அத்தியாயம்-15
“இவங்க இல்லை. இவங்க இல்லை. இல்லை சார். அவங்க பார்க்க டீசண்டா இருந்தாங்க. யாருமே குழந்தை பிடிக்கற பூச்சாண்டி மாதிரி இல்லை” என்று கூறினாள்.
கலீயமூர்த்தியோ, குழந்தை கடத்தலுக்கென்று இருக்கும் முக்கிய குற்றவாளிகளை எல்லாம் காட்டி சோர்ந்து போனார்.
“விஹான்… வாட் இஸ் திஸ். எந்த ரவுடி பிக்சரும் இல்லைன்னா யாராயிருக்கும்” என்று கேட்டதும் தான் சுயயுணர்வு அடைந்தான்.
மானஸ்வியை அழைத்து வந்ததிலிருந்து ஒதுங்கி நிற்கின்றான். அவளின் தீண்டல் அவனை பாடாய் படுத்திருந்தது.
“சார்.. எனக்கும் என்ன செய்யறதுன்னு தெரியலை. சர்வா அண்ணா கண் முழிச்சா கொஞ்சம் ஈஸியாக இருக்கும். அவனும் படுத்த படுக்கையா இருக்கான்.” என்று ஏதோ நினைவில் வார்த்தையை விட்டான்.
“சர்வா அண்ணாவா? அப்படின்னா? சர்வானந்தன் சார் உயிரோட இருக்காரா?” என்று மானஸ்வி கேட்டதும் விஹான் தலையிலடித்து நின்றான்.
“சொல்லுங்க… சர்வானந்தன் சார் உயிரோட இருக்காரா? அப்படின்னா… இறந்ததாக அன்னிக்கு பாக்ஸ்ல வச்சி, தகனமிருக்கும் இடத்துக்கு போனிங்க?” என்றாள்.
கலீயமூர்த்தியோ “என்ன விஹான் என்னை வார்த்தை விடக்கூடாதுன்னு சொல்லிட்டு நீங்களே ரொம்ப ஈஸியா வார்த்தையை விட்டுட்டிங்க? இனி நீங்களே பதில் சொல்லுங்க. இன்னும் இரண்டு ஹார்ட் டிஸ்க்ல க்ரிமினல் பிக்சர் இருக்கு அதை எடுக்க போறேன்” என்று சென்றார்.
விஹானுக்கு மானஸ்வி தீண்டலில் தன்னை மறந்து உலறிவிட்டான்.இனி சமாளித்தாக வேண்டும்.
அவர் சென்றதும் மானஸ்வி “சொல்லுங்க? சர்வானந்தன் சார் உயிரோட இருக்காரா?” என்று கேட்டாள்.
“ஏ… ஆமா எங்கண்ணா உயிரோட இருக்கார். கண்ணு திறக்காம இன்னும் படுத்த படுக்கையில்… அவர் கண்ணு திறக்கறதுக்கு முன்ன அவரை இப்படி செய்தவனை கண்டுபிடிக்கணும்” என்றான்.
“அறிவிருக்கா உனக்கு? அங்க உங்கண்ணி பிருந்தா தன் ஹஸ்பெண்ட் இறந்துட்டார்னு தினம் தினம் துடிச்சிட்டு இருக்காங்க. அவங்க கன்சீவா இருக்காங்க. ஏன் மறைக்குறிங்க?” என்று கேட்க மௌவுனமானான்.
“கேட்கறேன்ல சொல்லுங்க” என்று அவன் புஜத்தில் அழுத்தமாய் தீண்டவும், அவள் தீண்டலை பார்த்து அவளையும் பார்த்து, “எங்கண்ணா இறந்ததாக சித்தரிச்சா தான் எங்கண்ணாவை கொன்றவங்க நிம்மதியா நடமாடுவாங்க. அப்ப தான் என்னால அவங்களை பிடிக்க முடியும். அவர் இறக்கலைன்னு தெரிந்தா சம்மந்தப்பட்டவங்க உஷாராகிடுவாங்க.” என்றான் இரும்பாய்.
“அதுக்கு உங்கண்ணி நித்தமும் அழணுமா? அவங்க கன்சீவா இருக்காங்க. கவலைப்பட்டு கவலைப்பட்டு உடம்பு பாதிச்சு கருகலைந்தா என்ன செய்விங்க?” என்றதும் அவள் சங்கை நெறித்து தூக்க முயன்றான்.
கலீயமூர்த்தியோ “விஹான் என்னயிது?” என்று வரவும் கையை விடுவித்தவன் “எங்க வீட்டு வாரிசு. வார்த்தைக்கு கூட அதை அப்படி சொல்லாத” என்றவன் மானஸ்வியை பிடித்த கழுத்தை உதறி தள்ளிவிட்டான்.
கலீயமூர்த்தி கணிப்பொறியை இயக்கி போர்டில் கயவர்கள் புகைப்படத்தை காட்டவும், மானஸ்வி விஹானை விடுத்து கழுத்தை தடவி அவர்களை ஏறிட்டாள்.
“இல்லை சார்.. நீங்க காட்டுற ஆட்களில் யாருமேயில்ல. ஒரு வேளை கடல்ல இருப்பவர்கள் முகம் இதுவரை க்ரிமினல் லிஸ்டில இல்லையோ என்னவோ” என்று பார்வையிட, “சார் ஒன் செகண்ட்” என்று “பேக்ல போங்க” என்றான் விஹான்.
முகத்தில் வெள்ளை தாடி மட்டும் இருக்க, தலைமுடி கருப்பாய் இருந்த ஒருவன், “இவனை அண்ணா டெத்ல பார்த்தேன்.” என்று கூறினான்.
‘இவனே பார்த்துட்டு என்னை எதுக்கு கூப்பிடணும். சர்வானந்தன் சார் உயிரோட இருக்கார். அதுவரை சந்தோஷம்’ என்று திரும்பினாள் மானஸ்வி.
அதன் பின் கலீயமூர்த்தி ஏதோ பேச, “சர்வானந்தன் எப்ப சார் கண் விழித்து பேசுவார்?” என்று கேட்க, டாக்டர் இரண்டு வாரம்னு சொல்லிருக்காங்க. இப்ப தானே பத்து நாளாகுது” என்றதும் விஹான் “ஓகே சார் இவன் யாரு என்னனு பாருங்க. அண்ணா கண் முழிச்சா அடுத்து அவனே வருவான்.” என்று கூறி விடைப் பெற்றான்.
மானஸ்வி பைக்கில் தோதாக அமர்ந்து, விஹானை பிடிக்காமல் வந்தாள். அவளுக்கு விஹான் கழுத்தை பிடித்து தூக்கியதில் கோபமிருந்தது.
அவளை ஹாஸ்டலுக்கு அழைத்து சென்றான். அங்கிருந்து ஏடிஎம் கார்டை எடுத்தாள். பெரும்பாலும் ஜிபே செய்து பழகியவள். அதனால் கார்டு அறையில் இருக்கும்.
“போன் வாங்கணும்” என்றாள் மொட்டையாக.
பூர்விகாவில் போன் கடைக்கு அழைத்து சென்றான். அங்கிருந்து சிம் வாங்க நேரமெடுத்தது. கையை கட்டி அவளை வேடிக்கை பார்த்தான். அவளாகவே அனைத்தும் தன்னிச்சையாக செய்தாள்.
அதன் பின் விஹானிடம் தயங்கிக்கொண்டு “வினோத் வொர்க் பண்ணுற இடத்துல போய் கேட்டிங்களா?” என்றாள்.
“இல்லை… யாரு வினோத்னு முதல்ல தெரியலை. இனி தான் கலீயமூர்ந்தி சார் சைட்ல ஒரு இன்ஸ்பெக்டர் போனதாக சொன்னார்.” என்றதும் விஹான் “அட்ரஸ் சொல்லு கூட்டிட்டு போறேன். காதலன் ஆச்சே… உனக்கு தவிப்பா இருக்கும்” என்று கூறவும், மானஸ்வி மறுக்காமல் வழியை கூறினாள்.
“ஹார்பர்ல உள்ள விடுவாங்களா?” என்று கேட்டாள். “சான்ஸ் இல்லை. இன்ஸ்பெக்டர் இந்த நேரம் வந்திருந்தா மேபீ அவர் மூலமாக பார்க்கலாம்.” என்றான்.
“நாம ஹார்பர்கு போக வேண்டாம்.” என்றவள் வெளியே காத்திருக்க கூறினாள். இந்த வழின்னு தெரியுமா?” என்றதற்கு “இல்லை… சரியா தெரியாது. ஆனா ஒருமுறை லைவ் லொகேஷன் அனுப்பினப்ப இதை அனுப்பினான்.” என்று கூறினாள்.
நேரம் போக வினோத் பணியின் நேரம் நகர மானஸ்வி சோர்ந்து போனாள்.
அவனில்லை என்றதும், வீட்டுக்கு போக கூறினாள்.
விஹானும் அவளை அழைத்து அப்படியே கிளம்பினான்.
வீட்டுக்கு வந்தப்பொழுது பிருந்தா தூக்கில் தொங்க முயன்று காப்பாற்றப்பட்டு வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டிருந்தாள்.
மானஸ்வியோ “அச்சோ என்ன காரியம் பண்ண பார்த்திங்க? சர்வானந்தன் சார் உயிரோட இருக்கார். அப்படி அவர் உயிரோட இருக்கறப்ப நீங்க சாகறதை நினைக்கலாமா?” என்று பேசவும் ஆளாளுக்கு வித்தியாசமாய் பார்த்தார்கள்.
“விஹான்… விஹான் தான் சொன்னார். இப்பவாது சொல்லுங்களேன்” என்று கூற, “என்ன பிருந்தா இது. பைத்தியகாரத்தனமா பண்ண பார்த்திருக்க. எங்கண்ணா எழுந்து வந்து என்னை கொன்றுயிருப்பான்.” என்று விஹான் பேசினான்.
“நான் வர்றப்ப சொன்னேன். பெரிய அறிவாளின்னு நினைப்பு” என்று கூற சுதாகர் மகனை அடிக்க சென்றார்.
“அடிங்க சார். நல்லா மொத்துங்க. உணர்வுகளை காயப்படுத்தி வேடிக்கை பார்க்குறார்” என்று கூற, சுதாகர் விஹான் கன்னத்தில் அறைந்து அடித்து ஓய்ந்தவர் “எம் மகன் உயிரோட இருக்கான் தானடா?” என்று அழுதார்.
“ச..சர்வா இறந்துட்டதா அன்னிக்கு பாடில்லாம்?” என்று அழுதாள் பிருந்தா.
கண்ணீரை துடைத்து பிருந்தா கேட்க, “அது போலி உடம்பு. செட் பண்ணியது அண்ணி. சர்வானந்தை அப்படி கொல்ல நினைச்சவங்களுக்காக செய்த பிளான். சர்வானந்த் அண்ணன் சாகலை. ட்ரீட்மெண்ட்ல இருக்கான். இன்னும் கண்முழிக்கலை. கண் முழிக்கற நேரம் தான்.” என்றவன் தந்தை அடியெல்லாம் அடியேயில்லை என்று துடைத்து போட்டவன் மானஸ்வியை தான் கூர் போட்டு பார்த்தான்.
தன்னை அடிக்க தந்தையிடம் ரெக்கமெண்ட் கூறுகின்றாளே.
“யோகலட்சுமி.. நம்ம பையன் உயிரோட இருக்கான். கேட்டியா உயிரோட இருக்கான்” என்றதும் “மாப்பிள்ளை உயிரோட இருக்காரா? எங்க? நாம எப்ப பார்க்கறது. நீ சொல்லறது நிஜம் தானா?” என்று பிருந்தா தந்தை அப்புசாமி கேட்க, “கண்ணு முழிச்சதும் நானே கூட்டிட்டு போவேன்” என்றான்.
“விஹான் உண்மையை சொல்றியா? இல்லை நான் சாக கூடாதுன்னு பொய் சொல்றியா?” என்று கேட்டாள் பிருந்தா.
”பிருந்தா… அண்ணன் உயிரோட இருக்கான். தலையில் ஒரு ஆப்ரேஷன் பண்ணிருக்கு உடம்புல இரண்டு குண்டு பாய்ந்திருக்கு. கடல்ல தூக்கி போட்டவங்க சர்வா இறந்தது வெளியே தெரிய தான் செய்தது. ஆனா நிஜமாவே உயிரோட இருப்பான்னு நம்பியிருக்க மாட்டாங்க.
எனக்கு தெரிந்து இரண்டு தோட்டா உடம்புல சுட்டு அதுல இறந்ததாக நினைச்சிருக்கணும். ஆனா தண்ணில பாறையில் மோதியதில் குண்டு ஒன்னு தானா வெளியேறியிருக்கணும். தலையும் முதுகும் மோதுன வேகம் உயிர் உடம்புல ஓட்டிட்டு இருந்திருக்கு. நம்ம மீன் பிடிக்கற சங்கத்து தலைவன் படகுல சிக்கியிருக்கான். வர்றப்பவே முதலுதவி செய்யப்பட்டு கடற்கரையில் கொண்டு வந்தாங்க இங்க வந்ததும் நான் தான் பார்த்து இறந்ததாக காட்டி ஆளை பிடிக்க முயற்சி பண்ணலாம்னு சொன்னேன். அதோட அண்ணா ஆப்ரேஷன்ல என்ன சொல்வாங்களேனானு பயம்.
இப்ப தான் பரவாயில்லைன்னு சொன்னாங்க.” என்றதும் பிருந்தா அழைத்து செல்ல சொல்லி அழுதாள்.
பிருந்தா அண்ணா ஐ சியூ வார்டுல இருக்கான். யாரையும் அனுமதிக்கலை. டாக்டர் மட்டுமா தான் போறாங்க வர்றாங்க” என்றுரைத்தான். அத்தை மகள் என்றதால் சில நேரம் பிருந்தா என்பான் அண்ணியை. அவனுகென்ன அண்ணன் மணப்பானென ஜோதிடமா தெரியும்.
"எனக்கு அவரை இப்பவே பார்க்கணும் கூட்டிட்டு போ விஹான்." என்று நச்சரிக்க ஆரம்பித்தாள்.
‘எல்லாம் இவளால் வந்தது.’ என்று விஹான் மானஸ்வியை எரித்து, “அப்பா அம்மா நீ மட்டும் வாங்க” என்று கூறி அகன்றான்.
‘அத்தை மாமா உயிரோடு இருக்கும் போது பொண்ணு தர யோசித்தாங்கள்ல அவங்க ஒன்னும் பார்க்க வேண்டாம்.’ என்று அன்னையிடம் வறுத்தும் எடுத்தான்.
“நா…நானும் சர்வானந்தன் சாரை பார்க்கணும். அவரிடம் நான் அவர் சொன்ன பையனை காப்பாத்திட்டேன்னு சொல்லணும். ப்ளிஸ் என் மேல் கோபமிருந்தா அதை மறந்துட்டு கூட்டிட்டு போங்க.” என்று விஹான் முன் வந்தாள்.
“பிளட் ரிலேட்டிவ்ஸ் எங்க அத்தை மாமா அவர்களையே வரவேண்டாம்னு சொல்லிட்டேன். நீ யாரு? அவன் சொன்னதை நீ செய்தேன்னு சொல்லமுடியாது. அந்த இடத்துல உன்னை காப்பாத்திக்க தான் நீ கடல்ல குதிச்சிருக்கணும். என்னவோ அந்த பையனை காப்பாற்ற குதிச்ச மாதிரி பேசற? நீ ஒரு உயிரை காப்பாற்றணும்னு நினைச்சிருந்தா, எங்கண்ணாவை உன் காதலனை காப்பாத்தியிருக்கலாம். உனக்கு உன் உயிர் முக்கியம்னு வந்தவ நீ” என்று வார்த்தையில் வதைத்தான்.
“ஏன் இப்படி பேசறிங்க? நான் என் உயிர் முக்கியம்னு குதிச்சு வரலை. என்மானம் போயிடக்கூடாதுன்னு குதிச்சேன்.
அங்க பதினைந்து பேர் உங்கண்ணா ஃபுல்லட் பட் இரத்தம் வழிய இருந்தார். வினோத் மூக்குல எதையோ வச்சி அழுத்தியிருந்தாங்க.
அதுல அவன் மயங்கியிருந்தான். மேபீ டிரக்ஸ் இருக்கும்.
இரண்டு ஆண்களையும் என்னால எப்படி காப்பாற்ற முடியும். என் எதிர்ல பதினைந்து பேர் கிட்டதட்ட இருந்தாங்க.
அங்கிருந்து நான் சீரழிந்து என் உயிர் போறதுக்கு கடல்ல மீனுக்காவது உணவா போறேன்னு தான் போட்ல குதிச்சது.
போட்ல சரியா விழுவேன்னு நான் நினைக்கலை. கடல்ல விழுந்துடுவேன்னு தான் நினைச்சேன்.
எனக்கு போட் கூட ஓட்ட தெரியாம கடல்ல தான் கவிழ்த்தேன். நானும் எப்படியோ மீன் பிடிக்கற இடத்துல மாட்டி தான் உயிரோட உங்க முன்ன நிற்கறேன். கண் விழிச்சப்ப எனக்கென்னனு எங்கேயும் ஓடி ஒளியலை. நிரஞ்சனை காப்பாற்றியிருக்கேன். அவனை அவங்க அப்பாவிடம் சேர்த்துட்டேன்.
உங்களுக்கு என்னை பிடிக்கலை என்று தெரியுது. அதுக்காக என்னை காயப்படுத்தி பேசாதிங்க. அனாதையாக வாழ்ந்தாலும் என்னிடம் இது மாதிரி யாரும் பேசியதில்லை. நீங்க இப்படி பேசறப்ப ரொம்ப வலிக்குது” என்று கூறினாள்.
“வெளியே போறியா நான் டிரஸ் மாத்தணும்” என்று விஹான் கூறினான்.
இத்தனை பேசியதற்கு ஒரு மன்னிப்பு, சரி இனி பேசமாட்டேன். நீயும் வா’ இப்படி எதுவுமின்றி தன்னை வெளியே தள்ளி கதவை அடைக்கின்றானே என்று தான் தோன்றியது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Nice💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Wow intha twist ethir pakala thedirnu uyiroda irukan sollitan ippqdi udane sagadichitangle ninachen but thirumbi varuvan sarva nalla vanthu yar pannathu kandupidichi punish panuvan
Ivan ena make ne therilaye…. Spr going waiting for nxt epi😍😍😍👌👌👌👌👌👌👌
Nice epi👍👍
Unexpected twist sarva uyir oda irukan
👌👌👌👌👌👌
Nala vela sarva sakala enaku thonuchu ethavathu twist vachu sarva sakala nu soluvenga nu
Enna sissy 4 naal aachu adutha episodea kanom😒
Enna sissy 4 naal aachu adutha episodea kanom😒seekiram nxt epi podungaaaaa
சூப்பர் டிவிஸ்ட். …