அத்தியாயம்-16
டாக்டரிடம் ‘எத்தனை நாள் சார். அவர் எழுந்துட்டா இந்த கேஸே முடியும். உங்க ட்ரீட்மெண்ட் வொர்க்கவுட் ஆகலைன்னா சொல்லுங்க. வேற டாக்டரிடம் காட்டறேன்.
கண்ணே முழிக்கலை. கோமால போனாரா அதையாவது சொல்லுங்க” என்று விஹான் அவசரப்படுத்தினான்.
“சார்… உங்க அவசரம் மருத்துவத்தில் காட்ட முடியாது.
மறுஜென்மமா வந்திருக்கார் உங்கண்ணா. எவ்ளோ தண்ணி குடிச்சிருந்தார் தெரியுமா? இரண்டு புல்லட் போன உடம்பு. தலையில் வேற பலத்த அடி. ஒவ்வொன்னா ட்ரீட்மெண்ட் பார்த்து உயிர் பிழைக்க படாதபாடுபடறோம். ஈஸியா எப்ப எழுந்துப்பார்னு கேட்கறிங்க.
இரண்டு மூன்று முறை உங்க அண்ணா கண்ணை திறந்த வீடியோ இருக்கு. பார்த்திங்க தானே? அவரா பேச நேரமெடுக்கலாம்.
சும்மா எங்களை புஷ் பண்ணாதிங்க.
மருத்துவத்தை தாண்டி இந்த உயிர் இந்த மண்ணுல நடமாடணும்னு விதியிருந்தா அதை யாராலும் மாத்த முடியாது.” என்று கூறினார்.
‘யாரையாவது அதட்டி உருட்டறதே வேலை. வயசுல பெரியவராச்சே, டாக்டராச்சே மரியாதை இருக்கா? ‘ என்று மானஸ்வி திட்டியபடி பிருந்தா அருகே இருந்தாள்.
சுதாகரோ, “இதனால தான்ம்மா இவனுக்கும் எனக்கும் ஆகறதில்லை. துரையை கடைசியா திட்டியதுக்கு தான் வீட்டை விட்டு வெளியே போயிட்டான்.
நம்மிடம் இத்தனை நாள் சர்வா சாகலைன்னு சொல்லியிருக்கலாம்ல? எங்களிடம் சொல்ல வேண்டாம். இதோ சர்வாவை நம்பி வீட்டை விட்டு எங்களை எதிர்த்து காதலிச்சு கல்யாணம் செய்து, இப்ப குழந்தையுண்டாகி இருக்கா. இவளிடமாவது தனியா கூப்பிட்டு சொல்லியிருக்கலாம்ல” என்றார் சுதாகர்.
“ஆமா சார்… நானும் அதை தான் சொன்னேன். இன்னிக்கு சூசைட் அட்டம்ட் பண்ண பார்த்தாங்க. ஏதாவது ஆகியிருந்தா என்னாகறது.” என்று பேசவும் எல்லாம் ஒட்டு கேட்டவன், “ஏ… அதுக்குள்ள சர்வா கண் திறப்பான்னு நினைச்சேன்.
பாவம் பார்த்து கூட்டிட்டு வந்தேன் பாரு. வாயை மூடிட்டு உட்காரதா இருந்தாயிரு. இல்லை நடையை கட்டு. அவரோட கூட்டு சேர்ந்துட்டு கரிச்சு கொட்டுற?” என்று கத்தினான் விஹான்.
நர்ஸ் வந்து “சார் ஐசியூ வார்ட் இது இப்படி கத்தாதிங்க” என்றார்.
”ஆமா ஆடி மாசம் கூழ் ஊத்தறேன்னு அந்த பக்கம் ஸ்பீக்கர் அலறுது. நான் கத்தியது தான் உங்களுக்கு தெரியும்” என்று அவர்களையும் கடிந்து பேசினான்.
“சிஸ்டர் அவர் டாக்டரிடமே அப்படி தான் குதிச்சிட்டு இருக்கார். நாம் சொல்லறது டோட்டல் வேஸ்ட்” என்று மற்றொரு நர்ஸ் வந்து கூறி சென்றார்.
”சர்வா… எழுந்து தொலை. உன்னால எவ எவக்கிட்டயோ பேச்சு வாங்கறேன்.” என்று அரற்றினான்.
”மேம் இந்த டிரஸ் போட்டுட்டு அவரை போய் பாருங்க.” என்று நர்ஸ் ஐசியூ வார்டில் நுழைவதற்கென்று கவசமான தனியுடையை தர பிருந்தா அணிந்து நின்றாள்.
தன்னில் பாதியாக காதலித்து கைப்பிடித்த, கணவன் இறந்துவிட்டானென்று எண்ணி சாக துணிந்த பேதை, கணவன் உயிரோடா இருப்பதாக, அவனை காண வந்திருக்க, விழிநீர் உடைப்பெடுத்தது.
ஐசியூ பகுதியில் தனி மெத்தையில் பல மருத்துவ உபகரணங்களுக்கு இடையே சர்வானந்தன் படுத்திருந்தான். கையில் ஊசி குத்திய இடமும் கட்டு போட்டு அரை உயிராய் கிடந்தான். ஆப்ரேஷன் செய்த இடமெல்லாம் பேண்டேஜ் சுற்றப்பட்டு இருந்தது.
“சர்வா அத்தான் நான் பிருந்தா… பிருந்தா அத்தான். உங்க மனைவி ” என்று அழுதாள். வாயை பொத்தி தேம்பினாள்.
தொடாமல் பார்க்க கூறியதால் அவனை சுற்றி சுற்றி வந்து, “சர்வா அத்தான் என்னை தனியா இத்தனை நாள் வதைச்சிட்டிங்களே. நீங்க உயிரோட திரும்பி வந்ததிலயே எனக்கு திருப்தி அத்தான். இந்த உத்தியோகம் வேண்டாம். நாம எங்கயாவது போயிடலாம்.
சர்வா அத்தான் நீங்க அப்பாவா ஆகிட்டிங்க. நமக்கு குழந்தை உருவாகியிருக்கு. நீங்க நான் கனவு கண்டது போல ஒரு முழு குடும்பம். உங்க குழந்தை வயிற்றுல வளருது. நீங்க இறந்துட்டதா நினைச்சு நான் தூக்கு மாட்டிக்க பார்த்தேன். அப்பா அம்மா மாமா அத்தை வந்து காப்பாத்தினாங்க. ஆமா அவங்கெல்லாம் நம்ம வீட்ல இருக்காங்க. நீங்க எப்ப அத்தான் கண்ணை திறப்பிங்க.” என்று புலம்பினாள். ஐந்து நிமிடம் கழிய, நர்ஸ் வந்து ‘போதும் மேம். நீங்க வெளியே வாங்க. அடுத்து அவங்க அப்பா அம்மா பார்த்துட்டு கிளம்பட்டும்” என்று அனுப்ப முயன்றார்.
கணவன் உயிரோடு இருப்பதை பார்த்து திருப்தியுடன் கண்ணீர் மழையால் வெளியேறினாள்.
சர்வாவின் தாய் யோக லட்சுமி வந்தார். அவரும் ஏதேதோ அழுது களைத்திட, நர்ஸ் நேரம் ஆச்சுயென்று கிளப்பினார்.
சுதாகர் வந்து மகனை ஆரத்தழுவும் பார்வையிட்டார். அதுவே திருப்திகரமானது.
“போதும் இனி யாரும் போகாதிங்க” என்று நர்ஸ் கூற, “சிஸ்டர் நான்” என்று மானஸ்வி தயங்கினாள்.
“ஹல்லோ நான் இன்னும் அவனை பார்க்கலை.’ என்று சென்றான்.
மானஸ்வியோ ‘நான் நானும்’ என்று கூறினாள்.
“யாராவது ஒருத்தர் பாருங்க.’ என்று நர்ஸ் தெளிவாக கூற, மானஸ்வி விஹானை தவிப்பாய் பார்க்க, ‘நீயே போய் பார்த்து தொலை” என்று கடுப்பாய் பேசினான்.
மானஸ்வி நன்றியாக பார்த்து சென்றாள்.
தூரமாய் நின்று, “சார் சர்வா சார்.. நான்தான் மானஸ்வி. உங்களுக்கு தெரியாது. கடல்ல குதிச்சு தப்பிச்சிட சொன்னிங்க. தப்பிச்சா அந்த பையன் நிரஞ்சனை காப்பாத்த சொன்னிங்க. நான் குதிச்சு உயிர் பிழைச்சு நிரஞ்சனையும் காப்பாத்திட்டேன். நீங்களும் உயிரோட வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் சார்.
சார் நான் இப்ப உங்க வீட்ல தான் இருக்கேன். பிருந்தா மேம் கன்சீவா இருக்காங்க. சார் சீக்கிரம் கண் திறந்து வாங்க. உங்க தம்பி எல்லாரையும் திட்டி திட்டி பேசறார். நீங்க கண்விழிச்சா நிறைய மாற்றம் உண்டாகும்.” என்று பேசினாள். மறுபக்கம் எந்த எதிர்வினையும் இல்லை.
நர்ஸ் கை கடிகாரத்தை காட்டி பேச, வெளியேறினாள்.
விஹான் வெளியேயிருந்து பார்த்து, டாக்டரை காண சென்றான்.
பிருந்தாவிற்கு மனமேயில்லை கிளம்ப, ஆனால் டாக்டர் நர்ஸ் தவிர அவ்விடத்தில் யாரும் அனுமதியில்லை.
கண் விழித்தால் மட்டுமே அடுத்தகட்ட நிலை.
வீடியோவில் இரண்டு முறை கண்விழித்து மூச்சு விட சிரமம் கொண்டு மீண்டும் கண்ணயர்ந்த பதிவு ஓடியது.
பிருந்தாவுக்கு கணவர் பிழைத்ததும் தெம்பு வந்துவிட்டது.
வீடு திரும்பிய காரில், “ஏன் விஹான் அவர் கூட நான் இருக்க முடியாதா?” என்று கேட்டாள்.
“கதையா சொன்னேன்… டாக்டர் நர்ஸ் தவிர யாரும் போகக்கூடாது என்று தான் என்னையே அனுப்பலை. 12 டேஸ்ல கண்ணு விழிப்பதா அந்த டாக்டர் சொன்னார். அதோட கலீயமூர்த்தி பெர்சனலா கவனிச்சி பார்க்கறார்.
இந்தளவு மாறியதே அதிசயமாம்.” என்று உரைத்தான்.
பிருந்தா வீட்டுக்கு வந்ததும் அவள் அம்மா பங்கஜம் அப்புசாமி இருவரும் மருமகனை பார்த்தியா? பேசினியா? என்ன சொன்னார், உயிரோட இருக்கார் தானே?” என்று பல கேள்வி வரிசையில் வைக்க, “உயிரோட தான் இருக்கார்மா. விஹான் பொய் சொல்லலை.” என்று ஆனந்தப்பட்டாள்.
விஹான் வீட்டில் அப்பாடா என்று அமர, ஆளாளுக்கு பேசி சிரிக்க ஆரம்பித்தார்கள்.
மானஸ்வி எல்லோரையும் பார்த்து நிறைவாக நின்றாள்.
இந்நேரம் வினோத் மட்டும் போட்டில் செல்லாமல், அவன் அன்னை தந்தையிடம் அழைத்து சென்றிருந்தால், தனக்கும் ஒரு குடும்பம் கிடைத்திருக்கும். அவன் இப்பொழுது எங்கேயிருக்கின்றான்? அவனும் உயிரோடு இருப்பானா? இல்லை இறந்திருப்பானா? சர்வானந்தன் விழித்து எழுந்தால் மட்டும் அறிய முடியுமா?
வினோத் உயிரோடு இருந்திருந்தால் போலீஸ் கம்பிளைன் செய்து இருப்பான். அல்லது வேலைக்காவது வந்திருப்பான். இரண்டும் இல்லை அப்படியென்கறால் இறந்ததாக தானே அர்த்தம் என்று முடிவெடுத்தாள்.
லேசான அதிர்வு தோன்ற, விஹான் அவளை ஏறிட்டு ‘நந்தி மாதிரி நிற்கற? ஒன்னு உட்காரு, இல்லை நகரு” என்று காதருகே கத்தவும் வழி விட்டாள்.
“ஏன்டா அவளை அழைச்சிட்டு வந்தது நீ. இப்ப விரட்டிட்டே இருக்க’ என்று கூறினார் சுதாகர்.
“எனக்கென்ன தலையெழுத்தா? அண்ணனை கொல்ல வந்ததா டவுட் வரவும் துரத்தினேன். இப்ப அண்ணன் எழுந்துக்கற வரை இந்த பொண்ணு உயிருக்கு உத்தரவாதம் இல்லைன்னு இருக்க சொன்னது.
அதுக்கு வீட்ல நடுவீட்ல நின்று இடத்தை அடைக்கவா?” என்று பேசிவிட்டு அறைக்குள் சென்றிருந்தான்.
சுதாகரோ, “உன் புள்ளைக்கு திமிரை பார்த்தியா? பாவம் அந்த பொண்ணை கஷ்டப்படுத்தறான்.
யாரையாவது காயப்படுத்தாம பேசி பழகறானா? முன்ன என்னிடம் போட்டி போடுவான். இப்ப இந்த பொண்ணை வேற திட்டறான். யோகலட்சுமி இதுக்கு மேல சரியில்லை. அவன் வீட்டை விட்டு ஓடினவன் தானே. இப்ப என்ன திரும்ப போக சொல்லு” என்றார்.
“இந்த வீட்ல அண்ணன் அண்ணி கல்யாணம் செய்து வந்தவங்க. உங்களுக்கு முன்ன இந்த வீட்ல உரிமையா உள்ள வந்தவன் நான்.
நீங்க சர்வானந்த் அண்ணா இறந்துட்டான்னு நினைச்சி தானே வந்திங்க. இல்லைன்னா இங்க காலடி எடுத்து வஞ்சியிருப்பிங்களா? அண்ணி கன்சீவா இருக்கேன். அண்ணா வீட்டுக்கு வரலைன்னு சொன்னப்ப, ஏதோ டிராம பண்ணி பேசியதா காயப்படுத்தி பேசியது யாரு?
பேசறதெல்லாம் பேசிட்டு என்னை குறை சொல்ல வந்துடுவார்” என்று எட்டி பார்த்து பேசினான்.
சுதாகர் என்ன நினைத்தாரோ, “என்னை மன்னிச்சிடும்மா. நீ அந்த நிலையில் பேசினப்ப நான் டிராமான்னு திட்டிட்டேன். உன் கூட நின்றுயிருக்கணும்.” என்று மனதார மன்னிப்பு வேண்டினார்.
“அச்சோ மாமா.. மன்னிப்பெல்லாம் எதுக்கு? நீங்க வீட்டுக்கு வந்ததே போதும். எங்களை மன்னிச்சு ஏற்றுக்கொண்டேதே போதும்.” என்று பிருந்தா மாமனாரின் பேச்சால் சாந்தப்படுத்தினாள்.
அனைத்தும் வேடிக்கை பார்த்தவளாக மானஸ்வி நின்றாள். சற்று முன் பேசியதை கூட மறந்து மன்னிப்பு கேட்கும் உறவில் மெய்மறந்து நின்றாள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

நெஜமாவே இவனை அவங்க அம்மா செஞ்சுதான் விட்டிருக்காங்க போல
Interesting epi😍😍 🥰
Adei ne ellam enna design da Soppa aniyathuku ipadi pesura ah
Intresting👌👌👌👌
இந்த விஹான் ஏன் இப்படி இருக்கான்