அத்தியாயம்-3
நிலா வீட்டின் கிச்சனும், பக்கத்து வீட்டின் உடற்பயிற்சி அறையும் ஒட்டி காணப்படும். அதனால் ஜன்னலில் பேசினால் அப்படியே இரு வீட்டு சம்பாஷனையும் மற்றவருக்கும் பேசினாலே சுவர் தாண்டி கேட்டுவிடும்.
ஏற்கனவே நிலா காலையில எட்டு மணி வரை இந்த ஐந்து பேரும் உடற்பயிற்சி ரூம்ல இருப்பாங்க. ஐந்து பேரும் இல்லைனா கூட இரண்டு மூன்று பேர் இருப்பாங்க என்று விஸ்வா மூலமாக பெண்கள் அறிந்ததால் மேகா நிலா போட்டு வைத்த காபியை எடுத்து பருகிக் கொண்டு கிச்சன் மேடையில் ஏறியமர்ந்தாள்.
மேகாவோ நிலாவே பேசச் சொல்லி செய்கை செய்தாள்.
“இப்ப தான் எழுந்தியா மேகா. அங்க காபி வச்சியிருக்கேன் குடி” என்று நிலா கூறவும், “ஓகே அண்ணி… காபி பிரமாதாம்” என்று கத்தியபடி பேசினாள்
“என்ன மேகா இன்னமும் போட்டோ கூட பார்க்காத அந்த மாப்பிள்ளையை பற்றி கவலைப்படறியா?” என்று கேட்டதும், “சேசே இல்லை அண்ணி. அவனுக்கு அதிர்ஷ்டம் அவ்ளோ தான். அதுக்காக எல்லாம் கலங்கி போவேனா.
என்ன அம்மா வேலைப் பார்க்க விடாம கல்யாணம் பண்ண பார்க்குதேனு கஷ்டப்பட்டேன். இப்ப இந்த பொட்டிக் பிஸினஸ் பார்க்கற வாய்ப்பு கை நழுவி போனது இப்ப திரும்பவும் பிஸினஸா பார்க்க வந்ததும் இந்த திருமணத்தால தானே. அதனால அந்த முகம் பார்க்காதவனுக்கு நன்றி சொல்லணும். நல்ல வேளை பத்திரிக்கை அடிச்சி மண்டபம் வரை வந்து நிற்கலை. போட்டோவும் பார்க்காததால அப்படியொன்னும் கஷ்டம் வரலை அண்ணி.” என்று ஸ்பீக்கரை முழுங்கியவளாய் பேசினாள்.
“பார்டா… கல்யாணம் நின்றாலும் கவலையே இல்லாம பேசுது.” என்று கமலேஷ் கூறவும் நிஷாந்தோ “அதுக்கு அழுது வடியணுமா. சத்தமா பேசாம வேலையை பாரு” என்று இந்தப்பக்கம் கடிந்தான்.
“ஏன் மேகா கல்யாணம் தடைப்பட்டும் ஜாலியா இருக்கியே… யாரையாவது லவ் பண்ணினியா?” என்று நிலா கேட்கும் கேள்விக்கு சத்தமின்றி பதிலை எதிர்பார்த்து காதை கூர்த்தீட்டினர் சுவற்றுக்கு அந்தப்பக்கம் இருக்கும் நபர்கள்.
“இல்லை அண்ணி… நான் யாரையும் விரும்பலை. விரும்பியிருந்தா எங்கம்மாவிடம் சொல்லியிருப்பேன். ஒருவேளை சேர்த்து வைப்பாங்க. இல்லையா துடப்பகட்டையில நாலு சாத்து சாத்தியிருப்பாங்க. என் அதிர்ஷ்டம் இரண்டும் நடக்கலை.
என்கிட்ட அவஸ்தைபடுற அப்பாவி ஜீவன் என்ன பண்ணுதோ.” என்று சிரிக்க இந்தபக்கம் இருந்த இதயம் மௌவுனமாய் சிரித்து கொண்டது.
நிலா மற்றும் மேகா இருவரும் சத்தமில்லாமல் ஹாலுக்கு வந்தனர். “ஏன் அண்ணி… இப்ப பேசியது கேட்டிருக்குமா… கேட்டாலும் புரிந்திருக்குமா?” என்று ஐயத்தோடு கேட்டாள்.
“அதெல்லாம் கேட்கணும்னு நினைச்சிருக்கறவங்க தெளிவா கேட்டிருப்பாங்க.” என்று கூறவும் மேகா மனதில் ‘அட்சரன் கேட்டிருப்பானா?’ என்றதே ஓடியது.
இந்தபக்கம் சுவற்றுக்கும் காது இருக்கும் என்பது போல ஐவரும் உடற்பயிற்சி செய்து அலுவலகம் செல்ல, ஆடையுடுத்தி தயாராக இருந்தார்கள்.
