Skip to content
Home » விலகும் நானே விரும்புகிறேன்-12

விலகும் நானே விரும்புகிறேன்-12

அத்தியாயம்-12

காலையிலேயே மேகா வீட்டில் ரம்யா வந்து நின்றாள்.

பாலா தான் கதவை திறந்து “யாரு நீங்க?” என்று கொட்டாவி விடுத்து நின்றான்.

“மேகாவை பார்க்கணும்” என்றதும் மறுகேள்வி கேட்காமல் அட்சரன் அறைக் கதவை தட்டி முடித்தான்.

அட்சரன் தான் எட்டி பார்த்தான். “தங்கச்சிய பார்க்க யாரோ ஒரு பொண்ணு வந்திருக்காங்க” என்றதும் அட்சரன் எட்டி பார்க்க ரம்யா என்றதும், தலையை கோதி கொண்டு “உட்காருங்க ரம்யா நேத்து தான் சொன்னா. இவ்ளோ பாஸ்டா வந்து நிற்கறிங்க. பாலா இவங்க மேகாவோட பிரெண்ட்டுடா” என்று அறிமுகப்படுத்தினான்.

ரம்யாவோ ‘இரண்டு தடிமாடும் இருக்குங்க அவளை காணோமே?’ என்று தோழியை மனதிற்குள் வறுத்தெடுத்தாள்.

“நான் மேகாவை அனுப்பறேன்” என்று அறைக்கு சென்றவன் அவளிடம் ரம்யா வந்துவிட்டதை கூறினான்.

“இவ்ளோ குயிக்கா வந்துட்டா. நான் என்ன மாதிரி ஒன்பது ஒன்பதரைக்கு வருவானு நினைச்சேன்.” என்று எழுந்தாள்.

முகம் அலம்பி வரவும் ரம்யாவை தூரத்தில் அமர்ந்தவாறு பாலா மனோஜ் இருந்தனர்.

ரம்யா இதற்கே ஆடுவாளென வந்து வரவேற்று நலம் விசாரித்தாள்.

” பதினோறு மணிக்கு இன்டர்வியூ டி அதான் அவசரமா கிளம்பியது” என்றதும் ரம்யாவை தங்கள் அறைக்கு கூட்டிக்கொண்டு குளிக்க கூறினாள்.

அட்சரன் அறைக்குள் போகாமல் பாலாவோடு இருந்தான்.

அவரவர் அலுவலகம் கிளம்பவும் நிஷாந்த் அட்சரன் இருவரும் வெளிநாடு செல்வதால் நிஷாந்திற்கு புதிதாக ஏதேனும் வேண்டுமா என்று வாங்க செல்ல முடிவெடுத்தனர்.

ரம்யாவோ இன்டர்வியூ முடித்து வந்து மேகாவிடம் பேசினாள்.

நிஷாந்தை பற்றி தான் பெரும்பாலான பேச்சு என்றாலும் அட்சரன் மன்னித்து ஏற்றுக் கொண்டதில் மேகாவிற்கு முதலில் பிடிக்கவில்லை. பிறகு தற்போது அட்சரன் முடிவே இருக்கட்டும் நிஷாந்தும் இங்கு இருக்க போவதில்லையே என்று ஆறுதலாய் இருக்கின்றதென கூறினாள்.

அடுத்த நாள் நிஷாந்த் வெளிநாடு செல்வதாலும், ரம்யா மேகா இருவரும் தோழிகளாய் அட்சரன் அறையில் கதை அளக்கவும் நேரங்கள் நகர்ந்தன.

அன்றைய இரவு மேகா ரம்யா அறையில் உறங்கினார்கள்.

     ஐவரும் ஹாலில் நள்ளிரவு தாண்டி பேசுவது மேகாவிற்கு அறைக்குள் வரை கேட்டது.
   வெளியே வந்து எட்டி பார்த்த போது அட்சரனும் நிஷாந்த் பாலா என்று பேசிக்கொண்டிருக்க மற்றவர்கள் உறங்கியிருந்தார்கள்.
   
    ‘ரொம்ப க்ளோஸ் பிரெண்ட் போல பச் அதனால தான் ஒதுங்கிடாம அகைன் பேசி நண்பனை கட்டியணைக்கிறார்’ என்று மேகா காதில் பஞ்சை அடைத்து
கொண்டு படுத்தாள்.

