி முதுகை காட்டிட்டு தூங்க தான் லொட்டு லொட்டுனு மெஸேஜ் பண்ணினியா.” என்று கேட்டு அவளை தன் பக்கம் திருப்பி இழுத்தான்.
“என்ன எழுதினாலும் ஒன்னுதுக்கும் பதில் வரலையே. பிறகு என்னவாம்.” என்று ஜன்னலை பார்த்து கூறினாள்.
“பதில் தந்துட்டா தூங்கிடுவியே. அதனால தான் நீ தூங்க கூடாதுனு எதுக்கும் பதில் தரலை.” என்று கன்னம் பிடித்து கொஞ்சினான்.
அவனை உரசிக்கொண்டு “என் பிரெண்ட் ரம்யா நாளைக்கு இங்க வர்றா. அவளுக்கு இங்க ஒரு இன்டர்வியூ. நம்ம வீட்டுக்கு வரச்சொல்லிட்டேன்.” என்று சட்டை பொத்தானை திருகி கேட்டாள்.
“ம்ம்.. உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்ல இருப்பாங்களே அவங்களா. தாராளமா வரட்டும் அவங்க இங்க வந்தா நான் ஹாலுக்கு போயிடறேன்.” என்றவன் அவளோடு முத்த யுத்தங்களை நிகழ்த்தினான்.
முத்தங்கள் அடுத்த கட்டம் சென்று, இனிதாய் தேவபந்தந்தில் நுழைந்தார்கள்.
தொடரரும்.
💕💕💕💕💕💕💕
Wow super. Excellent narration. Aachu really a good and best friend. Intresting
Super super super super super super super super super super super