Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 22

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 22

அத்தியாயம் – 22
ஒருவாரம் கழிந்த நிலையில் ரியோட்டோவிற்கு ஃபோன் வந்தது.. எடுத்தவன் யாரென்று தெரியாத பெயரில் வந்ததால் முதலில் தயங்கியவன் பின்பு எடுத்தான்..
“ஹலோ” என்று கூற..
“கங்கிராட்ஸ் மிஸ்டர்.ரியோட்டோ ஷிமிஜு..” என்ற பெண் குரல் கேட்டு யோசித்தான் ரியோட்டோ ஆனால் அது பழக்கப்பட்ட குரல் போல் தோன்ற யாரென்று கேட்காமலே பேச்சை தொடர்ந்தான்..
(டிரான்ஸ்லேட்டட்)
“தேங்க்யூ மேம்..பட் இந்த வாழ்த்து எதுக்காகனு தெரிஞ்சுக்கலாமா?” என்றான் அமைதியாக..
“உங்களுடைய குடும்ப வாழ்க்கைக்காக” என்று மறுமுனையில் கூற..
“ஓஓ..ஐ..சீ..தேங்க்யூ மை டியர் ஏஞ்சல்” என்று கூற தன்னை கண்டுகொண்டானே என்று எண்ணியவள்..
கெத்தை விடாமல்..
“இன்னுமா நான் யாருனு கண்டுபிடிக்கல நீங்க? வெரி பேட்” என்றாள்..
“ஐ நெவர் ஃபர்காட் மை ஏஞ்சல் பேபி..மை ப்ரிஷியஸ் பர்ஸ்ட் பேபி” என்று ரியோட்டோ கூற அவன் பேபி பேபி என்றதில் யாரிடம் கடலை போடுகிறான் என அவன் பின்னே கோவமாய் வந்து நின்றாள் தேஜு..
ஆனால் அவளை பார்க்காதவன் அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டு இருந்தான்..
“என் லைஃப்லயே எனக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம் நீ பேபி.. உன்ன போய் மறப்பேனா?” என்று கூறியதை கேட்டவளுக்கு கோவம் ஒருபுறம் வந்தாலும் வருத்தமும் வர வந்த வழியே திரும்பி சென்று ஹாலில் அமர்ந்துவிட்டாள்.. ஆனாலும் அவன்மேல் உயிராய் இருந்த காதல் கொண்ட மனது வேறு யாரையோ அவன் பேபி என்று அழைத்து பேசுவது கோவத்தையே கொடுத்தது..
“பரவாயில்லையே கண்டுபிடிச்சுட்டீங்க.. மறந்துட்டீங்கனு நினைச்சேன்..” என்று அவள் கேட்க..
“நான் மறக்கல நீதான் மறந்துட்ட.. நம்பரைகூட மாத்திட்ட.. நீதான் மேதானு தெரிஞ்சதும் நான் எத்தனை தடவை அந்த நம்பருக்கு ட்ரை பண்ணேன் தெரியுமா? அப்புறம்தான் மெயில் போட்டேன் உனக்காகவே நம்பர மாத்தாம வெச்சுட்டு இருக்கேன் பேபி.. நீ ஏன் என்கிட்ட உன் உண்மையான பேர் சொல்லல பேபி?” என்று அவன் வருத்தமாய் கேட்க..
“நானும் உங்கள மறக்கலை சார்.. சா..சாரி..மாமா..என்னால உங்களுக்கும் அவருக்கும் ஏதாவது மனஸ்தாபம் ஆகிடப்போகுதுனு தான் விலகி வந்தேன்.. ஆனா இப்படி ஒரு டிவிஸ்ட் நானே எதிர்ப்பார்க்காதது.. நீங்களே என் அக்காவோட ஹஸ்பண்ட்டா வருவீங்கனு நான் நினைச்சு கூட பார்க்கல..” என்று மேதா கூற..
“நானும் அதை எதிர்ப்பார்க்கல மேதா பேபி.. தேஜு ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவனு மட்டும் தான் தெரியும் ஆனா உன்னோட அக்காவா இருப்பானு நான் எதிர்ப்பார்க்கவே இல்ல.. ஆனா இதுவும் நல்லதுக்குத்தான்.. நீயும் என்கூடவே இருப்பல்ல..” என்று அவன் கேட்க..
அவளிடம் மெளனமே..
அதை புரிந்தவன் அவளை சங்கடப்படுத்த விரும்பாமல்
“உன்ன எப்பயாவது பார்க்க மாட்டேனானு நினைப்பேன் பேபி அதைத்தான் சொன்னேன்..சரி எங்கே இருக்கனு நான் கேட்கமாட்டேன் எப்போ வர்ற எங்களை பார்க்க?” என்று அவன் கேட்க.. தன்னை புரிந்து பேசும் தன் அக்காளின் கணவன் அப்போது தன்னிடம் பழகிய அதே டான்ஸ் மாஸ்டர் ரியோதான் என்று உணர்ந்தவள்..
“ஆஸ் சூன் ஆஸ் பாஸிபில் மாமா..வேலை ஜாஸ்தி அதான் என்னால பேசக்கூட முடியல..அதான் இப்போ ஃபோன் பண்றேன்..கோச்சுக்காதீங்க” என்று அவள் கூற..
“தட்ஸ் நாட் ஏ பிக் இஷ்யூ பேபி..சீக்கிரம் உன்ன பார்க்கனும் அவ்ளோதான்” என்று அவன் கூற..
“சீக்கிரமே வர்றேன்..என் அக்கா லைஃப் இப்படியே இருக்குமோனு பயந்துட்டு இருந்தேன்.. ஆனா இப்போ அவள ஃபேமிலியோட பார்க்க வராமல் இருப்பேனா? அதும் சாச்சிய நான் ரொம்ப மிஸ் பன்றேனே?” என்று அவள் கூற..
“அந்த ஃபேமிலில நீயும் ஒருத்திங்கிறத மறக்காதே பேபி டால்..உனக்காக காத்திட்டு இருக்குற ஜீவனையும் மறந்திடாதே” என்றான் அவன் பங்குக்கு..
இருவருமே அவனுக்கு முக்கியமானவர்கள் ஆயிற்றே.. அதனால் இருவருக்கும் பொதுவாகவே பேசினான் அவன்.. அவனது பேச்சில் அவள் மெளனமாகிவிட..
“விலகி விலகி போறதுல ரெண்டு பேருக்கும் மனசு கஷ்டம்தான் ஜாஸ்தி ஆகுது கண்ணம்மா.. சேருங்க இல்லனா பிரிஞ்சுடுங்க ஆனா அதை நேர்ல பார்த்து பேசி முடிவு செய்ங்க..இதெல்லாம் நடக்கனும்னு இருந்தது நடந்துடுச்சு அதையே புடிச்சுட்டு விலகி போறது சரியா தோணலடா..
ரெண்டு பேரும் எனக்கு முக்கியம் அதனால தான் நான் தலையிடலை இதுவரைக்கும்.. ஆனா எனக்கு முக்கியமான நீங்க பிரிஞ்சு இருக்குறது மனசுக்கு கஷ்டமா இருக்குடா..அதை சொல்லாம இருக்கவும் முடியலடா..அதான் சொன்னேன் முடிவு உங்ககிட்ட..” என்றவன் வேறு வேண்டும் விஷயம் பேச ஆரம்பித்து விட்டான்..
ஆனால் அவளால்தான் சட்டென அவனது பேச்சை ஒதுக்கிவிட்டு வேறு பேச முடியவில்லை அதனால் அவனிடம் கேட்டுவிட்டாள்..
“ம்ம்..மா..மாமா..ஒ..ஒன்னு கேட்கனும்” என்று கூற..
“சொல்லு பேபி” என்று அவன் கேட்க..சிறிது தயங்கியவள்..
“அ..அவரு நி..நிஜமாவே என்னை லவ் பன்றாரா? இ..இல்ல நா..நான்தான் ஃபவுண்டர்னு தெரிஞ்சு என்கிட்ட நல்லவிதமா நடந்துக்க பார்க்கிறாரா?” என்று ஒரு வழியாக கேட்டு விட்டாள்..
அவளது கேள்வியில் முதலில் திகைத்தவன் இதில் அவளுக்கு தெளிவு வேண்டும் என்றபடி யோசித்தவன்..
“மேதா பேபிய ஆரா அவனை வாழவெச்ச ஜிம்மியோட அம்மாவாதான் தேடுறான் அவனோட ஸ்பான்சர் ஶ்ரீ குரூப்ஸ் ஓனர் அண்ட் ஃபவுண்டரா தேடலை..” என்றான் சுருக்கமாக..
ராமன் அனுமனை எதிர்பார்த்திருக்கும் சமயம் தூது வந்ததவன் கண்டேன் சீதையை என்று சுருக்கமாக விளக்கம் கொடுத்ததை போல இன்று சீதைக்கு ராமனின் மனதை புரியவைத்தான் அனுமனாய் நின்ற ரியோட்டோ.. அவளது மனவலிக்கு ஆறுதலாய் அவனது வார்த்தல நிறைந்து இருந்ததை அவன் அறியவில்லை.. ஆனாலும் அவளது மனது அவனை தேடி ஓடிவர மட்டும் தயக்கம் கொள்கிறதே அது ஏன் என்றும் அவளுக்கு புரியவில்லை..
“ஜி..ஜிம்மி எப்படி இருக்கா? என்னை நியாபகம் இருக்கா அவளுக்கு?” என்று கேட்க..
“அவ உன்ன எப்போ மறந்தா நியாபகம் வெச்சுக்க..ஆராவ விட அதிகமா அவதான் உன்ன தேடுறா?” என்று அவன் பதிலளிக்க..
அவளிடம் அமைதியே..
கூடவே அவனும் அவளிடம் கேள்வியை வைத்தான்..
“எனக்கும் ஒரு கேள்வி இருக்கு பேபி..நீ அவனை நிறைய பொண்ணுங்களோட பார்த்து இருக்க சேர்த்து வெச்சு பேசுறத கேட்டு இருக்க ஏன் அப்பா அவனுக்காக பார்த்த பொண்ண மீட் பண்ணகூட நீதான் அரேஞ்ச் பண்ண.. ஆனா உனக்கு அவன்மேல கோவமோ சந்தேகமோ இருக்கா?” என்று கேட்க.. ஒரு சிறு புன்னகை புரிந்தவள்..
“அவர் எல்லா பொண்ணுங்க கூடவும் நடிக்கலாம் பேசலாம் பழகலாம் அதெல்லாம் நானே பார்த்தும் இருக்கேன் ஆனா அதுல எனக்கு கோவமோ எரிச்சலோ.. சந்தேகமோ வந்ததே இல்ல.. வரவும் வராது.. அன்னைக்கு மீட்டிங் ல பார்த்தேன் அவரோட கண்ணுல எனக்கான தேடலை.. அது எனக்கு மட்டுமானதுனு தெரியும்.. ஆனாலும் எனக்கு என்னனா என்னை அவரு அவ்ளோ வெறுத்தாரு இப்போ லவ் பன்றேன்னு வந்து நிக்குறாரு அதுதான் என் கவலையா இருந்தது..இந்த திடீர் சேன்ஞ் எல்லாருக்கும் ஒரு கேள்விய வரத்தானே செய்யும்..?” என்று மனதை மறைக்காமல் அவனிடம் கூறிவிட்டாள்..
அவளது நிலையை உணர்ந்தவன்..
“சீ..மீரா” என்றவன் நிறுத்தி
“சாரி மேதா..இதுதானே ஒரிஜினல் நேம்?” என்று கேட்க..
“மேதஷ்வினி ஶ்ரீ” என்று கூறினாள் மேதா..
“என்கிட்ட கூட உன் ஒரிஜினல் நேம் மறைச்சுட்டல்ல?” என்று அவன் கேட்க..
“ஐயம் சாரி மாமா..அப்போ என்னோட சூழ்நிலை நான் பேரை மாத்தி சொல்ல வேண்டி இருந்தது..மன்னிச்சுக்கோங்க” என்று அவள் மன்னிப்பு கேட்க..
“ம்ம்ம்.. பரவாயில்லை விடு பேபி.. உனக்கு தோணுறதுலாம் கரெக்ட் தான் ஆனாலும் நீ அவனோட நிலைமையையும் கொஞ்சம் யோசிச்சு பாரேன்..நீ அவனவிட்டு போனதுக்கு ஏதோ ஒரு ரீசன் இருக்குனு அவனுக்கு தோணுது அதுக்கு அவனோட சேன்ஞ்ச் ஓவர்தான் காரணம்னு நீ சொன்னாகூட அவன் நம்ப மாட்டான் ஏன் நானே நம்பமாட்டேன்..ஏன்னா உன்னபத்தி நல்லா தெரியுமோ இல்லையோ? ஆனால் உன் லவ்வ பத்தி நல்லா தெரிஞ்சவன்.. அவனுக்காக நீ என்னவெல்லாம் செஞ்சனு பக்கத்தில இருந்து பார்த்து இருக்கேன்.. அதனால நீ சொல்ற காரணம் நாட் அக்செப்டட் பேபிமா.. உண்மைய சொல்லு” என்று அவன் கேட்க அவளிடம் அப்போதும் மெளனமே..
ஒரு பெருமூச்சு விட்டவன்..
“இப்படி அமைதியா இருந்தா எல்லாத்துக்கும் பதில் ஆகாது மீரா சாரி மேதா..” என்று அவன் கொஞ்சம் கோவமாக கேட்க
“ரீசன் இருக்கு மாமா.. ஆனா அதை யார்க்கிட்டயும் சொல்லுற அளவுக்கு நான் இல்ல.. மன்னிச்சிடுங்க..அண்ட் உங்க தம்பிகிட்ட சொல்லி அவர நல்ல வாழ்க்கையை அமைச்சுக்க சொல்லுங்க மாமா.. எனக்காக பேசுங்க ப்ளீஸ்..” என்று அவள் பதில் கூற..
“நான் பேசுறேன் பேபி உனக்காக ஆனா அப்போ உனக்கு ஃபோன் பண்ணனும் ஏன்னா அவன் சொல்ற பதில் நீயே கேட்டுக்க நான் நாளைக்கே பேசுறேன்..பட் உன் நம்பர் கொடு..” என்று அவன் கூற..
“ஏன் நம்பர் வெச்சு என்னை கண்டுபிடிக்க ப்ளானா?” என்று கேட்க லேசாய் சிரித்தவன்..
“பேபி உனக்கு உன் ஆள பத்தி தெரியல.. நீ யாருனு தெரியாத அப்போவே அவன் உன்ன அவ்ளோ தேடினான் தெரிஞ்ச அப்புறம்தானா தேடாம இருப்பான்..அவன் இந்நேரம் கண்டுபிடிச்சு இருப்பான்.. ஆனா உன்னை வந்து வீணா தொந்தரவு பண்ணிடகூடாதுனு தான் அமைதியா இருக்கான்.. உன் மனசை காயப்படுத்தினதுக்கு அவன் விலகி நின்னு தண்டனை அனுபவிக்கிறான்.. நீயா அவனை ஏத்துக்குற வரை அவன் விலகிதான் நிற்பான்” என்று ரியோட்டோ கூற அமைதியாய் கேட்டவளுக்கு நியாபகம் வர..
“ப்ரஸ்மீட் அண்ட் ப்ரண்ட்ஸ் கெட் டூ கெதர் அரேஞ்ச் பண்ணீங்களே எல்லாரும் என்ன சொன்னாங்க?” என்று அவள் கேட்க..பேச்சை மாற்றுகிறாள் என்று புரிந்தும் மேலும் ஏதும் பேசி அவளது மனதை காயப்படுத்தாமல் அவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னான்.. அன்றைய தினம் தான் தேர்ந்தெடுத்த உடையைதான் தேஜுவும் அவனது மகளும் அணிந்திருந்தனர் என்று பேசி மகிழ்ந்தான்..
“நீங்க சொல்றதை வெச்சு பார்த்தா அக்கா உங்கள மன்னிச்சு ஏத்துக்க ஆரம்பிச்சுட்டா போலயே?” என்று கூற..
“மே பி.. ஆனா அவளோட கோவமும் நியாயம்தானே பேபி.. அதனால நான் அவ மனசு மாறுற வரை வெயிட் பண்ணுவேன்.. எனக்கு கிடைச்ச பொக்கிஷத்தை திரும்ப இழக்கவே கூடாதுனு முடிவா இருக்கேன்..என்ன உன்னையும் பார்த்துட்டா எனக்கு கொஞ்சம் பெரிய பாரம் போன மாதிரி இருக்கும்” என்று அவன் பேச..
“ட்ரை பன்றேன் மாமா..சீக்கிரமே வர்றேன்..” என்று கூற..
“அடுத்த மாசம் ஆராவோட ப்ரோகிராம் வேற இருக்கு.. அதுக்கு வேற ஜப்பான் போகணும்னு சொன்னான்.. பிஸினஸ் ரீதியா எல்லாரையும் இன்வைட் பண்ண போறதா சொன்னான்.. உன்னையும் இன்வைட் பண்ணுவான்” என்று கூற..
எங்கே எப்போது என்ற தகவல்களை பெற்றுக்கொண்டு ஃபோனை வைத்தாள்.. அவனுக்கு தெரியும் அவள் கண்டிப்பாக வருவாள் என்று அதனால் தான் அவளுக்கு விவரங்களை சொன்னான்..
ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் அவனது உயிருக்கு ஆபத்து என்று அவள் நம்பதகுந்த இடத்திருந்துவந்த செய்தியை கேட்டு அவளுக்கு உயிரே போய்விட்டது..
அவனை காப்பாற்ற வருவாளா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *