புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

வெண்மேகமாய் கலைந்ததே-20

அத்தியாயம்-20

      சர்வானந்த் தானாக தன் வேலையை செய்யும் அளவிற்கு வந்தான்.‌

ஓய்வு கிடைக்கும் போதே பயனுள்ளதாக மாற்றிக்க முடிவெடுத்தான்.‌ அதோடு காப்பாற்றப்பட்ட நிரஞ்சனை காண விருப்பப்பட்டான்.

    சர்வானந்தன் மற்றும் விஹான் செல்வதாக கூற,” நானும் வரலாமா சார். நிரஞ்சனுக்காக டிரஸ், கவிநிலாவுக்ககும் டிரஸ் விளையாட்டு பொருள் எல்லாம் வாங்கி வச்சேன்.” என்று கேட்டாள்.
 
    பிருந்தாவோ “அந்த குட்டி பொண்ணு கவிநிலா இங்கிருந்தப்ப என்ன வேண்டும்னு கேட்டப்ப சின்னதா லிஸ்ட் சொன்னா அதெல்லாம் மானஸ்வி வாங்கி வச்சிருக்காங்க” என்று கூறவும் சர்வானந்தனோ “சரி கூடவே வாங்க.” என்று கூறினார்.

சர்வானந்தன் பர்மிஷன் தரவும் பஸ்ஸில் அவளுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து இதோ பஸ்ஸில் அமர்ந்துக் கொண்டனர்.
 
  மானஸ்வி பெண்கள் இருக்கையிலும், விஹான் சர்வா ஆண்கள் இருக்கையில் ஏசி பஸ்ஸில் சொகுசாக பயணம் செய்தனர். மதுரைக்கு வந்ததும் இரவு நேரத்தில் விற்கும் இட்லியை வாங்கினான் விஹான்.‌

  “டேய் ரோட்டு கடையா” என்று சர்வா கேட்க, “எனக்கு பசிக்குது. அதோட இங்க வாசனை மூக்கை துளைக்குது. எனக்கு ரோட்டு கடையா இருந்தாலும் ஓகே.” என்று இட்லியை ஆர்டர் தந்துவிட்டு சேரில் அமர்ந்தான். அது உட்கார மட்டும் இருக்கும். சாப்பாடு தட்டு எல்லாம் கையில் தட்டை வைத்தே உண்ண வேண்டும்‌.

    “விஹான் நம்ம பசங்க டா. கூட ஒரு பொம்பள பிள்ளை வந்திருக்கு.” என்று சர்வா மென் குரலில் கூறினான்.‌

  “பச்… பொண்ணுங்க இங்க சாப்பிட கூடாதுன்னு சட்டமா? நீ போலீஸ்காரன், நான் கூடயிருக்கேன் என்ன பயம். ஹைஜீனிக்கா இருக்குமான்னு சுத்தம் பார்ப்பாங்களா?” என்று நக்கலாய் கேட்டான்.‌

  “சார்… ருசியா இருக்கும் சார் சுத்தாமா சமைப்போம். சாப்பிட்டு பாருங்க சார்” என்று கடையில் சின்ன பையன் விஹானிடம் இட்லிதட்டை தந்துவிட்டு சென்றான்.‌

 மானஸ்வியோ “சர்வா சார்.. நான் சாப்பிடுவேன். ஒன்னும் பிரச்சனையில்லை.” என்றவள் கடைப்பையனிடம் தம்பி “எனக்கும் இட்லி” என்று கூறினாள்‌.

  சர்வா இதற்கு மேல் தம்பியை எழுப்ப முடியுமா அவனுக்கும் இட்லியை சொல்லிவிட்டு உட்கார்ந்தான்.‌

   மானஸ்வி தட்டை கையிலேந்தி சின்ன விள்ளலையாக விழுங்கினாள்.

   சாப்பிட்டு எப்பவும் போல கையை உதறி வந்த விஹான் மானஸ்வி இரு கண்ணை மூடவும் உதறுவதை நிறுத்தினான்.

சட்டையில் ஈரக்கையை துடைத்து‌ நீரருந்த, “ஏன்டா கர்ச்சீப் இருக்குல்ல அதுல துடைக்கலாமே.” என்று சர்வா கூறினான்.‌

  “அம்மா புடவையில் துடைச்சி பழக்கம்‌. மிஸ்டர் சுதாகர் தான் அதுக்கு வழியில்லாம பண்ணிட்டாரே. அந்த கோபத்துல உதறுவேன். இப்ப அதுவும் பண்ணமுடியாம துடைச்சிட்டேன்‌. உன் வேலையை பாரு” என்றான்.

  “ஏன்டா முன்ன ஜாலியா பேசுவ. அப்பாவுக்கும் உனக்கும் சண்டை ஆனப்பிறகு எரிஞ்சு எரிஞ்சு விழற” என்று சர்வா தம்பி தோள் மீது கைவைக்க, “என்னை நம்பலைல… அதோட ரவியோட என்னை வச்சி.. சை… என் இதயம் இப்ப நினைச்சா கூட கண்டபடி கொதிக்குது. அங்கிருந்து வேலையை விட்டு தனியா போனதே அப்பா ரவியோட பேசின பேச்சு.

என்னால நிம்மதியா ரவி இருக்கற ஆபிஸ்ல ஒர்க் பண்ண முடியலை‌” என்று வருந்தினான்.‌

  “சார் ஜெய்சங்கர் அட்ரஸ் கேட்டிங்களே” என்று மானஸ்வி தரவும் சர்வாவோ, “சாரிம்மா பஸ் ஏறும் போது கேட்டேன்.  அதோட வாங்க மறந்துட்டேன். தேங்க்யூ” என்று வாங்கிக் கொண்டான்.‌

  மானஸ்வி செல்லவும் விஹான் அட்ரஸை சர்வாவிடமிருந்து வாங்கி, ஆட்டோ பிடித்தான்.

  மானஸ்வி நேரம், அவள் ஏறியதும் “ஏறுடா” என்று சர்வா கூற நடுவில் விஹான் அமர்ந்தான்.
  சர்வா அதன் பின் அமர நேர்ந்தது.

   ஒவ்வொரு திருப்புதலிலும், மேடுபள்ளத்திலும் மானஸ்வி கம்பி பக்கம் ஒதுங்கி பிடித்து கொண்டாள்.

    விஹானை இடித்து திட்டு யார் வாங்குவது?

  அப்படியிருந்தும் அவன் ரோம கைகள் மானஸ்வியை உரச, மானஸ்விக்குள் இதயவோட்டம் தாறுமாறாக எகிறியது.‌

  அவன் உரசலுக்கு அவளது தேகம் சிலிர்க்க ஆரம்பித்தது. அவன் வேண்டுமென்றே உராயவில்லை.

  ரோமங்கள் புல்லரிக்க, ஆட்டோவிலிருந்து இறங்கியதும் அவள் கைகளை தேய்த்து கொண்டாள்.

   சர்வா இறங்கி பணத்தை தரவும், விஹான் அவசரமாய் நிரஞ்சன் வீட்டுக்குள் சென்றான்.

   கவிநிலா விஹானை பார்த்து மகிழ்ச்சியாக வீட்டுக்குள் ஓடினாள். அவளால் வாய் பேச முடியாது என்பதால் தந்தையை அழைக்க ஓடினாள். நிரஞ்சனோ அண்ணா” என்று ஓடிவந்து அணைத்தான்.‌

  “தம்பி நீங்களா வாங்க வாங்க” என்று‌ துண்டை எடுத்து கையை துடைத்து வந்தார் ஜெய்சங்கர்.

   சமைப்பதற்கு காய் வெட்டியபடி வந்திருக்க வேண்டும் அவ்விடத்தில் அருவாமனை காய்கறி கிடந்தது.

  நிரஞ்சன் பள்ளிக்கூடம் சென்று வீட்டுக்கு வந்திருப்பான் போல பள்ளி சீருடை உடையுடுத்தி இருந்தான்.

  “நிரஞ்சன் எப்படியிருக்க டா” என்று மானஸ்வி கேட்க “அக்கா” என்றவன் விஹானை விடாமல் மானஸ்வியையும் சேர்த்தே அணைத்தான்.
இதில் மானஸ்வி தடுமாற, விஹானோ, “டேய் உனக்கு ஒரு ஷாக்கிங் சர்பிரைஸ் வாசல்ல போய் பாரு” என்றதும் நிரஞ்சன் வாசலை ஏறிட, சர்வானந்தன் நின்றிருந்தான்.
 
   “சார்… சர்வா சார்” என்று அழுது இவர்களை விடுத்து அவரை கட்டி பிடித்தான்.
 
  ”சார்… நீங்க இறந்துட்டதா அண்ணா சொன்னார்.” என்று கேட்க, “அது டிபார்ட்மெண்ட் செய்ய சொன்ன டிராமா நிரஞ்சன். நான் சாகலை‌ நீ எப்படியிருக்க.” என்று கன்னம் பற்றி, “அம்மா செத்துட்டாங்க சார்” என்று அழுது துடித்தான்.

   நிரஞ்சனை கட்டுப்படுத்தி ஆறுதல் கூறி ஒருவழியாக இருபது நிமிடம் கழித்து அமைதியானான்.

‌ சர்வா உயிர்பிழைத்த கதையை ஜெய்சங்கருக்கு தெரிவித்தான்.

  “கடவுளுக்கு நன்றி சொல்லணும் சார். உங்களை நேர்ல பார்த்து கையெடுத்து கும்பிட நினைச்சேன்.” என்று காலில் விழுந்தார். சர்வா தடுத்து அவரை நிமிர்த்தி வைக்க அக்கம் பக்கம் ஆட்கள் கூடியது.

  பிறகு அவர்களை பார்த்து மானஸ்வி கவிநிலாவிடம் செய்கையில் எப்படியிருக்க நல்லா படிக்கிறியா? நீ கேட்ட விளையாட்டு பொருள்” என்று கொடுத்தாள்.

   “உனக்கு எப்படி தெரியும் இந்த செய்கை பாஷை?” என்றான்‌ விஹான். ஹாஸ்டல்ல ஒரு பொண்ணு ஊமை‌ அந்த பழக்கம்” என்றாள்‌.

   அதன் பின் அன்று இரவு நிறைய பேசினார்கள். இரவு உணவு அங்கே பரிமாறப்பட்டது. இரவு தங்க யோசித்தனர். மூன்று ஆண்கள் இருக்க மானஸ்வி திகைக்க அறைக்குள் கவிநிலா நிரஞ்சன் மானஸ்வி உறங்க திண்ணையில் மூன்று ஆடவரும் உறங்கினார்கள்.

  அடுத்த நாள் புறப்பட ஆயத்தமானார்கள். சிவகாமி இருந்தா இரண்டு நாள் தங்களுக்கென்று சொல்வேன். ஆனா சிவகாமி இல்லை சார்” என்று அழுதார்.

    தந்தை அழவும் நிரஞ்சன் அழுதான்.  விஹான் நிரஞ்சனிடம் வந்து, “உன்னால் இறந்துட்டதா உலகம் பேசும்.‌ உண்மை தான்.‌ உன்னால் தான் உங்கம்மா இறந்தாங்க. ஆனா இனி உங்கம்மா இருந்த இடத்துல இருந்து நீ உங்கப்பாவை பார்த்துக்கணும். தங்கச்சியை தாங்கணும். அதுக்கு நல்லா படிக்கணும். நீ படிச்சி உங்கப்பாவை உட்கார வச்சி சாப்பாடு போடணும். தங்கைக்கு நீ தான் துணையா இருக்கணும். இதெல்லாம் நீ ஸ்ட்ராங்கா செய்யணும்.” என்று கூற நிரஞ்சன் தலையாட்டினான்.
  அவனை தட்டி கொடுத்து “குழந்தை எதிரே இனி ஒய்ஃப் இறந்ததை அடிக்கடி பேசாதிங்க சார். அவனுக்கு காயத்தை தரும்” என்று மானஸ்வி கூற ஜெய்சங்கர் இனி பேசமாட்டேன் என்று மொழிந்தார்.

  அதன் பின் மூவரும் சென்னைக்கு திரும்ப ஆயத்தமானார்கள். “நான் அப்படியே ஏர்ப்போர்ட் கிளம்பறேன். அங்கிருந்து நான் என் லைப்ல போயிடுவேன்” என்று விஹான் கழண்டுக்கொண்டான்.‌ சர்வா கூட வீட்டுக்கு வந்துட்டு போடா என்றதற்கு மறுத்துவிட்டான் விஹார்.

சர்வா மானஸ்வி சென்னை வந்து சேர்ந்ததும் சுதாகர் சின்ன மகன் சொன்னது போல சென்றுவிட்டதில் வருந்தினார். மகன் அப்படியே மன்னிக்காமல் சென்றதில் உடைந்துவிட்டார்.

   அதன் பின் சர்வா அனுமதியோடு மானஸ்வி இயல்பாக வேலைக்கு சென்றாள். அதோடு ஹாஸ்டலை வெக்கேட் செய்து, சர்வானந்தன் வீட்டில் மேல் அறையில் மானஸ்வி பாதுகாப்பா வாடகைக்கு தங்கினாள்.

  அங்கே தந்தையிடம் கோபப்பட்டு முருகனாய் மாறி, வீட்டை விட்டு சென்றிருந்தான் விஹான் திரும்பவில்லையே.

   அதில் சுதாகருக்கு வருத்தம் இருந்தது. தன்னால் மைந்தன் தன்னோடு தங்கவில்லையென்ற கவலை அவரை கொஞ்சம் கொஞ்சமாய் வதைத்தது.

     யோக லட்சுமி தன் மூத்த மருமகள்  பிருந்தாவை கண்ணும் கருத்துமாய் பார்த்திருந்தார்.‌

‌ அவருக்கு அந்த வேலையே சரியாக இருந்தது. இதில் சம்பந்தி வந்து சென்றாலும் பலகாரம் செய்வதும் என்று பிஸியாக இருந்தார்.‌ பிருந்தா இல்லாவிட்டால் விஹான் நினைப்பில் வாடுபவராக இருந்திருப்பார்.

  ஆனால் மாற்றம் உண்டாகியதே.  சர்வானந்தனுக்கு சமைக்கும் போது மானஸ்விக்கு சமைத்து கொடுக்கின்றார்.‌ அதற்கும் சேர்த்தே பணத்தை தந்தாள் மானஸ்வி.

   மானஸ்விக்கு எந்த பிரச்சனையும் இன்றி கடந்தாள்.‌ காலையில் வேலைக்கு செல்வது, மாலையில் நேரத்திற்கு வருவது, இரவில் ஒரு நிறைவான குடும்பத்தோடு உணவருந்துவது. சில நேரம் அலுவலகத்தில் இரவு உணவு முடிப்பதாக இருந்தால் அதை யோகலட்சுமியிடம் பொறுப்பாக உரைத்துவிடுவாள்.

  அன்று வினோத் கேஸ் விஷயம் கோர்ட்டில் வரும் நிலை, சர்வானந்தன் மானஸ்வியிடம் “அவன் கோர்ட்ல அப்ரூவல் ஆகறேன்னு சொல்லிட்டான் மா. உன்னிடம் பேசணுமாம். எனக்கு பதிலா கேஸை இன்வஸ்டிகெஸன் செய்த அபிநந்தன் உன்னை அழைச்சிட்டு வர சொல்லியிருக்கார். இன்னிக்கு மதியம் போக வேண்டியதாயிருக்கும். வினோத் இந்த வழக்கில் உள்ள போனா அதோட பல வருஷம் உள்ள தான் இருப்பான்.” என்று கூற, “வர்றேன் சார்” என்று கூறினாள்.

  தொண்டையில் ஏதோ அடைத்த உணர்வு. ஆனால் வினோத்தை பார்த்து கேட்க வேண்டியது கேட்டிடும் சந்தர்ப்பம் இனி வாய்க்குமா? எத்தனை வருடம் தண்டனையோ?

   மானஸ்வி அலுவலகத்தில் சொல்லிவிட்டு வருவதாக உரைத்தாள்.

  சர்வானந்தன் அதனால் அவன் கடமையை பார்க்க சென்றான்.‌

   பைக்கில் செல்லும் பொழுது தம்பி விஹான் அழைத்தான்.

  நலம் விசாரிப்பு முடித்து, பேச்சுவாக்கில் “டேய் சொல்ல மறந்துட்டேன். இன்னிக்கு நிரஞ்சன் கேஸ் விஷயமா மானஸ்வியை கூட்டிட்டு போகணும். ஆபீஸ்ல இருந்து வர்றேன்னு சொன்னா.” என்று தகவல் தந்தான்.

  ”ஏன் கடைசி ஆசையா? ஜெயிலுக்கு போகவும் காதலி மூஞ்சியை பார்க்கணும்னு?” என்று நக்கலும் நைய்யாண்டியுமாக கேட்டான்.

  “பச் நல்ல பொண்ணுடா. என்ன இழவோ. அவ போய் பார்த்ததுட்டா வழக்குல தண்டனை வந்துடும். அதோட பாதி வாழ்க்கை ஜெயில் தான்‌.” என்று பேச, “சனி நான் வைக்கிறேன். நீ வேலையை பாரு” என்று விஹான் துண்டித்து விட்டான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

  ஹாய் முதல்ல இந்த கதை எழுதறப்ப வேற தீம் யோசித்து வைத்தேன். விஹான் தான் மேஜர் ரோலா வந்து கண்டுபிடிக்கறதா.

  பட் அது எதார்த்தமாக இருக்காதுன்னு தோணுச்சு. நார்மல் மனுஷங்க எப்படி ஹாண்டில் பண்ணுவாங்களோ அப்படி கொடுன்னு‌ மனசாட்சி நச்சரிப்பு.

   இந்த இரண்டு தாட்ஸ் மண்டையில் குடையவும் தான் இந்த கதை பாதில பாதில நிறுத்தினேன்.

  அதோட பெர்சனல் பிராப்ளம். சில… உங்களுக்கே தெரியும்‌.

  இப்ப கதை முடிவை நோக்கி வந்துடுச்சு. நாளையுடன் நிறைவடையும்.

  உங்க ஆதரவை தாங்க. நீங்க மட்டும் தான் ஆதரவு.

இதுவரை பொறுமையா என்‌ கதைகளை வாசிக்கும் பேரன்பு கொண்ட வாசகர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள்.‌🙏🏻❤️

  நிறைய கமெண்ட்ஸ்ல ரிப்ளை பண்ணாம அப்ரூவல் பண்ணுறேன். நானா தான் அப்ரூவல் பண்ணுறேன்.
   பிரதிலிபி,  ஆடியோ நாவல் , முகநூல், சைட், ஆடியோ ரெக்கார்டிங், வீடியோ கிரியேட், கவர் பிக், சைட் ஒர்க் வீட்டு வேலை நிறைய வேலைகளுக்கு நடுவே எழுதறேன்‌.

     என்னை பொறுத்தவரை என்‌ ரீடர்ஸுக்கு நன்றியாக தினசரி யூடி பதிவிடுவது என்‌கடமை. அவர்களை ஏமாற்ற கூடாது. இதான்.

  என்னை புரிந்துக்கொண்டு ஆதரவு தரும் எல்லாருக்கும்‌ மீண்டும் என் நன்றிகள். அடுத்த அத்தியாயம் வருது‌
என்ன ஹீரோ ஹீரோயினை சேர்த்து வைப்போமா தள்ளி வச்சிடலாமா? சொல்லுங்க .😜

இப்பவும் சொல்லறேன். மறுக்கா மறுக்கா சொல்லறேன். நன்றி தனி தனியா சொல்ல நேரமில்லை. ஆனா வாசிக்கிற உங்களை உங்க பெயரை என் மனதில் சேமித்து வைக்கின்றேன். 🫂❤️

10 thoughts on “வெண்மேகமாய் கலைந்ததே-20”

  1. SUPER SUPER EPI. Kandipa serthu vainga pa aana scape agurane vihan illa karanama tha poi irukana . court la vinoth pathu manasvi ena panuva ena keka pora athuku vinoth pathil ena pkanum .

  2. Enna ipadi seekiram mudikureenga konjan love scenes la varum(manviha- vihan and manasa) detective scene ethir pathan ponga pa nalla kadai athan konjam sogam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!