Skip to content
Home » வெண்மேகமாய் கலைந்ததே-17

வெண்மேகமாய் கலைந்ததே-17

அந்தியாயம்-17

 இரண்டு நாட்கள் கடந்த நிலையில், தனக்காக கொடுக்கப்பட்ட அறையில் அலுவலகத்தில் கொடுத்த கணினியோடு வேலைக்கு அமர்ந்தாள் மானஸ்வி. 

பிருந்தா தங்கிருந்த வீட்டை காலி செய்து, மருமகளை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்.

அதன் காரணமாக விஹான் தந்தையின் வீட்டில் மீண்டும் காலடி எடுத்து வைத்திருந்தான்.

 அவனுக்கான பணி தற்போது காலாட்டி டிவி பார்த்துக்கொண்டே பேப்பரை வாசிப்பது மட்டுமே. 

அண்ணி பிருந்தாவிற்கு என்னவெல்லாம் சாப்பிட கொடுக்கின்றனரோ அதெல்லாம் அவனருகே அன்னை யோக லட்சுமி வைத்திருந்தார். அதை திண்றுக்கொண்டு இருந்தவனை, மேலும் கீழும் அளவிட்ட தந்தை சுதாகரனை அவனும் பதிலுக்கு அளவிட்டான்.‌

‘கொழுப்பெடுத்து சுத்தறான். திரும்ப இவனை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து நானே என் தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கிட்டேன்’ என்று முனங்கி சென்றார்.

பிருந்தாவின் தாய் தந்தையரும் அங்கு தான் இருந்தனர்.
மாப்பிள்ளை கண்விழிக்கும் வரை மகளுக்காக கூடவேயிருந்தார்.

அப்பொழுது சர்வானந்தனுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரிமிருந்து அழைப்பு வந்தது.

“சார் உங்கண்ணா கண் விழிச்சிட்டார். நீங்க வந்தா பார்க்கலாம்‌. ஆஹ்… இனி தான் கலீயமூர்த்திக்கு இன்பார்ம் பண்ணறோம். முதல் போன் உங்களுக்கு தான்” என்றார் மருத்துவர்.

“ரொம்ப தேங்க்ஸ்” என்றவன் எழுந்து சட்டையை மாற்ற சென்றான்.

யோகலட்சுமி மகன் வெளியே செல்வதை கண்டு, “எங்க கிளம்பிட்ட?” என்று கேட்டு வந்தார். ஏனெனில் விஹானுக்கு இங்கு வேலை செய்யவோ சந்திக்கவோ யாருமில்லை.

“ம்ம்ம் உங்க புருஷன் ஏன்டா இவனை திரும்ப கூட்டிட்டு வந்தோம்ன்ற ரேஞ்சுக்கு லுக்கு விடறார். எனக்கு அது பிடிக்கலை. கொஞ்சம் வெளியே உலாத்திட்டு வர்றேன்” என்று நக்கலாய் கூறினான்.

சர்வானந்தன் கண் திறந்ததை கூறினால் உடனே இந்த கூட்டம் நானும் வர்றேன் என்று குதிக்கும். சர்வானந்த் கண் திறந்ததும் நிறைய வேலை எஞ்சியிருக்க இன்று தான் மட்டும் செல்வதற்கு முடிவெடுத்தான்.

விஹான் மருத்துவமனை சென்று சர்வானந்தன் இரும்பிடம் வர, கலீயமூர்த்தியிடம் அவன் காவல் துறையை சார்ந்தா ஆட்களின் புகைப்படத்தை காட்டி செய்கையில் பேசினான்.‌

விஹான் வரவும், கலீயமூர்த்தி வரவேண்டாமென்று தடுக்கவில்லை. 

“ஹா..ய் டா” என்று சிறு குரலில் சர்வானந்தன் வரவேற்க, “செத்து பிழைச்சி வந்திருக்க மை டியர் அண்ணா. எமலோகம் எல்லாம் எப்படியிருக்கு” என்று விளையாட்டாய் பேசினான்.

