அத்தியாயம்-14
மானஸ்வி குளித்து முடித்து தலைவாரி வெளியே செல்லும் தோரணையில் வந்தாள்.
பேப்பர் படித்து கொண்டிருந்த விஹான் பேப்பரை திருப்பி வாசித்தாலும் நோட்டமிட்டது என்னவோ மானஸ்வியை தான்.
“ஆன்ட்டி… நான் தங்கியிருக்கற ஹாஸ்டல்ல போயிட்டு என் ஆபிஸ் ஐடி கார்ட் எடுத்துட்டு வந்துடறேன்.” என்று கூற யோகலட்சுமி பங்கஜம் இருவருமே தலையாட்டினார்கள்.
“ஒரு முறை சொன்னா புரிஞ்சுக்கற சென்ஸ் இல்லை? நீ எங்கயும் போக கூடாது. உன்னை தேடிட்டு இருக்காங்க. அந்த பையன் நிரஞ்சனை இரண்டு பேர் தான் பார்த்திருக்காங்க. அதோட அவனை பத்தின டீடெய்ல் வேற எதுவும் கடத்தின ஆட்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
ஆனா நீ கடலுக்குள் உன்னை பதினைந்து பேர் பார்த்திருக்காங்க. போதாதுக்கு அங்க சிசிடிவி இருந்ததாநீயே சொல்லிருக்க உன்முகம் தெரிந்திருக்கும்.
அதனால தான் என் அண்ணா டெத்ல சரியா உன்னை அந்த கேங்க் துரத்துது. அந்த பையனை கூட காணாமல் போனவர்களை பற்றிய அறிவிப்பு பார்த்தா கூட கண்டுபிடிக்க மாட்டாங்க. நீ வெளியே போனா வகை தொகையில்லாம மாட்டுவ” என்றான் விஹான்.
“நான் என் நார்மல் வாழ்க்கையை வாழணும். என்னோட வந்த வினோத் உயிரோட இருக்கானா இல்லையான்னு தெரிஞ்சுக்கணும்.
இப்படி எத்தனை நாள் என்னை உங்க வீட்ல வச்சி சோறு போடுவீங்க? சர்வானந்தன் சார் பையனை காப்பாத்த சொன்னார். அவர் போட்டிருந்த காவல் உடைக்கும், அவருக்கும் மதிப்பு தந்து நிறைவேத்திட்டேன். இனி என் வேலையை பார்க்க விடுங்க” என்று முகத்தில் அடித்தாற் போல உரைத்தாள்.
“எனக்கொன்னும் உன்னை இந்த வீட்ல வச்சிக்க எண்ணமில்லை. சில காரணத்துக்காக சொல்லறேன்.” என்று விஹான் உரைத்தான்.
”அட்லீஸ்ட் ஆபிஸ் போய் நிலவரத்தை சொல்லி வோர்க் ஃப்ரம் ஹோம் வாங்கிட்டு வர்றேன். அதுக்காகவாது நான் போகணும்.” என்று பிடிவாதம் பிடிக்க, பேப்பரை தூரயெறிந்து கோபமாய் எழுந்தான்.
அவன் எழுந்து தோரணையும், முகத்தில் காட்டும் கோபமும் மானஸ்விக்கு திகிலை தர, “சாப்பிட்டு நான் கூட வருவேன். எக்ஸ்கியூஸ் பண்ணிட்டு தலைவலியை கூட்டாத” என்று கடிந்தான்.
மானஸ்வியோ நெஞ்சில் கைவைத்து விழித்தாள். விஹான் போனதும், “ஏன் ஆன்ட்டி இவர் எப்பவும் இப்படி தானா? அடுத்தவங்க மனநிலை என்ன ஏதுன்னு யோசிக்க மாட்டாரா?” என்று கேட்டாள்.
“இப்பன்னு இல்லைம்மா எப்பவும் இப்படி தான். அதுக்கு தான் இவனிடம் நான் பேசறதை குறைச்சிட்டேன். ஒன்னு சொன்னா அதை செவில ஏத்தமாட்டான். அவன் சொன்னதை மட்டும் திரும்ப திரும்ப சொல்வான்.
சர்வானந்தன் எப்பவுமா என் சொல் கேட்கற பிள்ளை. அவன் எதிர்த்து போனது பிருந்தாவை கல்யாணம் செய்தது மட்டும் தான். அதுகூட நாங்க சொந்தம் என்பதால் எப்படியும் நான் சேர்த்துப்பேன்னு ஒரு மெத்தனம் இப்ப பிருந்தாவை சேர்த்துக்கிட்டோம் அவன் குழந்தை வேற வரப்போகுது. எங்க சர்வானந்தன் எங்களுக்கு இல்லாம பண்ணிட்டாங்க.” என்று தேம்பினார் விஹான் தந்தை சுதாகர்.
அடுத்த நொடி கண்ணீரை துடைத்து ”விஹான் கண்டிப்பா அவங்க அண்ணனுக்கு இப்படி சேர்ந்தவர்களை சும்மா விடமாட்டான்.
அவன் முடிவோடு இருக்கான். எங்க பக்கம் இழந்ததுக்கு எவனாயிருந்தாலும் பதில் சொல்லணும்.” என்று கூறினார்.
மானஸ்வி மனமோ விஹானை தற்போது பெருமையாக எண்ணியது.
சட்டை பொத்தனை போட்டு தலையை இரண்டு கையால் கோதி வந்தான்.
“என்ன பேசணுமோ இன்னிக்கே ஆபிஸ்ல பேசிடு. நான் உன் கூட வருவது உன் பாதுகாப்புக்கு இல்லை. என் அண்ணனை இந்த நிலையில் மாத்தினவங்களை கண்டுபிடிக்க” என்று கூறினான்.
யாரும் இருவர் செல்வதை தடைவிதிக்கவில்லை. அவர்கள் சென்றதும் பங்கஜம் பிருந்தா இருந்த இடத்திற்கு வந்தார்.
பூஜையறையில் தான் அடிக்கடி வாசம் இருப்பாளென்று முதலில் அங்கு வர, அங்கே சர்வானந்தன் புகைப்படம் இல்லை.
‘பிருந்தா ஏன் தான் சர்வானந்த் புகைப்படத்தை இங்கிருந்து எடுத்துட்டு எடுத்துட்டு போறாளோ.’ என்று புலம்பி மகளது அறைக்கு வந்தார்.
டெபிளில் சர்வானந்தன் புகைப்படத்தில் குங்குமம் அழிக்கப்பட்டு இருந்தது. பிருந்தா மெத்தைக்கு கீழே வீற்றிருந்தாள்.
வெள்ளை சுடிதார் கருப்பு சுடிதார் இதை தவிர இதை தவிர இடைப்பட்ட நாளில் அவள் அணிவதில்லை. பங்கஜத்திற்கு மனம் தாளவில்லை.
சம்பந்தியான அண்ணியாரிடம் பேச சென்றார்.
இங்கு பைக்கில் சீறி பாய்ந்த விஹான், அவள் சொன்ன அலுவலகத்திற்கு சென்றான்.
அவள் அலுவலகத்தை மேலிருந்து கீழ் பார்த்தவன், “நானும் உள்ள வரலாமா?” என்று ஹெல்மெட்டை கழட்டினான்.
முதலில் தயக்கமாய் நின்றவளிடம், “ஒரு மரியாதைக்கு கேட்டேன். நீ ரொம்ப தயங்கி பதில் தர்ற இடத்துலே நீயில்லை. முன்னாடி போ. நான் வேதாளம் மாதிரி கூடவே வருவேன்.” என்று கூறவும் ‘அப்ப என்ன மரியாதைக்கு கேட்டாரு’ என்று முன்னால் கைப்பையை போட்டு விறுவிறுவென நடந்தாள்.
அவளை முன்னால் போக விட்டு மெதுவாக பிடரியிலிந்து பின்னாங்கால் வரை பார்த்தவன் தலையை உலுக்கி கொண்டான்.
லிப்டில் ஏறியப்பின் பக்கத்தில் வந்தவன், “வினோத் எங்க வேலை பார்க்கறான்” என்று கூற “ஹார்பர்ல, வண்டி நம்பர் நோட் பண்ணி எழுதி வைக்கறது.
அதனால் தான் தெரிந்த போட் மேன் ஒருத்தரிடம் வாடகைக்கு போட் எடுத்தான்.” என்று கூறினாள்.
“கடலோரம் வாங்கிய காற்றை… கடலுக்குள்ள அனுபவிக்க போனீங்க. அப்படிதானே?” என்று இளக்காரமாய் கேட்டான்.
“லுக்… எங்க காதலை அவங்க வீட்ல ஏற்றுக்கிட்டு கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாங்க. அதுக்காக செலிபிரேட் பண்ண நினைச்சான்.” என்று கையை கட்டி கூறினாள்.
“செலிபிரேட்?” என்று விஹான் கேட்க, “இங்க பாருங்க… நீங்க முதல்லயிருந்தே என்ன தப்பா நினைக்கறிங்க. நாங்க ஒன் இயர் லவ் பண்ணறோம். இதுவரை அவன் நிழலை கூட தொட விட்டதில்லை.
கடைசியா படத்துக்கு போனப்ப தான் முத்தம் கொடுக்க வந்தான். அது கூட குடிச்சிருக்கான்னு தள்ளி விட்டு நான் தியேட்டரிலிருந்து அன்னிக்கு நைட் கேப் புக் பண்ணிட்டு தனியா வந்தேன்.
அந்த கோபத்துக்கு சாரி கேட்டு தான் கல்யாண பேச்சு சீக்கிரமா வந்தது.
இப்ப அவன் எங்கயிருக்கான்னு கூட எனக்கு தெரியாது. இங்க நிலைமையை சொல்லிட்டு அடுத்து அவன் வேலை பார்க்குற இடத்துக்கு போகணும். அவங்க அட்ரஸை அங்கிருப்பவர்களிடம் கேட்கணும். அவன் உயிரோடு… உயிரோட இருக்கணும்” என்று கடைசியாக குரல் இறுகியது.
லிஃப்ட் கதவு திறக்க, கண்ணீரை துடைத்து தன் அலுவலகத்தில் வந்தாள்.
ஆளாளுக்கு மானஸ்வி வேலைக்கு வராததை கேட்டனர். போனும் கடலில் விழுந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லையே.
நெருங்கிய தோழிகளில் சிலர் மானஸ்வி காதலிப்பதாக தெரியும். ஆனால் வினோத் என்று அவள் புகைப்படம் காட்டி அறிமுகப்படுத்தியது கிடையாது. இன்று விஹானுடன் வரவும் பார்வைகள் மொத்தம் காதலித்தவர்கள் மணமாகி வந்ததாக எண்ணிக்கொண்டார்கள்.
விஹான் இருக்க நெருங்கி வந்து கேட்காமல் “யாரு?” என்று கிசுகிசுக்க “மேனேஜரை பார்த்ததுட்டு வருவதாக கூறினாள்.
மேனேஜர் அறைக்குள் வர முதலில் நலன் விசாரிப்பு தரவும், திணறியவளாக பதில் தந்தாள். விஹானோ “சார் கொஞ்சம் வீட்ல பிரச்சனை. வொர்க் ஃப்ரம்ஹோம் தேவை. ஏதாவது பிரசீஜர் இருந்தா சொல்லுங்க. கொஞ்சம் உடம்பும் சரியில்லை. போட்ல போறப்ப கடல்ல விழுந்து உயிர் போய் உயிர் திரும்பி வந்திருக்கா. கிட்டதட்ட மறுஜென்மம் மாதிரி. வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னா கேட்காம வந்து என் உயிரை வாங்கறா.
கொஞ்சம் ஏதாவது பேவர் இருந்தா செய்யுங்க சார்.” என்று தெளிவாய் மொழிந்தான்.
இதில் மானஸ்வியிடம் என்னம்மா இப்படி சொல்றார்” என்று கேட்டதற்கு அவளுமே ”ஆமா சார். கடல்ல மூழ்கி மூச்சு திணறி, சாகற நிலைமை. கடவுள் அனுகிரகமா இல்லை என் அதிர்ஷ்டமோ உயிர் பிழைச்சி வந்திருக்கேன். இவர் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டார். நான் தான் ஃபோர்ஸ் பண்ணி வந்துட்டேன். ஏதாவது பேவர் பண்ணுங்க சார். இல்லைன்னா வேலை விட்டு நிற்கறதா இருக்கும்” என்று பேசினாள்.
மேனேஜரோ விஹானை காதலன் என்று முடிவுக்கட்டி, “ம்மா அதெல்லாம் வோர்க் ஃப்ரம் ஹோம் கொடுக்கலாம். பட் இப்ப ப்ராஜெக் மீட்டிங் நிறைய இருக்கு. வாரத்துல ஒரு நாளாவது நேர்ல வந்து போற மாதிரியிருக்கும். இப்ப போய்…” என்று இழுக்க, அவருக்கு இதுவரை மானஸ்வி வேலைக்கு மட்டம் போட்டதில்லை என்றதால் சிந்தித்தார்.
அதோடு ப்ராஜெக்ட் வேறு நெருக்கத்தில் இருக்க, “எவ்ரி ஃப்ரை டே ஆபிஸ் வரவேண்டியதா இருக்கும்மா” என்று கூறினார்.
அதன் பின் கூடுதல் சிலநேரமிருந்து பணிக்கான அறிவுரையை கேட்டுக்கொண்டாள்.
“மானஸ்வி எப்ப கல்யாணம்?” என்றார்.
“இப்ப இல்லை சார்” என்று வருந்தமாய் கூறினாள்.
அதன்பின் மேனேஜர் எதுவும் நிறுத்தி பேசவில்லை.
விஹானும் நன்றி கூறி வந்தான். மானஸ்வியோ ”ஆபிஸ் பிரெண்ட்ஸ் கூட பேசி சொல்லிட்டு வந்துடறேன்” என்று பர்மிஷன் கேட்க, “ரொம்ப நேரம் காத்திருக்க முடியாது. கமிஷனர் வேற உன்னை அழைச்சிட்டு வர சொல்லியிருக்கார். யாருடி இவரு? எங்கடி போன? ஏன் இவ்வளோ நாள் வரலை? தேவையில்லாத கேள்வியெல்லாம் அவாய்ட் பண்ணிட்டு குயிக்கா வா” என்று சர்வசாதாரணமாக கூறினான்.
“எதுக்கு?” என்று கேட்டு அப்படியே நின்றாள்.
“எதுக்குன்னா? சென்னையிலருக்கற க்ரிமினல், ரவுடி, கொலை செய்தவன் கஞ்சா பொறுக்கி மொள்ளமாறி எல்லா போட்டோவும் இருக்கும். அதுல எவனையாவது நீ அடையாளம் காட்டறதுக்கு கூப்பிட்டார்.” என்றவன் காதில் போனை வைத்து “ஃபைவ் மினிட்ஸ் வந்துடணும். வெளியே வெயிட் பண்ணறேன்” என்றான் கடிகாரத்தை பார்த்து.
மானஸ்விக்கு உள்ளுக்குள் எரிச்சல் மண்டியது. தன்னை ஒரு வருடமாக காதலித்த வினோத் கூட இப்படி தன்னை கட்டளையிட்டு சென்றதில்லை. பெரிதாக அக்கப்போர் நிகழ்த்துகின்றானே இந்த விஹான்? என்று தான் தோன்றியது.
அவனை திட்டி அவனை பற்றி சிந்தித்தால் நேரம் கழியுமென தன் கேபின் அருகேயிருக்கும் தோழியிடம் ‘போட்ல போனேன். நடுக்கடல்ல விழுந்து உயிர்பிழைச்சி வந்துயிருக்கேன். போனும் தண்ணில விழுந்துடுச்சு. கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லிருகாங்க. நான் மீதியை வேற போன் வாங்கிட்டு பேசறேன். இப்ப அவர் லேட் பண்ணினா கடிச்சிடுவார். செம கோபம்” என்று உரைத்தாள்.
“மானஸ்வி… இதான் நீ லவ் பண்ணறவரா? பெயர் என்ன?” என்று கேட்க, ‘மானஸ்வி” என்ற விஹான் குரலில் “விஹான் கூப்பிடறார் போன்ல பேசறேன்” என்று ஓடினாள்.
‘”வி.’ னு பெயர்.. சொன்னேன்ல விஹான்.”‘ என்று ஒருத்தி கூற மானஸ்வி காதில் விழுந்தது. நின்று நிதானமாக இவர் என் காதலன் இல்லை. என் காதலன் பெயர் வினோத் என்று தெளிவுப்படுத்தும் நிலையில் மானஸ்வி இல்லை.
அவள் ஓட்டமும் நடையுமாய் விஹான் முன் நின்றாள்.
“கமிஷனர் நமக்காக வெயிட் பண்ண முடியுமா? வண்டில ஏறி தொலை” என்று அழைத்து சென்றான்.
அவசரத்தில் அவன் தோளை பற்றி ஏறினாள்.
விஹானோ மானஸ்வி தீண்டலில், இரசவாதம் நிகழப்பெற்று மூர்ச்சையானான். அவள் தோளிலிருந்து கையை எடுத்தால் அவன் சுயம் பெறுவான். ஆனால் இதுவரை இப்படி பெரிய பைக்கில் வீற்று வந்ததில்லை என்பதால் விஹாரை அழுத்தமாய் பற்றிக்கொண்டாள் மானஸ்வி.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
இந்த கதைக்கு கண்ணுக்குள் கடல் என்ற பெயர் வச்சேன். இப்ப கதை பெயரை மாற்றிடலாம்னு இருக்கேன். வெண்மேகமாய் கலைந்ததே’ அதனால் கதை முடியும் வரை கண்ணுக்குள் கடல் சைட்ல எடுத்துட்டு வெண்மேகமாய் கலைந்ததே’ தான் அமேசான்ல போடுவேன். யாரும் குழப்பமடைய வேண்டாம்.
Manasivi Vihan panra thu ku kobapadra aana atha avan kita straight ah solla mudiyala ah
👍👍spr going 👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕
nice epi vihan tha kandu pidika oru vali panitu irukan ithula manasvi mela light ah crush varthu papom vinoth uyiroda irukana vera therila kathaila niraya twist aave varuthu waiting to read next epi
intha heading nalla iruku sisy
Nice epi👍👍😍
பைனலி எல்லாரும் மானஸ்வியோட காதலன் விஹானு முடிவு பண்ணிட்டாங்க.
சூப்பர்