    அடுத்த நாள் அட்சரன் கதவை தட்ட, மேகாவோ பஞ்சு அடைத்து இருக்கவும் எழுந்துக் கொள்ளவில்லை.

     பாலாவும் கதவை தட்டி “சிஸ்டர் தங்கச்சிம்மா… மேகா.” என்று பலதடவை தட்ட, ரம்யாவே வந்து நின்றாள்.

    அதே நேரம் சரியாக பாலா “தங்கச்சி பாவம் நைட்டு நிஷாந்த் கூட நீ பேசவும் தூங்காம முழிச்சிட்டு இருந்தாங்க. கூட ஒன்னு தூங்குச்சே. அது முழிச்சிருக்க வேண்டாம் சரியான கும்பகர்ணி..ணி.” என்று தடுமாறி அட்சரனிடம் “நான் போறேன் டா” என்று தந்தியடித்து ஓடினான்.

   ரம்யாவோ ஓடுகின்ற பாலாவை பார்த்து “நைட்டு முழுக்க ஹாஹாஊஊனு கத்தி கத்தி சிரிச்சி பேசினிங்க. தூங்கமே வரலை. காலையில தான் அமைதியான தூக்கம் வந்துச்சு. நான் கும்பகர்ணியா… சாரு அப்படியே தூங்காதவர். பாலா… தம்பி ராசா.. அப்படின்னதும் விசுக்குனு எழுந்துடுவாரு.” என்று ஏகத்துக்கு திட்டினாள்.

    அட்சரனிடம் “அவ காதுல பஞ்சு வச்சிட்டு இருக்காண்ணா.” என்று முகமலம்பினாள்.
 
   அட்சரனோ ஓகே மா பார்த்துக்கறேன்.” என்று அறைக்குள் சென்றான்.

  காலை பேப்பரில் செய்தியை வாசித்து முடித்து இருந்தாள் ரம்யா.

    “பேப்பர்லாம் வாசிப்பிங்களா.” என்று பாலா கேட்டதும், “ஏன் சார் கிராமத்துல இருந்து தானே நீங்களும் வந்திங்க. அதென்ன எல்லாம் கொஞ்ச நாள்ல நீங்க மேதாவிங்க மாதிரியும் ஊர்ல இருந்து வந்தா முட்டாளாட்டுமே ஒரு சீனை சித்தரிக்கறிங்க. நான் கோல்ட்மெடல்… இங்கிலிஷ் நல்லாவே தெரியும்.” என்று ஆங்கிலப் பேப்பரை வாசிக்க பக்கத்தை திருப்பினாள்.

    பாலாவோ சத்தமில்லாது இடத்தை காலி செய்தான். இந்த பொண்ணுக்கும் நமக்கும் முட்டிக்குதே’ என்று வாயை திறக்க பயந்தான்.

  சாப்பிட்டு முடித்து ரம்யா ஊருக்கு கிளம்புவதாக கூறி அவளது ஷோல்டர் பையை எடுத்து ஹாலுக்கு வந்தாள்.

     “நான் நிலா அக்கா பைக்ல போய் ரம்யாவை கோயம்பேட்டுல விட்டுட்டு வர்றேன்” என்றாள் மேகா.

     “ஏய்… நாங்கயெல்லாம் லீவ் போட்டிருக்கோம். கார்ல கொண்டு போய் விடு. ம்ம்.. பாலா.. ப்ளிஸ் டா” என்று டிரைவ் பண்ண கூற பாலா தலையாட்டவும் கீயை தூக்கி போட பாலா கேட்ச் பிடித்தான்.

“நான் கூட்டிட்டு போறேன் சிஸ்டர்.” என்று நொடியில் வரவும் மறுக்க இயலாது பின் தொடர்ந்தாள்.

    பாதி தூரம் வரை நிசப்தமாக வரவும், “என்ன சிஸ்டர் சைலண்டா வர்றிங்க. நான் இருக்கறதால பேச  இடைஞ்சலா இருக்கா.?” என்று மேகாவிடம் கேட்டான்.

    மேகா மறுக்கும் முன், “ஆமா” என்று ரம்யா கூறவும் ‘பேச்சுக்கு இல்லைங்கனு சொல்லுதா பாரு.’ என்று மனதிலேயே ரம்யாவை திட்டினான்.

    மேகாவோ “ரம்யா சும்மாயிருக்க மாட்ட. அண்ணா அவர் கூட வருவார்னு ரொம்ப எதிர்பார்த்தேன். அந்த சோகத்தை ரம்யாவிடம் சொன்னேன். அதனால அவ வெடுக்குனு பேசறா. தப்பா எடுத்துக்காதிங்க” என்று மன்னிப்பு கேட்டாள்.
 
  ”சேசே தப்பா எடுத்துக்கலமா. நிஷாந்த் ஈவினிங் போறானா. அவனை நார்மலா இருக்க வச்சி அனுப்பணும்னு அட்சரன் ரொம்ப மெனக்கெடுக்கறான்.

     நிறைய இடத்துல நிஷாந்தை தன்னை அறியாம காயப்படுத்தியதா அட்சரன் ஃபீல் பண்ணறான். தப்பை செய்தவனை விட அதை செய்ய தூண்டியவன் நான் தான் டா. நியாயம் பேசுறதா உளறுறான்.
  
     எப்படியும் மத்தவங்கனா நீ இன்னமும் தயங்குவேன்னு தான் என்னை கூட அனுப்பினான்.” என்று பாலா அட்சரன் செய்கைக்கு விளக்கம் தந்தான்.

   கோயம்பேடு வரவும் தனியார் பேருந்து ஒன்றில் ரம்யாவை  ஏற்றி விட்டு வீட்டுக்கு வந்தார்கள்.

    நிலாவும் விஸ்வாவும் சாந்தனுவை பள்ளியிலிருந்து அழைத்து வர சென்றிருந்தனர்.

    மதியம் உணவை சாப்பிட்டு முடித்து, இரவு பயணத்திற்கு அப்பொழுதே கிளம்ப கூறினான்.
  
    “ரொம்ப குயிக்கா இருக்கே?” என்றதும் அங்க செக்-இன் வேற இருக்கு. நீ கிளம்பு” என்று அட்சரன் அவசரப்படுத்தினான்.

      முன்னிருக்கையில் மேகா அமர்ந்திட, அட்சரன் வாகனத்தை இயக்க, பின்னிருக்கையில் மனோஜ் பாலா நிஷாந்த் இருந்தார்கள்.

   “கமலேஷ் எங்கடா போனான்? இன்னும் என் மேல கோபமா? நேத்தெல்லாம் நல்லா பேசினானே?” என்று நிஷாந்த் தேடினான்.

    “அவனுக்கு கொஞ்சம் வேலையாம். அப்படியே வர்றேன்னு சொன்னான்.” என்றான் அட்சரன். வண்டி விமானநிலையம் நோக்கி சீறிப்பாய்ந்தது.

     விரைவில் வந்து சேரவும், விமான நிலையத்தில் கார் பார்க் செய்து விட்டு லக்கேஜை எடுத்து வெளியே வைத்து அங்கே பேசிக்கொண்டிருக்க மேகாவோ “எனக்கு லெமன் ஜூஸ் வேண்டும்” என்று சுட்டிக் காட்டினாள்.

     மனைவிக்கு முதலில் வாங்கித்தர சென்றான். நண்பர்களுக்கு கேட்க வேண்டாமென்றதும் விட்டுவிட்டான்.

    லெமன் ஜூஸ் வாங்கி கையில் கொடுத்ததும் குடித்தாள்.
   அட்சரன் கமலேஷிற்கு போன் போட அவனோ “ஆன்திவே டா” என்று கூறவும் அணைத்து விட்டான்.
 
    “என்னதிது லெமன் ஜூஸ் 60 ரூபாயா.? என்னங்க இது. ஒரு லெமன் பத்து ரூபா இல்லை பதினைந்து ரூபா என்று வச்சிக்கிட்டாலும் சர்க்கரை ஒரு ஸ்பூனோ இரண்டு ஸ்பூனோ அதுக்கு 60 ரூபாயா.” என்று கத்தினாள்.

    “ஏய் மேகா இங்க அப்படி தான் குடிச்சிட்டு குப்பையில போட்டுட்டு வா. நான் அங்க போறேன்” என்று சென்றான்.

    மேகாவோ விமான நிலையத்தின் வெளியே இருந்த கடையில் விலைப்பட்டியலை கவனித்து வாயை பிளந்தாள்.
  
    ‘அடப்பாவி சமோசா பப்ஸ் 90 ரூபாயா. பதினைந்து இருபது ரூபாய்  பொருளை எப்படி இப்படி விலை போட்டு விற்கறாங்க.’ என்று சபித்தாள்.

    அப்பொழுது தான் தூரத்தில் கமலேஷோடு ஒரு பெண் வரவும் மேகா அவளை கவனித்தாள்.

    அந்த பெண் நிஷாந்தை நோக்கி வேகயெட்டுக்கள் வைத்து ஒடி சென்று அணைத்து கொண்டாள்.

     நிஷாந்தோ அஞ்சலி வந்து அணைக்க ஆனந்த அதிர்வில் கமலேஷை காண அவனோ அட்சரன் பக்கம் கைகாட்டி ‘இவன் தான் காரணம்’ என்று சொல்லாமல் சொன்னான்.

    “லவ் யூ நிஷாந்த். ஐ அம் சாரி” என்று பேச நண்பர்கள் ஒதுங்கினார்கள்.
  
    “இப்ப தான் டா நிம்மதியா இருக்கு.  அவன் போறதுக்குள்ள இந்த லவ் திரும்ப தொடரவும் தான் அவன் இனி அங்கயிருக்குற தனிமைக்கு மருந்தா மாறும்.” என்று அஞ்சலியிடம் நிஷாந்திற்காக பேசி அவள் நிஷாந்தின் காதலை புரிய வைத்து இன்று சந்திக்க ஏற்பாடும் பண்ணினான்.

    நிஷாந்தும் அஞ்சலியும் இருபது நிமிடம் தனியாக பேசினார்கள்.  

   அட்சரன் தனக்காக அஞ்சலியிடம் பேசி அழைத்து வந்ததை உணரவும் தான் செய்த செயலை எண்ணி அருவருப்பு கொண்டான்.

   இம்முறை மேகாவிடம் வந்து “நான் தடுக்க பார்த்தும் நீங்க அட்சரனோட மனைவியா வந்து இங்க நிற்கறது ரொம்ப சந்தோஷம். அட்சரன் என்னை மன்னிச்சிட்டான். நீங்களும் மன்னிச்சிட்டா. நான் நிம்மதியா போவேன். ப்ளிஸ்ங்க.. மன்னிச்சி பாருங்க இனி நல்ல நண்பனா அட்சரனுக்கு இருப்பேன்.” என்று கூறவும் மேகாவோ “நீங்க சங்கடமா போகக்கூடாதுனு தான் அவரு ஒன்னுஒன்னா பார்த்து பார்த்து செய்யறார். நல்லப்படியா போயிட்டு வாங்க.” என்று வாழ்த்தினாள்.

    அட்சரனோ மேகாவை அணைத்து ”சோ ஸ்வீட்” என்றான்.

        மணித்துளிகள் கரையவும் நிஷாந்த் விமானநிலையத்திற்குள் சென்று கையசைத்து வெளிநாட்டுக்கு பயணம் செய்திட விமானத்தில் ஏறினான். எப்படியும் திரும்ப இரண்டு வருடம் ஆகும். அதுவரை காதலர்களாக தொலைப்பேசியில் காதலை தொடரலாமென கூறியிருந்தான் நிஷாந்த்.

   நிஷாந்த் விமானநிலையத்திற்குள் சென்றதும், அஞ்சலியோ இங்கிருந்து கார் புக் செய்து கிளம்புவதாக அட்சரனுக்கும் கமலேஷுக்கும் நன்றி நவில்ந்து கிளம்பினாள்.

   வரும் பொழுது அமர்ந்த இடத்திலேயே மேகா அட்சரன் அமர்ந்திட, பின்னிருக்கையில் நிஷாந்த் சென்றதால் கமலேஷ் அமர்ந்து வீட்டுக்கு வந்தார்கள்.

      ரம்யா ஊருக்கு சென்றதாக குறுஞ்செய்தி வரவும் மேகா போன் போட்டு அன்னையை விசாரித்து கொண்டாள்.

   அடுத்த மாதம் ஊர் திருவிழாவிற்கு வருவதாக கூறினாள்.

     வித்யாதரனும் கனிமொழியும் ஊருக்கு வரும் போது மற்ற நண்பர்களை அழைத்து வர கூறி அழைப்பை தொடுத்தனர்.

   பாலாவோ முந்திக்கொண்டு “கண்டிப்பா வருவேன் அங்கிள்” என்றான்.
  
    ஐந்து அறைகளில் நிஷாந்த் அறை வெற்றிடமாக மாறியது. மேகா நால்வருக்கும் காலை உணவையும் காபியும் சமைத்து முடித்திடுவாள்.

   மதியம் சில நேரம் சமைத்து தருவாள். சில நேரம் கேன்டீனை உணவை பார்த்துக்கொள்ள கூறிடுவாள்.

    பாலா கமலேஷ் மனோஜ் என்று இருந்தாலும் மேகா சற்று அசௌவுகரியம் அடைந்தாள். ஆனால் கமலேஷுக்கு பணிமாறுதல் கிடைக்க அவன் ஓசூர் சென்றுவிட்டான்.

     மனோஜூம் அடுத்த மாதம் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டான்.

    பாலா மட்டும் ஊர்த்திருவிழாவுக்கு வந்து சேர்ந்தான்.

    ரம்யா மீது ஏற்பட்ட ஈர்ப்பில் ஊர்த்திருவிழா முடிந்ததும் தனது பெற்றோரை அழைத்து பெண் கேட்க சென்றான்.

  ரம்யா வீட்டில் தாத்தா மட்டும் அவளுக்கு கார்டியன் என்பதால் விரைவில் திருமணத்திற்கு நாள் குறித்தனர்.

    அட்சரன் ஐந்து அறைக்கொண்ட வீட்டில் தடுப்பு சுவர் எழுப்பி, இரண்டு அறை கிச்சன் ஹால் என்றதை தனக்கும், ஒரு அறையை கிச்சனாக மாற்றி இரண்டறையை பாலாவுக்கும்  மாற்றி அமைத்து தனி வாசல் அமைத்தும் அங்கேயே வாடகைக்கு தன் நண்பனை கூடவே வைத்து கொண்டான்.

      பாலா ரம்யா திருமணம் முடிந்து வருவதற்குள் வீடு முழுமைப்பெற்று தயாராகிடும் என்பதால் அட்சரன் பாலா நட்பு மட்டும் கூடவே தொடர்ந்தது. மற்ற நண்பர்களின் நட்பு போன் ஸ்கைப் மூலமாக தொடர்ந்தது. மேகா ரம்யா நட்பு முன்பு போலவே பக்கத்து வீட்டு தோழிகளாக மாறி கதையளந்தனர்.

   கூடவே நிலா விஸ்வா சாந்தனு என்ற அண்ணன் உறவும் மேகாவுக்கு ஏற்பட்டது. அட்சரன் என்று அறைந்தானோ அன்றே தனது ஊர் பொண்ணு வசந்தி அக்காவுக்கு சேர்த்து மேகாவிற்கு அண்ணன் வீடு இது என்று பறைச்சாற்றினான். சாந்தனு தன்னை போல குட்டி வரவை மேகா வயிற்றில் இருக்க தினமும் வந்து நலன் விசாரிப்பான்.

     ஆம்… ஊர்த்திருவிழாவில் தீ மிதி திருவிழாவை அனைவரும் புது அனுபவமாக பார்த்திருந்த நேரம், மேகா மயங்கி சரிய அப்பொழுது தாங்க ஆரம்பித்தான். அதிலிருந்து இதோ இரண்டாமாதம் கூட அவளை தாங்கி கொண்டிருக்கின்றான்.

   மேகா கருவுற்று அட்சரனின் மகவை ஏந்தியிருக்க, அட்சரனோ மேகாவை மனதில் தாங்கியிருந்தான்.

       முதலில் விலகி நிறுத்தி காட்சிக்கு வந்த அட்சரனே விரும்பி தாங்கும் காதலனாய் மாறியிருந்தான்.

விலகும் நானே விரும்புகிறேன்
-சுபம்.
பிரவீணா தங்கராஜ்.

கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா எப்படியிருக்குன்னு சொல்லுங்க. வாசிக்கும் வாசகர்களுக்கு கருத்திடும் அன்பானவர்களுக்கும் நன்றிகள்

4 thoughts on “விலகும் நானே விரும்புகிறேன்-12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *