Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 15

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 15

அத்தியாயம் -15

“நான் ப்ரஸ்க்கு ஆன்சர் பண்ணிட்டு வர்றேன்” என்றுவிட்டு வெளியே செல்ல திரும்பியவன் மீண்டும் ஆரூவை பார்த்து..

“பட் அவ லவ் எனக்கு மட்டுமானதுனு தெரிஞ்சா அவளை யார்க்கும் விட்டுக்கொடுக்கவே மாட்டேன்.. இட்ஸ் அ ப்ராமிஸ்” என்றவன் வெளியே சென்றான்..
“இப்படி அழகா ஹான்சம்மா வந்தா என் மேதா எப்படி வேணாம்னு சொல்லுவா? இன்னைக்கு ஒரு ஜொல்லு ஆறு கன்பார்ம்” என்றபடி
அவனுடனே வந்தனர் அனைவரும்..
வந்தவன் முதலில் புகைப்படம் எடுக்க நின்றபடி அவர்களை பார்த்து (translated)”ஜுஸ் குடிச்சீங்களா?” என்று கேட்க..
அனைவரும்
“எஸ் சார்..தேங்க்யூ ஃபார் யுவர் கைன்ட் ஹார்ட்” என்று கூற தலைவணங்கி ஏற்றவன்..

“தேங்கஸ் ஃபார் இன்வைட்டிங் மீ..ஐ திங் ஆல் ஆர் க்நோ அபெளட் மீ.. சோ ஆஸ்க் யுவர் கொஸ்டின்ஸ்?” என்றான்
உடனே ஒரு ரிப்போர்ட்டர் எழுந்து

“ஹலோ சார்.. தமிழ்நாட்டுல வந்து பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்கீங்க.. தமிழ் கத்துக்கிட்டீங்களா?” என்று கேட்க..

“கொஞ்சேம் கொஞ்சேம் தெரியும்.. கத்துக்கிட்டே இருக்கே” என்றான் புன்னகையோடு..

அவர் அமர்ந்துவிட அடுத்தவர் எழுந்து..

“எதுக்காக உங்க பிஸினஸ்ஸ இந்தியால அதும் ஶ்ரீ குரூப்ஸ்கூட ஆரம்பிச்சீங்க? எனி பர்ஸ்னல் ரிலேஷன்ஷிப்?” என்று கேட்க..

அரூ கோவமாய் ஏதோ பேசப்போக அவளை சட்டென கையை பிடித்து தடுத்தான் நிதின்.. அவனை திரும்பி பார்த்தவள் அமைதியாகிவிட..
அவர்களை திரும்பி பார்த்து புன்னகைத்தவன் பேச அதல மொழிபெயர்த்தான் ஹர்ஷத்..

“ஆமா.. நல்ல பர்சனல் ரிலேஷன்ஷிப் தான்.. என்னனா.. என்னை என் நாட்டுக்காரங்களே நம்பி ஸ்பான்சர் பண்ணாதப்போ ஶ்ரீ குரூப்ஸ் சரத்ஶ்ரீ சார்தான் என் திறமையை நம்பி எனக்கு ஸ்பான்சர் பண்ணாரு அவருகூட எப்பவுமே எனக்கு நல்ல ரிலேஷன்ஷிப் தான்.. அவருமட்டும் இல்லனா நான் இப்போ இந்த நிலையில இருக்கமாட்டேன் அதான் அவங்ககூடவே என் பிஸினஸ் இருக்கனும்னு கேட்டேன் சரத்ஶ்ரீ சார் இருக்கும்போதே இதை ப்ளான் பண்ணோம் ஆனா அப்போ என்னால இங்க ரொம்ப நாள் இருக்கமுடியல அதனால அதை ப்ளான் பண்ணல இப்போதான் நான் ஃப்ரீ ஆனேன் அதான் செய்யுறோம்” என்று கூற.. வேறு ஒருவர் எழுந்து..

“சார் நீங்க லாஸ்ட் டைம் இந்தியா வந்தப்போ உங்ககூட இருந்தாங்களே ஒரு பொண்ணு அவங்க இல்லையா? இப்போ வேற மேனேஜர் வேற ட்ரான்ஸ்லேட்டர் இருக்காரு?
அந்த பொண்ணுக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சினையா? அப்போவே அவங்ககிட்ட கோவமாவே இருப்பீங்களே?” என்று கேட்க

கண்களில் கோவம் வர அந்த நிருபரை பார்த்தவன் தன் கோவத்தை கட்டுப்படுத்திக்கொண்டு
“அவங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை? அதை சொன்னா நானும் தெரிஞ்சுப்பேன்.. அண்ட் லாஸ்ட் டைம் எனக்கு மேனேஜர் அப்பாயிண்ட் பண்ணது சரத்ஶ்ரீ சார் அவங்க கான்ட்ராக்ட் முடிஞ்சது அவங்க நின்னுட்டாங்க.. இப்போ நான் இங்க வந்தப்போ அப்பாயிண்ட் பண்ணவர்தான் ஹர்ஷத்.. அவங்க வேலையை சரியா செய்யலனா தான் நான் கோவமாகி இருப்பேன்..இது எல்லா ஓனர்ஸ்ஸும் செய்யுற வேலை தானே? ஏன் உங்க ஹையர் ஆபீசர்லாம் உங்களை திட்டினதே இல்லையா?..” என்று கேட்க அந்த நிருபரோ..
“அதெல்லாம் சரி சார்.. ஆனா அந்த பொண்ணும் நீங்களும் லவ் பண்ணீங்க அப்புறம் பிரேக்அப் ஆகிடுச்சு அதான் அந்த பொண்ணு எங்கேயோ காணாம போச்சுனு கேள்வி பட்டோமே அது உண்மையா? அந்த பொண்ணு எங்க இருக்காங்க இப்போ?” என்று கேட்க..
அவரை நோக்கி கோவமாய் திரும்பியவன்..
“படிச்சவங்கதானே நீங்க அறிவு கொஞ்சம்கூட வேலை செய்யாதா? உங்களுக்கு கன்டென்ட் கிடைக்க எவ்ளோ கேவலமா வேணா பேசுவீங்களா? நீங்க பேசுறதுல ஒரு பொண்ணோட லைஃப் இருக்குனு யோசிக்கவே மாட்டீங்களா?” என்றான் கோவமாக அதை அப்படியே கோவமாய் மொழிபெயர்த்தான் ஹர்ஷத்..
“நாங்க கேள்விப்பட்டதைதானே சார் கேட்டோம்.. பதில் சொல்லுங்க இல்லனா உண்மை இதான்னு ஒத்துக்கோங்க..அதை விட்டுட்டு எங்ககிட்ட கோவப்படுறீங்க?” என்று எகத்தாளமாய் கேட்க..
தன்னை நிதானம் படுத்தியவன் ஹர்ஷத்தை பார்த்து அந்த நிருபரின் குடும்ப அங்கத்தினர் பெயர்களை கேட்க உடனே தேடி கொடுத்தான் அவன் ஆராஷி அந்த நிருபரை பார்த்து..
“ஓஓஓ..ஆல்ரைட்.. உங்க வீட்டுல உங்க தங்கச்சி அதான் மிஸ்.நேத்ரா அவங்களோட கூடத்தான் எனக்கு தொடர்பு இருக்கு.. இதையும் உண்மைனு ஒத்துக்கனுமா?” என்று கேட்க அதிர்ந்த அந்த நிருபர்..
“என் தங்கச்சிய பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? அவ உண்டு அவ வேலை உண்டுனு இருக்குறவ உங்கள அவளுக்கு பிடிக்கும் அதுக்காக இப்படி பேசுவீங்களா? இது வெளியே தெரிஞ்சா நாளைக்கு அவ லைஃப்ல எவ்ளோ பிரச்சினை வரும்னு யோசிக்காம அவ பேர இழுப்பீங்களா?” என்று அவன் கோவமாய் கேட்க..
“வாட்.. கம் அகெய்ன்.. உங்க வீட்டு பொண்ணுனா மட்டும் மானம் போய்டும் லைஃப் போய்டும் ஆனா அதே வேற ஒரு பொண்ணுனா இஷ்டத்துக்கு அவமானப்படுத்துவீங்களா? ஐயம் சாரி ஃபார் யுவர் சிஸ்டர்.. பட் ஷேம் ஆன் யூ ஆஸ் எ பிரதர்..உங்களுக்கு புரியவைக்கத்தான் உங்க சிஸ்டர் பேரை யூஸ் பண்ணேன்.. சீ அகெய்ன் நான் சொல்றேன் அவங்கள நான் அப்பாயிண்ட் பண்ணல அவங்க படிப்புக்காக அவங்க காசு சேர்க்க இந்த வேலைக்கு வந்தாங்க அது முடிஞ்சதும் அவங்க போய்ட்டாங்க.. இதுல எனக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சனை இருக்கப்போகுது? அவங்க எங்க இருக்காங்கனு தெரிஞ்சு நான் என்ன பண்ணப்போறேன்..
அவங்க படிப்புக்கு ஹெல்ப் வேணும்னா வேணா நான் ஹெல்ப் பண்ணுவேன்.. அவ்ளோதான் எனக்கும் அவங்களுக்கும் இருக்குற சம்பந்தம்..ரூமர்ஸ்லாம் உண்மையா ஆக்க பார்க்காதீங்க.. அவங்களுக்கும் எதிர்காலம் இருக்கு” என்று கூற.. அந்த நிருபர் மன்னிப்பு கேட்டார்..
அடுத்தவர் எழுந்து..
“சார் நீங்க தமிழ்ல நடிக்குவீங்களா?” என்று கேட்க..
“இப்போதைக்கு ஐடியா இல்ல.. பட் நல்ல கதை கிடைச்சா நடிக்கலாம்..ஆனா எனக்கு தமிழ் படங்கள் செட் ஆகுமானு தெரியல அது என்னை வெச்சு படம் எடுக்குற டைரக்டர் தான் முடிவு பண்ணனும்” என்று கூறியவன்..
“எனி அதர் கொஸ்டின்ஸ்.. ஷெல் ஐ லீவ்?” என்று கேட்க..
“சார் ஶ்ரீ குரூப்ஸ்ஸோட ரெண்டு பெண் வாரிசுகளையும் எப்போ மீடியாக்கு காட்டப்போறீங்க?” என்று ஒருவர் கேட்க..
“இது எனக்கான கேள்வியா? அப்போ என்னை இன்டர்வீயூ பண்ணவரலையா நீங்க?” என்றான் ஆராஷி..
“சாரி சார் அவரும் இருந்தாரேனு கேட்டேன்சார்” என்று அந்த நிருபர் கூற..
“அது அவர்கிட்ட அப்பாயிண்மெண்ட் வாங்கிட்டு பேசுங்க..ஓகே ஐ ஹாவ் மீட்டிங்.. ஐயம் லீவிங்..பை கைய்ஸ்” என்றுவிட்டு ஹர்ஷத்திடம் திரும்பியவன் அவன் காதில் ஏதோ கிசுகிசுக்க அவனும் சரியென மண்டைய ஆட்டினான்..
திரும்பி நடக்கப்போனவனின் நடையை ஒருத்தரின் குரல் நிறுத்தியது..
“சார் ஓன் பைனல் கொஸ்டின்” என்று கத்த நின்றவன் அங்கிருந்தே திரும்பி
“எஸ்” என்றான்..
“உங்களுக்கு எப்போசார் கல்யாணம்?எங்க கண்ணுல உங்க ஏஞ்சலை எப்போ காட்டப்போறீங்க அவங்கள?” என்று கேட்க..
அவரை பார்த்து புன்னகைத்தவன்..
“நான் என்னோட ஏஞ்சலை தான் தேடிட்டு இருக்கேன்.. இன்னும் கண்டுபிடிக்கல..அவ கிடைச்சு அவ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னதும் உங்ககிட்ட சொல்றேன் கண்டிப்பா” என்றவன்..
“எனிதிங் எல்ஸ்?” என்று கேட்க..
“நத்திங் சார்” என்று கூற சிரித்தமுகமாய் திரும்பியவன் சட்டென கோவமுகமாய் மாறி உள்ளே செல்ல அனைவரும் கலைந்து சென்றனர்..
உள்ளே வந்ததும் அரூ..
“அந்த நிருபர் என்னடானா அப்படி கேள்வி கேட்கிறார் இவரு கூலா பதில் சொல்றாரு? ஆமா மேதாவ லவ் பண்றேன்னு சொல்றதுக்கு என்ன?” என்று அவள் கோவமாய் பேச..
“சும்மா இருடி.. இன்டர்வீயூ போகும் முன்னதானே சொன்னாரு அவ லைஃப் பாதிக்கப்பட கூடாதுனு.. மீடியா முன்னாடி என்ன வேணாலும் பேசிடக்கூடாது அரூ..யோசிச்சு தான் பேசணும்.. ஒன்ன நாலா திரிச்சு விட்டுடுவாங்க.. அவரு செலிபிரிட்டி வேற யோசிக்காம வார்த்தையை விடக்கூடாது” என்றாள் நிலவினி.. அவள் சொன்னதில் இருந்த உண்மை புரிய
“சாரி சார்” என்றாள் அருந்ததி..
“அவளை பார்த்து தன் கோவத்தை மறைத்து புன்னகைத்தவன்
“நோ இஸ்யூஸ் பேபி..லீவ் இட்” என்றான்..
அவன் கோவத்தை அடக்குவது எல்லோருக்கும் புரிந்தது..
நிருபர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு உள்ளே வந்த ஹர்ஷத் ஓகே என்பது போல் தலையாட்ட அமைதியாக அதை ஏற்றவன் வேறுபுறம் திரும்பி நின்றான்..
நிருபர்கள் எல்லாம் கிளம்பியது உறுதியானதும் கருப்பு நிற கியா வண்டி உள்ளே நுழைந்தது.. கார் சத்தம் கேட்டு நிதின் எட்டி பார்க்க தன் குழந்தையோடு காரிலிருந்து இறங்கி வந்து கொண்டு இருந்தாள் தேஜாஶ்ரீ..
“தேஜு ஈஸ் கம்மிங்” என்று ரியோட்டோவை பார்த்து கூற அவனோ ஆவலாய் வெளியே செல்லத்திரும்ப அவனது கையை சட்டென பற்றிய அருந்ததி..
“நீங்க உணர்ச்சிவசத்தை கொஞ்சம் அடக்குங்க.. உங்கள வாசல்ல பார்த்து வந்தவங்க அப்படியே கார்ல ஏறி ஓடிடுவாங்க” என்று கூற அசடுவழிய பல்லை காட்டினான் ரியோட்டோ..
“மாம்ஸ்..போட்லாம் இன்னும் வாங்கல.. உங்க ஜொல்லு ரிவர வேற பக்கம் டைவர்ட் பண்ணுங்க நாங்க பாவம்” என்றாள் அரூ..
அதற்கும் சிரித்துவைத்தான் அவன்.. வந்தவள் ரியோவும் ஆராஷியும் கான்பரன்ஸ் ஹாலில் இருப்பார்கள் என எண்ணியபடி தன் மகளை தூக்கிக்கொண்டு ஆபீஸ் என்ட்ரன்ஸ்ஸுக்குள் வர நிதின் அவனை மறைத்தபடி நின்றிருந்ததால் அவளுக்கு ரியோ தெரியவில்லை..
“அவதான் மிரட்டி எல்லாம் செய்ய வெக்குறானா நீங்களும் அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்கல்ல? பாசமெல்லாம் அவமேலதான் என்மேல கொஞ்சம் கூட இல்ல சேட்டா” என்று நிதினை பார்த்து அவள் கேட்டபடி குழந்தையை இறக்கி நிற்கவைத்தாள்..
“நான் இங்க வெறும் சி.இ.ஓ தான் நீங்க ஷேர் ஹோல்டர் அண்ட் நியூ பிசினஸ் பாட்னர் இதுல எதுவுமே நான் முடிவு செய்யல.. ஆல்ரெடி இருந்த ஃபவுண்டர் அண்ட் ஹையஸ்ட் ஷேர் ஹோல்டர் சரத்ஶ்ரீ சார் தெளிவா எழுதி வெச்சுட்டு போனதைதான் இப்போ இருக்குற ஃபவுண்டர் எக்ஸிகியூட் பண்றாங்க நான் ஃபாலோ பண்றேன்.. இதுல உங்களை மிரட்டி வரவைக்க வேண்டிய நிலைய வரவெச்சது நீங்கதான்.. ஒரு அண்ணனா என் கடமையை சரியா செய்யுறேன்.. என் தங்கச்சிங்கமேல சரிசமமா பாசம் வெச்சுத்தான் நடந்துக்குறேன் என்ட மோளே..மனசிலாயோ?” என்றான் நிதின்..
இனி இவனிடம்பேசி பலனில்லை என்று உணர்ந்தவள்
“நான் பேபியை ப்ளே ஹோம்ல விட்டுட்டு வர்றேன்..” என்றபடி அவள் திரும்ப பார்க்க அவளது கையை உதறிய குழந்தை
“ப்பா..ப்பா” என்றபடி ரியோவை பார்த்து கைநீட்டியபடி நடக்க ஆரம்பித்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *