அத்தியாயம் – 25
“அ..அண்ணா.. ஞான்..சத்தியம் செஞ்சு இருக்கேன்.. அதை காப்பாத்தனும் அவரு இந்தியா வந்தா நான்தான் அவரோட கேர்டேக்கர்னு என் ப்ரண்டுக்கு சத்தியம் செஞ்சு இருக்கேன் அதை கண்டிப்பா காப்பாத்தனும்.. ப்ளீஸ் நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்..” என்று அவனிடம் கெஞ்சினாள்..
அவள் வருத்தப்பட்டால் தாங்காத கூட்டம் அது..
உடனே அனைவரும்..
“என்னதிது மேதா.. இதுக்கு போய் நீ ஃபீல் பண்ணுவியா?
நீ பண்ண ப்ராமிஸ்க்கு நீயேதான் செய்யனும்னு இல்லையே உன்னோட சூப்பர்வைசிங்ல ஒரு நல்ல ஆளா பிக்ஸ் பண்ணலாமே..” என்றாள் நிலவனி..
மற்றவர்களும் அதையே கேட்க அனைவரையும் பார்த்தவள் அமைதியாக தன் அண்ணனை பார்த்து நின்றாள்..
“ஏதாவது பேசுறாளா பாரு அழுத்தக்காரி.. சரி யாருக்கு சத்தியம் செஞ்ச?” என்றாள் அருந்ததி.. அவளுக்கு தன் தோழி அந்த திமிர் பிடித்த நடிகனுக்கு கீழே வேலை செய்ய கேட்பது சுத்தமாக பிடிக்கவில்லை..அவனது திமிரால் அவளை வருந்தும்படி பேசிவிட்டால் அதுவே அவளது கோவத்திற்கு காரணம்..
“சொல்லு மோளே யாருக்கு சத்தியம் செஞ்ச?” என்று நிதின் கேட்க..
“அது..அது நேரம் வரும்போது சொல்றேன் அண்ணா..ப்ளீஸ் இந்த ஹெல்ப் மட்டும் செஞ்சு தாங்க அண்ணா” என்று கேட்க.. சிறிது நேரம் யோசித்தவன்
“சரி மோளே..உனக்கு நான் இந்த ஜாப் க்கு ரெக்கமண்ட் பண்றேன்..பட் ஒன் கண்டிஷன்..” என்று கூற அவனை கேள்வியாய் பார்த்தாள் மேதா..
“உன்ன யாராவது ஏதாவது சொன்னாங்க உடனே நீ யாருனு சொல்லிடுவேன் உன்னோட பொஷிஷன் ஜாப்ப நீ ஏத்துக்கனும் பரவாயில்லையா?” என்று கேட்க..
“அண்ணா..ப்ளீஸ்.. கேர் டேக்கர் ஜாப் எப்படி பட்டதுனு உங்களுக்கு தெரியும்ல..அப்புறம் எப்படி?” என்று அவள் கேட்க..
“அதனால தான் சொன்னது பேபி” என்று நிலா கூற..
“ஓகே அப்போ எனக்கும் ஒரு கண்டிஷன் இருக்கு..” என்றாள் அவள்..எல்லோரும் ஒரு சேர
“என்ன கண்டிஷன்?” என்று கேட்க..
“நான் யாருனு யாருக்கும் தெரிய கூடாது உங்களோட ப்ரண்ட்டா மட்டும் தான் நான் இருக்கனும் அப்படி நான் யாரு என்னானு சொன்னீங்கனாலோ? இல்ல காட்டிகிட்டாலோ அடுத்த நிமிஷம் உங்க எல்லாரையும் விட்டு நான் பிரிஞ்சு போய்கிட்டே இருப்பேன்.. இதுக்கு ஓகேனா நீங்க சொல்றதுக்கும் ஓகே” என்று கூறினாள்…
“உன்ன யாராவது ஏதாவது சொன்னா நாங்க எப்படி அமைதியா இருப்போம் பேபி?” என்றான் சாஹித்யன்..
“ப்ரண்ட்ஸ்ஸா நீங்க உங்க உரிமையை காட்டலாம் ஆனா என்னோட வேலையில யாரும் எதுவும் சொல்லக்கூடாது.. அதான்” என்றாள் மேதா..
“நீ பேசுறது கொஞ்சம் கூட சரி இல்ல மேதா உன்னை போய் யாரோ மாதிரிலாம் எங்களால நடத்த முடியாதுடா..உன்ன யாராவது ஏதாவது சொன்னா எங்களால தாங்க முடியுமா?” என்று கேட்டாள் நிலவினி..
“நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்” என்றுவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்..
அவளை சுற்றி அமர்ந்து கொண்டனர் அனைவரும்..
நீண்டநேரம் அமைதிக்கு பின் நிதின் பேச ஆரம்பித்தான்..
“இப்போ என்ன? நீ அந்த நடிகனுக்கு வேலை செய்யனும் நாங்க உன்னை வேலை வாங்கனும் அதானே வேணும் உனக்கு?” என்று கேட்க அவள் அமைதியாகவே இருந்தாள்..
“ஒகே..நாங்க அப்படி நடந்துக்குறோம்..நீ எங்கள விட்டு எங்கேயும் போககூடாது இங்கேயே தான் தங்கி இருக்கனும் ஒகேனா எங்களுக்கும் ஒகே..யோசிச்சு முடிவு சொல்லு நாளைக்கு இன்டர்வியூ” என்றுவிட்டு கிளம்ப போனான் நிதின்..
அவன் வாசலை நெருங்கும்போது
“சரி இங்கேயே தங்குறேன்” என்றாள் மேதா..
நின்றவன் திரும்பி எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து
“அதான் அவங்க ஒகே சொல்லிட்டாங்கல்ல நாளைக்கு whole officeம் எம்பிளாயிஸ் சேன்ஞ் பன்னுங்க.. அப்புறம் இன்டர்வியூ பண்ணலாம்..” என்று கூறினான் நிதின்..
எல்லோரும் சரியென மண்டையை ஆட்ட..
“அண்ணா ஓல்ட் எம்ப்ளாயிஸ்லாம்?” என்று மேதஷ்வினி கேட்க அவளை ஒரு பார்வை பார்த்தவன்..
“தெரியும் மேடம்.. அவங்கள வேலையை விட்டுலாம் எடுக்கல..ஜஸ்ட் சிக்ஸ் மன்த்ஸ் வேற ப்ளேஸ்ல ஒர்க் பண்ண போறாங்க அவ்ளோதான்..உன்ன பத்தி எனக்கு நல்லாவே தெரியும்” என்றுவிட்டு சென்றுவிட்டான்..
“இப்படி ஒரு வேலை செஞ்சே ஆகனுமா பேபி?” என்று நிலவினி கேட்க..
“நீங்க என்ன கேட்டாலும் வாயில இருந்து ஒரு வார்த்தை வாங்க முடியாது..ஏதோ முடிவோட அழுத்தமா இருக்கா..இல்லனா அண்ணா கேட்டப்பவே சொல்லி இருப்பாளே..நாம பேசுறதே வேஸ்ட் அவ நினைச்சது நடக்கட்டும் அதை செய்யலாம் வாங்க..வாங்க போலாம்” என்று கத்திவிட்டு நிலவினியையும் சாஹித்யனையும் இழுத்து சென்றாள் அருந்ததி..
போகும் அவர்களையே பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தவள் கண்கள் சிவந்து கலங்கியது..
அன்று அவள் செய்த சத்தியம்
நினைவுக்கு வந்தது..
“நீங்க வேணா பாருங்க அவர் பெரிய நடிகராவும் சிங்கராவும் ஆகத்தான் போறாரு எங்க இந்தியாக்கு வரத்தான் போறாரு” என்று இவள் கூற..
“அவன் எங்கே வேணாலும் வரட்டும் ஆனா அங்கேயும் அவனுக்கு அம்மாவால டெத் த்ரட் வந்தா?” என்று கேட்டான் ரியோட்டோ..
சிறிது நேரம் யோசித்தவள்..
“ராஷி இந்தியாவுல எங்கே வந்தாலும் சரி நான் அவர்கூட எப்பவும் இருப்பேன் அவரை பத்திரமா பார்த்துப்பேன்” என்றாள்..
“ஓ.. ரியலி..டோன்ட் மேக் ஜோக் பேபி.. நீ வேலைக்கு போய்டுவ நீ என்ன அவன் அசிஸ்டென்ட் டா எப்பவும் அவனோடவே இருக்குறதுக்கு?” என்று ரியோட்டோ கேட்க
“ஐ ப்ராமிஸ்.. அவரு இந்தியா வந்தா கண்டிப்பா நான் அவர்கூட இருந்து அவரை சேஃப் பண்ணுவேன்.. நீங்க கவலைபடாதீங்க.. உங்களையும் சேர்த்து நான் சேஃப் பண்ணுவேன்.. நீங்க கவலைபடாதீங்க.. என் ப்ராமிஸ்ஸ நான் எப்பவும் காப்பாத்துவேன்” என்று கூறிவிட்டு கிளம்பியது நியாபகம் வந்தது அவளுக்கு..
தன் நண்பர்களை பற்றி யோசித்தாள்..
இப்படிப்பட்ட நண்பர்களை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்வதை தவிர அவளால் என்ன செய்துவிட முடியும்..
மறுநாள் காலையில் நிதின் சொன்ன அனைத்து மாற்றங்களும் நடந்தது மேதாவின் மேல் கோவம் இருந்தாலும் அவள் கேட்டு கொண்டபடி எல்லாம் சேர்ந்தே செய்தனர் பழைய வேலையாட்கள் மாற்றப்பட்டு புதிய வேலையாட்கள் நியமிக்க பட்டனர்.. புதிய வேலையாட்களின் உதவியோடு உலக புகழ்பெற்ற ஜப்பானிய நடிகர் தங்குவதற்கு ஏற்றதாக வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது..
கூடவே அவருக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டது..
ஏன் எதற்கு என்று தெரியாவிட்டாலும் அவளது வார்த்தைக்காக அனைத்தையும் ஒரே இரவில் மாற்ற சொன்ன அண்ணன்.. தனக்கு எதுவும் மனம் வருந்தும்படி ஆகிவிட கூடாது என பார்த்து பார்த்து செய்யும் நண்பர்கள்.. இதைவிட வேறு என்ன வேண்டும் அவளுக்கு?
ஆனால் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு அந்த நடிகனுக்கு அவள் வேலை செய்ய வேண்டும்? அப்படி அவன் என்ன முக்கியமானவன் அவளுக்கு?
‘எனக்கு தெரியும் இப்போ அவருக்கு நான் யாரோ ஒருத்தி.. மேபி அவரோட லட்சக்கணக்கான ஃபேன்ஸ்ல நானும் ஒருத்தி.. ஆனா.. எனக்கு.. அவருதான் லைஃப்..
அவருக்கு என் லவ் தெரியுதோ இல்லையோ? அவரோட நினைப்பு போதும்.. கண்ணனோட மீரா மாதிரி அவர நினைச்சுட்டே நான் வாழ்ந்துடுவேன்.. அப்பா இருந்த வரைக்கும் என் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து என் கல்யாண வாழ்க்கையை பத்தி பேசல.. ஹி க்நோ வெரி வெல் அபெளட் மீ..’ என்று மனதில் எண்ணியவள் தன் தந்தையை மிகவும் மிஸ் செய்தாள்.. ஆனால் அந்த தந்தை தன் மகள்களுக்கு நல்ல வாழ்க்கை அமையவில்லையே என ஏங்கும் நேரம் தொழில்துறை எதிரிகளால் வீழ்த்தப்பட்டார் என்பது அவள் அறிந்தால்..