அத்தியாயம் – 24
ஆராஷி பேசிக்கொண்டு இருந்த நேரம் சிவா வந்து சேர்ந்தான்..
அங்கு வேலை செய்பவர்கள் தடுத்தும் கேளாமல் உள்ளே கோவமாய் வந்தவன்..
“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க சார் உங்க மனசுல என் மேதாக்கு மாப்பிள்ளை பார்க்குற உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது? உங்ககிட்ட அவ வேலை செஞ்சா அவளுக்கு மாப்பிள்ளை பார்க்குற உரிமைய நீங்களே எடுத்துப்பீங்களா? நான் ஒருத்தன் அவளுக்காக இருக்கேன்கிறது மறந்து போச்சா உங்களுக்கு? அவ எனக்குத்தான் எனக்கு மட்டும் தான்.. அவள நான் யாருக்காகவும் விட்டு தர முடியாது..முதல்ல நீங்க யாரு அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க?” என்று அவன் பாட்டுக்கு கத்த அவன் பேசுவதை அமைதியாக கேட்டபடி நின்றிருந்தான் ஆராஷி..
அவன் இறுகியபடி நின்றிருந்த கோலத்திலேயே அனைவருக்கும் புரிந்தது அவனுக்கு இந்த விஷயம் தெரியும் என்று.. அனைவரும் அவனையே பார்த்தபடி நிற்க ஓயாமல் கத்திக்கொண்டு இருந்த சிவா வேறு அவனுக்கு எரிச்சலை மூட்ட
“வில் யூ ப்ளீஸ் ஜஸ்ட் ஷட்அப் இடியட்” என்று கத்தினான் ஆராஷி..
அவனை திரும்பி பார்த்த சிவா அவனது கோவப்பார்வையில் நடுங்கி போனான் ஆனாலும் தைரியமாய் இருப்பது போல் பேசினான்..
“நீங்க யாரு சார் என்னை ஷட்அப் சொல்ல?” என்று கேட்க..
(டிரான்ஸ்லேட்டட்)
“நா..நான் யாரா? நான் மேதாவ கல்யாணம் பண்ணிக்க போற அவளோட புருஷன்.. அவளோட லவ்வர்.. ஶ்ரீ குரூப்ஸ்ஸோட ஃபவுண்டர் மேதஷ்வினி ஶ்ரீ யோட ஒன் அண்ட் ஒன்லி லவ்வர் மிஸ்டர்.ஆராஷி ஷிமிஜு.. போதுமா விளக்கம்” என்று அவன் கோவமாய் அதே நேரம் குரலை உயர்த்தாமல் பேசியபடி பார்க்க அவனது பதிலில் ஆடிப்போனான் சிவா.. அவன் சொல்வது உண்மையா என்பது போல் சாஹித்யனை பார்க்க அவன் தலையை குனிந்து நின்றான்..
“மே..மேதா.. ஶ்ரீ குரூப்ஸ்.. ஓனரா?” என்று சாஹித்யனை பார்த்து கேட்க அவன் ஆமாம் என்பது போல் தலையாட்ட அதிர்ச்சி மாறாதவன்..
“ஆனா.. என் லவ்?” என்று கேட்க..கோவமான ஆராஷி..
“எது உன் லவ்.. அவ உனக்கு ஹெல்ப் பண்ணா அதனால அவளுக்கு வாழ்க்கை கொடுத்து நீ பெரிய மனுஷன்னு பேர் வாங்க ஆசைபடுறதா லவ்?” என்று கேட்க..
“அது..அது அப்படி இல்ல.. மே..மேதா அவ” என்று கூற அவனது முறைப்பில்
“அவங்க” என்று மாற்றியவன்
“அவங்க க..கஷ்டப்படுறாங்களே.. இனிமேல் கஷ்டப்படக்கூடாதுனு தான்” என்று திக்கி தினறி பதில் அளிக்க..
“அவங்க கஷ்டப்படுறாங்களா? நீ அதை பார்த்தியா? இன்னைக்கு நீ பிச்சை எடுக்காம சோறு திங்கவே அவங்கதான் காரணம்.. அது தெரியுமா உனக்கு? அவங்க யாரு என்னானே தெரியாம வாழ்க்கை கொடுக்க வந்துட்டான் வள்ளல்..ஒழுங்கா போய்டு மேன்.. இதுக்கு மேல இங்க நின்ன நானே உன்ன கொன்னுடுவேன்” என்று கத்த.. பயந்தவன் கிளம்ப
“ஒரு நிமிஷம்.. மேதா தான் ஶ்ரீ குரூப்ஸ் ஓனர்னு யாருக்கும் தெரியாது.. அது வெளியே தெரிஞ்சது அடுத்த நிமிஷம் உன் உயிர் உன் உடம்புல இருக்காது ஜாக்கிரதை” என்று கோவமாய் கூற அதை மொழிபெயர்ப்பு செய்தான் ஹர்ஷத்..
அவனது பேச்சு அமைதியாக இருந்தாலும் அவனது பார்வை உயிரை உலுக்கியது.. அதிலேயே பயந்து போன சிவா அமைதியாக தலையை அசைத்த படி விட்டால் போதும் என்று ஓடி விட்டான்..
அவன் சென்றதும் நிதின் பக்கம் பார்த்த ஆராஷி..
“அவன் கேட்டத தான் நானும் கேட்கிறேன்.. யார கேட்டு மேதாக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சீங்க? அவளுக்காக இங்க நான் ஒருத்தன் இருக்குறது உங்களுக்கு தெரியலையா?” என்று கேட்க..
அவனது கோவமும் பார்வையும் ஒரு வித பயத்தை உண்டு பண்ணாலும் தைரியத்தை வரவழைத்து கொண்டவன்..
“மேதா என் தங்கச்சி சார்.. அவ வாழ்க்கையை செட்டில் பண்ண வேண்டியது என்னோட கடமை.. ஒரு அண்ணனா அப்பாவோட பொறுப்புல இருந்து அவளுக்கு நான் மாப்பிள்ளை தேடுறேன்.. அவ ஒன்னும் உங்கள லவ் பண்றேன் உங்களதான் கல்யாணம் பண்ணபோறானு எதையும் சொல்லலையே? அவள இங்க வரவைக்க எங்களுக்கு வேற வழியும் இல்ல.. நீங்களும் உங்களுக்குள்ள என்ன ஆச்சுனு சொல்ல மாட்டேங்கறீங்க.. அவளும் வாய தொறக்கவே மாட்டா.. எதுவுமே தெரியாம நீங்க ரெண்டு பேரும் சேருவீங்கனு எதை வெச்சு நம்பி நான் விடுறது சார்.. அவளுக்கும் வயசு ஆகிட்டே போகுது சார்.. என் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு தரணும்னு ஒரு அண்ணனனா நினைக்குறது தப்பா?” என்று நிதின் கேட்க..
“எங்களுக்குள்ள என்ன நடந்துச்சுனு உங்களுக்கு தெரியனும் அவ்ளோதானே.. சொல்றேன்.. அவளோட லவ்வ நான் எப்பவோ உணர்ந்துட்டேன் ஆனா நான் லவ் பன்ற பொண்ணு அவ இல்லனு நினைச்சுதான் அவள விட்டு விலகி போனேன்.. எப்போ என்னோட லவ் அவதான்னு தெரிஞ்சதோ அப்போவே அவள தேடி வந்துட்டேன்..” என்று அவன் கூற எல்லோரும் அமைதியாக பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.. அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன்
“கன்ப்யூஷனா இருக்கா?” என்று கேட்க..
“நீங்க நார்மலா பேசினாலே ஒன்னும் புரியாது இதுல விடுகதை மாதிரி பேசினா ஒரு மண்ணும் புரியல” என்றாள் அரூ..
அவளை பார்த்து ஒரு வலி நிறைந்த புன்னகையை கொடுத்தவன்.. சிறிது நேரம் அமைதியாக இருந்தவன்..
“முதல்ல அவ டைரில இருந்து தெரிஞ்சுக்கிட்டதை சொல்றேன்.. நான் இங்க இருந்து கிளம்பும்போது அவளோட டைரிய ஜாப்பனீஸ்ல எழுதி இருக்கவும் நிதின் உங்க அசிஸ்டென்ட் என்னோட டைரினு நினைச்சு என் பேக்ல வெச்சுடாங்க அதை நான் அப்புறம்தான் பார்த்தேன்.. அதை படிச்சுதான் என் மேதாவோட லவ்வ நான் உணர்ந்தேன்.. அதை செல்றேன்..அப்போதான் அவள நான் எப்படி லவ் பண்ணேன்னு உங்களுக்கு தெரியும்” என்றபடி பேச ஆரம்பித்தான்..
எல்லோரும் அவன் சொல்லப்போவதை தான் பார்த்தபடி இருந்தனர்..
அங்கு மேதாவும் அவளது காதலை மெடில்டா விடம் சொல்ல ஆரம்பித்தாள்..
இரவு பதினோரு மணி..
ஊட்டியின் எஸ்டேட் பங்களா..
“இந்த நேரத்தில முக்கியமா பேசனும்னு வரச்சொன்னீங்க? என்னடா ஆச்சு?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் நிதின்..
அவனிடம் பகிரப்பட்ட செய்தியில் அதிர்ந்து நின்றான்..
“நீ என்ன சொல்றனு யோசிச்சு தான் சொல்றியா…? நீ எவ்ளோ பெரிய பொஷிஷன்ல இருக்கனு உனக்கு புரியுதா இல்லையா? இந்த வேலையை எதுக்கு இப்போ விடனும்னு சொல்ற?” என்று கேட்டான் சாஹித்யன்..
“வேற பெரிய கம்பெனில வேலைக்கு சேரப்போறியா பேபி.. ஏதாவது ஆஃபர் லெட்டர் வந்து இருக்கா?” என்றாள் நிலா என்கிற நிலவனி..
“ஏன்டா என்ன ஆச்சு? அப்பா அம்மா நியாபகம் வந்துடுச்சா? ஆலப்புழாக்கே போயி பிஸினஸ்ஸ பார்க்க போறியா என்ன?” என்றான் அவர்களில் மூத்தவனான நிதின்..
“என்னதாண்டி யோசிக்கிற? வாயை துறந்து ஏதாவது சொன்னாதானே எங்களுக்கு தெரியும்.. ஏற்கனவே எங்ககிட்ட இருந்து எதையோ மறைச்சுக்கிட்டு இருக்க.. இதுல இன்னும் எங்கள விட்டு பிரியவே முடிவு பண்ணிட்டியா?” என்று கோவமாய் கேட்டாள் ஷ்ரத்தா..
“அத அவகிட்ட கேட்டா எப்படி சொல்லுவா? என்கிட்ட கேளுங்க நான் சொல்றேன்” என்றபடி உள்ளே வந்தாள் அருந்ததி..
எல்லோரும் அவளை கேள்வியாய் பார்க்க.. இவளோ அவளை முறைத்தபடி “அரூ” என்று கோவமாய் அழைத்தாள்..
“என்ன அரூ நொரூனுட்டு.. இவ என்ன செய்ய போறா தெரியுமா? இதை பாருங்க” என்றபடி அவள் மொபைலில் ஒரு வீடியோவை ப்ளே செய்தாள் அருந்ததி..
“இந்த ஜப்பான் ஆக்டர் இந்தியா வர்றதுக்கும் இவ வேலையை ரிசைன் பண்ணதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று நேரடியாக பாயிண்ட்டை பிடித்தான் நிதின்..
“அவ சொல்லமாட்டா அண்ணா.. நீயும் நாங்களும்தான் அவளை செல்ல தங்கச்சி நல்ல ப்ரண்டுனு சொல்லிட்டு சுத்துறது ஆனா அவ நம்மள யாரோ மாதிரி தான் ட்ரீட் பன்றா? இப்போ இந்த ஜப்பான்காரனுக்கு ஆயா வேலை பார்க்க போறாளாம்” என்று கோவமாய் கூற எல்லோரும் அதிர்ந்து பார்த்தனர் அவளை..
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்..
அவள் அருகில் வந்த நிதின்
“அவனுக்கு ஸ்பான்ஸர் யாருனு தெரியுமா? உன்னோட பொஷிஷன் என்னானு தெரியுமா? அப்புறம் இதுக்கு நான் சம்மதிப்பேன்னு நீ நினைக்குறியா மோளே?” என்று அவன் கேள்வியை அடுக்க அவனிடம் வாயை திறந்தாள்..
“அண்ணா ப்ளீஸ் நா..நான் சொல்றது கொஞ்சம் கேளுங்க?” என்று கூற..
“என்ன சொல்ல போற? அவன்னா இஷ்டம்.. அதான் இருக்குறதெல்லாம் விட்டுட்டு அவனுக்கு கேர் டேக்கரா போக போறேன்னு சொல்றியா?” என்று கேட்டாள் அருந்ததி..
“அரூ..ப்ளீஸ் நான் அண்ணாகிட்ட பேசிட்டு இருக்கேன்..” என்று கோபமாய் பேசியவள் முகம் சட்டென கோவத்தில் சிவந்துவிட்டது..
அவள்.. மேதஷ்வினி ஶ்ரீ..(நம்ம ஹீரோயின்)
சிறு வயதிலேயே அம்மாவை இழந்த கேரளாவை சேர்ந்த தமிழ் பெண்..பிறந்தது மட்டுமே கேரளம் வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் ஊட்டி மலை பிரதேசத்தில் தான்..
சென்னை அவளுக்கு தந்தை தொழில் நடத்தும் இடம்.. ஶ்ரீ குரூப்ஸ்ஸின் சாம்ராஜ்யம் நடக்கும் இடம்.. ஊட்டி அவள் தங்கி படிக்க வளர என்று இங்கேயே செட்டில் ஆகிவிட்டாள்.. வருடாந்திர விடுமுறை மட்டும் சென்னையில்..தந்தையின் உதவியாளரோடு மாஸ்க் அணிந்து அவரோடவே உலகம் சுற்றுபவள்.. நிறைய நல்ல எண்ணம்..ஆடம்பரம் இல்லாத சாதாரண மக்கள் வாழும் வாழ்க்கையை தான் வாழுவாள்.. அவள்தான் ஶ்ரீ குரூப்ஸ்ஸின் ஓனர் என்பது இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை.. சரத் ஶ்ரீ தன் இரண்டு மகள்களையும் வெளியே காட்டாது இருந்தார்.. அதற்கு காரணம் மேதா தான்.. அவளது எளிய வாழ்க்கை முறை பாதிக்கப்படக்கூடாது என்று எண்ணியவர் அவர்கள் பிஸினஸ் பொறுப்பை ஏற்கும் வரை அவர்களை வெளி உலகுக்கு காட்டாமலே வளர்த்தார்..தேஜுஶ்ரீ படபடவென பேசுவாள் ஆனால் தீர யோசித்து முடிவு எடுக்கும் பழக்கம் இல்லை.. ஆனால் மேதா எதையும் நிதானமாக ஆழ்ந்து யோசித்து முடிவு செய்வாள் அதனால் தனக்கு தேவைபடும் நேரத்தில் அவளிடம்தான் யோசனை கேட்பார் சரத் ஶ்ரீ.. தன் நெருங்கிய வட்டத்தில் அவள்தான் வாலு.. வெளியே அமைதியானவள்.. அதனால் அவளை பற்றி புரிந்துகொள்வது யாருக்கும் தெரியாமல் போனது.. அக்கா தங்கை இருவருமே தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தியது இல்ல.. எங்கும் தந்தையின் அடையாளத்தை பயன்படுத்தியதும் இல்லை..
கல்லூரி வாசம் மும்பை ஜப்பான் என ஆகிப்போனது..
ரோபோடிக் டெக்னாலஜி மற்றும் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் படித்தவள்..
சமீபத்தில் அப்பாவை இழந்து எல்லாவற்றையும் விட்டு தனியே இருக்க துடிக்கும் வளர்ந்த மழலை..
அவளது நண்பர்களுக்கு அவள் இன்னும் சிறு பிள்ளையே..
நிதின் அவளது அண்ணன்.. அவளது பெரியப்பா மகன்..பெற்றோர்கள் இல்லாதவன்..தந்தைக்கு பிறகு அவன்தான் அவளை சிறு குழந்தை போல பொத்தி பொத்தி பார்க்கிறான்..
இந்தியாவின் மிகப்பெரிய அளவில் தொழில் நடத்தி உலகின் பல இடங்களிலும் கால் பதித்து அங்கே வேர்லட் ஃபேமஸ் ப்ராண்ட் ஆகி இருக்கும் RENO fashion ன் தற்போதைய CEO..
தந்தையால் அதிகாரபூர்வ CEO ஆக்கப்பட்டவன்..
மேதஷ்வினி அவளது அக்கா தேஜாஶ்ரீ இருவருக்கும் அவன்தான் கார்டியன்..