அத்தியாயம் – 112
அவனது அணைப்பில் அவள் சுகமாக உறங்குவதை பார்த்த நிதினுக்கு கண்கள் கலங்கியது.
“எதையுமே நம்மகிட்ட இவளுக்கு சொல்லவே தோணலைல நாம இவ கூட இருக்கமாட்டோம்னு அவளா முடிவு பண்ணிட்டால்ல” என்று அவன் புலம்ப
ஆறுதல் சொல்ல வாயெடுத்த ஹர்ஷத்தை தடுத்து ஆராஷியே பேசினான்.
“நீங்க அப்படி யோசிக்கறீங்க ஆனா இவ அப்படி யோசிச்சே இருக்கமாட்டா நிதின் சர்.
உங்கள்ள யாருக்காவது ஏதாவதுனா அவளுக்கு உயிரே போய்டும் சேம் தாட் தான் அவளுக்கும் வந்து இருக்கும் அவளுக்கு இப்படிலாம் இருக்குனு தெரிஞ்சா நீங்க எல்லாரும் கவலையாவே இருப்பீங்க அதனாலதான் அவ சொல்லி இருக்கமாட்டா” என்று அவன் யூகத்தை சொல்ல
ஆச்சர்யமான ஹர்ஷத்
“எங்கேயாவது ஒளிஞ்சு நின்னு இதெல்லாம் கேட்டீங்களா என்ன சர் அப்படியே சொல்றீங்க?” என்று ஹர்ஷத் கேட்க
லேசாக சிரித்த ஆராஷி
“உங்கமேல இருக்குற அவ பாசமே அவளை காட்டி கொடுத்துடும் ஹர்ஷத்.
நான் ஷேர் ஹோல்டர் மீட்டிங்க்கு கூப்பிட்டு அவ உடனே ஏன் வந்தானு நினைக்குற? என்னை பார்த்துட்டு மேடம் உன்ன முதற்கொண்டு எல்லாரையும் அவ பார்த்த பார்வை அதுல நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா இல்லையானு செக்கிங் இதுனாலதான் மேடம் அந்த ஆன்லைன் மீட்டிங்க்கு ஒத்துக்கிட்டதே நான் தான் பார்த்தேனே” என்று அவன் கூற அவளை அவன் எந்தளவுக்கு கண்காணித்து இருக்கிறான் என்று எல்லோருக்கும் புரிந்தது.
தான் அவளை இந்த அளவுக்கு கவனியாமல் விட்டு விட்டோமே என்ற வருத்தம் நிதினுக்கு மேலோங்க அவன் குற்ற உணர்வில் அங்கிருந்து வெளியே செல்ல முற்பட அவனையே பார்த்துகொண்டு இருந்த ஆராஷியின் குரல் அவனை தடுத்தது.
“தங்கச்சிய பொண்ணுபோல பார்த்துக்கிற மனசு உங்கள தவிர வேற யார்க்கும் வராது நிதின் சர்” என்று அவன் சொல்ல வெளியே செல்ல போனவன் நின்று திரும்பி ஆராஷியை பார்த்தான்.
“ஆமா நிதின் சர் எனக்கு கூட சந்தேகம்தான் என் கூட பிறக்காத ஒரு தங்கச்சி இருந்து அவளுக்கு இப்படி ஒரு ப்ரண்ட்ஸ் ஃபேமிலி போல இருந்தா அவள நான் என் மகளா பார்த்து இருப்பேனானு எனக்கு சந்தேகம்தான்.
ஆனா நீங்க இவள மட்டும் இல்ல உங்கள சுத்தி இருக்குற எல்லார் மேலயும் ஒரேபோல பாசம் காட்டுறீங்களே.
இதை நான் பார்த்தது அன்னைக்கு இவளுக்கு உடம்பு சரியில்லைனு என் ரூம்ல தங்க வெச்சு இருந்தேனே அப்போ அருந்ததி குற்ற உணர்ச்சில இருக்காங்கனு நீங்க அவங்களுக்கு சின்ன பிள்ளைக்கு பேசுற போல சமாதானம் செஞ்சு இவள என் ரூம்லேயே இருக்க சொல்லி ஓகே சொன்னதும் இல்லாம அருந்ததியை அவளுக்கு துணையா வெச்சுட்டு அவங்க வேலையும் கெடக்கூடாதுனு செட் போட வெச்சு ஷூட் பன்ன வெச்சீங்களே அதுலேயே தெரிஞ்சது நீங்க இவங்கள எல்லாம் எப்படி பார்த்துக்கறீங்கனு அப்பாவோட இடத்தை நீங்கதான் இவங்க எல்லாருக்கும் ஃபுல்ஃபில் பண்ணிட்டு இருக்கீங்க நிதின் சர்.
ஒரு அப்பாவா ஒரு அண்ணணனா உங்க கடமையில இருந்து நீங்க
தப்பே பண்ணல.
அதனால கூட இவளோட டிப்ரஷன் உங்களுக்கு தெரியாம இவ மறைச்சு இருக்கலாம்.
லவ்வர்கிட்டயே லவ்வை மறைச்சவளுக்கு அப்பா போல பார்த்துக்கற அண்ணன் கிட்ட கஷ்டத்தை மறைக்கிறது தானா கஷ்டம் சொல்லுங்க? இதுல நீங்க கில்ட்டி ஆகுற அளவுக்குலாம் எதுவும் இல்ல நிதின் சர் அப்புறம் மேடம் அதுக்கும் சேர்த்து வருத்தப்பட்டுட்டு இருப்பா நீங்க இல்லனா இவங்க யாருமே இல்ல” என்று அவன் பேச அவனது பேச்சு நிதர்னசனத்தை நிதினுக்கு உணர்த்த அப்படியே நின்றான்.
அவன் அருகில் வந்தா ஷ்ரத்தாவும் தேஜூவும்
அவனது இரு கைகளையும் பிடித்தபடி
“அவர் சொல்றது தான்னா கரெக்ட் நீங்க இல்லனா நாங்க யாருமே இல்ல நாங்க ஜீரோ தான் அண்ணா.
சரத் அப்பாக்கு அப்புறம் அதே பாசத்தோட இருக்குறது நீங்க தான் அதனால நீங்களும் அப்பாதான் அதனால தான் உங்கள கஷ்டப்படுத்தக்கூடாதுனு அவ சொல்லாம மறைச்சு இருக்கா” என்று ஷ்ரத்தா கூற இருவரையும் அணைத்தவன்
“சாரிடா கொஞ்சம் சுயநலமா யோசிச்சுட்டேன்” என்று அவன் கூற
“என்னைய கழட்டி விட்டுட்டு” என்று அருந்ததியின் குரல் கோபமாய் வர திரும்பி அவளை பார்த்தவன் அவளிடம் சென்று
“அச்சோ நீ என் செல்லம்டா உன்னை மறப்பேனா?” அவளையும் அணைக்க
“போதும் போதும் ஐஸ் உருகுது” என்று அருந்ததி கூற அனைவரும் சிரித்து விட்டனர்.
அந்த சத்தத்தில் மேதா எழுந்து கொள்ள அனைவரையும் பார்த்தவளுக்கு வெட்கம் வந்துவிட அனைவரையும் பார்க்கமுடியாமல் அவனது மார்பினுள் ஒளிந்து கொள்ள சிரித்த அனைவரும்
“என்ன மோளே எங்க முன்னாடியே ரொமான்ஸ்ஸா?” என்று நிதின் கேட்க ஆராஷியோ அமைதியாக சிரிக்க
அப்போது தான் உணர்ந்தாள்
அவனது திறந்த மார்பினுள் அவள் முகம் புதைத்துள்ளாள் என்று உடனே அவள் விலக போக அவளது கழுத்தை ஏடாகூடமாக அவள் திருப்புவதை உணர்ந்தவன்
“மேதா டோண்ட் ஸ்டெரியின் யுவர்செல்ஃப் அப்புறம் பிளீடிங் ஸ்டார்ட் ஆகிடும்” என்று கோவமாக கூறி அவளது கழுத்தை அசையாதபடி பிடிக்க அதில் அவள் அப்படியே அவனை பார்க்க
“ஆரம்பிச்சுட்டாங்கபா அண்ணலும் நோக்கினாள் அவனும் நோக்கினான்னு இதுக்கு மேலயும் நம்ம இங்க இருக்கனுமா அண்ணா? அப்புறம் ப்ரைவசி இல்ல ரொமான்ஸ் பண்ண டைம் இல்லனு நம்மமேல பழியை சொல்ல” என்று அருந்ததி கூற
“அதேதான்டா நானும் யோசிக்கிறேன்” என்று நிதின் கூற
சிரித்த ஆராஷியோ
“போதும் போதும் ரொம்ப ஓட்டாதீங்க” என்றபடி மேதாவை தன்மேலிருந்து கீழே இறக்கியவன் முதலில் எழுந்து அவளை மெல்ல எழ உதவ போக அதற்குள் நிதினும் ஹர்ஷத்தும் உதவிக்கு வர முழித்தவள் நிதினின் கையை பற்ற அவனுக்கோ பெருமை தாளவில்லை. மெதுவாக அவளை எழுப்பியவர் இருவரையும் பார்த்தார்
ஆராஷியும் ஹர்ஷத்தும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொள்ள
“என்ன சிரிப்பு? ப்ரண்டும் வேணாம் லவ்வரும் வேணாம்னு அண்ணாவைதான் அவ செலெக்ட் செஞ்சா உங்களுக்கு பொறாமையோ போங்கடா அங்க என் மேதாக்கு நான்தான் எப்பவும் பர்ஸ்ட்”என்று நிதின் கூற.
“இல்ல கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஒருத்தர் மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு போக பார்த்தாரு அவரைதான் காணோம்னு தேடுறோம் உங்க மோளேவ நீங்களே வெச்சுக்கோங்க இப்போவாவது உங்களுக்கு புரிஞ்சதேனு தான் நாங்க சிரிச்சோம்” என்று ஹர்ஷத் கூற
“ம்ம் ம்ம் அதெல்லாம் அப்போவே ஆராஷி கிளீயர் செஞ்சுட்டாரு அதனால எனக்கு இருந்த வருத்தம்லாம் இப்போ என்ட மேதா என் கையை பிடிச்சு எழ பார்த்ததுமே எனக்கு இன்னும் கிளீயரா தெரிஞ்சுபோச்சு அதனால இனி வருத்தம்லாம் படமாட்டேன்” என்று கூற
“அண்ணா இந்த சுச்சுவேஷன்க்கு அந்த ஃபேமஸ் ஜூவல்லரி ஆட்ல வருமே மகளேனு ஒரு சாங் அது நல்லா செட் ஆகும்ல?” என்று அருந்ததி கேட்க
“என்ன?” என்று நிதின் அவளை பார்க்க.
“கரெக்டா சூட் ஆகும்டா அரூமா” என்று தேஜூ தன் பங்கிற்கு பேச
அவள் கலாய்ப்பது புரிந்த நிதின்
“ஹேய் வாலுமோளே உன்ன அடி பிச்சு” என்று கூற மீண்டும் அனைவரும் சிரித்துவிட்டனர். இவர்கள் பேச்சு புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்த மேதா ஹர்ஷத்தை சுரண்டி என்ன என்று கேட்க
“அது உனக்கு அப்புறம் சொல்றேன் பேபிமா இப்போ ஹாஸ்பிடல் போலாமா?” என்று கேட்க அவனை அவள் முறைக்க
“ஹான் போதும் போதும்இந்த முறைப்பை பார்த்து நான் பயப்படமாட்டேன் உன் ஆளுகிட்ட காட்டு” என்று அவன் அருந்ததியை அழைத்துக்கொண்டு செல்ல ஆராஷியை நிமிர்ந்தும் பாராமல் தன் அண்ணனோடு நடந்தாள் மேதா.
“அடிப்பாவி” என்று யாருக்கும் கேட்காமல் ஆராஷி சொல்ல அதை கேட்டுவிட்ட ரியோட்டோ
அவனது தோளில் கையை போட்டு
“இந்த பொண்ணுங்களே இப்படித்தான்டா ஆரா.
அப்பாவை அண்ணனை பார்த்ததும் புருஷன கழட்டி விட்டுடுவாங்க. இதெல்லாம் சகஜம் நீயும் பழகிக்கோ” என்று அவன் சொல்ல.
“நீங்க ரொம்ப பழகிட்டீங்க போலவே அண்ணா” என்று அவன் திருப்பி கேட்க
“அதெல்லாம் ரொம்ப வருஷமா” என்று அவன் பதில் அளிக்க அவனது முதுகில் பளார் என அடி விழுந்தது
“ஐய்யோ அம்மா” என்று அலறி அவன் திரும்ப பத்ரகாளியாய் முறைத்து பார்த்தாள் தேஜூஶ்ரீ
“இல்லடா பேபி சும்மா சொன்னேன் அவனும் பழகணும்ல” என்று மீண்டும் உலற
“டேய்” என்று அவள் கோவமாய் கத்த அங்கிருந்து ஓடியே விட்டான் ரியோட்டோ.
அமைதியாக சென்று காரில் அமர்ந்த மேதா அருகில் அவன் அமர அவனது கையோடு கைகோர்த்து கொண்டாள் முதன்முறையாக எவ்வித தயக்கமும் இல்லாமல்.
அதை கண்ட ஆராஷிக்கு முகத்தில் அருமையான புன்னகை உதித்தது.
இதை பார்த்துக்கொண்டு இருந்த நிதினுக்கு நிம்மதியாய் இருந்தது.
அவளை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றவர்கள் அவளையும் அருந்ததியையும் அங்கே விட்டு அருந்ததிக்கு துணையாக ஹர்ஷத்தையும் அவனது தாயையும் விட்டு மேதாவிற்கு துணையாக யாரும் வேண்டாம் என்று சொன்ன ஆராஷி அவனே பார்த்துக்கொள்வதாக கூற இருந்தாலும் பெண்துணை வேண்டுமே என தேஜூ கேட்க “அதெல்லாம் நான் நல்லாவே பார்த்துப்பேன் அண்ணி” என்று கூற சரி அவர்களே ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும் என உணர்ந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்ப மேனேஜர் வந்து ஃபங்ஷன் தேதியை மாற்றி வைத்த விவரத்தை சொல்ல அதை ஃப்ரீ கான்செர்ட்டாகவும் மாற்ற சொன்னான் ஆரா.
அவரும் சரியென சென்றுவிட மேதாவின் அருகில் வந்து அமர்ந்தவன் இத்தனை நாட்கள் பேசாத காதலையெல்லாம் ஒரே நாளில் சொல்லி விடவேண்டும் என்ற ஆவலில் பேசி பேசியே அவளை உறங்க வைத்தான் அவளது சிறு அசைவிலும் அவளது நாணத்தை உணர்ந்தவன்.
“ஏன்டி நீ யாருனு தெரியாதப்பவே உன்ன நான் கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துக்கிட்டேன் இப்போதானா உன்ன விட்டு விலகி நிப்பேன்.
என்கிட்ட இந்த கூச்சப்படுற வேலைலாம் வேணாம் மேதா கூச்சத்தை தள்ளி வெச்சுட்டு உன்னோட உரிமையான ராஷியா மட்டும் பாரு” என்று கூற அவளும் சரியென மண்டையை ஆட்டிக்கொண்டு அவன் செய்யும் சேவைகளையெல்லாம் அமைதியாக ஏற்றுக்கொண்டாள்.