“எமலோகத்துல நீயில்லை அதனால் அழகாவே இருந்தது. உட்காரு டா” என்று தம்பியை அருகே அழைத்தான்.

அதற்கு முன்னரே சர்வானந்தன் அருகே வந்து அமர்ந்து கணினியை கவனித்தான்.‌

“என்ன சார் கிரிமினல்கள் பிக்சரை காட்டுவிங்கன்னு பார்த்தா டிபார்ட்மெண்ட் ஆட்கள் போட்டோவை காட்டறிங்க” என்றவன் அண்ணனை பார்த்து, “அப்ப அங்கிருந்தவங்கள்ல டிபார்ட்மெண்ட் ஆளுமா?” என்று கேட்டான்.

“ஒருத்தன் மட்டும் அவன் எந்த பேட்ச் என்னனு தான் தேடறேன்.‌ போலீஸ் கட் காக்கி ஷூ போட்டிருந்தான்.” என்று தான் கப்பலில் இருந்த சமயம் யார்‌யார் எல்லாம் அந்த இடத்தில் சூழ்ந்திருந்தனர் என்று புள்ளி விவரத்தோடு அடையாளம் காட்டினார் சர்வானந்தன்.

கலீயமூர்த்திக்கு தேவையான விஷயம் கேட்டு விட்டு, "சந்தேகத்தின் பேரில் அரஸ்ட் பண்ணி, விசாரிக்கறோம் சர்வானந்த். நீங்க ரெக்கவர் ஆகிட்டு வாங்க" என்று புறப்பட்டார். இனி அவருக்கு கீழ் இருக்கும் நேர்மையானவர்கள் மூலமாக பெயர்‌பட்டியலில் இருக்கும் ஆட்களை பிடித்து தனி தனியாக விசாரிக்க வேண்டும். எல்லாரும் ரவுடி கும்பலோ கொலை கொள்ளையர்கள் இல்லை. சாதாரண அடையாள அட்டையை போட்டு தினசரி நம்மோடு பயணிக்கும் மனிதர்களே. 

சர்வானந்த் சாகும் விதமாக இருந்ததால் அவரவர் தங்கள் அறிமுகத்தோடு கெத்து காட்டி பேசியிருந்தனர். அதனால் ஓரளவு சர்வானந்தன் அங்கிருந்தவரில் பாதி பேரை அடையாளம் காட்டுமா விதமாக பணியிடமும் பெயரும் தகவலாக உரைத்தான்.‌
சிலர் விதிவிலக்காக பெயர் அறியவில்லை.

கலீயமூர்த்தி சென்றதும் “அண்ணி கன்சீவா இருக்காங்க. உனக்காக ரொம்ப அழுதுட்டா. சூசைட் பண்ண கூட ட்ரை பண்ணினா. மூனு நாள் முன்ன தான் நீ உயிரோட இருக்கன்னு கூட்டிட்டு வந்து காட்டினேன்.” என்று உரைத்திட, சர்வானந்த் கண்கள் சந்தோஷத்தில் மிளிர்ந்தது.

“ஆஹ்.. உங்கப்பா அம்மா உன்‌ காதலை இப்ப ஏத்துக்கிட்டாங்க. அவங்க வீட்ல தான் அவங்க மருமக இருக்கணும்னு கூட்டிட்டு போயிட்டாங்க. உங்க மாமனார் மாமியார் கூட உங்க அப்பா வீட்ல தான் இருக்கார்.” என்று காலாட்டினான்.

“டேய்… அதென்ன உங்கப்பா. நம்ம அப்பாடா. எவ்ளோ சந்தோஷமா இருக்கு இதெல்லாம் கேட்க. இதுக்காகவே குண்டடி பட்டது நல்லதுன்னு நினைக்கலாம்.

கலீயமூர்த்தி சார்‌ சொன்னார். நிரஞ்சனையும் அந்த பொண்ணு மானஸ்வி காப்பாத்திட்டான்னு.‌ நிரஞ்சன் ஊர்ல விட்டாச்சாமே. விஹான் அந்த பொண்ணு‌ நல்ல பொண்ணுடா… ஆனா அவயெப்படி அப்படி ஒருத்தனை காதலிச்சா?” என்று புலம்பினார்.

விஹானுக்கு மானஸ்வி பெயரை கேட்டதும், “ஏன் அவ காதலிச்சு பையனுக்கு என்ன பிரச்சனை? அவன் உயிரோட இருக்கானா?” என்று அண்ணனின் பதிலை வேண்டி பார்த்தான்.‌

“உயிரோட தான் இருக்கான். அவனை மேல் வந்ததும் மூக்குல டிரக் வச்சி ஓவர் டோஸ் தந்துட்டாங்க. அவன் மயங்கிட்டான். பட் அவங்க வர்றதுக்கு முன்ன வினோத் வந்தா அவனை ஒதுங்க சொல்லிட்டு அவன்‌ கூட்டியாற பொண் நமக்கு விருந்துன்னு பேசினாங்க.” என்று கூற, விஹான் நெற்றி சுருங்கியது.

“ம்ம்ம்.. வினோத் அந்த குரூப்ல ஒருத்தன். ஆனா மானஸ்வியை அவன் ஆசைக்கு அணுக தான் அழைச்சிட்டு வந்திருக்கான். பட் பிரெண்ட்ஸ்கிட்ட அவளை அழைச்சிட்டு கடல்ல தனியா வரப்போவதை டிஸ்கஸ் பண்ணி பேசவும், போட்காரனிடம் கப்பல் வர்ற பக்கமா வினோத்துக்கு தெரியாம வர சொல்லியிருக்காங்க. மானஸ்வியால தான் அன்னைக்கு மொத்தமும் மாட்டியது.
சொல்லப்போனா நான் உயிர் பிழைச்சது கூட, இல்லைன்னா செத்து மிதந்திருப்பேன். அவ போட்ல குதிச்சு, போட் திக்கெட்டும் ஓடி, கடல்ல மூழ்கவும், என்‌மேல குண்டு பட்டு இறந்துட்டதா அவங்களா முடிவுக்கட்டி கடல்ல போட்டுட்டாங்க. அந்த நிமிடம் என்னை சரியா ஆராய்ந்தா மூச்சு விடறதை கவனிச்சுயிருப்பாங்க‌. மானஸ்வி குதிக்கவும் பதட்டத்துல இருந்துட்டாங்க.” என்று கூறவும், விஹானோ கதை கேட்டவன் முடிவில் ‘அப்ப வினோத் உயிரோட இருக்கான்.’ என்று மீண்டும் அதையே கேட்டான்.

“ம்ம் மறைவா. ஏன்னா மானஸ்வி உயிரோட இருப்பதை அவங்க கும்பலுக்கு தெரிந்து வினோத்தை மறைந்திருக்க சொல்லியிருக்கலாம்” என்று கூறவும் கதவு தட்டப்பட்டது.

“இன்ஞெக்ஷன் சார்” என்று நர்ஸ் கூற, விஹான் திரும்பினான்.

சர்வானந்தனுக்கு ட்ரிப்ஸ் ஏறிய கையில் மருந்துவ ஊசியும் செலுத்தப்பட்டது.

“நர்ஸ்.‌‌ எப்ப என்னை டிஸ்சார்ஜ் பண்ணுவிங்க?” என்று கேட்டான்.

“காட் கிரேஸ் உங்களுக்கு கைகால்கள் உடைந்திடலை. புல்லட் மட்டும் நீக்கியதால அந்த இடம் ஆப்ரேஷன் மூலமா புல்லட் எடுத்தோம். தலையில் அடி. அதெல்லாம் கூட இத்தனை நாள்ல பெட்ரெஸ்ட் இருந்ததால் பரவாயில்லை. ஆனாலும் நார்மல் வார்டுக்கு மாத்திட்டு டாக்டர் தான் சார் சொல்வார்‌.
எப்படியும் ஒரு‌வாரத்துகாகு மேல இருக்கலாம்” என்று கூறி சென்றார்.

“டேய்.. விஹான் பிருந்தாவை கூப்பிடுடா அவளை பார்க்கணும். பேசணும்” என்று ஆசையாக கூற, விஹானோ “அண்ணியையும் மானஸ்வியையும் அழைச்சிட்டு வர்றேன். வீட்ல எல்லாரும் வந்தா செட்டாகாது.” என்றான்.‌

சர்வானந்தன் தம்பியை பார்த்து, நீ லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருப்பதா அப்பா சொன்னார். லைஃப் எப்படியிருக்கு?” என்றா கேட்டதும், “போலீஸ்காரன் தானே நீ. என் கூட வேலை பார்த்த பொண்ணு அன்னைக்கு என் வீட்ல வந்தா. அப்பா வந்ததும் தப்பு தப்பா எடுத்துக்கிட்டா நான் காரணமில்லை. அவர் சொல்லறார்னு நீயும் கேட்கற?” என்று வெடித்தான்.

”நான் கல்யாணம் ஆனதும் வீட்டுக்கு போனப்ப அப்ப நிறைய திட்டினார். அப்ப நீ லிவ் இன்ல ஒரு‌பொண்ணுகூட இருப்பதாகவும், நானும் காதல்னு விழுந்துட்டதா அசிங்கமா திட்டினார்.” என்று கூறினான். விஹானோ என்‌மேல அவ்ளோ நம்பிக்கை’ என்று முனங்கி நிறைய பேசினார்கள்.

அதன்பின் அண்ணனிடம் சொல்லிவிட்டு நாளைக்கு பிருந்தாவை அழைச்சிட்டு வர்றேன் என்றுரைத்தான்.

“அண்ணிடா” என்று திருத்த, “அட அத்தை பொண்ணு. சட்டுனு பெயர் வருது. போக போக சேஞ்ச் ஆகும்” என்று ஓய்வெடுக்க கூறி கிளம்பினான்.

வீட்டுக்கு வந்தப்பொழுது ஹாலில் பிருந்தாவுடன் மானஸ்வி காபி பருகியதை கண்டான்.‌

இவன் வந்ததும் திரும்பி பார்ந்தவளின் பார்வை இவன் நெஞ்சில் ஏதோவொன்றை கூட்டியது.

வினோத் என்றவனை காதலித்து அவன் தப்பானவன் என்று கூற முடியாது நின்றான்.

அதோடு காதலிக்கறவனை ஒழுங்கா செலக்ட் பண்ண தெரியுதா? வாய் மட்டும் பெருசு.’ என்று உதட்டு அசைக்காமல் முனங்க, தன்னை திட்டுவதாக தெரிந்த மானஸ்விக்கு ஏன் திட்டறாரோ?’ என்று புரியாமல் விழித்தாள்.

இவனுக்கு இந்த வீட்ல இருக்கறது பிடிக்கலை. வெளியே போறேன்னு சொன்னாலும் விடமாட்டார்.

ஆனா பார்க்கறப்ப எல்லாம் திட்டுவார்‌ முறைப்பார். அட்லீஸ்ட்‌இந்த வினோத் வந்துட்டாலாவது நான்‌ கிளம்பிடுவேன்’ என்று வருந்தினாள்.

-தொடரும்.

7 thoughts on “வெண்மேகமாய் கலைந்ததே-17”

  1. Kalidevi

    nalla padiya recover agitan sarva ipo yarellam antha group la irukanga nu sarva vachi kandu pidichiduvanga . Manasvi kitta porumaiya sollu vihan un vinoth nallavan illa intha mari nadanthuka tha una kutitu poi irukan nu ollu apo thana avalum avana ninaikama adutha velaiya paka mudium illana una purinika mata

  2. Avatar

    அடேய் விஹான் ன, மானஸ்வி கிட்ட வினோத்த பத்திய உண்மையை சொல்லிட்டு அப்புறம் அவள திட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *