Skip to content
Home » விலகும் நானே விரும்புகிறேன்-8

விலகும் நானே விரும்புகிறேன்-8

அத்தியாயம்-8

     “என்னடா பிரெண்ட்… என்ன பிரெண்ட்?” என்று பொங்கினாள்.

      அட்சரனோ “நீ வெளியே போ நான் பேசிட்டு கூப்பிடுவேன்” என்று கடிந்தான்.

     “எப்ப கூப்பிடுவிங்க.. இன்னியோட முப்பது நாள் ஆச்சு. உங்களுக்கும் எனக்கும் மேரேஜ் நடந்து. நானும் யாருனு கூட தெரியாம இருக்கிங்கனு பார்ததேன். எல்லாம் யார் செய்தானு தெரிந்தும் உங்களால எப்படி இவனோட சிரிச்சு பேச முடியுது.

   இவனுக்கு இங்க ஸ்டே பண்ண வச்சி உங்களால செலவு பண்ண முடியுது.

    உங்க வாழ்க்கையை அழிச்சிட்டு எப்படி இவனால இங்க உயிரோட நடமாட முடியுது. சீ” என்று கூறவும் அட்சரன் மேகாவை அறைந்து முடித்திருந்தான்.

    “அவன் என் பிரெண்ட். இன்னொரு முறை பேசின பல்லை தட்டிடுவேன்.

    அவன் ஏதோ செய்தான். ஓகே… ஒரு வாரம் நிம்மதியா இருக்க வச்சி வெளிநாட்டுக்கு அனுப்பி அவனுக்கு நிம்மதியா வழியனுப்ப பார்த்தேன்.

   இரண்டு பேரும் அதை கெடுத்துட்டிங்க. உனக்கென்ன டா அவன் உன் லைப்பா அழிச்சான். என் லைப்பை தானே.

   உனக்கென்னடி முப்பது நாள் தானே என்னை தெரியும். அதுக்குள்ள என் லைப்காக இப்படி பதறுற. இவன் என் பிரெண்ட் நாலு வருஷம் தெரியும். என்னோட பழகி வாழ்ந்திருக்கான். அதை மீறி என்னை பிடிக்கலைனா நான் தான் அவனை காயப்படுத்திருக்கேன். நான் தான் அவன் மனசு புரியாம அவன் தாழ்வுமனபான்மையில இன்னமும் வளர்த்து விட்டிருக்கேன். என்னை பெரிசா ஆட்டிடியூட்டா காட்டியதா சீனை சித்தரிச்சிட்டேன்.
  
   என் தப்பு… என் பிரெண்டுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது,. எது சாப்பிடுவான், எந்த மூவி பிடிக்கும். எந்த டேரக்டர் படம்னா பஸ்ட் ஷோ டிக்கெட் வாங்கி பார்ப்பான். எந்த சப்ஜெக்ட் அவனுக்கு படிக்க பிடிக்கும். எந்த சப்ஜெக்ட எவ்ளோ முறையானாலும் மண்டையில ஏறாதுனு தெரிந்த எனக்கு. என்னோட இருக்கறப்ப நான் கொடுக்கற பணம் அவனோட தேவையை பூர்த்தி பண்ணுதா.. இல்லை அதனால அவன் காயப்படறானானு தெரிந்திருக்கணும்.

   எனக்கு அது தெரியலையே… நான் என்னடி நண்பன்” என்று மேகாவை பார்த்து கேட்டான்.

    “டேய் பாலா அவ நேத்து வந்தவ. நீ சொல்லு பாலா. அவனை ஹர்ட் பண்ணிருக்கேன் தானே.” என்று பாலாவிடமும் நியாயம் கேட்டான்.

    “அதெப்படி டா அவன் மனசுல இருப்பதை சொல்லிருக்கலாம். சொல்லாம விட்டுட்டு… நீ எப்படி ஹர்ட் பண்ணியதாகும்” என்று பாலா கூறினான்.

    “ஹர்ட் பண்ணிருக்கேன். அதோட விளைவு தான். இங்க பாருங்க… என் பிரெண்ட் நிஷாந்த் இங்கிருந்து வெளிநாடு போகற வரை இங்க தான் இருப்பான். யாராவது அவனை  காயப்படுத்தினா என்னை காயப்படுத்தியதுக்கு சமம்.” என்றதும் மேகாவோ நொடித்து கொண்டு வெளியேறினாள்.

       கூடத்தில் நிசப்தமாக இருக்கவும் ஒவ்வொருத்தராய் கலைந்தனர்.

    நிஷாந்த் மற்றும் அட்சரன் தனியாக நின்றனர்.

     அட்சரனும் நிஷாந்தை கண்டு மெதுவாய் அறைக்குள் சென்றான்.
 
    நிஷாந்திற்கு அறைக்குள் செல்வதில் கால்கள் வலுவில்லை. பொத்தென்று அமர்ந்தான். அட்சரன் பேசியதை மனதில் ஓட்டிப் பார்த்தான்.

     இத்தனை நாள் வராத குற்றவுணர்வு, அட்சரன் அடிக்காமல் தன்னை வெளியே தள்ளாமல் அமைதியாய் கடந்ததில் பெரிதாய் பாதித்தது.

    கண்கள் கலங்க தான் அதிகமாய் தவறாய் எண்ணி அட்சரனின் நட்பை இழந்துவிட்டோமோ என்று தாமதமாய் கலங்கினான்.

    அட்சரனின் அறையை பார்த்துவிட்டு அமைதியாய் எழுந்தான்.

    அடுத்த நாளில் எழுந்து போது ஹாலில் ஆளாளுக்கு முகம் தூக்கி வைத்திருந்தனர்.
 
   நிஷாந்திடம் யாரும் பேசவில்லை, கமலேஷ் தான் அதிகமாக நிஷாந்திடம் பழகுபவன் அவனிடம் வந்து அமர கமலேஷோ, நிஷாந்த் வந்ததும் எழுந்து விட்டான்.

        “பாலா நான்” என்று பேசவும், “பேசாத டா. நான் அட்சரன் சொல்லுக்கு அமைதியா இருக்கேன். இல்லை நான் எப்பவோ கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளிடுவேன்.” என்று கூறினான் பாலா.
   
    மனோஜோ “டேய் அவனிடம் என்ன பேச்சு ஆபிசுக்கு டைம் ஆகுது. அவனுக்கென்ன வெளிநாட்டுக்கு வாழ்க்கை, கூடவேயிருந்து குத்திட்டு நேத்துவரை ஜாலியா தானே இருந்தான்.” என்றதும் நிஷாந்த் இமை மூடினான்.

        “ஏன்டா நீ கூட வெளிநாட்டுக்கு போற, என்னை மறந்துடுவ தானே மச்சி” என்று பாலா கேட்க “சே நான் என்ன அவனை மாதிரியா தினமும் உங்களை மறந்து ஜாலியா இருப்பனு நினைச்சியா. நான் நிஜமா உங்களை மிஸ் பண்ணுவேன் டா.” என்று பேசி நகரவும் நிஷாந்த் நண்பர்களிடம் வாயை திறக்கவில்லை.

    சற்று நேரம் கழிய அட்சரன் வெளிவந்தான்.

    நிஷாந்தை கண்டு சிறிதும் சங்கடமின்றி காபி போட்டு அவனிடம் நீட்டினான்.

    “இப்பவும் உன்னை கேட்காம தான் காபி போட்டு நீட்டறேன் நண்பனா. இது உன்னை காயப்படுத்துற மாதிரி எடுத்துக்காதே. சூடான காபி எப்பவும் மனதை சமநிலைப்படுத்தும். நான் இப்பவும் பிரெண்டா தான் ட்ரீட் பண்ணறேன். உனக்கும் என்னை நண்பனா பார்க்க முடிஞ்சா இதை குடிக்கலாம்” என்று வாங்க மறுக்கின்றான் என்று அருகே வைத்து விட்டு சென்றான்.

    நிஷாந்த் காபியை எடுக்க கைகள் சென்றாலும் அவன் மனமே அவனை குதறியது.

     வாழ்க்கையை பந்தாடிவிட்டு இன்னும் என்ன நண்பன் என்று மனசாட்சி பழித்தது.

     அப்படியே எழுந்து அறைக்குள் சென்று அலுவலகம் கிளம்பினான்.

     “மச்சி வண்டியை எடு.” என்று கமலேஷ் கூறவும் “இன்னும் நம்ம நிஷாந்த் வரலை டா” என்று அட்சரன் கூற மனோஜ், பாலா இருவரும் பார்த்து கொண்டனர்.

     நிஷாந்த் மெதுவாய் வெளிவந்தவன் கார் இருக்க ஏறவும் தயங்கினான்.

    அவன் தயங்கி வெளிவர, அட்சரன் கார் கதவை திறந்து “ஏறு டா” என்றான்.

   மேகாவோ ஸ்கூட்டரை தொப்பென்று போட்டு “இடுப்புல தூக்கி கொஞ்சு. நான் எங்கம்மா வீட்டுக்கு போறது தான் சரி. அம்மாவிடம் உன் மாப்பிள்ளைக்கு மரக்கழண்டு இருக்குனு சொல்லணும்” என்று முனங்கி செல்வதை கண்டு நிஷாந்த் மெதுவாய் காரை கடந்து நடந்து சென்றான்.
  
   ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ பிடித்து அலுவலகம் சென்றான்.

    “அட்சரன் தங்கச்சியை ரொம்ப கஷ்டப்படுத்தற. நீ சமாதானம் பண்ண வேண்டியது தங்கச்சியை. தேவையேயில்லாம நிஷாந்துக்கு இன்னமும் பாவம் பார்க்கற” என்று பாலா கூற, “கொஞ்சம் பேசாம வாடா.  எல்லாம் உன்னால.. கொஞ்சம் கத்தாம இருந்தா அவன் பாட்டுக்கு அமைதியா ஒரு வாரத்துல போயிருப்பான்.

   இப்ப உங்களுக்கும் அவன் ஒரு வில்லனா போயிட்டான். அவனுக்கும் இப்ப என்னிடம் தோற்றதா உணர்வு.

     கொஞ்சம் கொஞ்ச நேரம் மூடிட்டு இருந்தா அவன் என்னை ஜெயித்ததா நிம்மதியா இருந்திருப்பான். நீங்களும் நல்ல நண்பன் போனதா பீல் பண்ணிருப்பிங்க.” என்று குற்றம் சுமத்தினான்.
 
     “சரி டா. அப்படியே இருந்தா மேகா தங்கச்சியை என்ன அவனிடம் காட்டாமலேயே இருப்பியா.” என்றதும், “இல்லை டா… மேரேஜாகி இங்க வந்த அன்னலயிருந்து ஒருமுறையாவது பேச ட்ரை பண்ணினேன். ஆனா முடியலை. அவனை கொஞ்ச நாள் அவனோட பிஹேவரிடம் வாட்ச் பண்ணி பிறகு பேசலாம்னு நினைச்சேன்.

     ஆனா அதுக்குள்ள மேகா வந்துட்டா. அவளை வச்சிட்டு பேச முடியலை. அப்பவும் சில நேரம் பேச முயன்றேன். மேகாவை பார்த்தும் அப்படியே இயல்பா இருக்கவும் இதை அப்படியே விட்டுடலாம்னு கூட நினைச்சேன்.

      மேகாவை பார்த்துட்டான் அதனால நாளைக்குபின்ன இன்ட்ரோ கொடுக்கவும் முடியலை 

     இங்கிருந்து போனப்பிறகு ஒரு நாள் ஆடியோ அனுப்பிட்டு போட்டோவை வாட்ஸப்ல அனுப்பி அவனிடம் கேட்கலாம்னு தான் இருந்தேன். அவனிடம் எதுவும் காட்டிக்காம நட்பை தொடரலாம்னு சொல்ல நினைச்சேன். அவன் லைட்டா ஒதுங்குவான் பிறகு அடிக்கடி பேசி நார்மலுக்கு மாத்திடலாம்னு நினைச்சேன்.

    எல்லாம் மேகா ஆபிஸ் வரவும் நீ பார்க்க உனக்கு தெரிய, இப்பவும் அவனுக்கும் என்னவோ நான் அவனை ‘டம்’ பண்ணற மாதிரி இருக்கும்.” என்று கவலைக் கொண்டான்.

    பாலாவும் மனோஜூம் “டேய் என்னனாலும் அவன் பண்ணியது தப்பு தானடா.” என்று கூறினார்.

    “தப்பு தான்… ஏன் பிரெண்ட் தப்பு பண்ணினா மன்னிக்க மாட்டியா.” என்று கேட்டதும் பாலா அமைதியானான்.

     “என்னவோ டா அவன் மேல கோபம் வருது. நீ திட்டாம இருக்கவும்  உன் மேல அதிகமா கோபம் வருது.

   என்னவோ போ. மேகாவை எப்ப வீட்டுக்கு கூப்பிட போற. நாங்க எல்லாம் இருக்கறதால யோசிக்கறியா?” என்று கமலேஷ்  கேட்டான்.

     “சேசே…. அன்னைக்கு அவ வந்தப்பிறகு கோபம் போனதும் வீட்டுக்கு கூப்பிடலாம்னு கூட நினைச்சேன். உங்கள்ல ஒவ்வொருத்தரா சந்தேகத்தோட பார்ப்பானு அவாய்ட் பண்ணினேன்.

    ஐந்து ரூம் வச்சி நான் என்ன பண்ணப்போறேன். காலேஜா டேஸ்ல வாடகை கொடுத்து இருந்த வீட்டை வாங்கியதே மெமரபிளோட வாழணும்னு தான்.

    இப்ப அவளை கூப்பிட்டா நிஷாந்தை காயப்படுத்துவா அவன் கொஞ்ச நாள்ல கிளம்பிடுவான் பிறகு கூப்பிட்டுக்கறேன். எங்க போயிடுவா சில்வண்டு.” என்றவனின் முகத்தில் புதுவிதமான வெட்கம் ஓட்டிக்கொண்டது.

    “டேய் மச்சான் இவன் முகத்தை பாருடா. அச்சோ… என்னைக்காவது இப்படி பார்த்திருக்கோமா.” என்று போட்டோ எடுத்து அதனை யாருக்கோ அனுப்பினான்.

    “டேய் என்ன பண்ணின?” என்று அட்சரன் கேட்க, “தங்கச்சிக்கு அனுப்பினேன் டா.” என்றான் பாலா.

     “நேத்து அடிச்சிருக்கேன் என் மேல கோபமா இருக்கறவளிடம் அனுப்பிருக்க” என்று அட்சரன் பேசவும் மனோஜோ “நீ அடிச்சிருக்க கூடாது டா. நேத்து முழுக்க மேகா நிலாவிடம் உன்னை பற்றி ஒரே புகார் தான்” என்று கூறினான்.

    “ஆமா டா விஷ்வா கூட என்னிடம் என்னயிருந்தாலும் மேகாவை எங்களை நம்பி அனுப்பினாங்க. அவரென்ன கைநீட்டிட்டாருனு கேட்டார். உங்க பிரெண்ட் தானே தப்பானவர். எங்க வீட்டு பொண்ணுக்கு கேட்க ஆளில்லையானு கேட்டார். அசிங்கமா போச்சு டா” என்று கமலேஷ் கூறவும் மேகாவை பற்றி சிந்தித்தான்.

     தன்னோடு இன்னமும் வாழவில்லை ஆனால் சண்டைக் கோழியாக சிலிர்க்கின்றாள். தான் அறைந்தப்பின் என் மீது கோபம் காட்டாமல் சென்றுவிட்டால் என்று மேகா மீது அன்பும் காதலும் அதிகமாகியது.

3 thoughts on “விலகும் நானே விரும்புகிறேன்-8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *