அத்தியாயம் – 2
கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் தூங்கியபின் எழுந்த ஆரோஷி கிளம்பி ரெடியாகி மாஸ்க்கையும் தலையில் கருப்பு நிற கேப் மாட்ட அவனது அறைக்குள் நுழைந்தான்
ரியோட்டோ..
“எங்க கிளம்பிட்ட ராஷி?
என்று ஜாப்பனீஸில் கேட்க..
“நான் இங்கே ஒரு ஆபீஸ்ஸ வாங்கலாம்னு இருக்கேன்னா..அதான் அதை பார்த்துட்டு அப்படியே நியூ கொலாபுரேஷன் நேம் செலக்ஷன் அண்ட் நாம தங்குறதுக்கு ஒரு வீடு வாங்குறதுக்கு ரிஜிஸ்டிரேஷன் இருக்கு..சோ எல்லாம் பார்க்கனும்..அண்ட் இன்னைக்கு டின்னர் மினிஸ்டரோட இருக்கு..அதோட ஃபார்மாலிட்டீஸ்லாம் பார்க்கனும்” என்று பதில் கூறியவன் கிளம்ப பார்க்க..
“நானும் வர்றேனே..ஃபோர் அடிக்குது..” என்று கேட்க..
“ஓகே..வித் ஃப்ளஷர்..ரெடியாகிட்டு வா..நான் கீழே வெயிட் பண்றேன்” என்றுவிட்டு அவன் வெளியே வந்தவன் ரியோட்டோ கிளம்பி வருவதற்காக கீழே லாபியில் வந்து வெயிட் பண்ண ஆரம்பிக்க அப்போது உள்ளே நுழைந்தான் சாஹித்யன்..
அவனை பார்த்ததும் உற்சாகமாய் குரல் கொடுத்தான் ஆராஷி..
“ஹேய்..மேன்..சா..சாஹு.. ஹவ் ஆர் யூ மேன்?” என்று கேட்க..
‘இவன் எதுக்கு நம்மகிட்ட பேசுறான்’ என்று உள்ளே எண்ணினாலும் வெளியே சிரித்தபடி
“ஹலோ சார்..ஐயம் ஃபைன்..வாட் அபெளட் யூ சார்..வெல்கம் இந்தியா” என்று கூற மறக்கவில்லை..
“ஓஓ..தேங்க்யூ மேன்..ஐயம் ஃபைன் ஐ வாண்ட் ட்டூ மீட் யுவர் CEO நிதின்.. கேன் யு அரேஞ்ச் ஆன் அப்பாயின்மெண்ட் வித் ஹிம்” என்று கேட்க..
இதுக்குத்தான் இவ்வளவு பேசினானா என்று எண்ணிய சாஹித்யன்
“சாரி சார் யு கேன் மீட் ஹிம் இன் டின்னர் அண்ட் inauguration function பிகாஸ் ஹிஸ் ஆல் அப்பாயின்மெண்ட் ஆர் பிஸி சோ நவ் யு கேன்னாட் மீட் ட்டூ ஹிம்” என்று கூற
இட்ஸ் ஓகே..என்பது போல் தோளை குலுக்கியவன்..
“ஐ க்நோ வேர் ஈஸ் ஷி.. தட்ஸ் ஓய் ஐ ஆஸ்க் ட்டூ வாண்ட் ட்டூ மீட் ஹிம்” என்று கூற அவனது வார்த்தையில் முதலில் அதிர்ந்து அவனை பார்த்தவன் பின் அவனது திமிரான முகத்தில் எதையும் யூகிக்க முடியாமல்..
“சாரி எனிதிங் எல்ஸ் யு கேன் டாக் வித் ஹிம் பர்சனலி இன் inauguration சார்..ஐ ஹாவ் சம் இம்பார்டண்ட் வொர்க் சோ..” என்று இழுக்க..
“ஓகே..கேரி ஆன்” என்றதும் விட்டால் போதும் என்று ஓடிவிட்டான்..
போகும்முன்
“எப்படித்தான் அவ இவன சமாளிச்சாளோ?” என்று சத்தமாகவே புலம்பியபடி சென்றான் அவன்..புன்னகை மாறாமல் அப்படியேதான் அமர்ந்திருந்தான் ஆராஷி(நம்மாளுக்கு புரிஞ்சாதானே)
அதற்குள் ரியோட்டோ வர அடுத்தடுத்த வேலைகள் அவர்களை இழுத்துக்கொள்ள வீட்டை பார்த்த ரியோட்டோ
“சூப்பர் ப்ளான்” என்றான் அவனை பார்த்தவன்..
“எந்த ப்ளான சொல்ற?” என்று கேட்க
“நீ எதை நினைக்கிறியோ அந்த ப்ளான் தான்” என்றுவிட்டு புன்னகையோடு கடக்க இருவர் புன்னகையிலும் இருக்கும் வலி ஒருவர் மற்றவர் அறியாமல் மறைக்க முயன்றனர் ஆனால் முடியாமல் ஒருவர்மேல் ஒருவர் தோளில் கை போட்டு
“எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்” என்று கூறிக்கொண்டனர்.. மறுநாளே அவர்கள் அந்த வீட்டில் தங்குவதாக இருந்தது அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்தது..
இரவு மினிஸ்டர் உடன் இரவுவிருந்தில்..
பலத்த பாதுகாப்பு அரணோடு
அப்போது தான் மினிஸ்டர் அழைப்பின்பேரில் நிதின் வந்திருக்க ஆராஷியை பார்த்த நிதின் வரவேற்கும் விதமாக கைகுலுக்கி வரவேற்றான்.. ரியோட்டோவையும் வரவேற்க
‘இதே ரெஸ்பெக்ட் நாளைக்கு இருக்குமானு தெரியலையே’ என்று எண்ணியபடி அவரது வரவேற்பை ஏற்றான் ரியோட்டோ..
“என்ன நிதின் ஜப்பான்காரர் இந்தியாவுல அதும் ஸ்பான்ஸர் கம்பெனியோடவே தொழில் தொடங்க போறாரு ஏதாவது உள் சம்பந்தம் இருக்கா?” என்று மினிஸ்டர் கேட்க..
அதை ஆராஷிக்கு அவனது பி.ஏ மொழிபெயர்க்க அவனது முகம் கோவமாய் மாறியது இருந்தாலும் அதை காட்டிகொள்ளாமல் அமைதியாக நிதினை பார்க்க..
அவனை ஒரு பார்வை பார்த்த நிதின்
“அப்படியெல்லாம் எதுவும் இல்ல சார் எங்க அப்பாவோட ஆசை அதை நாங்க நிறைவேத்துறோம்.. ஃபவுண்டர் இல்லாம நீங்க மீட் அரேஞ்ச் பண்ணிட்டீங்க அதையே எப்படி சமாளிக்கனு தெரியாம இருக்கேன் இதுல என்னத்த?” என்று அவன் கூற..
எழுந்த ஆராஷி ரியோட்டோ விற்கு கண் காட்ட அவனும் எழுந்து கொண்டான்.
“ஓகே சார் வீ வில் மீட் டுமாரோ.. ஐ ஹாவ் சம் வொர்க்.. தேங்க்ஸ் ஃபார் திஸ் ஹாசம் டின்னர்..”
என்று மினிஸ்டரை பார்த்து கூற மினிஸ்டருக்கு உதறல் எடுத்துவிட்டது தான் ஒன்று கேட்க இவன் பாட்டுக்கு டீல் கேன்சல் பண்ணிட்டானா என்ன பன்றது பிரதமர் வரை பிரச்சினை போய் கெட்ட பேர் வருமே என்று பயந்தவர்..
“ஐயம் சாரி மிஸ்டர்.ஆராஷி ஐ ஜஸ்ட் ஆஸ்க் ஜோக் டோன்ட் டேக் இட் சீரியஸ் ப்ளீஸ் ஹாவ் யுவர் டின்னர்..டேய் பி.ஏ டிரான்ஸ்லேட் பண்ணுயா அவன் கோச்சுகிட்டு போய்ட போறான் அப்புறம் கான்ட்ராக்ட் கேன்சல் ஆனா என்னைதான் எண்ணெய் சட்டில போட்டு வறுப்பானுங்க” என்று கூற அவன் பி.ஏ டிரான்ஸ்லேட் செய்ய..
“தட்ஸ் நாட் ஏ பிக் இஷ்யூ சார்.. வீ ஹாவ் இம்பார்டண்ட் வொர்க் பிகாஸ் ஆஃப் டைம் அஜ்ஜஸ்ட்மெண்ட்ஸ் தட்ஸ் இட்..பட் டோண்ட் ரிப்பீட் இட்” என்று கூறிவிட்டு நிதினிடம் கை குலுக்க நீட்டினான்.. அவனும் கை குலுக்கி வழியனுப்ப அங்கிருந்து கோவமாய் புறப்பட்டான் ஆராஷி..
வழியில்..
“ஏன் இவ்ளோ கோவம் ரா?” ரியோட்டோ
“பின்ன அவர் என்ன பேச்சு பேசுறாரு? ஏதாவது கனெக்ஷனானு? எனக்குனே வருவாங்களா?” என்று கோவப்பட..
“இதுக்குலாம் நீ ரியாக்ட் பன்ற ஆளே இல்லையே ரா? இப்போ என்ன புதுசா?” என்று ரியோட்டோ கேட்க..
“அதெல்லாம் அப்போ..இப்போ இல்ல அண்ணா..யார்கூடவாச்சும் என்னை பேசினா அசிங்கமா இருக்கு..நான் அவளுக்கு மட்டும் தான் சொந்தமானவன்னு கத்தனும் போல இருக்கு..நமக்கு வேலை ஆகணுமேனு இதெல்லாம் அமைதியா போறேன் இல்லனா” என்று கூற.
“சரி டென்ஷன் ஆகாதேடா.. இப்போ வேற யார்கூடவும் உன்னை சேர்த்து வெச்சு பேசிடலல.. விடு சினிமா லைஃப்ல இதெல்லாம் சகஜம் இல்லையா?அப்படியே அவர் பேசினாலும் நிதின் சும்மா விடமாட்டார் கவலை படாதே”என்றான் ரியோட்டோ அவனை சமாதானம் படுத்தும் விதமாய்..
“அப்படித்தான் நானும் போகணும்னு நினைக்கிறேன் முடியலனா..நிதின் முன்னாடி எதுவும் பிரச்சினை ஆகிடகூடாதுனு தான் நான் கிளம்பிட்டேன்”
“உன்னோட கோல் என்ன அதை நோக்கி போ..இந்தமாதிரி தேவை இல்லாத விஷயத்தலாம் தலையில ஏத்திக்காதே.. அப்புறம் கஷ்டம்தான்”
“ம்ம்..சரினா” என்றுவிட்டு இருவரும் ஹோட்டல் ரூமிற்குள் செல்ல நாளைய நிகழ்வு இருவரது வாழ்வை எப்படி புரட்டி போடுமோ என்ற எண்ணம் பேரலையாய் மனதை அரிக்க தூக்கத்தை தொலைத்தான் ரியோட்டோ..
மினிஸ்டரோ ஆராஷியிடம் பருப்பு வேகவில்லை என்று நிதினிடம் தன் வேலையை காட்ட துவங்கினார்
“என்ன நிதின் சார் அந்தாளு செம்ம டென்ஷன் பார்ட்டி போல உங்களுக்கு செட் ஆவானா? எதுவும் இல்லனா இல்லனு சொல்ல வேண்டியது தானே அதை விட்டுட்டு இப்படி அசிங்கபடுத்துற மாதிரி கிளம்பி போறான்” என்று கேட்க..
“நாங்க என்ன சார் கதையா பேச போறோம்..பிஸினஸ்தானே அதுக்கு அவர் வேலை செஞ்சா போதும் செட் ஆகவேண்டிய அவசியம் இல்ல சார்…நாங்க உங்க ஃபேமிலி பத்தி பேசினா நீங்க ஏத்துப்பீங்களா? இல்லல அப்போ எங்க ஃபேமிலி பத்தி நீங்க பேசாதீங்க..இன்னொரு முறை இப்படி பேசினா அப்புறம் நான் உங்களுக்கு கொடுக்குற சப்போர்ட்ட கேன்சல் பன்ன வேண்டி இருக்கும்” என்று சாதாரணமாக கூற அதிர்ந்து போனார் மினிஸ்டர்..
“என்ன நிதின் சார் கிண்டலா கூட பேசக்கூடாதுனு சொல்றீங்க? சரி விடுங்க எனக்கு எதுக்கு உங்க குடும்ப விஷயம்… நான் நாளைக்கு மீட் பன்றேன் சார் வர்றேன்” என்று கிளம்பியவர்
‘ச்சே நாய் வேஷம் போட்டா குரைக்கனுங்கிற மாதிரி அரசியல்வாதி வேஷம் போட்டா அட்ஜஸ்ட் பண்ண வேண்டி இருக்கேனு’ மனதோடு புலம்பியபடி அறுப்பட்ட மூக்கோடு கிளம்பினார் மினிஸ்டர்..
மறுநாள் சென்னை மற்றும் ஊட்டியே கலை கட்டியது..
இந்தியாவில் ஆராஷிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் தன் நடிப்பாலும் வசீகரிக்கும் குரலாலும் ஆசிய கண்டத்தையே வசியம் செய்து வைத்துள்ளான் அதனாலேயே அவன் இந்தியாவில் தனது தொழிலை துவங்குவது பெரும் பேசப்பொருளாகி போனது.. அதை மக்கள் கொண்டாட துவங்கி இருந்தனர்.. ரெனி ஃபேஷன்ஸ்ஸும் உலக அளவில் பெயர் பெற்ற விற்பனைமையம் என்பதால் அதுவும் பேசுவதற்கு ஏதுவாகி போனது..
அனைத்து சேனல்களும் செய்தி சேகரிக்க காத்து இருக்க வந்து இறங்கினர் ஒவ்வொருவராய்..
முதலில் நிதின் கூடவே அவனது பட்டாளம் அருந்ததி வேறு இன்று அழகாக டிரஸ் செய்து வந்து இருந்தாள்..
நிலவினி
“எதுக்குடி இப்படி பேய் மாதிரி பெயின்ட் அடிச்சு வெச்சு இருக்க?” என்று ரகசியமாக கேட்க
“வாட்..ஆர் யூ டாக்கிங் அக்கோவ்.. நான் எவ்வளவு அழகா மேக்கப் போட்டு வந்து இருக்கேன் நீ இப்படி அசிங்கபடுத்துற? உனக்கு பொறாமை என்னை அந்த ஜப்பான் ஃபிகர் சைட் அடிச்சுடுமோனு” என்று அவளும் ரகசியம் பேச சாஹித்யன் தேஜாஶ்ரீ எல்லோரும் அவர்கள் பேசுவது காதில் விழுந்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்தனர் ரகசியமாக புன்னகைத்துக்கொண்டு..
“ஆமா..ஆமா..ஆமை..போடி எனக்கு வேற வேலைலாம் நிறைய இருக்கு இதுல பொறாமை வேற படுறாங்க அசிங்கமா திட்டுறதுக்குள்ள ஓடிப்போய் இந்த வேஷத்த கலைச்சுட்டு வா இல்ல நிஜமாவே பெயின்ட் வாங்கி ஊத்தி விட்டுடுவேன்” என்றாள் நிலவினி..
“ச்சே.. சுதந்திர இந்தியாவில் ஒரு அபலைப்பெண் சுதந்திரமா சைட் அடிக்க கூட கிளம்ப முடியல.. என்னை சுத்தி எல்லாம் துஷ்டசக்தியாவே இருக்கு” என்று புலம்பியபடி அதிகபடியான மேக்கப்பை கலைக்க சென்றாள்..
அவளை பார்த்து சிரித்தபடி அவரவர் வேலையை பார்க்க வந்து இறங்கினர் ஆராஷி ஷிமிஜு மற்றும் ரியோட்டோ ஷிமிஜு..
இருவரையும் பூங்கொத்து கொடுத்து வரவேற்று அவர்களுக்கு உரியவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தான் நிதின்..
நியூஸ் சேனல்களும் ஆரவாரம் செய்து அந்த செய்தியை பதிவு செய்ய ஆரம்பித்தது..
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.. மக்கள் இவர்களை காண முண்டியடித்து ஓடிவர பார்க்க அதனால் பாதுகாப்பு பலப்படுத்த பட்டது..
வெளியுறவு துறை அமைச்சர் வர அவர் முன்னிலையில் ஓப்பந்தம் கையெழுத்திடப்பட அமைச்சர் அப்போது தான் கேட்டார் ஃபவுண்டர் பற்றி..
“மிஸ்டர் நிதின்.. இப்போ நீங்க கம்பெனி சி.இ.ஓ..உங்க சிஸ்டர் ஷேர் ஹோல்டர் ஆனா ஃபவுண்டர் யாருனு சொல்லவே இல்லையே..சரத் ஶ்ரீ சார் இது பத்தி ஏதாவது சொல்லி இருக்காரா? உங்க ஃபவுண்டர் வந்துட்டாங்களா?” என்று கேட்க
அனைவருக்கும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்த நிலை..
அப்போது ஃபேக்ஸ் ஒன்று வந்ததாகவும் அதில் இரண்டு கடிதங்கள் வந்து இருப்பதாகவும் நிதினின் பி.ஏ கொண்டு வந்து கொடுக்க வாங்கி பார்த்தான் நிதின்..
அதில் ஒன்று திறப்புவிழா முடிந்ததும் பத்திரிக்கையாளர்கள் முன் வாசிக்க வேண்டியது என்று இருக்க..
ஒன்றை மட்டும் மினிஸ்டரிடம் காட்டினான் நிதின் அதை படித்து பார்த்தவர் அமைதியாகி விட இங்கு ஒருவனோ அந்த கடிதத்தில் அப்படி என்ன இருந்தது என்று அவதிப்பட்டு கொண்டு இருந்தான்..