அத்தியாயம் – 13
நிதின் அப்படி கூறியதும்
“ஐ காண்ட் பிலீவ் திஸ்.. அவோ உங்கமேலேயும் நீங்கோ அவோ மேலேயும் வெச்சு இருக்கே பாசம் பாத்து நானு அவோ உங்கேகிட்ட எதும் மறைக்க மாட்டானு நினேச்சேன்..பட் நவ் ஒன்லி ஐ க்நோ ஷீ டிடின்ட் சே எனிதிங் வித் யூ” என்று அவன் அதிசயப்பட..
“எல்லாத்தையும் அவ ஷேர் பண்ணி இருந்தா இப்போ அவள தனியாவா கஷ்டப்பட விட்டு இருப்போம்..” என்று அருந்ததி கூற..
“ஐயம் சாரி” என்று கூறினான் ஆராஷி..
“உங்கமேல தப்பு சொல்லி என்ன ஆகப்போகுது..எங்கமேலேயும் தப்பு இருக்கு..நாங்களும் அவளை கவனிக்காம விட்டது எங்க தப்பு தானே..ஆனாலும் உங்கமேல கோவமும் இருக்கு எங்க எல்லாருக்கும்” என்று சாஹித்யன் கூற அனைவரும் அதை ஆமோதிப்பது போல் தலையாட்ட..
“யா..தட் ஐ க்நோ..நவ் ஐ ட்ரை ட்டூ ரிசால்வ் தட் பட் ஐ கான்ட் ஏபில்”(yeah..That i know..Now i try to resolve that but I can’t able) என்று ஆராஷி கூற..
“ஆல் ஆர் கேனாட் சேன்ஞ் இன் ஒன் டே..பட் இட் வில் சேன்ஞ்..பீ பேஷன்ட்”(all are can’t change in one day..But it will change..Be patient) என்று நிதின் கூற அதை ஆமோதிப்பது போல தலையாட்டியவன்..
“பட் ஹவ் கேன் ஐ சே இன் தமில்.. ஐ டோன்ட் க்நோ தட் மச் ஆஃப் வோர்ட்ஸ் இன் தமில்?”( But how can I say in tamil..I don’t know that muchof words in tamil) என்றான் அவன்..
“அண்ட் ஒன்மோர்திங்.. நவ் அவர் லவ் ஸ்டோரி ஈஸ் நோ நீட் ட்டூ க்நோ.. பர்ஸ்ட் இவுங்கோ லவ்வ கம்பைண்ட் பண்ணி வெக்கலாம்..அப்ரோ நான் சொல்றேன்.. ஐ வில் லேர்ன் தமில் ஆஸ் சூன் ஆஸ் பாஸிபில்..” என்றான்..
“அப்போ இப்போ சொல்ல மாட்டீங்க அப்படித்தானே?” என்றாள் அருந்ததி..
“எஸ்..கிவ் மீ சம் டைம் கிட்” என்றான் ஆராஷி..
“எதே..கிட் டா? என்னைய பார்த்தா குட்டிபிள்ள மாதிரியா இருக்கு? நான்லாம் பெரிய ரவுடியாக்கும்” என்று அவள் எகிற..
“தட் மீன்ஸ்?” என்று ஆராஷி கேட்க..
“ஷீ டோல்ட் ஷீ ஈஸ் மாஃபியா பாஸ்” என்று சாஹித்யன் கூற..
ஆராஷிக்கு சிரிப்பு வந்துவிட்டது..
“சிரிச்சு அசிங்கப்படுத்தியாச்சா.. முடிஞ்சதா? ஓகே..லீவ் இட்.. நாளைக்கு அக்காவும் இவரும் மீட் பண்ணாதான் நாம ஏதாவது ஐடியா பண்ண முடியும்.. அதுக்கு என்ன பண்றது?” என்று அவள் கேட்க அதே சமயம் நிதினின் மொபைலுக்கு மெஸேஜ் வந்ததின் ஒலி எழுப்பியது.. அதை பார்த்த நிதின் பொதுவாக பேசினான்..
“நாளைக்கு நம்ம ஃபவுண்டர் கூட ஆடியோ கான்பரன்ஸ் இருக்காம் வித்தவுட் ஃபெயில் எல்லாரும் வந்துடுங்க..தேஜுவும் வருவா” என்று அவன் கூற..ஃபவுண்டருடன் மீட்டிங் என்றதும் முகம் பொலிவானது ஆராஷிக்கு.. ஆனால் அவளோ உஷாராக ஆடியோ கான்பரன்ஸ் என்று சொல்லிவிட்டதால் வருத்தம் இருந்தாலும் அவளது குரலையாவது கேட்கும் வாய்ப்பு கிடைக்கப்போகிறதே என்று மகிழ்ந்தான் ஆராஷி..
மறுநாள் தன் மனையாளை பார்க்கப்போகும் மகிழ்ச்சி ரியோட்டோவிற்கு இருந்தது..நாளை என்னவெல்லாம் நடக்கப்போகுதோ என நிதினும் நிலவினியும் கவலைபட.. நாளைக்கு என்ன கிறுக்கு வேலை செய்யலாம் என திட்டமிட்டு கொண்டு இருந்தாள் அருந்ததி…அவள் அருகில் வந்த சாஹித்யன்
“ரொம்ப யோசிக்காதடி.. மூளை உருகி ரோட்டுல வழிஞ்சுடப்போகுது..” என்று கிண்டலடிக்க அனைவரது கவனமும் அவர்கள்மேல் திரும்ப கோவத்தில் புசுபுசுவென மூச்சு வாங்கியவள் நறுக்கென்று அவனது மண்டையில் கொட்ட..
“ஆஆ..ஏன்டி எரும அடிச்ச?” என்றான் சாஹித்யன் கோவமாக…
“களிமண்ணு இருக்க உனக்கு வலிக்குதுனா ப்ரஷ்ஷா வெச்சு இருக்க எனக்கு மூளை உருகிடும்னு சொன்னா அடிக்காம கொஞ்சுவாங்களா? போ போயி நல்ல ரோஸ் சேடியா வாங்கி மண்டையில நட்டுக்க..சூப்பரா வளர்ந்து ஒரே நாள்ல பூ பூக்கும்” என்று அவனை வார..
“உனக்குதான்டி உள்ள குப்பை குடோன் இருக்கு.. எனக்கு களிமண்ணு இருக்குறதால தான் உன்கூட குப்பை கொட்றேன்” என்றான் சாஹித்யன்..
“அய்யடா..இல்லனா இவரு ரஷ்யநாட்டு அதிபரா ஆகி இருப்பாரு.. பஞ்சப்பரதேசியா எங்கேயாவது ங்ஞேங்ஞே னு சுத்த வேண்டிய நீ என்கூட இருக்குறதால தான் ஒரு வேல்ர்ட் ஃபேமஸ் ப்ராண்ட்க்கு ஷேர் ஹோல்டரா இருக்கடா வெண்ண..” என்று அவள் அவனை மேலும் வார..
கோவம் கொண்டவன் அவளை அடிக்கவர ஓடிச்சென்று நிதின் பின் ஒளிந்துக்கொண்டாள்..
அவனை தடுத்த நிதின்
“விடுடா..சின்னபிள்ள தானே” என்று கூற
“யாரு இவளா? எரும மாடுனா இவ..இவளுக்குலாம் சப்போர்ட் பன்றத முதல்ல நிறுத்துங்க.. அதான் அவளுக்கு வாய் கூடிட்டே போகுது” என்று அவன் பேச..
“ச்சே ஒரு கம்பெனியோட ஷேர் ஹோல்டர்ஸ் மாதிரியா நடந்துக்கறீங்க? குழாயடியில சண்டை போடுற மாதிரி அடிச்சுக்கறீங்க.. கொஞ்சமாவது மெச்சூரிட்டி இருக்கா?” என்றாள் நிலவினி..
“அதுக்கு கம்பெனி பொறுப்பா?” என்றாள் அரூ..
“அமைதியா இருடி..நம்ம கம்பெனிய நம்பி புது பிஸினஸ் ஸ்டார்ட் பண்ண வந்து இருக்கவங்க முன்ன இப்படித்தான் நடந்துக்குவியா? உனக்கு இந்த வாரம் ஐஸ்கிரீம் கட்” என்றாள் நிலவினி..அவளது பேச்சை கேட்டு அனைவரும் சிரிக்க
‘ஆமா இவுக எல்லாம் தெரிஞ்சுதான் நம்மகூட டை அப் பண்றாங்க..அதுகூட தெரியல இந்த லூசுக்கு..இதுல மெச்சூரிட்டி பத்தி பேசுறாங்க’ என்று மைண்ட் வாய்ஸில் பேசியவள் “அக்கா.. தெய்வமே..உன் கால்ல அவங்க கால்ல வேணாகூட விழுறேன் ஆனா நம்ம ஐஸ்கிரீம் ல மட்டும் கைய வைக்காதே” என்றாள் அரூ பாவமாய்..
“அப்போ ஒழுங்கா வா..போலாம்” என்று அவள் கூற..
“ஓஓ..போலாமே..ஆமா எங்கே?” என்று அரூ கேட்க..
“ம்ம்..சுடுகாட்டுக்கு..பேய் புடிக்க” என்றாள் கோவமாய்..
“நான்தான் உன்ன புடிச்சு வருஷகணக்கு ஆச்சேக்கா” என்றாள் அரூ..
“ஹான்.. எப்போ புடிச்ச?” என்று அவளும் புரியாமல் கேட்க..
“அது இருக்கும் ஒரு இருபது வருஷம்” என்றாள் அரூ..
“என்ன?” என்றவளுக்கு அப்போதுதான் புரிந்தது அவள் தன்னை பேய் என்று சொன்னதை..
“அடிங்க” என்று அவளை அடிக்கப்பார்க்க ஓடிவிட்டாள் அருந்ததி..
“சாரி கைய்ஸ்..அவ கொஞ்சம் வாலு” என்று இருவரிடமும் நிதின் மன்னிப்பு கேட்க..
“நோ சார் ஷீ ஈஸ் பேபி..ப்ளீஸ் மேக் ட்டூ லீவ் ஹர் வித் திஸ் சைட்ல் ஆக்டிவிட்டி”(no sir..She is baby..Please make to live her with her child activities) என்றனர் இருவரும்..
“அவளால தான் உங்ககிட்ட ப்ரீயா பேசவே முடியுது..ஷீ ஈஸ் பிரின்ஸஸ்” என்றான் ரியோட்டோ..
“ம்ம்..ஷீ ஈஸ் சேம் அஸ் மேதா..என்ன மேதா பொறுப்பாவும் இருப்பா இவ பாசம் மட்டும்தான் பொறுப்புலாம் இரண்டாம்பட்சம்தான்” என்று நிதின் கூற..
“மேதா” என்று ஆரம்பித்தவன் அப்படியே நின்றுவிட்டான்..
நிதின் என்னவென்று அவனை பார்க்க
“நத்திங்” என்றுவிட்டு கிளம்பினர் இருவரும்..
அடுத்த நாள்..
அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்தவன்.. குளித்துமுடித்து..
கண்ணாடி முன் நின்று ஒருஒரு கோட் சூட்டாக போட்டு போட்டு கழட்டிக்கொண்டு இருந்தான்..
“ம்ம்ம்..” என்று இப்படி அப்படியுமாய் திரும்பி திரும்பி பார்த்தவன்
“நோ..நோ..” என்று அதை கழட்டிவிட்டு வேறு எடுத்து மாட்டிபார்த்தான்..
ஏதோ வேலையாக அவனது ரூமுக்கு வந்த ரியோட்டோ அவனது இந்த செயலை பார்த்துவிட்டு ஓரமாக நின்று சிரித்தபடி பார்த்துக்கொண்டு இருந்தான்..
வேறு உடைக்கு மாற திரும்பியவன் ரியோட்டோவை பார்த்துவிட்டு ஆவென நிற்க.. அவனது அருகில் வந்து அவனது சூட்டை பார்த்தவன்..
“(Amara no sukunairo wa anata no sukinairodesu..anata wa otto to hanashite irutoki ni ichido itta koto ga arimasu ka)உன்னோட ஃபேவரிட் கலர்தான் உன் ஆளுக்கும் புடிக்கும் அவ ஒருமுறை பேசும்போது சொல்லி இருக்கா..அதை மனசுல வெச்சுட்டு ரெடியாகு ஆரா” என்றுகூற..
சிறிது தயங்கியவன்..
“(A..anata ni hanashikaketa kanoja wa watashi ni hanashikakete iru kamo shiremasen..ie, watashi wa anata ni hanasu kikai o atamasendeshita..)ஓஓஓ..உங்ககிட்டலாம் பேசின என்கிட்ட அவ பேசி இருக்கலாம்..இல்ல பேச நான்தான் சான்ஸ்ஸே கொடுக்கலையே..” என்று வருந்தியவன்..
“(Un., Korekara wa kanajo no hanashi o nagameru no ga watashi no shigotodesu..sodesu.. kyo wa nani o sagashiteimasu ka? Giri no kyodai..kono kagayaki o mitekudasai?)ம்ம்ம்..இனிமேல் அவளை பேசவெச்சு பார்க்கிறதுதான் என் வேலையே..ஆமா.. இங்க என்ன இன்னைக்கு ஒரே ஜொலிப்பா இருக்கீங்க? அண்ணிய பார்க்கவா இந்த ஜொலிப்பு?” என்று பேச்சை திசைமாற்ற அவனது எண்ணம் புரிந்தவன்..
“(Giri no imoto wa aiya garanai..furimuite nanigoto mo nakatta ka no yo ni furumau..)அண்ணிய பார்க்க இல்ல..அவ புரட்டி புரட்டி அடிச்சா வாங்கிட்டு எதுவுமே நடக்காத மாதிரி நடிக்க” என்று கூற..
பக்கென சிரித்துவிட்டான் ஆரா..
“(Adi confirm no koto o shirasemashita ka?)அடி கன்ஃபார்ம்னு இன்ஃபார்ம் பன்றீங்களா அண்ணே?”என்று சிரித்தபடி கேட்க..
“(Kanojo wa jisatu suru tsumoridesu ka? Nanika o suru tochu de hoken ni kanyu suru tsumoridesu ka?)அவ கொலையே செய்வா.. எதுக்கும் போற வழியில ஒரு இன்சூரன்ஸ் எடுத்துக்கனும் ஆரா” என்று கூறிவிட்டு சிரித்தவன்
“(Hai, junbi wa kanryodesu)சரி நீ ரெடியாகு” என்றுவிட்டு சென்றான்.. அவன் கூறியதை நினைவுபடுத்தியவன்
அவனுக்கு பிடித்த கலரில் ஒன்றும் வேறு கலரில் ஒன்றும் எடுத்துவைத்தவன் தனது அறையின் ஓரத்தில் பெட்டில் தூங்குவது போல் நடித்துக்கொண்டு இருந்த ஜிம்மியை பார்த்தான்..
“(Ya, kyadi no jimi)ஹேய்..கேடி ஜிம்மி..கம் ஹியர்..ஐ வாண்ட் யுவர் ஹெல்ப்” என்று அழைக்க அவன் எப்போது அழைப்பான் என்பது போல காத்திருந்த ஜிம்மி அவனது அருகில் ஓடிவர அதனை அள்ளி அணைத்து முத்தமிட்டவன்..
“(Jimmy baby.. papa no tamenara nani demo tsukatte kudasai.. datte papa wa kyo mama ni ai ni ikukara)ஜிம்மி பேபி..சூஸ் எனிதிங் ஒன் ஃபார் யுவர் டேடி..பிகாஸ் யுவர் டேடி கோயிங் ட்டூ மீட் யுவர் மம்மி டுடே( jimmy baby.. choose anything one for your daddy.. bcz your daddy going to meet your mommy today) என்று கூற அதற்கு என்ன புரிந்ததோ நேரே கட்டில்மேல் ஏறியவள் அவன் எடுத்து வைத்த ப்ரவுன் கலர் கோட் மற்றும் இன்னொரு சட்டையும் சேர்த்ததுபோல இரண்டின் மேலும் உட்கார்ந்து அவனை பார்க்க அந்த இரண்டையும் எடுத்து தடவி பார்த்தவன்..
“(Mama wa mite kureru?)உன் மம்மி பார்க்குவாங்களா?” என்று கேள்வி கேட்க அவளோ முகத்தை திருப்பிக்கொண்டு போய் அவளது இடத்தில் படுத்துக்கொண்டாள்..
அதை பார்த்து சிரித்தவன்..உள்ளே அந்த ஷர்ட்டை அணிந்தவன் அதன்மேல் ப்ரவுன் நிற கோட் அணிந்தபடி வெளியே வர அந்நேரம் வந்து சேர்ந்தான் ஹர்ஷத்..
வந்தவன் அப்படியே ஒருகணம் ஸ்தம்பித்து நின்று விட்டான்..
“வாட் ஹர்ஷத்..” என்று அவன் கையை ஆட்டி கேட்க..
கனவிலிருந்து வெளிவந்தவன்..
“You are looking so amazing sir (யுவர் லுக்கிங் சோ அமேசிங் சார்)” என்று கூற ஆராஷிக்கு முகத்தில் புன்னகை வந்தது..
அப்போது ரெடியாகி வந்த ரியோட்டோ ஆராஷியை பார்த்து அசந்துவிட்டான்..
“ஆரா.. சோ பியூட்டிஃபுல்” என்று கூற மேலும் வெட்கம் வந்துவிட்டது அவனுக்கு..
“நீங்களும் சூப்பரா ரெடியாகி வந்து இருக்கீங்க?” என்று கூற அவனுக்கு புன்னகையே..
“(Kono koto wa nagaiai ki rarete kitanode.. to temo ureshidesu)இந்த கோட் ரொம்ப நாள் கழிச்சு போடுறல..? ரொம்ப ஹாப்பிடா” என்று கூறியவன் ஹர்ஷத்தை பார்த்து
“கிளம்பலாமா ஹர்ஷத்” என்று கேட்க..
‘இன்னைக்கு எத்தனை பேருக்கு குளுக்கோஸ் ஏத்தனுமோ தெரியலையே..இவங்க ரெண்டு பேரும் இவ்ளோ ஹான்சம்மா கிளம்பிட்டு இருக்காங்களே.. ஆண்டவா..நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன் என்னை பையனா படைச்சு இவங்க பக்கத்துல விட்டு வெச்சு இருக்கியே?’ என்று மைண்ட் வாய்சிஸ் கடவுளோடு ஒரு சண்டையிட்டவன் டைமை பார்த்தான்..
“சார் டைம் ஜஸ்ட் 6.30 வீ ஹாவ் மீட்டிங் ஆன் 11 o’clock..” என்று நினைவு படுத்தியவன்..
“அண்ட் சார் டுடே ப்ரஸ் மீட் இருக்கு.. இனாகிரேஷன் அன்னைக்கே நீங்க தனியா பேட்டி கொடுக்கிறதா சொன்னீங்க இன்னைக்கு” என்று அவனுக்கு நினைவுபடுத்த
“ஓஓ..யா..ஐ ஃபர்காட் தட்..ஆன் வாட் டைம் இன்டர்வீயூ?” என்று கேட்க..
“Its 9.30 சார்” என்று அவன் கூற
“ஓகே அரேஞ்ச் மீட்டிங் இன் ரெனி குரூப்ஸ் கம்பெனி..ஐ வில் இன்ஃபார்ம் மிஸ்டர்.நிதின்” என்றுவிட்டு தன் மொபைலை எடுத்தவன் நிதினுக்கு டையல் செய்துவிட்டு அவனிடம் நீட்ட அவன் சொன்னதை அப்படியே சொன்னான் ஹர்ஷத்.. நிதினும் ஓகே என்றுவிட
“ஷெல் வீ கோ?” என்று ஹர்ஷத்தை பார்த்து கேட்க..
“சார் டைம் ஈஸ் தேர்” என்றான் அவன்..
“ஐ க்நோ சென்னை பீக் ஹவர்ஸ் டிராபிக் மூவ் மேன்.. இப்போ போனாதான் 9.30. குள்ள அங்கே ரீச் ஆகமுடியும்” என்றுவிட அதற்குமேல் எதுவும் சொல்லாமல் கிளம்பினான் ஹர்ஷத்..