அத்தியாயம் – 21
அன்று முழுவதும் வேலையில் கவனம் போகாததால் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்.. அவளை எதுவும் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டாள் மெடில்டா..
ஆனால் இரவு முழுவதும் அவளது நண்பன் திட்டியதையே எண்ணியவளுக்கு தூக்கம் வராததால் எழுந்து வெளியே பால்கனியில் சென்று நடந்தபடி அவன் பேசியதைதான் யோசித்தப்படி இருந்தாள்..
“சொல்றேனேனு தப்பா எடுத்துக்காத பேபி..உன் லவ் எவ்ளோ ட்ரூ லவ்னு எனக்கு தெரியும்.. ஏன்னா நான் உன் லவ்ல இருந்து பிரேக்அப் வரை ஏ ட்டூ இசட் எல்லாம் தெரிஞ்சவன்.. அவருக்கு இப்போ உன்மேல லவ் இருக்குனு நினைக்கிறேன் ஆனா அது உண்மையான லவ்வா? இல்ல நீதான் அவரோட ஸ்பான்சர் நீதான் ரெனி ஃபேஷன்ஸ் ஃபவுண்டர்னு தெரிஞ்சு அதுக்காக உன்ன லவ் பண்ற மாதிரி நடிக்கிறாரா? எனக்கு புரியலடா.. இத்தனை நாளா உன்மேல வெறுப்ப கோவத்தை காட்டினவரால எப்படி ஊருக்கு போனதும் உடனே லவ்னு வரமுடியும்? அவங்க அப்பா பார்த்த பொண்ண வேணாம்னு சொல்லிட்டு உன்னைதேடி வர காரணம் என்ன? உன் பணமா? அந்தஸ்தா? உனக்கு வேணா உன்னோட லவ் ஒருத்தரோட மட்டும் வந்து இருக்கலாம் ஆனா அவரு ஒரு ஆக்டர் சினிமால எத்தனை பேர்கிட்ட லவ் டையலாக் சொல்லி இருப்பாரு அதே தான் உன்கிட்டயும் சொல்ல போறாரு..இதுல எது உண்மைனு எப்படி தெரியும்.. ஆனா அவரு லவ்வ பார்த்தா உண்மை மாதிரி தான் இருக்கு..சப்போஸ் எல்லாமே நடிப்பா இருந்தா என்ன பண்ணுவ?..நீ வேற எல்லாரையும் ஈசியா நம்பிடுவ..உண்மையா பொய்யானு தெரியாத ஒருத்தருக்காக நீ உன்ன சுத்தி இருக்குற உண்மையானவங்கள இழந்துடாதே..அவ்வளவு தான் சொல்லுவேன்..” என்றபடி அவன் திட்டிவிட்டு வேறு பேசினான்..
நீண்ட நேரம் யோசனையோடு நடந்தவளுக்கு ஸ்பிரிங் சீசன் செட் ஆகாமல் காய்ச்சல் வந்துவிட்டது..
மறுநாள் கொஞ்சம் லேட்டாக எழுந்த மெடில்டா வீடு சுத்தம் செய்யாமல் இருப்பதை கண்டு யோசிக்கலானாள்..
லீவாக இருந்தாலும் வேலை இருந்தாலும் அதிகாலை எழுந்து முதலில் வீட்டை சுத்தம் செய்வதை தன் வேலையாக செய்யும் மேதா இன்று ஆளே காணோமே என்று..அவளது அறைக்கு சென்று கதவை தட்டியவள் திறக்காமல் இருக்கவே என்ன ஆயிற்று என்று பார்க்க பின் பக்கமாக சென்று பால்கனி பக்கம் சென்று ஜன்னலை நீக்க பார்க்க பால்கனி கதவு திறந்து இருந்ததை அப்போது தான் கண்டாள்..
உடனே உள்ளே திறந்துகொண்டு போனவளுக்கு தெரிந்தது தரையில் மயங்கியபடி படுத்திருந்த மேதஷ்வினி தான்..
ஓடிச்சென்று அவளை எழுப்ப அவளிடம் துளிகூட அசைவே இல்லை உடல் வேறு கொதித்தது..
“மேதா..வாட் ஹாப்பன்ட்..மேதா வேக் அப்” என்று அவளை உலுக்க அவளிடம் அசைவே இல்லை..
ஓடிச்சென்று கதவை திறந்து தனது மொபைலை எடுத்து ஆம்புலன்ஸ் க்கு ஃபோன் செய்தவள் உடனடியாக அவளை மருத்துவமனைக்கு தூக்கி சென்றாள்..
அங்கு அவளுக்கு மயக்கத்தை முதலில் போக்க முதலுதவி அனைத்தும் செய்யப்பட்டது.. பல்ஸ்ஸும் ரொம்ப இறங்கி இருந்ததால் அவளுக்கு வைத்தியம் வேக வேகமாக செய்யப்பட்டது..
அவளை பார்த்து பயந்து போன மெடில்டா என்ன செய்வது என புரியாமல் நின்றாள்..
அரைமணி நேரம் மருத்துவர்களை பாடாய் படுத்தியவள் பல்ஸ் நார்மல் ஆக ஆரம்பித்தது அதன்பின் தான் காய்ச்சலுக்கு மருந்து செலுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டாள்..
மெடில்டாவிடம் “அவங்க ரொம்ப நேரம் பனியில இருந்து இருக்காங்க.. அதுதான் இப்படி ஆகி இருக்கு.. ட்டூ டேய்ஸ் அப்சர்வேஷன்ல இருக்கட்டும் அப்புறமா டிஸ்சார்ஜ் பண்ணலாம்” என்று விட்டு செல்ல அன்று அவளது காதல் கதையை கேட்கலாம் என்று எண்ணிய மெடில்டாவை அவளுக்கு காவல் காக்க வைத்துவிட்டாள் மேதா..
அங்கோ இரவு முழுவதும் தூங்காமல் இருந்தவன் அப்போது தான் கண்ணயர மீண்டும் அதே கனவு மேதாவிற்கு ஏதோ ஆவது போல கண்டவன் அலறி அடித்து எழுந்து அமர்ந்தான்
மீண்டும் அதே கனவாக இருக்கிறதே என யோசித்தவன்
“அஷு.. நீ மட்டும் தான் என் லைஃப்னு இருக்கேன்..உனக்கு ஏதாவது ஒன்னுனா என்னால என்னையே மன்னிக்கமுடியாதுடி.. எங்க இருந்தாலும் என்கிட்ட வந்துடு பேபி” என்று தன்னவள் நினைவுகளோடு பேசியபடி அமர்ந்து இருந்தவன்.. இப்படியே இருந்தா அவளை கண்டுபிடிப்பது கடினம் என எண்ணியவன் அடுத்து அடுத்து செய்ய வேண்டியவைகளை பட்டியலிட்டான்.. இனி அதன்படி நடக்கவேண்டும் என தனக்கு தானே உறுதி எடுத்துக்கொண்டான்..
மறுநாள் கண்விழித்த மேதாவை ஓடிவந்து பார்த்தாள் மெடில்டா..
“ஆர் யு ஓகே நவ் மேதா? ஐயம் சோ ஸ்கேர்ட் அபெளட் யூ” என்று அவள் பாட்டுக்கு புலம்ப..
லேசாக சிரித்த மேதா..
“ஐயம் ஃபைன் மெடில்டா.. டோன்ட் வொர்ரீ.. ஷ..ஷர்மாகிட்ட மட்டும் சொல்லிடாதே” என்று அவள் கூற..
திருதிருவென முழித்தாள் மெடில்டா..
“பட் ஐ டோல்ட் ஹிம் ஆல்ரெடி” என்று கூற ஐயோ என மேலே பார்த்தாள் மேதா..
அதற்குள் மெடில்டா வின் மொபைல் ஒலிக்க எடுத்து பேசினாள் அவள்..மேதா கண்விழித்ததையும் இப்போது தான் பேசினாள் என்பதையும் கூற
“ஓகே அவளை பார்த்துக்க நான் ஆள் அனுப்புறேன்.. இன்னைக்கு உனக்கு லீவ் தானே..ஆஃப்டர் நூன் வரை நீ பார்த்துக்க அதுக்குள்ள ஆள் வந்துடுவாங்க..அவங்க வந்து உங்க ரெண்டு பேரையும் பார்த்துப்பாங்க..கேர்ஃபுல்லா இரு மெடி” என்று பேசிக்கொண்டு இருக்க அவனது அருகில்..
“வாட் ஹாப்பன் மேன் எனி இஷ்யூ?” என்ற குரல் கேட்க..
“நத்திங் சார்..சம் பர்சனல் கால்..” என்றுவிட்டு கட் செய்துவிட்டான்..
“எங்கேயாவது என்னே பேச விடுறானா பாரு? அவனே கொஸ்டின் பன்றான் அவனே ஆன்சர் பன்றான் வெக்குறான்..நேத்திலே இருந்து இவன் டார்ச்சர் தாங்கலே” என்று கோவமாய் பேசினாள் அதை பார்த்த மேதாவிற்கு சிரிப்பு வந்தது.. அவளை பார்த்தவள் கோவமாய்..
“டோன்ட் லாஃப் பேபி..ஐ வில் கில் யூ..எவ்ளோ பயம் பன்னிட்டே நீ.. நீ கான்சியஸ் வந்தோ அப்ரோதான் எனக்கு ப்ரீத்திங்கே வந்துச்சு..காட்ஸ் க்ரேஸ்” என்று கூறியவள் அவளுக்கு சாப்பிட ஆர்டர் செய்துவிட்டு அவளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தாள்..
அன்று மதியத்திற்கு முன்னமே அவளது நண்பன் ஏற்பாடு செய்த கண்மணி என்பவர் வந்து சேர்ந்தார் மேதாவை கவனித்துக்கொள்ள..அவர் ஏற்கனவே மேதாவை பார்த்துக்கொண்டவர் அவள் ஜப்பானில் படிக்கும்போது.. அதனால் அவருக்கு அவளது உணவு பழக்கவழக்கம் பற்றி தெரியும் என்பதால் அவரையே ஏற்பாடு செய்து இருந்தான் அவளது நண்பன்.. அவர் வந்ததும் தான் செய்து எடுத்து வந்த உணவை மெடில்டாவை சாப்பிட வைத்து அவளை ஓய்வெடுக்க சொல்லி விட்டு அவர் பார்த்துக்கொண்டார் மேதாவை..
தன்னை சுற்றி இருக்கும் அனைவரும் நல்லவர்களாக படைத்த இறைவன் இவர்கள் அனைவரோடும் ஒன்றாக இருக்கவிடாமல் தன்னை இங்கும் அங்கும் ஓடவிடுகிறானே என எண்ணி வருந்தியவள் மருந்தின் காரணமாக உறங்கி விட்டாள்..
அங்கு கனவு கண்டு எழுந்தவனோ உறக்கத்தை தொலைத்தவனான்..அடுத்து என்ன செய்யவேண்டும் என முடிவு செய்தவன் தன்னவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என கடவுளை ப்ரார்த்தனை செய்தபடி இருந்தான்..
அவள் அவனுக்காக செய்தவற்றை எண்ணியவனுக்கு அவளது காதலும் பாசமும் புரிய அதை ஊதாசீனப்படுத்திய தன்னை எண்ணி வருத்தமும் வந்தது இருந்தும் நடந்தவற்றல மாற்ற முடியாதே.. இனி இதெல்லாம் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என மனதில் குறித்துக்கொண்டான்..
இரண்டு நாட்கள் டாக்டர் கண்காணிப்பில் இருந்தவள் சரியானதும் தான் அனுப்பினர் மருத்துவர்கள்.. அவளை ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு வேலைக்கு சென்றாள் மெடில்டா.. அடிக்கடி ஃபோன் செய்து பேசினான் அவளது நண்பன்..
கண்மணியும் அவளல நன்றாக பார்த்துக்கொள்ள நன்றாக தேறிவிட்டாள் மேதா..
ஒரு வாரகாலம் ரெஸ்ட் எடுத்தவள் மீண்டும் வேலைக்கு செல்ல கண்மணியை கிளம்ப சொல்ல..
அவரோ தான் இங்குதான் இருக்கவேண்டும் என்று அவளது நண்பன் உத்தரவு நான் போனா என் வேலையும் போய்டும்னு சொல்லிட்டாரு தம்பி என்று விட்டு அவளுடனேயே தங்க ஆரம்பித்து விட்டார்..
தன்னை சுற்றி இருக்கும் அத்தனைபேரும் தன்மேல் இவ்வளவு பாசத்தை காட்டுவதற்கு தான் தகுதியானவள்தானா என்று எண்ணி கவலையடைந்தவள் வேலைக்கு புறப்பட்டாள்.. மீண்டும் இன்று ஆடியோ கான்பரன்ஸ் இருப்பதால் அதை ஆடியோ கான்பரன்ஸ்ஸாக மட்டுமே அவள் நடத்தினாள்.. யாரையும் பேசவிடாமல் அவளே அனைத்தையும் பேசிவிட்டு அன்று அவசரமாக போனதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டு வேறு ஏதாவது தேவையெனில் தனக்கு மெயில் அனுப்பும்படி சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்..
இன்று மீட்டிங்கிற்கு ரியோட்டோ எடுத்து கொடுத்த உடையைதான் அணிந்து கொண்டு வந்தாள் தேஜு வரும்போதே தன் நண்பர்கள் மேல் கோவமாய் வந்தவள் அவர்கள் அவளது அழகை கண்டு மயங்கி விழுவது போல் நடிக்க அதில் கோவம் மறந்து சிரித்துவிட்டாள்..
அதன்பின் மீட்டிங் முடிந்து இருவரையும் பிரஸ்ஸுக்கு அறிமுகம் செய்து வைத்தான் நிதின்.. ரியோட்டோ தான் ஶ்ரீ குரூப்ஸின் மூத்த மருமகன் தேஜுஶ்ரீ தான் முதல் வாரிசு என்று அறிந்தவர்களின் பொறாமை குணம் அதிகம் ஆனது.. அவர்களை ஏற்றுக்கொண்ட மற்றவர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.. ஆனாலும் இரண்டாவது வாரிசின் பேச்சை இழுக்கவும் தயங்கவில்லை.. அவளையாவது இந்தியாகாரனா பார்த்து லவ் பண்ண சொல்லுங்க என்ற ஏச்சு பேச்சுகளும் நின்ற பாடில்லை..
அந்த வாரம் முழுக்க ஶ்ரீ குரூப்ஸ்தான் பெரும் நியூஸாய் இருந்தது அனைவருக்கும்..