அத்தியாயம் -23
ஃபோன் பேசி முடித்தவன் ஹாலுக்கு வர அங்கோ குழப்பமாய் அமர்ந்திருந்தாள் தேஜு.. அவளை பார்த்தவன் என்னவென்று கேட்கலாம் என அருகில் சென்று பேபி என்று அழைக்க எங்கிருந்து தான் வந்ததோ கோவம் அவளுக்கு..
“அடிச்சு கொன்னுடுவேன் உன்ன.. என்னடா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல.. நானும் சரியாகிடும் எல்லாம்னு அஜ்ஜஸ்ட் பண்ணி உன்கூட வாழ வந்தா நீ என்னை கூட்டிட்டு வந்து இங்க வெச்சுட்டு வேற எவகூடவோ கொஞ்சிட்டு இருக்க?” என்று கோவமாய் கேட்க..
அவனுக்கோ ஒன்றும் புரியவில்லை..
“என்ன சொல்ற பேபி எனக்கு ஒன்னும் புரியல?” என்று கேட்க..
“ஆமான்டா உனக்கு எதுவுமே புரியாது ஏன்னா நீ சின்ன பாப்பா பாரு.. கட்டின பொண்டாட்டியும் பேபி வேற எவளோவும் பேபி.. இன்னொரு வாட்டி என்ன பேபினு கூப்பிடு நாக்கை அறுத்துடுறேன்” என்று அவள் கோவமாக பேச அப்போது தான் அவளது கோவம் என்ன எதற்கு என்று அவனுக்கு புரிந்தது..
சிரித்தவன் அவள் முறைப்பில்..
“இங்க பாரு பேபி நம்ம சாச்சி நமக்கு எப்படி பேபியோ அதே மாதிரி தான் நம்ம ரெண்டு பேருக்கும் மேதா பேபி..இப்போ நான் எந்த பேபிகிட்ட பேசினேனு புரியுதா?” என்று கூற அவன் கூற வரும் அர்த்தத்தை உணர்ந்தவள் அவனை பார்க்க..
“ம்ம்..மேதா தான் ஃபோன் பண்ணினா.. அவகிட்ட தான் பேசினேன்.. எனக்கு சாச்சிய விட ஒரு படி அவ முக்கியம் பேபி.. உன்ன நான் பேபினு சொல்றது வேற அர்த்தம்ல ஆனா மேதாவையும் சாச்சியையும் பேபி சொல்றது ஒரே அர்த்தத்தில அது புரியுதா உனக்கு?” என்று கேட்க..
தன் மகளைவிட தன் தங்கையை மகளைவிட ஒருபடி மேல் என்று கூறும் கணவனை பார்த்தவளுக்கு வியப்பு ஏற்படாமல் இல்லை.. அக்கா மாமாவிற்கு அவளின் தங்கை எப்போதும் முதல் குழந்தைதான் ஆனால் அது அவர்களுக்கு ஒரு குழந்தை வந்ததும் மாறிவிடும்..ஆனால் இவனது தந்தைபாசம் அவளுக்கு வியப்பையே கொடுத்தது.. அவனை தான் இன்னும் புரிந்து கொள்ளவே இல்லையே என்று அவளது மனம் அவளை காரி துப்பியது… அவனது அன்பு புரிந்தாலும் அதை ஏற்க மனம் தான் ஒத்துவர மறுக்கிறது.. அவனையே பார்த்தபடி இருந்தவள்..
“எனக்கு பயமா இருக்கு” என்றாள்.. எதற்கு என்று புரியாமல் பார்த்தவன்
“எதுக்கு பேபி பயம்?” என்று கேட்க..
“உன்மேல பாசம் வைக்க” என்று அவள் கூற அதிர்ந்து அவளை பார்த்தவன்..
“நான் இன்னும் மாறலனு நினைக்கிறியா பேபி?” என்று கேட்க இல்லை என்று தலையை ஆட்டியவள்..
“நான் ஒருமுறை பாசம் வெச்ச நீ என்ன விட்டு பிரிஞ்சு போன.. பாசம் வெச்ச அப்பா என்ன விட்டு பிரிஞ்சுட்டாரு.. பாசம் வெச்ச தங்கச்சி அவளும் ஏதோ ஒரு சூழ்நிலையில பிரிஞ்சுட்டா.. இப்போ திரும்ப நீ வந்து இருக்க உன்மேல திரும்ப பாசம் வைக்க பயமா இருக்கு” என்று அவளது பேச்சை கேட்டவன் அவளது கண்ணை அமைதியாக பார்த்து
“எனக்கு தெரியும்.. ஆனா நான் உன்ன விட்டு போமாட்டேன் பேபி” என்று கூற அவனை பார்த்தவள்..
“தெரியும்” என்றுவிட்டு அவனது அருகில் வந்தவள்..
“யார்பேச்சையும் கேட்டுட்டு என்னை விட்டுட மாட்டல்ல?” என்றாள்..
“நம்பு பேபி” என்று கூற..
“ம்ம்.. நம்புறேன்..மேதா ஏன் என்கிட்ட பேசல?” என்று கேட்க..
லேசாக சிரித்தவன்..
“அவளுக்கு அவளோட ஆள பத்தி இன்ஃபர்மேஷன் தேவை அதுக்காக ஃபோன் பண்ணா” என்று கூற..
“ஓஓ.. திரும்ப பண்ணுவால அப்போ கவனிச்சுக்கறேன் அவள..உங்க தம்பி அவள ஹர்ட் பண்ண மாட்டாருல?” என்று கேட்க..
“நான் கல்யாணம் ஆன பிறகு அடிப்பட்டவன் அவன் கல்யாணம் ஆகாமலே அடிப்பட்டுட்டான்.. அதனால மேதாவ அவன் ஹர்ட் பண்ணவே மாட்டான்.. அம்மாவோட பாசம்னா என்னானு புரிய வெச்சவ அவ அதனால அவள் அவனுக்கு ரொம்ப முக்கியம்” என்று கூற புரிந்தது போல் மண்டைய ஆட்டியவள் திரும்ப
“பேபி” என்று அழைத்தவன்..
அவள் திரும்ப..சட்டென அவளை அணைத்து விடுவித்தவன்.. அதிர்ந்து நிற்கும் அவளை பார்த்து
“மனசுல பழசெல்லாம் போட்டு குழப்பிக்காதே..நல்லதே நினைப்போம்.. அண்ட் அன்னைக்கு மீட்டிங்குக்கு நீ போட்டு வந்த டிரெஸ் ரொம்ப அழகா இருந்தது..அன்னைக்கே சொல்லி இருப்பேன் நீ ஏதாவது கோச்சுக்குவனு தான் சொல்லல..இப்போ சொல்லனும்னு தோணுச்சு சொல்லிட்டேன்” என்றுவிட்டு தன் மகளை பார்க்க சென்றுவிட்டான்..
அவளுக்குத்தான் அதிர்ச்சியாகிவிட்டது அவனது செயல்.. தங்களது வாழ்க்கை அவ்வளவுதான் என்று எண்ணியிருந்தவளின் எண்ணத்தில் பட்டுப்போன மரம் கூட துளிர்விடும் பொழுது சிறிய மனஸ்தாபம் சரியாகாதா என்று நம்பிக்கையை விதைத்துவிட்டான் ரியோட்டோ.. தப்பு செய்துவிட்டோம் அதையே பேசி இனி வரப்போகும் காலத்தை வெறுப்பாக்க விரும்பாமல் இனி வாழப்போகும் வாழ்க்கையை அனுபவித்து வாழவேண்டும் என்று அவனது சிறு சிறு செயல்களே அவளுக்கு உணர்த்தியது.. அப்போதும் சரி அவனது நண்பன் ரென் ஒருவனை தவிர்த்து மற்ற யாரையும் முன் வைத்தால் அவன் அவளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்தான்..
இதுவும் அவள் ரென் மேல் கோவம் கொள்ள ஒரு காரணம்.. ஆனால் அவனோ பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நண்பனுக்கே தீங்கு விளைத்தான்.. அதை அறியாத ரியோட்டோ உயிர் நண்பனை நம்பி ஏமாந்து போனான்.. அவனது நிலையிலிருந்து யோசித்தால் அவனது நியாயம் புரிந்து இருக்கும் என்று அவள் யோசிக்காமல் இல்லை..
எல்லாவற்றையும் இழந்தும் எதுவுமே நடக்காதது போல காட்டிய மாமனார்.. இதே அவரது இடத்தில் வேறு யாராவது இருந்தால் அவள் அவன் வாழ்வில் வந்த நேரம் சரியில்லை என கூற அவர்களை பிரித்து இருப்பார்களே.. ஆனால் அவர் அப்படி ஒரு எண்ணம்கூட இருப்பதுபோல் காட்டவில்லையே..ரியோட்டோ வும் தான் விட்டு சென்றதும் அவனுக்கென வேறு வாழ்க்கை அமைத்துக்கொண்டு இருப்பான் என்று எண்ணினால் அவனோ தன்னை தேடி அலைந்துள்ளான்.. இப்போது அவனது உலகமே தானும் மகளும் என நினைக்கின்றான்..
தன்னை துன்பப்படும் நேரம் கைகொடுத்து காத்த குடும்பம் தம்பி என்றும் பாராமல் தன் தங்கைக்காக நிற்கின்றான்..
யாருக்கு அமையும் இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் கணவன்..இது நடிப்பா என்று பல வழிகளில் சோதித்து பார்த்துவிட்டாளே.. அதற்கும் பதில் பூஜ்ஜியம்தான்..
இதற்குமேல் ஒரு பெண்ணிற்கு என்ன வேண்டும்? என்று எண்ணியவள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இருந்த கோவமும் மறைந்தே போனது அவனுடன் சேர்ந்து வேலை செய்யும் இந்த நாட்களில்.. கூடவே இன்று ஆராஷியை அழைத்துவரும்படி ஆர்டர் போட்டுவிட்டாள்..
அன்றைய தினம் ஹோட்டலுக்கு சென்று ஆராஷியை ரூமை காலி செய்ய சொல்லி அவன் சொன்ன எல்லா காரணங்களையும் ஏற்காமல் தன்னுடனேயே அழைத்து வந்துவிட்டான் ரியோட்டோ..
வீட்டிற்கு வந்தவன் தயக்கம் காட்டி நிற்க..
அவன் வந்ததும் கிட்சனுக்குள் சென்றுவிட்டனர் அம்மாவும் பொண்ணும் அதை பார்த்து அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட ரியோட்டோவோ அமைதியாக அவனது கரம் பிடித்தபடி நின்றான்..
“என்ன விருந்தாளி போல நிக்குறாரு?” என்று பேசியபடி அவள் வெளியே வர அவளது கையில் டம்ளரில் காபி ட்ரேயிலும் மகளது கையில் ஜுஸும் இருந்தது..
காபி டம்ளரை கொண்டு வந்தவள் ரியோட்டோவிடம் ஒன்றை நீட்ட புன்னகைத்தவன் அதை வாங்கிக்கொள்ள.. இன்னொரு கப்பை ஹர்ஷத்திடம் நீட்டினாள்.. அவனோ ஆராஷியை பார்க்க அவன் தலையாட்ட நன்றி சொல்லி எடுத்துக்கொண்டான்..வேறு ட்ரேயில் பாடிகார்ட்ஸ்க்கும் காபி மற்றும் ஸ்னாக்ஸ் சென்றது..சாச்சியோ ஆராஷியின் முன் வந்தவள்
“ரா..ராச்சி.. தூஸ் குடிங்க” என்று நீட்ட அவளது ராஷி என்ற அழைப்பு அவனது கண்களில் நீரை வரவழைத்துவிட அள்ளி அணைத்துக்கொண்டான் அவளை..
அதனை பார்த்த இருவருக்கும் கண்கள் கலங்கி விட்டது..
“என்ன இது சின்ன பிள்ளை மாதிரி அழுறீங்க? இந்த அழுமூஞ்சியையா என் மேதா லவ் பண்ணா?” என்று கலங்கிய கண்களை துடைத்தபடி தேஜு கேட்க.. ரியோட்டோவிற்கு குடித்த காபி புரையேற தலையை தட்டிக்கொண்டபடி அவனை பார்க்க ஜுஸை வாங்கி அண்ணன் மகளுக்கே பருககொடுத்தபடி அவளை தூக்கிக்கொண்டு நிமிர்ந்தவன்..
“அஷு.. கூப்பிடுற மாதிரி கூப்பிட்டாளா அதான் எமோஷனல் ஆகிட்டேன் சாரி அண்ணி” என்று கண்களை துடைத்தபடி மகள் அருந்திவிட்டு அவனை அருந்தும்படி நீட்டிய ஜுஸை தானும் அருந்தினான்..
“ம்ம்..எல்லாம் சரியாகிடும்.. எதுக்கு இத்தனை நாள் இங்க எங்க கூட இருக்காம தனியா ஹோட்டல்ல தங்கினீங்க? நான் என்ன பேயா? பிசாசா?” என்று கேட்க லேசாக சிரித்தவன்..
“ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்ல அண்ணி.. உங்களுக்கு கொஞ்சம் ப்ரைவசி இருக்கட்டும்னு தான்” என்று கூற..
“நீங்க கூட இருந்தா எங்க ப்ரைவசி கெடும்னு யார் சொன்னா? இருக்குறதே அண்ணன் தம்பி ரெண்டு பேர் ஆளுக்கு ஒரு மூலையில பிரிஞ்சு இருந்தா எப்படி பாசம் இருக்கும்?.. புரிதல் எப்படி இருக்கும்? எல்லாரும் ஒன்னா இருந்தாதான் குடும்பம்னா என்னானு எல்லாருமே புரிஞ்சுக்க முடியும்..மனசிலாயோ?.. அப்படி ஒன்னா இருக்க உங்களுக்கு கஷ்டம்னா சொல்லுங்க நாங்க வேற வீடு பார்த்துட்டு போய்டுறோம்” என்று அவள் கேட்க.. அதிர்ந்த ஆராஷி..
“அண்ணி.. என்ன இப்படி பேசுறீங்க? இது நம்ம வீடு.. எல்லாம் இங்கேதான் இருக்கனும் ஏன் இப்படி பிரிச்சு பேசுறீங்க?” என்று கேட்க..
“ஹான் வலிக்குதுல?.. அப்படித்தான் இருந்தது எங்களுக்கும் நீங்க ஹோட்டல்ல தங்கி இருந்தது..” என்று அவள் அவனை மடக்க..
அக்காவும் தங்கச்சியும் இன்ஸ்டன்ட்டா அடிக்குறதுல கில்லாடிங்க என்று மனதில் எண்ணியவன்..
“அது..ஐயம் சாரி அண்ணி.. இனிமேல் அப்படிலாம் பண்ணமாட்டேன் ப்ளீஸ் மன்னிச்சிடுங்க” என்று அவன் கூற
“பாவம்மா.. தாங்கமாட்டான் விட்டுடேன்” என்று ரியோட்டோ கூற
“ம்ம்ம்..” என்று பாவமாய் அவனும் முகத்தை மாற்ற சாச்சியும் அவனை போலவே செய்ய சிரித்துவிட்டாள் தேஜு…
“ம்ம்..ஓகே..ஓகே..மன்னிச்சுட்டேன் விடுங்க” என்று அவள் சொல்ல..
“தேங்கஸ் அண்ணி” என்று ஆராஷி கூற.. அதன்பின் வேறு வேறு பேச்சுக்கள் தொடர சிறிது நேரத்தில் ஜிம்மியை தூக்கி வந்தான் ஹர்ஷத்..
“ஹைய்ய்.. டாகி” என்று துள்ள ஆரம்பித்தாள் சாச்சி.. அவளை இறக்கியவன் ஜிம்மிக்கு ஏதோ பேச முதலில் அவளை மோப்பம் பிடித்த ஜிம்மி பிறகு அவளை தொட அனுமதித்தது பின் அவளுடன் விளையாட ஆரம்பித்து விட்டது..
‘அவள மாதிரியே இவளும் இருக்கா’ என்று எண்ணியவன் திரும்ப அவனையே பார்த்தபடி நின்ற தேஜுவை பார்த்தவன்
“என்ன அண்ணி?” என்று கேட்க..
“உங்களுக்கு இந்த டூயல் ரோல் கஷ்டமா இல்லையா?” என்று கேட்க அவள் எதை கேட்கிறாள் என்று உணர்ந்தவன்..
“கஷ்டமாதான் இருக்கு அண்ணி ஆனா இது எனக்கு தேவையான தண்டனையா ஏத்துக்குறேன்.. அதனால சுகமாதான் இருக்கு..யாரையும் நான் பிளேம் பண்ண விரும்பல.. அதே நேரம் என் அஷுவ நான் கஷ்டப்படுத்தவும் விரும்பல..
இந்த ஊர்ல எனக்கான சில இடங்கள்ல அவ இருக்கா என் மனசு முழுக்க அந்த நியாபகம் இருக்கு அது போதும்” என்று பேசியவன்..
“நீங்க என்னை மன்னிச்சுட்டீங்களா?” என்று கேட்க..
ஒரு பெருமூச்சை விட்டவள்
“இந்த உலகத்தில யாரும் ப்யூர் கோல்ட்டும் இல்ல யாரும் ப்யூர் வில்லனும் இல்ல.. ஏதாவது ஒரு சந்தர்ப்பம் அவங்கள தப்பு பண்ண வெச்சு இருக்கும்.. அதுக்காக அதையே புடிச்சுட்டு தொங்ககூடாது.. தப்பை மறந்துட்டு போய்ட்டே இருக்கனும்..நல்லத சாகுறவரைக்கும் மறக்காமல் இருக்கனும்.. அப்படித்தான் நான் இன்னைக்கு வரைக்கும் நடந்துக்குறேன்.. சந்தர்ப்பம் சூழ்நிலையால தப்பு பன்றவங்களுக்கு கண்டிப்பா மன்னிப்பு இருக்கு” என்று அவள் கருத்தை கூற..
“தேங்க்ஸ் அண்ணி” என்றவன்..
அவனது மொபைல் அடிக்க எக்ஸ்கியூஸ்மீ என்று விட்டு எடுத்து பேசியபடி மாடி ஏறினான் அவ்வளவு நேரம் நின்றிருந்த ஹர்ஷத்தை உட்கார சொல்ல அவன் வேண்டாம் என்று கூற அவனை திட்டி அமரவைத்தாள் தேஜு..
அக்காவிற்கும் தங்கைக்கும் உள்ள ஒற்றுமையை ஒரு பார்வையாளன் போல பார்த்திருந்தான் ரியோட்டோ..
மேலே வந்தவன் ஃபோன் அட்டென் செய்து “ஹலோ” என்று கூறியதும் அந்த பக்கம் கேட்ட செய்தியில் அவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..
“ஆர் யூ ஸ்யூர் திஸ் இன்ஃபர்மேஷன்?” என்று கேட்க
“100பர்சென்ட் சார்” என்ற செய்தியை கேட்டு மனம் நிலைகொல்லாமல் தவித்தது.. அதன் விவரங்களை தனக்கு அனுப்பும்படி கூறியவன் வைத்துவிட்டான்..நாளை இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்று தன் அறைக்கு சென்றவனுக்கு மீண்டும் ஃபோன் வந்தது எடுத்து பேசியவனுக்கு மறுமுனையில் சொன்ன தகவல் வருத்தமாய் இருந்தாலும் அதனை தான் பார்த்துக்கொள்வதாக கூறிவிட்டு வைத்துவிட்டான்..
சிறிது நேரம் யோசித்தவன் ஒரு பெருமூச்சை விட்டு ஹர்ஷத்துக்கு ஃபோன் செய்தவன் மறுநாள் நிதினிடம் ஒரு மீட்டிங் இருப்பதாக கூறி அரேஞ்ச் செய்ய கேட்க.. அவனும் அதை செய்தான்.. அடுத்து அடுத்து செய்ய வேண்டியவற்றை ப்ளான் செய்தவன் இதற்கு ஒரு முடிவு எடுத்தே ஆகனும்னு யோசித்தபடி அமர்ந்துவிட்டான்..
அடுத்து அடுத்து கிடைத்த அதிர்ச்சி கோவம் என அனைத்தையும் அவள் ஒருவளுக்காக அடக்கியபடி இருந்தான்.. அவன் சொன்னது போலவே மறுநாள் எல்லோரையும் வரவழைத்து இருந்தான் நிதின்..
தேஜுவும் ரியோட்டோவும் கூட வந்துவிட்டனர்.. கடைசியாக வந்தான் ஆராஷி.. அவனது முகம் சாதாரணமாகவே இருந்தது அதனால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை.. கூடவே ஹர்ஷத்தையும் அழைத்து வந்து இருந்தான்.. மீட்டிங்கில் அவன் ட்ரான்ஸ்லேட்டரை தான் உபயோகிப்பான் ஆனால் இந்த முறை ஹர்ஷத்தை அழைத்து வந்து இருந்தது அனைவருக்கும் ஏதோ உணர்த்தியது..
“ஹாய் எவ்ரிபடி.. சாரி ஃபார் லேட்.. டுடே ஐ வாண்ட் ட்டூ டெல் சம் இம்பார்டண்ட் திங்க்ஸ் சோ தட் ஹர்ஷத் ஈஸ் ஹியர்” என்றவன்..
(ட்ரான்ஸ்லேட்டட்)
“நெக்ஸ்ட் மன்த் என்னோட சொந்த ஊர்ல என்னோட கான்சர்ட் அண்ட் அவார்ட் ஃபங்ஷன் இருக்கு.. அதுலேய என்னோட பிஸினஸ் பார்ட்னர்ஸ்ஸ நான் இன்ட்ரோ பண்ணலாம்னு இருக்கேன்.. அதனால வித்அவுட் ஃபெயில் நீங்க எல்லாரும் வரணும்.. இது என்னோட ரிக்குவஸ்ட் ட்டூ ஆல்.. ஒருத்தரும் மிஸ் ஆகாம வரணும் ப்ளீஸ்.. பிகாஸ் இது என் பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணதும் அதை என் நாட்டுல இருக்குறவங்களுக்கும் சொல்லுற ஃபங்ஷன்.. அந்நேரம் எல்லாரும் ஒன்னா இருந்தா நல்லதுனு தோணுது.. அதுக்கு தான் உங்களை இன்வைட் பன்றேன்..” என்றான் அவன்.. அவன் பேசியதை அப்படியே மொழிபெயர்ப்பு செய்தான் ஹர்ஷத்..
அவன் பேசத்துவங்கிய சமயம் அன்றைய தினம் மெடில்டாவும் மேதாவை பிடித்துக்கொண்டாள் அன்றைய தினம் அவளது காதல் கதையை சொல்லியே ஆகவேண்டும் என்று..
அவளுக்கும் யாரிடமாவது மனம்விட்டு பேசினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது.. ஆராஷியை கொல்ல டெத் த்ரட் வந்து இருப்பதாக அறிந்ததில் இருந்து அவளுக்கு உயிரே இல்லை.. இரண்டு முறை அவனது மரணத்தை தடுத்தவள் இப்போது அவளும் அவன் அருகில் இல்லை.. என்னதான் பாதுகாப்பை பலப்படுத்தினாலும் அவனுக்கு ஏதோ ஆகப்போவது போலவே உள்மனம் அரட்டி கொண்டே இருக்கிறது.. என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறாள்.. அந்நேரம் மெடில்டாவும் கேட்க..
“ஃப்ரஷ் ஆகிட்டு வந்து சொல்றேன் ப்ளீஸ் ஃபைவ் மினிட்ஸ்” என்று கேட்டவள் நேராக வாஷ்ரூம் சென்று முகத்தில் தண்ணீரை வாரி வாரி அடித்தாள்.. மனம் நிலையில்லாது தவித்தது மனதின் வலியை பகிர நண்பனுக்கு அழைக்க போக அவனோ மொபைலை சுவிட்ச் ஆஃப் வைத்து இருந்தான்.. அது நம்ம ஆராஷி வேலைதான்.. முக்கியமான மீட் மொபைலை ஆஃப் செய்யுங்க என்று கூறி அவனை ஆஃப் செய்ய வைத்தான்..