Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 17

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 17

அத்தியாயம் – 17
மழை அடித்து ஓய்ந்தது போல அனைவரும் ஷாக்கில் இருந்தனர்.. ரியோட்டோவோ தன் மனையாள் தன்னை அடி வெளுப்பாள் என்று எதிர்பார்த்தவன் அவள் சமாதானமாய் பேசுவதை நம்ப முடியாமல் திகைத்து நின்று பார்த்துக்கொண்டு இருந்தான்.. அவனது தோளில் ஒரு இடி இடித்தான் ஆராஷி..
அதில் சுயநினைவு வந்தவன்
“ஹான்.. என்ன சொன்ன பேபி” என்று கேட்க.. அவளோ அவனை முறைத்துவிட்டு கூடவே ஷ்ரத்தாவையும் முறைத்துவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு கான்பரன்ஸ் ஹாலினுள் நுழைந்து கதவை அடைத்துவிட்டாள்..
தலையிலேயே அடித்துக்கொண்ட ஷ்ரத்தா
“யப்பா டேய் மேதா பொண்ணே என்னால முடியலடி.. நீ எழுதி கொடுத்தத பக்கம் பக்கமா ஒரே நைட்ல மனப்பாடம் பண்ணி என் ப்ரண்ட்ட அடிச்சு எவ்ளோ ஃபோர்ஸ்ஸா மூச்சுபுடிக்க பேசி அவள இவருகூட வாழ ஓகே சொல்லவெச்சா இவரு அசால்ட்டா ஹான்னு சொல்றாரு.. முடியலடா முடியல.. அரூ பேபி அக்காக்கு ஒரு ஜுஸ் சொல்லுடா” என்று அங்கேயே அமர்ந்துவிட்டாள்..
நினைவுக்கு வந்தவன் ஓடிவந்து அவள்முன் மண்டியிட்டு அமர்ந்து அவளது கைகளை பற்றிக்கொண்டான் அதில் அதிர்ந்தவள்..
“என்ன பன்றீங்க? எழுந்துருங்க?” என்றாள் பதறி அவளால் டக்கென்று எழ முடியவில்லை.. அவன்தான் காலுக்கு முன் மண்டியிட்டு அமர்ந்துள்ளானே..
“நீ..நீங்க எனக்கு காட் மாதிரி சிஸ்டர்.. என் லைஃப் எனக்கு இல்லனு நினைச்சு நான் அழாத நாளே இல்ல.. தேஜுவ எப்படி சமாதானம் பண்ணப்போறேனோனு ஒரு ஒருநாளும் தூக்கமில்லாம தவிச்சேன்.. ஆனா நீங்க புயல் மாதிரி வந்து எல்லாத்தையும் மாத்திட்டீங்க..
என்னோட ஹாப்பி.. அதை எப்படி எக்ஸ்போஸ் பண்றதுனு கூட எனக்கு தெரியல.. தூரத்தில இருந்தாவது என் வைஃப் மகளையும் பார்த்துட்டு போய்டனும்னு நினைச்சேன்.. ஆனா நீங்க என்கூடவே வெச்சு பார்த்துக்குற வரம் கொடுத்து இருக்கீங்க.. தேங்க்யூ சோ மச் சிஸ்டர்” என்றான் நெகிழ்வாக..
“முதல்ல எந்திரிங்க சார்..” என்று கூற அவனும் எழுந்து நின்றான் அவளும் எழுந்து அவனை பார்த்து..
“நான் பேசினது எல்லாம் மேதா எழுதிக்கொடுத்தது நீங்க தேங்க்ஸ் சொல்லனும்னா அவளுக்குத்தான் சொல்லனும்.. அண்ட் இன்னொரு விஷயம் நாங்க பேசினது அவ உங்ககூட வர சம்மதிச்சது எதுவுமே பெருசு இல்ல இனிமேல் அவள பழையபடி மாத்துறது உங்க வேலை.. நீங்க அவள நம்பலங்குறது தான் பிரச்சனையே அவள நீங்க எந்த அளவுக்கு நம்புறீங்கனு அவளுக்கு புரூவ் பண்ணுங்க.. உங்க லவ் மட்டும் தான் அவளோட மனச மாத்தும்.. அதுக்கு நீங்க கொஞ்சம் இல்ல ரொம்பவே இறங்கிபோக வேண்டி வரும்” என்று அவள் கூற..
“என் மேதாகுட்டி பெரிய ஆள் ஆகிட்டா.. எவ்ளோ யோசிக்கிறா? இனிமேல் நான் என் தேஜுவ எப்படி லவ் பண்ண வைக்குறேன்னு பாருங்க.. வைஃப்கிட்ட இறங்கிபோக தெரிஞ்சவன்தான் வாழ்க்கையில ஏறிப்போவான்.. ஐ வில் ப்ரூவ் தட்” என்று கூற..
“சூப்பர் மாம்ஸ்..குடும்ப இஸ்திரி ஆகிட்டீங்க” என்றபடி ஜுஸோடு வந்த அருந்ததி அதை ஷ்ரத்தாவிடம் நீட்ட அவள் வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்..
“எஸ் மை பிரின்ஸஸ்.. ஆனா எனக்கு லிட்டில் கன்ப்யூஷன்..” என்று கேட்க.. எல்லோரும் அவனை என்ன என்று பார்த்தனர்..
“இல்ல ஒருத்தர அக்கா சொல்ற அண்ணா சொல்ற இதுல யாரெல்லாம் ரிலேஷன்ஸ் யாரெல்லாம் யாருக்கு ப்ரண்ட்ஸ்?” என்று கேட்க எல்லோரும் அவனை ஒரு மாதிரியாக பார்க்க ஆராஷியோ தலையில் அடிக்காத குறையாக நின்றான்..
‘இதை கேட்டுட்டீங்களா? இப்போ பெருசா ஒரு ஜாயின்ட் ஃபேமிலி ஸ்டோரி சொல்லுவாங்களே அது புரியாதே’ என்று மனதோடு புலம்பியபடி நின்றவனை பார்த்தவள்..
“என்ன சார் எங்களை பத்தி எதுவும் சொல்லலையா?” என்று கேட்டாள் அரூ..
“நோ..பேபி.. அதி எனிக்கே லாட்ஸ் ஆஃப் கன்ப்யூஷன்.. அதா.. சொல்லலே..சாரி” என்றான் அவன்..
“ம்ம்ம்..இதை நான் சொல்றதவிட அண்ணா சொன்னா சரியா இருக்கும் நினைக்கிறேன்.. அண்ணா மாம்ஸ்க்கு நம்ம குடும்பத்தை அறிமுகம் செஞ்சு வைங்க” என்று கூற அவனது அருகில் வந்த நிதின்..
“நான் நிதின் ஶ்ரீ.. ஶ்ரீ குரூப்ஸ்ஸோட ஓனர் சரத் ஶ்ரீ அவரோட அண்ணன் பையன்.. சின்ன வயசுலேயே எங்க அப்பா அம்மா கார் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க அதனால அப்பா என்னை அடாப்ட் பண்ணிகிட்டாரு..என்னோட தங்கச்சிங்க தேஜு ஶ்ரீ அண்ட் மேதஷ்வினி ஶ்ரீ.. அவங்கதான் சரத் அப்பாவோட பொண்ணுங்க இந்த எல்லா சொத்துக்கும் லீகல் வாரிசுங்க..
ஷ்ரத்தா அண்ட் சாஹித்யன் அண்ட் நிலவினி மூனு பேரும் ஶ்ரீ குரூப்ஸ்ஸோட ஷேர் ஹோல்டர்ஸ் அண்ட் தேஜுவோட சைல்ட்வுட் ப்ரண்ட்ஸ்..
அரூ மேதாவோட சைல்ட்வுட் ப்ரண்ட்..அவளும் ஶ்ரீ குரூப்ஸ்ஸோட ஷேர் ஹோல்டர்தான்..
இதுல ஸ்பெஷல் என்னனா நாங்க எல்லாருமே அநாதைங்கதான்..சரத் அப்பாதான் எங்களையும் அவரு பசங்களுக்கு ஈக்குவளா படிக்க வெச்சு கம்பெனியோட ஷேர் ஹோல்டராவும் மாத்தினாரு..
எங்களை அவர் படிக்க வைக்க முதல் ரீசன் மேதா.. அவளோட இரக்க குணம், ஏழை பணக்காரன் னு வித்தியாசம் பார்க்காம பழகுற பழக்கம்தான் எங்களை அவகிட்ட சேர்த்தது அண்ட் எங்களை இப்படி ஒரு பொஷிஷன்க்கு வரவெச்சது.. அவளைவிட்டு நாங்க பிரியக்கூடாதுனு தான் அப்பா எங்களை ஷேர்ஹோல்டர்ஸ்ஸா போட்டாரு..
சின்ன வயசுல இருந்து அவகூடதான் நாங்க எல்லாரும் வளர்ந்தோம் அவளுக்காகவும் தேஜுக்காகவும்தான் எங்க லைஃப்பே..” என்று அவன் கூற முடிக்க..
“வாவ்..வாட் ஏ ப்ரண்ட்ஷிப்.. ரியலி மை மேதா கிட் ஈஸ் ஆசம்..” என்று ரியோட்டோ கூற அதை ஆமோதிப்பது போல தலையசைத்தான் ஆராஷி.. அவளது நல்ல உள்ளம் அறியாது அவளை தப்பு தப்பாக நினைத்த தன்னையே அவன் வெறுத்தான்..
“எங்க லைஃப்ல கிடைச்ச ஏஞ்சல் அவ” என்றான் நிதின்..
“ஹா..ஆராஷி சார்” என்று ஷ்ரத்தா ஏதோ சொல்ல அவனை அழைக்க அவளை பார்த்தவன்..(டிரான்ஸ்லேட்டட்)
“நீங்க பேசினது எனக்கும் சேர்த்துதான்னு நீங்க பேச ஆரம்பிச்சப்போவே புரிஞ்சுக்கிட்டேன்…நல்லா நோட் பண்ணி வெச்சுக்கிட்டேன் மேடம்” என்று கூற அவளோ சிரித்துவிட்டாள்..
அதன்பின் ஷ்ரத்தாவின் கணவனிடம் நலம் விசாரிப்புகள் முடிந்ததும்..
“ஓகே..மீட்டிங் டைம் ஈஸ் கம்மிங்..ஷெல் வீ லீவ்?” என்றான் நிதின்..
அனைவரும் ஒருவர் பின் ஒரு கான்பரன்ஸ் ஹாலினுள் நுழைய அங்கு குழந்தையின் அழுகையை சமாதானம் செய்ய முயற்சித்துக்கொண்டு இருந்தாள் தேஜுஶ்ரீ.. அவள் அருகில் சென்ற ரியோட்டோ.. குழந்தையிடம் கைநீட்ட அழுதபடியே அவனிடம் தாவியது குழந்தை..
அவளுடன் ஏதேதோ பேசி சமாதானம் செய்தவன் மீண்டும் அவளை தேஜுவிடம் தர வர அவளிடம் போகாமல் அழ ஆரம்பித்து விட்டது குழந்தை.. அதனால் அவனே வைத்துக்கொண்டான் குழந்தையை.. இதை பார்த்த தேஜுவிற்கு ஏதோபோல் ஆகிவிட்டது.. இரண்டு வருடமாக அவனை பார்க்கவில்லை பேசவில்லை பழகவில்லை..ஆனால் முதல்முறை பார்த்த உடனே அவனுடன் ஒன்றிவிட்ட தன் மகளை எண்ணி வருத்தமே அவளுக்கு.. அவளை பார்த்துக்கொண்டிருந்த அருந்ததிக்கு சிரிப்புத்தான் வந்தது..
அவளது அருகில் குனிந்தவள்..
“அக்கா..மூஞ்சிய கோவமா இருக்குறமாதிரி வெச்சுக்க.. அப்போதான் மாமா பயப்படுவாரு..நீ இப்படி பச்சபிள்ள மாதிரி வெச்சு இருந்தா அவரு ஈஸியா ஸ்கோர் பண்ணிட்டு போய்டுவாரு” என்று இரகசியமாய் கூற..
“ஆமால.. நான் அவன்மேல கோவமா இருக்கேன்” என்று கூறியபடி முகத்தை கோவமாய் மாற்ற அருந்ததிக்கு சிரிப்புதான் அதிகம் ஆனது.. வாய்விட்டு சிரித்துவிட்டாள்.. மீட்டிங்காக அனைவரும் தான் பேச வேண்டியதை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டு இருக்க அவள் சிரிக்கவும் முறைத்தான் நிதின் அதை பார்த்தவள்..
“சா..சாரினா” என்றபடி தலையை குனிந்து கொண்டாள் அனைவரும் வந்து அவரவர் இடத்தில் அமர அனைவருக்கும் அவரவர் லேப்டாப்போடு ட்ரான்ஸ்லேட்டர் ஹெட்ஃபோன் பொருத்தப்பட்டது.. இதுதான் சமயம் என்று பார்த்து புரொஜக்டரின் கனெக்ஷனை கழட்டிவிட்டான் நிதின்.. அவனது லேப்டாப் மட்டுமே புரொஜக்டரோடு இணைக்கப்பட்டு இருக்கும் எங்கு அதில் மேதாவின் முகம் தெரிந்துவிடுமோ என அவளது யோசனைப்படி கழட்டிவிட்டான்.. அனைவரும் லாகின் செய்ய அந்த வீடியோ கான்பரன்ஸ் ஆடியோ கான்பரன்ஸாக மாறியது..
மீட்டிங் ஆரம்பிக்கும் முன் சிறிது நேரத்தில் ஆராஷியின் கோட்டை பிடித்து இழுத்தான் அவளை தூக்க தன் கையை நீட்டினான் ஆராஷி.. அவனிடமும் தாவி ஒட்டிக்கொண்டாள்.. அதற்குள் மீட்டிங்கும் துவங்கியது..
முதலில் நிதின் பேசத்துவங்கினான்..
அவன் தமிழில் பேசுவதும் கூட ஜாப்பனீஸில் மொழிப்பெயர்க்கும்படியே அமைத்து இருந்தனர் டிரான்ஸ்லேட்டரை.. அவன் அருகில் இல்லாவிட்டாலும் அவனுக்காக அவள் பார்த்து பார்த்து செய்வதை எண்ணி உள்ளம் பூரித்து போனான் ஆராஷி.. தன் மடியில் குழந்தையோடும் அழகாய் ஹான்சமாய் கோட் சூட்டோடு இருப்பவனை பார்த்து எல்லோரும் ஒருகணம் திகைத்தது உண்மையே.. இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஆராஷியோ தன்னவளின் குரலை கேட்க தன்னை தயார் படுத்திக்கொண்டு இருந்தான்..
“எல்லாருக்கும் வணக்கம்.. இது இந்த வருஷத்தில ஶ்ரீ குரூப்ஸ்ல ஃபவுண்டரோட நடக்குற இரண்டாவது மீட்டிங்..அவங்க பதவி ஏத்து நடக்குற மீட்டிங்..அதுவும் நம்ம கம்பெனி கூட புதுசா டை அப் பண்ணி இருக்குற மிஸ்டர்.ஆராஷி ஷிமிஜு அண்ட் மிஸ்டர்.ரியோட்டோ ஷிமிஜு வ வெல்கம் பன்றேன்.. நாம் செய்ய போற புது கம்பெனியான ‘மேத்ராஷ்’ஷ பத்தி தான் இன்னைக்கு மீட்டிங்ல பேசப்போறாங்க.. சோ இதுல உங்களுக்கு தனிப்பட்ட கருத்து இருந்தா எல்லாரும் தாராளமா தரலாம்.. இந்த மீட்ட சக்ஸஸ்ஃபுல்லா நடத்தி தரணும்னு உங்ககிட்ட கேட்டுக்கிறேன்..
ம்ம்.. நம்ம ஃபவுண்டர் இப்போ கனெக்ட் ஆகிட்டாங்க அவங்க பேசுவாங்க.. குட் மார்னிங் மேம்..” என்றபடி அவளை பேச சொல்லி அவன் நிறுத்தி விட்டான்.. அவன் நிறுத்தியதும் பேசத்துவங்கினாள் மேதா..
“ஹாய் கைய்ஸ்..ஐயம் மிஸ்.மேதஷ்வினி சரத்ஶ்ரீ.. நான்தான் ஶ்ரீ குரூப்ஸ்ஸோட ஃபவுண்டர்.. பர்ஸ்ட் ஐ வெல்கம் அவர் நியூ பிஸினஸ் பார்ட்னர்ஸ் மிஸ்டர்.ஆ..ஆராஷி ஷிமிஜு அண்ட் மிஸ்டர்.ரியோட்டோ ஷிமிஜு.. ஷேர்ஹோல்டர் ஆஃப் மேத்ராஷ்.. தேங்க்ஸ் ஃபார் சூசிங் அவர் கம்பெனி ஃபார் யுவர் நியூ கொலாபுரேஷன்..” என்று மூச்சு விடாமல் பேசி முடித்தவள் அவளது லேப்டாப்பை பார்க்க தன் லேப்டாப்பில் பேக் கேமிராவை ஆன் செய்து வைத்துவிட்டான் நிதின்.. கையில் சாச்சியோடு அமர்ந்து இருந்தவன் உருவம் அவளது மனதில் அழகாய் பதிந்து போனது.. அதிலும் அவன் போட்டு இருந்த ஷர்ட் அது அவளை அவன் கடைசியாக பார்த்தபோது போட்டு இருந்தது.. அதன்மேல் போட்டு இருந்த கோட் அவளை முதன்முதலில் இந்தியாவில் பார்த்தபோது போட்டு இருந்தது.. அவனது அழகான முகமும் அந்த உடையும் அவளுக்கு சந்தோஷத்தை அளித்தாலும் அவனது இளைத்த தேகம் அவளுக்கு வருத்தத்தையும் அளித்தது..
நடிகனான அவன் இளைத்த தேகத்தோடு இருப்பது மற்றவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவனது இப்படி இளைத்ததற்கு காரணம் டையட் இல்லையே என்பது அவளை வருத்தியது.. அவனையே தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்..
அவளது குரலை கேட்டவனோ அப்படியே சிலைபோல அமர்ந்துவிட்டான்.. அதன்பின் அவளோ மற்றவர்களோ பேசிய எதுவும் அவன் காதில் நுழையவே இல்லை.. தன்னை உலுக்கிக்கொண்டு இருக்கும் அண்ணன் மகளையும் அவன் கவனிக்கவில்லை ஆனால் அவள் விழுந்துவிடாதபடி அவளை பிடித்து இருந்தவன் புரொஜக்டர் ஆனில் இருந்ததால் அதையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்..
நிதின் எழுந்து நின்று பிசினஸ் பற்றியும் மற்ற விஷயங்களை பற்றியும் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்க தண்ணீர் பாட்டிலை எடுத்த அருந்ததி கை தவறி நிதினின் லேப்டாப் ஓயரையும் சேர்த்து இழுத்துவிட பயந்தவள் யாரும் தன்னை கவனிக்க வில்லை என்று எண்ணியவள் அவசரமாக ஓயரை அதனுள் பொருத்தினாள்.. நிதின் புரொஜக்டர் கனெக்ஷனை கழட்டி வைத்திருந்ததை அறியாதவள் அந்த ஓயரும் கழண்டுவிட்டது என எண்ணி அதையும் பொருத்த.. புரொஜக்டரில் அம்சமாய் தோன்றினாள் மேதஷ்வினி..
ஏழு மாதங்கள் முழுதாய் அவளை யாருமே பார்க்கவில்லை.. ஆராஷியும்தான்..அந்த பெரிய திரையில் அவளை பார்த்தவன் கண்கள் மின்ன கனவு போல எழுந்து நின்றான்.. திடீரென அவன் எழ எல்லோரும் அவனையேதான் பார்த்தனர்.. அவனை தொடர்ந்து எல்லோரும் பார்க்க திரையில் தெரிந்தாள் மேதா.. எல்லாரும் ஒருசேர அதிர்ந்தனர்..அவனையே பார்த்துக்கொண்டு இருந்த மேதா அவன் எழுந்து நிற்கவும் என்னவென்று பார்த்தாள்.. அவளது பார்வை தன்னையே நேருக்கு நேராக பார்ப்பது போல் உணர்ந்தவன்
“அஷு” என்று கூற அப்போது தான் அவளுக்கு அவன் தன்னை பார்ப்பது உரைத்தது..
பதட்டமான நிதினோ என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென முழிக்க..
சூழ்நிலையை அழகாய் கையாண்டாள் மேதா..
“ஒ..ஓகே கைய்ஸ்..நவ் மீட் ஈஸ் ஓவர்..ஐ ஹாவ் அனெதர் மீட்.. உங்களுக்கு ஏதாவது கருத்து இருந்தா நம்ம சி.இ.ஓ கிட்ட சொல்லுங்க.. நா..நான் அர்ஜென்ட்டா கிளம்பனும்.. மீட் யூ அகெய்ன் கைய்ஸ்..பை” என்றவள் பட்டென காலை முடித்து வைத்தாள்..
மின்னலாய் வந்து போனவளை பார்த்தவன் நடந்தது கனவா இல்லை நனவா என்று புரியாமல் பார்த்தபடி நின்றிருந்தான்.. அவனது தோளில் கைவைத்த ரியோட்டோ நிஜத்தை உணரவைத்தான்..
புரொஜக்டரை கனெக்ட் செய்தவள் அருந்ததிதான் என்று கண்டுபிடித்த நிதின் அவளை திட்ட துவங்க.. அவனை தடுத்தான் ஆராஷி..
(டிரான்ஸ்லேட்டட்)
“ப்ளீஸ் சார் அவளை திட்டாதீங்க.. அவ எனக்கு எவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கா தெரியுமா?
முழுசா ஏழு மாசம் ஆச்சு அஷ்ஷுவ பார்த்து.. இவளால தான் நான் அவள பார்க்கமுடிஞ்சது..இன்னைக்கு எனக்கு எவ்ளோ ஷ்பெசல் தெரியுமா? தேங்க்யூ சோ மச் அரூ பேபி..நீ மிஸ்டேக்கா பண்ண ஒரு விஷயம்தான் எனக்கு லைஃப் ஃபுல்லா சந்தோஷத்தை கொடுத்து இருக்கு..” என்று பேச எல்லோரும் ஆவென அவனைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தனர்.. அதிகம் பேசாதவன் இவ்வளவு பேசினா யார்தான் பார்க்காம இருப்பாங்க..
பேசியவன் மகிழ்ச்சியாய் தன் அண்ணன் மகளை தூக்கி சுற்றியவன் விசிலடித்தபடியே அவளை இறக்கிவிட்டு கிளம்பினான்..
கிளம்பும்முன் திரும்பியவன்..
“அண்ணா அண்ணிய கூட்டிட்டு புதுசா வாங்கின வீட்டுக்கு போங்க..நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வர்றேன்” என்றுவிட்டு சிட்டாக பறந்துவிட்டான்..அவன் பின்னே ஓடினான் ஹர்ஷத்..
எங்கு தன்னை நிதின் திட்டுவானோ என்று எண்ணிய அருந்ததியும்
“ஹா..எனக்கு ஒரு வேலை இருக்கு நான் அப்புறம் வர்றேன்” என்றுவிட்டு ஓடிவிட்டாள்..
தன் மேல்கோட்டை கழட்டியவன் மாஸ்க் அணிந்து கொண்டு காரை எடுக்க ஓடிச்சென்று காரில் ஏறினான் ஹர்ஷத்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *