வெற்றி எளிதல்ல

காற்றுக்கு ஒலி சுமையானால்
இசை கிடைப்பதில்லை
கல்லுக்கு உளி சுமையானால்
சிற்பம் கிடைப்பதில்லை
மண்ணுக்கு ஏர் சுமையானால்
விளைச்சல் கிடைப்பதில்லை
மண்ணிற்கு மழைத்துளி சுமையானால்
நீர்துளி கிடைப்பதில்லை
தாளுக்கு மை சுமையானால்
கவிகள் பிறப்பதில்லை
தாய்க்கு சேய் சுமையானால்
தாய்மைக்கு அழகு இல்லை
வாழ்க்கைக்கு தோல்வி சுமையானால்
வெற்றி கிடைப்பதில்லை.
— பிரவீணா தங்கராஜ் .
*செப் 2008-இல் “மங்கையர் மலரில் ” பூஞ்சரல் பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டவை .
Super👏