“ஏன் மச்சி அந்த பொண்ணு அப்ப சிங்கிளா டா” என்றான் பாலா.
“சிங்கிளா இருந்தா உனக்கென்ன மிங்கிளா இருந்தா உனக்கென்ன?” என்றான் மனோஜ்.
“அடப்போங்கடா.” என்று பாலா நகர்ந்தான்
அதேயிடத்தில் கமலேஷ் வந்து அமர்ந்தான். “கல்யாணம் நின்றிடுச்சாம் டா பாவம் இல்லை.” என்று உச்சுக் கொட்டி வருந்தினான்.
நிஷாந்தோ “ஏன் பாவம்… அதான் அவளே ப்ரீ பேர்டா இருக்காளே.” என்று பேசினான்.
அட்சரனோ ‘ப்ரீ பேர்டாம் ப்ரீ பேர்ட்.’ என்று நக்கலாய் நகர்ந்தான்.
அலுவலகம் செல்லும் நேரம் அதே நேரத்திற்கு நிலா மற்றும் மேகா தயாராகினார்கள்.
சாந்தனுவை முன்னால் அமர வைத்து மேகா வண்டியை செலுத்த, நிலா பின்னிருக்கையில் அமர்ந்தாள்.
பஞ்சபாண்டவர்களிடம் சாந்தனு ‘பை அங்கிள்ஸ்’ என்று கையசைக்க வேறு வழி தோன்றாது மற்றவர்கள் சாந்தனுவிற்கு பதில் விடைப்பெறுதலாக கையசைத்தனர்.
அப்பொழுது மேகாவை சில விழிகள் சில சில காரணத்தால் தழுவியது.
காரணங்கள் அந்த விழிகளே அறியும்.
சாந்தனுவை பள்ளியில் விட்டு விட்டு மேகா வண்டியை உயிர்பிக்க, “சாந்தனு தினமும் பை சொல்லறது கூட உனக்கு வசதியா போச்சுல. அங்க அந்த ஐந்து பேரும் சாந்தனுக்கு பை சொல்லறப்ப உன்னையும் பார்த்தாங்க.” என்று நிலா உரைத்தாள்.
“அதுக்கு தானே அண்ணி சாந்தனுவை முன்ன உட்கார வச்சி நான் பைக் ஓட்டறேன்னு சொன்னேன். தெரியாததை சொல்லுங்க” என்றதும் நிலாவோ “நீ கேடியில்லை கில்லாடி” என்று பேசியபடி பொட்டிக் வந்து சேர்ந்தனர்.
அதன் பின் நேரங்கள் கடந்தது. வண்ண வண்ண பூங்கொத்தை இறக்குமதி செய்து, ஆர்டர் வந்த விலாசத்திற்கு டோர் டெலிவரி கொடுக்கும் மேற்பார்வையை பார்க்க ஆரம்பித்தாள்.
இடைப்பட்ட நேரத்தில் நிலா சின்ன சின்ன பூவில் மாலை போலவும் இதயம் வடிவிலும் செய்வதற்கு மேகாவிற்கு கத்து கொடுத்தாள்.
புத்திசாலி மேகாவும் ஆர்வம் திரள கற்று தேர்ந்தாள்.
நடுவில் நடுவில் வசந்தி போன் போட்டு தன் பயத்தை மகள் மேகாவிடம் பேசி தீர்த்துக் கொள்வார்.
மேகாவுக்கு அதையும் தாண்டி பொழுது போகவில்லையென்றால் கணவனுக்கு போன் போடுவாள். அவனோ பதிலுக்கு, “ஊருக்கு வரும் வரை பேச மாட்டேன்னா பேச மாட்டேன். நான் சொல்றதை கேட்கலைல” என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.
எத்தனையோ இதய ஸ்டிக்கரும், முத்த ஸ்மைலியும் கூட போன் மூலமாய் அனுப்பினாள். எழுத்துக்கும் ஸ்டிக்கர் எமோஜி போன்றவற்றிக்கு மதிப்பில்லையென்று வாய்ஸ் நோட் கூட அனுப்பினாள்.
அனைத்தும் காதுகேள்கருவி மூலமாக அவள் குரலை ரசித்து கேட்பானே தவிர ஒரு வார்த்தை பேசமாட்டான்.
கோபத்தை தன் நிழலைப் போல கூடவே ஒட்டி வைத்துக் கொண்டான்.
இரண்டு வாரம் இதே வாடிக்கை வேடிக்கையாய் தொடர்ந்தது.
மற்றவர்களாக வீடு தேடி வந்து பேசுவதாக தோன்றவில்லை என்றதும் சாந்தனுவை அழைத்து கொண்டு அவளாக மீண்டும் பக்கத்து வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள்.
இம்முறை அட்சரன் திறந்தான். பார்வை கூர்த்தீட்டி, என்ன என்பது போல அலட்சிய பார்வையை வீசினான்.
நிஷாந்தோ “யார் டா?” என்று வந்தான். ஹாய் நீங்களா… என்ன?” என்று கேட்டான்.
“அது வந்து கற்றாழை வேண்டும்.” என்று கேட்டாள்.
‘ஙே’என விழிக்க, “உங்க வீட்டு தோட்டத்துல பார்த்தேன். கற்றாழை… அது வேண்டும்” என்றாள்.
“கற்றாழையா?” என்று பாலா திகைத்து விழிக்க, “டேய் ஆலோவேரா தமிழ்ல கற்றாழை அதை கேட்கறாங்க டா. நீங்க போய் எடுத்துக்கோங்க” என்று மனோஜ் கூறவும் மேகா வீட்டினுள் நுழைந்தாள்.
கமலேஷோ அவளை ஊடுருவி கூடவே வந்தான். கற்றாழையை கத்தரித்து வெட்ட உதவியும் செய்தான்.
“எதுக்குங்க இது” என்று பாலா கேட்க, “இந்த ஜெல்ல எடுத்து இஞ்சி பச்சமிளகாய் தட்டி உப்பு போட்டு மோர்ல கலந்து குடிக்க, மீதிய முகத்துல தேய்க்க” என்று நன்றி கூறி விடைப்பெற்றாள்.
சாந்தனுவோ “நான் இங்க விளையாடிட்டு வர்றேன் அத்தை” என்று தங்கிவிட்டான்.
மறுபடியும் வர்றதுக்கு ஒரு சான்ஸ் கிடைத்த திருப்தியில் மேகா கிளம்பினாள்
“முகத்துல தேய்க்க வேண்டும்னு கேட்காம மோர்ல கலக்கனு என்ன நைஸா கேட்டுட்டு போறால டா. எனக்கென்னவோ இவளிடம் ஜாக்கிரதையா இருக்கணும்னை தோணுது டா.” என்று மனோஜ் தாடை தேய்த்து கூறினான்.
“எப்பவும் பொண்ணுங்கன்னாளே ஜாக்கிரதையா இருந்துடறது பெட்டர்” என்று அட்சரன் இலவச ஆலோசனை வழங்கினான்.
சாந்தனுவோ இதனை கேட்டு தலையை திருப்பினான்.
“என்னடா…?” என்றதும் ஒன்றுமில்லையென்று திரும்பி கொண்டான்.
“மச்சி குட்டி பசங்க முன்ன பேசினா அது அப்படியே போய் சொல்லும்” என்று கூறவும், “எனக்கு எதை பத்தியும் கவலையில்லை.” என்றவன் சாந்தனுவிடம் இருந்து ரிமோட்டை பிடுங்கி, “உங்க வீட்ல டிவி இருக்குல… அதென்ன இங்க வந்து சின்சான் பார்க்கறது.” என்று பிடுங்கவும் சாந்தனுவோ உதடு பிதுங்கி அழுவது போல அங்கிருந்து சென்றான்.
“டேய்… டேய்… ஏன்டா.. அந்த குட்டி பையனிடம் அப்படி பேசின. அவன் அப்படியே போய் சொல்ல போறான். அழற மாதிரி வேற தெரியுது. என்னடா நீ. அழகா ஒரு பொண்ணு வந்துயிருக்கு. குட்டி பையனை கரெக்ட் பண்ணி அவளை கரெக்ட் பண்ணலாம்னா நீ இவனையே வெட்டி விடற” என்று கமலேஷ் கூறினான்.
நிஷாந்தோ “என்னயிருந்தாலும் தப்பு அட்சரன். நீ வரவர ஒரு மார்க்கமா இருக்க. யாரையும் ஹர்ட் பண்ண மாட்டியே டா. என்னாச்சு?” என்றான்.
“மச்சான் இவன் அவனோட ஆபிஸ் டூர் போனதிலருந்து சரியில்லை. என்னவோ நம்மிடம் ஒதுங்கியிருக்குற பீல் தருது.” என்று கூறவும், “டேய் எப்பவும் குழந்தையோட விளையாடுறது நீ. என்னாச்சு குட்டி பையனை விரட்டி விடற?” என்று தோழர்கள் சூழ்ந்து கேட்டதும், “நத்திங் டா… பிராஜக்ட்ல நான் செலக்ட் ஆகலை. வெளிநாட்டுக்கு போற வாய்ப்பு எனக்கு கிடைக்கலை அதனால வெக்ஸா போச்சு” என்றவன் அமைதியாய் அறைக்குள் முடங்கினான்.
Interesting
Super.. good going..
Super. Wonderful narration. Intresting
Super super super super super super super super super super super super
Nice