Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் -18

வேண்டும் நீ எந்தன் நிழலாய் -18

அத்தியாயம் – 18
காரில் தன்னுடன் ஏறியவனை பார்த்தவன்
“நீ ஏன் என்கூடே வர்றே ஹர்ஷத்? நானே தெனியா போய்க்கும்” என்று கூற..
‘உங்கள தனியா விட்டு நான் பலியாகவா?’ என்று மனதில் எண்ணியவன்
“இ..இல்ல சார்.. உங்களுக்கு வழி தெரியாது..லேங்குவேஜ்ஜும் ப்ராப்ளம் சோ நான் வர்றேன் சார்..ப்ளீஸ் நோ சொல்லாதீங்க” என்று வேண்டியபடி கேட்க..
இவன் எப்படியும் தன்னுடன்தான் வருவான் என்று உணர்ந்தவன் தனக்கும் வழி தெரியாது என்பதால் அவனை உடன் வர சம்மதித்து காரை இயக்கினான்..
அவனுக்கு சற்று இடைவெளிவிட்டு பாடிகார்ட்ஸ் வந்தனர்..
ஹர்ஷத்திடம் வழி கேட்டு ஈ.சி.ஆர் சாலையில் காரை ஓட்டியவன் அங்கிருந்த ஒரு மலைப்பகுதியில் காரை நிறுத்தினான்..(இதெல்லாம் என் கற்பனையே..அப்படி ஒரு இடம் இருக்கானுலாம் தேடாதீங்கோ)
மலையடிவாரத்தில் அழகாய் ஒரு டீக்கடை அங்கே ஒரு பென்ச் சுற்றிலும் பசுமையான மரங்கள் என பார்க்கவே அழகாய் இருந்தது..
இறங்கியவன் டீக்கடையை பார்த்தான் ஹர்ஷத்தை பார்த்தான்..அவனோ திருதிருவென முழித்தான்..
“சார்.. இங்கலாம் சாப்பிட்டு உங்க ஹெல்த்க்கு ஏதாவது ஆனா?” என்று அவன் இழுக்க..
“நீ சாப்பிடுவியா? இந்த மாதிரி ப்ளேஸ்ல?” என்று அவனை கேள்வி கேட்க..
“கண்டிப்பா சாப்பிடுவேன் சார்” என்றான் அவன் உடனே..
“அப்போ போ..எனக்கும் வாங்கு டீ வித் ஒன் பிஸ்கட்.. ஐ டோன்ட் க்நோ தட் பிஸ்கட் நேம்..இட்ஸ் ரவுண்ட் ஷேப்டு பிஸ்கட்” என்று கூறினான் ஆராஷி..
‘ம்க்கும்..எல்லாரும் செவ்வகம் சதுரம்னு பிஸ்கட் செய்யறாங்க இவரு சொல்ற பிஸ்கட் மட்டும்தான் ரவுண்டா செய்யுறாங்க பாரு.. ஏகப்பட்ட பிஸ்கட் இருக்கு ஊருல இதுல எந்த பிஸ்கட்டுனு நான் கண்டுபிடிக்க..’ என்று மனதில் புலம்பியவனை பார்த்த ஆராஷிக்கு மேலும் சிரிப்பு வந்தது..
“ஐ கேட்ச் யுவர் மைண்ட் வாய்ஸ் மேன்..கோ அண்ட் பை ஆல் பிஸ்கட்ஸ் ஆஃப்டர் ஐ வில் டெல் விச் ஒன் ஈஸ் தட்..வித் டீ.. ஃபார் போத் யூ அண்ட் மீ” என்று கூற..
“ஹிஹிஹி..இதோ வாங்கிட்டு வர்றேன் சார்” என்றபடி சென்றவனோ.. கையில் டீயோடு சால்ட் பிஸ்கட்டோடும் வந்தான்..
அதை பார்த்தவனுக்கு புரிந்து போனது அவன் யாரிடம் கேட்டு இருப்பான் என..
தனக்குள் சிரித்துக்கொண்டவன்..
“அஷு..யூ ஆல்வேய்ஸ் மேக்கிங் மீ அமேசிங்” என்று வாய்விட்டு கூற அருகில் வந்துவிட்ட ஹர்ஷத் அதிர்ந்துபோனான்..
எப்படி கண்டுபிடித்தார் என்று..
“என்ன ஹர்ஷத் உங்கே மேடம் எப்பவுமே என்னே புரொடக்ட் பண்றதுலேயே இருக்காங்கே போலே?” என்று கேட்க..
“ச்சே..ச்சே..அவங்க ரொம்ப பிஸி சார்.. மீட்டிங்லேயே பார்த்தீங்கள்ள அவங்களுக்கு அவ்ளோ ஒர்க்” என்று அவன் வாய்க்கு வந்ததை உலர.. வாய்விட்டு சிரித்த ஆராஷி..
“அப்புறம் எப்டி மேன்.. எனிக்கும் என் அஷுக்கு ஒன்லி தெரிஞ்ச பிஸ்கட் விஷயேம் உனிக்கு தெரியும்?” என்று அவன் கேட்க..
‘ஆஹா.. வசமா சிக்கிட்டியேடா ஹர்ஷா..எப்படி வீடுபோய் சேரப்போற?’ என்று மனதில் புலம்ப..
“ஏன் மேன் உனிக்கு நீயே பேசிக்கிற.. என்கிட்டேயே டைரக்ட்டா பேசு” என்றான் ஆராஷி..
“இ..இல்ல சார்..அது..அது வந்து” என்று அவன் இழுக்க..
“சோ..யுவார் மை ஷேடோ..ஆம் ஐ கரெக்ட்?” என்று நேரடியாக கேட்டான் ஆராஷி..
அதில் அவனை அதிர்ந்து பார்த்தவன்..
“நோ..சார்.. நான்லாம் யாருனா மிரட்டினாலே பயந்துடுவேன் இதுல ஷேடோ ஜாப்லாம் எங்க சார் பார்க்குறது.. செத்தே போயிடுவேன் சார்” என்று அவன் மறுக்க..
“ஓஓஓ…ஐ சீ..” என்றவன் அவன் கையில் இருந்த டீயை வாங்கி அதில் அவள் அன்று சாப்பிட்டதுபோல சால்ட் பிஸ்கட்டை முக்கி எடுத்து ஊதி சாப்பிட ஆரம்பித்தவன்..
“ம்ம்ம்..வெரி டேஸ்ட்டி..ஹாவ் இட் மேன்” என்று கூற ஹர்ஷத்தும் அருந்தினான்..
“அஷுக்கு ஆல்வேய்ஸ் குட் டேஸ்ட்ல?” என்று கேட்க..
“எஸ் சார்..” என்றான் ஹர்ஷத்..
அவனை பார்த்து அமைதியாக புன்னகைத்தவன் டீயை அருந்த அவனும் அருந்தினான்.. அங்கிருந்த கல் ஒன்றின் மேல் அமர்ந்தவன் பின்புறம் இருந்த சுவற்றில் சாய்ந்தபடி எதிரே தெரியும் பச்சை பசேலென இருக்கும் மரங்களையும் நீல வண்ணமாய் மிளிரும் மேகத்தையும் ரசனையோடு பார்த்தான்.. தன் மொபைலை எடுத்து அதில் இன்று நடந்த வீடியோ ரெக்கார்டிங்கை எடுத்து பார்க்க முதலில் ரசனையாய் தன்னை பார்த்த விழிகள் தான் பார்ப்பதை கண்டுகொண்டதும் அதிர்ந்து தவறு செய்த சிறு பிள்ளைபோல் முகத்தை மாற்றி பேசி தப்பித்து ஓடியதை பார்த்தவன் மனம் அவ்வளவு மகிழ்ந்தது..
‘சோ..அப்போ நீ என்னை பார்த்துட்டு தான் இருந்து இருக்க.. நான் உன்ன பார்க்ககூடாதுனு ஆடியோ கான்பரன்ஸ்ஸா மாத்தி இருக்க.. ஆனா அரூ பேபியால நான் உன்ன இன்னைக்கு பார்த்துட்டேன் பேபிகேர்ள்.. ஹவ் ஸ்வீட் யூ ஆர்..’ என்று அவளோடு மனதோடு பேசியவன் அவளது அந்த எக்ஸ்பிரஷ்ஷனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதை தன் மொபைலின் வால்பேப்பராக மாற்றினான்..
அதையே பார்த்தபடி வானத்தை நிமிர்ந்து பார்த்தவனை மேதா…மேலிருந்து அவனது முகம் நோக்கி குனிந்து அவனது நெற்றியில் முத்தமிடுவது போல் தோன்றியது அவனுக்கு..
(டிரான்ஸ்லேட்டட்)
“ஐ மிஸ்யூ சோ மச் பேபி கேர்ள்..உன்ன ரொம்ப லவ் பண்ண வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. என்னை ரொம்ப தேட வைக்காதடி..” என்று அவன் வாய்விட்டு புலம்ப அதை பக்கத்தில் இருந்த ஹர்ஷத் கேட்டு வருந்தி நின்றான்.. அதை பார்த்துவிட்டவன்
“வாட் ஹர்ஷத் யூ திங்க் ஐயம் மேட்” என்று கேட்க.. அதிர்ந்தவன்
“ஐயோ..நோ..சார்..நீங்க இங்க அவங்களுக்காக வெயிட் பன்றீங்க..உங்களுக்குள்ள லவ் இன்னும் இருக்கா இல்லையானே தெரியல? ஒரு மீட்டிங், டேட்டிங், சாட்டிங் ஒரே ஒரு ஹக் கிஸ் எதுவுமே உங்களுக்கு நடுவுல இல்ல..சப்போஸ் அவங்க வேற யாருக்காவது ஓகே சொல்லிட்டா? அப்போ நீங்க என்ன செய்வீங்க? அதை யோசிச்சுதான் கஷ்டமா இருக்கு சார்” என்றான் ஹர்ஷத்..
அவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சி தடைபட்டு வருத்தத்தை மறைத்த புன்னகை ஒன்றை வீசியவனை பார்த்து பதறிய ஹர்ஷத்..
“ஐயம் சாரி சார் இஃப் ஐ ஹர்ட் யூ” என்றான்..
“அதெல்லாம் ஒன்றுமில்லை ஹர்ஷத்.. உனக்கு ஒன்னு சொல்லவா? லவ்னா மீட்டிங், சாட்டிங், டேட்டிங், ஹக், கிஸ் இதுதான்னு இல்ல..நமக்கு புடிச்சவங்க பக்கத்துல இருந்தாலும் சரி தூரமா இருந்தாலும் சரி அவங்க நினைவோட வாழுறது.. நான் லவ் பண்றேன் அவ என்ன திரும்ப லவ் பண்ணியே ஆகனும்னு நான் எப்பவும் நினைக்கல.. என் வாழ்க்கை அவ இல்லாம ஃபுல்பில் ஆகாது.. அதுக்காக அவள வற்புறுத்தி வாழவைக்கமாட்டேன்..
நான் மனசுவெச்சா யார் ஹெல்ப்பும் இல்லாம அவள உடனே கண்டுபிடிக்க முடியும்.. பட் ஐ கான்ட் டூ தட்.. அவ இருக்குற இடம் தெரிஞ்சாலும் போய் அவள டார்ச்சர் பண்ண மாட்டேன்.. தள்ளி நின்னு அவள பார்ப்பேன்.. அவளுக்கா எப்போ மனசு மாறுமோ வெயிட் பண்ணுவேன்.. சப்போஸ் அவ வேற யாரையும் விரும்பினா..” என்று பெருமூச்சு விட்டவன்..
“அவளோட நினைவுகளோடேயே வாழ்ந்துப்பேன்.. நினைச்சுக்கிட்டே வாழுறதும் லவ்தான் ஹர்ஷத்..அது உனக்கு சொன்னா புரியாது..இட்ஸ்ஸ கைன்ட் ஆஃப் ஃபீல்” என்றான்..
அவனது பேச்சை கேட்டவன் அசந்துபோய் நின்றான்..
“ஷெல் வீ மூவ்” என்று அவனை உலுக்க
“சாரி சார்.. போலாம்” என்றபடி கிளம்பினர் இருவரும்..
அதுவரை அவர்களின் பேச்சு புரியாவிட்டாலும் நோட்டமிட்டது ஒரு கும்பல் தூரமாய் நின்று..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *