Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 26

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 26

அத்தியாயம் – 26

மறுநாள் தனது சகோதரனை காண சென்னை புறப்பட்டு சென்றாள் மேதா.. ஆனால் அந்த கட்டிடத்தின் வாட்ச்மேன் புதியதாக மாற்றப்பட்டு இருந்ததால் அவருக்கு மேதாவை தெரியாது அதனால் கேட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டாள்..
அதன்பின் நிதினின் தங்கை என்று கூற அவளது சாதாரண தோற்றமும் பழைய ஸ்கூட்டியும் அவரை நம்பவிடவில்லை..
அதனால் அவர் அவளை உள்ளே விட மறுத்தார்..
“அண்ணா நிதின் சார்க்கு நான் சொந்தக்கார பொண்ணுதான்..நீங்க வேணா அவருகிட்ட கேட்டு பாருங்க..ப்ளீஸ் அர்ஜென்ட்டா பேசணும்” என்று அவள் கெஞ்ச.. அவரோ
“என்னமா நீ சொந்தகார பொண்ணுனு சொல்ற அவரோட ஃபோன் நம்பர் இல்லையா ஃபோன் பண்ணி பேசுங்க..பாக்க ஏழைவீட்டு பொண்ணு மாதிரி இருக்க உன்னை நம்பி நான் எப்படி உள்ள விடுறது? சார் வெளியே வரும்போது சொல்றேன்மா அவரு ஓகே சொன்னா உள்ளே விடுறேன்.. உங்க பேரு ஃபோன் நம்பர் எழுதி கொடுத்துட்டு போங்கமா” என்று ஸ்ரிக்ட்டாக கூறிவிட..
அவளோ சிறிது நேரம் யோசித்தவள் வேறு வழி இல்லை வேஷம் போட்டாச்சு அதுக்கு ஏத்தமாதிரி நடிக்க வேண்டியதுதான் என்று எண்ணியபடி ஒரு பெருமூச்சை விட்டவள்.. பழைய ஃபோன் எடுத்து வராத தன் மடத்தனத்தை எண்ணி நொந்தவள்
தன்னிடம் இருந்த நோட் பேடை எடுத்து அவளது பெயர் மற்றும் அவள் புதிதாக வாங்கி இருந்த ஃபோன் நம்பரை எழுதி கொடுத்தவள்..
“அண்ணா ரொம்ப அவசரமா பேசணும் மறக்காம சொல்லுங்கனா” என்றபடி அங்கிருந்து புறப்படபோகும் நேரம் பால்கனிக்கு வந்த நிதினின் மனைவி அங்கிருந்து குரல் கொடுத்தாள்..
“மேதா” என்று அவளது குரல் கேட்டு வாட்ச்மேன் மேதா இருவரும் நிமிர்ந்து பார்க்க
வாட்ச்மேன் அவருக்கு சல்யூட் அடிக்க
“அண்ணி” என்றாள் மேதா..
அவரோ இரு வர்றேன் என்பது போல் சைகை செய்தவள் உள்ளே ஓடினாள்..அவளை ஷாக் அடித்தது போல் பார்த்தார் வாட்ச்மேன்..
“ஏம்மா அவங்க உங்க அண்ணியா?” என்று கேட்க..
‘அச்சோ உளறிட்டோமே’ என்று எண்ணியவள்
“ஆ..ஆமானா தூரத்து சொந்தம்” என்று கூற..
வாட்ச்மேன் ரூமில் ஃபோன் அடித்தது..
எடுத்தவர் நிதினின் மனைவி என்றதும்..
“ம்மா சொல்லுங்கமா” என்றார்..
“அவங்கள உடனே உள்ள அனுப்புங்க..யாருனு தெரியாம அவங்கள வெயிட் பண்ண வெச்சு இருக்கீங்க?” என்று கூற
“இதோ உடனே அனுப்புறேன்மா.. அவங்க யாருனு எனக்கு தெரியாதுமா அதான் நிக்க வெச்சுட்டேன்” என்று கூறி மன்னிப்பு கேட்டார்..
அப்போது தான் அவர் புதிதாக மாற்றப்பட்ட வாட்ச்மேன் என்பதை உணர்ந்தவள்
“சரி உடனே அவங்கள உள்ளே விடுங்க” என்றபடி ஃபோனை வைத்தவள் வாசலுக்கு வர ஆரம்பித்தாள்..
அதற்குள் மேதாவிடம் “அம்மா..நீங்க யாரோனு நினைச்சு உள்ள விடாம பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க மா” என்று அவர் கேட்க..
லேசாக சிரித்தவள்..
“உங்களுக்கு தெரியாதுதானேனா விடுங்க.. நீங்க உங்க வேலைய கரெக்டா தான் செஞ்சீங்க.. அதுக்கு எதுக்கு மன்னிப்புலாம் விடுங்கனா” என்றுவிட்டு அவள் உள்ளே செல்ல.. அதற்குள் நிதினை எழுப்பி விட்டு அவனது மனைவியும் வெளியே வந்துவிட்டாள்..
“வாட்ச்மேன் அண்ணா அவ யாருனு நினைச்சீங்க?” என்று கோவமாய் கேட்டபடி வர அவரோ பயந்துவிட்டார்..
“அண்ணி” என்று அவரை பார்வையால் தடுத்தவள்..
“அவரு வேலைக்கு புதுசுல நான் உங்க சொந்தகார பொண்ணுனு தெரியாதுல விடுங்க.. அவரு அவரோட வேலையை கரெக்டா செஞ்சாரு அதுக்கு திட்டுவீங்களா?” என்று மேதா அவருக்கு சப்போர்ட் செய்து பேச அவளோ அமைதியாகிவிட்டாள்..
“நீ திருந்தவே மாட்டடி.. வா உள்ள” என்றபடி உள்ளே அழைத்து செல்ல வாட்ச்மேன் பதட்டமாய் நிற்க..
“கவலைபடாதீங்க அண்ணா.. ஒன்னும் ஆகாது.. அவங்க திட்ட வந்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்று அவள் தன்மையாய் கூற..
“அம்மா நீங்கதான் என்னை மன்னிக்கனும்” என்றார்..
“அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க போங்க” என்றபடி அவள் அவர் சென்ற பின்னரே உள்ளே சென்றாள்..
இதையெல்லாம் வாசலில் நின்று பார்த்துக்கொண்டு இருந்த நிதின்..
‘இவள திருத்தவே முடியாது’ என்று எண்ணியபடி உள்ளே செல்ல அவளோ அமைதியாக உள்ளே சென்றாள்..
நிதினின் மனைவி அதற்குள் அவளுக்கும் நிதினுக்கும் டீ எடுத்து வந்தாள்..

“என்னமா மேதா.. இவ்ளோ காலையில வந்து இருக்க? நீ ஓகே தானே? உடம்பு சரியில்லையாடா? ஒரு ஃபோன் பண்ணா நானே வந்து இருப்பேனே?” என்று அவளது அண்ணி ஆதரவாய் கேட்க..

“அச்சோ அதெல்லாம் இல்ல அண்ணி அண்ணாகிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதான் வந்தேன்.. வேற எதுவும் இல்ல.. நான் நல்லா இருக்கேன்..நீங்க கவலைபடாதீங்க” என்று கூற அவளோ..
“இல்லடா..ஏதோ டல்லா இருக்கமாதிரி தெரியுறே?” என்று அவளுக்கு ஜுரம் இருக்கிறதா என்று செக் செய்ய..
“அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி நல்லாதான் இருக்கேன்”என்று அவளை சமாதானம் செய்தவளுக்கு ஏற்கனவே ஏதோ நடக்க போவது போலதான் தோன்றியபடி இருந்தது.. அதே யோசனையோடுதான் தன் அண்ணனனை பார்க்க வந்தாள்.. அவனுக்கும் ஏதோ போலவே இருந்தது ஆனால் மனைவியின் பதட்டத்தை பார்த்தவன் அவனது பதட்டத்தை மறைத்துக்கொண்டான்..
“அவதான் ஒன்னுமில்லனு சொல்றாளேமா.. நீ ஏன் டென்ஷன் ஆகுற.. காலையிலேயே வந்து இருக்கா அவளுக்கு சாப்பிட ரெடி பண்ணு..புள்ள பசில இருப்பா” என்று கூற அவளும்..
“இதோ உடனே ரெடி பண்ணிடுறேன்.. நீ பேசுடா” என்றபடி அவளுக்கு சமைக்க சென்றாள்..
அண்ணன்தான் ஏதோ உறவுமுறை அவளுக்காக பரிதவிக்கிறான் என்றால் அவளது அண்ணி அவளை தாயைவிட ஒருபடி மேலே தாங்குகிறாளே என்று எண்ணியவளுக்கு கண்கள் கலங்கியது.. அவளது கலங்கிய முகத்தை பார்த்தவன்..
“என்ன அம்மு என்னாச்சு? நீ இப்படி எமோஷனல் ஆகுற ஆள் இல்லையே?” என்று கேட்க..
“அம்மா இருந்திருந்தா இப்படி தான் பார்த்துப்பாங்களானு யோசிச்சேன்.. அதான் லைட்டா எமோஷனல் ஆகிட்டேன்னா..வேற ஒன்னுமில்ல.. உங்ககிட்ட கொஞ்சம் அவசரமா பேசணும்னா அதான் மார்னிங்கே வந்துட்டேன்..” என்று கூற..

“சொல்லுடா” என்றான் நிதின்..
“அ..அண்ணா.. அது..அதுவந்து.. நா..நான் கேர்டேக்கரா போறத ஒரு..ஒரு மாசம் தள்ளி வைக்கமுடியுமா? ப்ளீஸ்” என்று தயங்கியபடி கேட்க..
அவளை பார்த்தவன்..

“ஆல்ரெடி அவரு ஆன்தி வே அம்மு.. இப்போ போய் ஆள் ஒரு மாசம் கழிச்சுதான் வருவாங்கனு சொல்ல முடியுமா என்னால? என்ன பேசுற நீ? அப்படி என்ன வேலைனு சொல்லு ஒரு மாசத்துக்கு?” என்று அவன் கேட்க..
“இல்லனா.. நான் முடிச்ச ப்ராஜெக்ட் ல ஏதோ கோடிங் தப்பாகி பெரிய ப்ராப்ளம் ஆகிடுச்சு..அது எனக்கு மட்டும் தான் தெரியும்.. அதான் அவங்க கால் பண்ணி பெரிய ப்ராப்ளம் நீங்க இங்க வந்தே ஆகணும்னு சொல்லிட்டாங்க.. இல்லனா கேஸ் ஃபைல் பண்ணிடுவாங்க அதான்னா.. எனக்கு ஒரு ஒரு மாசம் டைம் கொடுத்தா நான் போய் ஷர்மா க்கு சொல்லி கொடுத்துட்டு வந்துடுவேன்.. அப்புறம் நான் இங்க இருந்து மேனேஜ் பண்ணிப்பேன்..ப்ளீஸ் னா” என்று அவள் கேட்க..

சிறிது நேரம் யோசித்தவன்..
“நாம வேணா அவங்களுக்கு லாஸ்க்கு பே பண்ணிடலாமேமா”என்று கேட்க..

“இல்லனா இது நான் கான்ட்ராக்ட் சைன் பண்ணி இருக்கேன்.. என் கெரியர்ல ப்ளாக் மார்க் ஆகிடும்னா.. பே பேக்லாம் வேணாம்னா.. ப்ளீஸ்.. நான் அவருக்கு ஒன் மன்த்க்கு ஒரு ஆள ஏற்பாடு பண்ணிட்டேன்..நீங்க கொஞ்சம் பேசி அவரை எனக்கு பதிலா ஒரு மாசத்துக்கு அப்பாயிண்ட் பண்ணா போதும்னா..” என்று கேட்க..
சிறிது நேரம் யோசித்தவன்..
“நீ யோசிக்காம எதையும் பேசமாட்ட ஐ க்நோ.. பட் நீ இங்க இருந்தே ஷர்மா க்கு சொல்லி கொடுக்கலாமே..போய்தான் ஆகணுமா?” என்று கேட்க..
“முதல்ல போய் எரர் ஃபைன்ட் அவுட் பண்ணனும்னா.. அப்புறம் தான் அவனுக்கு சொல்லி கொடுக்கனும்.. அதுக்கு நேர்ல போய்தான் ஆகணும்னா” என்று கூற..
“ம்ம்..ஓகே.. நீ முடிவு பண்ணா அது கரெக்டா தான் இருக்கும்.. ஓகே அவரை எனக்கு இன்ட்ரோ பண்ணு எப்போ டிக்கெட் போடட்டும்.. நானும் அவரை வெல்கம் பண்ண போகணும் வேற..” என்று கூற..
“டிக்கெட்லாம் வேணாம்னா.. ஷர்மா வந்து இருக்கான் அவனோட ப்ளைட் கொண்டு வந்து இருக்கான் அவனோடவே கூட்டிட்டு போக வெயிட் பண்றான்..மே பி அவர் வரும்போது நான் கிளம்புவேன்” என்று கூற..
“அப்போ எப்படிடா.. நான் வர்ற முடியாதே?” என்று கூற..
“அண்ணா..நான் ஒன்னும் சின்னபிள்ள இல்லனா.. ஷர்மாதான் கூட்டிட்டு போகபோறான்.. நீங்க அவரை வெல்கம் பண்ணுங்கனா..நான் போய்க்குறேன்” என்று கூற..
“என்னை இப்படி ஒரு சிக்கல்ல மாட்டிவிட்டு கிளம்புறேன்னு அசால்ட்டா சொல்றடா.. எனிவேய்ஸ்.. ஐ வில் மேனேஜ்.. நீ பத்திரமா போய்ட்டு முடிஞ்சவரை சீக்கிரம் வந்துடுடா” என்று கூற..

“ஷ்யூர்னா..முடிஞ்சவரை சீக்கிரமே வந்துடுவேன்” என்றவள்.. சிறிது தயக்கத்திற்கு பிறகு..
“அ..அண்ணா” என்று கூற..
“என்னடா”
“நீங்க ஏர்போர்ட் போக வேண்டாம்.. ” என்றாள்..
எப்போதும் யாராக இருந்தாலும் தங்களது நாட்டிற்கு வருபவரை தாங்களே போய் அவர்களை ஏர்போர்ட்டில் சந்தித்து வரவேற்பது தான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என சொல்பவள் இன்று அவளது மனதுக்கு பிடித்தவனை போய் வரவேற்கவேண்டாம் என்கிறாளே என்று அவளை ஆச்சர்யமாய் பார்த்தவன்..

“இல்ல அம்மு..அவரை நாமதானே போய் வெல்கம் பண்ணனும்?” என்று கூற.. இல்லனா.. நீங்க போக வேண்டாம் உங்க மேனேஜரை அனுப்புங்க போதும்.. அவரு கொஞ்சம் கோவக்காரர் ஏதாவது பேசிட்டா கஷ்டம் ப்ளீஸ் நீங்க நாளைக்கு போய் பாருங்க” என்று கூற.. முதல் சந்திப்பு இருவருக்கும் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டும் என எண்ணியவள் அவளது மகிழ்ச்சியை பற்றியும் யோசித்து இருக்கலாம்..
அவளை பார்த்தவன்..
“சரிடா.. வா சாப்பிடலாம்” என்று கூற..
“ஆமாம்னா நான் போய் பேக் பண்ணனும்.. உடனே வேற கிளம்புறது.. ஹான்.. இன்னொரு விஷயம்னா நான் தனியா தங்கபோறது இல்ல ஆபீஸ்லேயே தான் தங்கபோறேன்..சோ.. என்னை கான்டாக்ட் பன்றது கஷ்டமாகலாம்.. அதனால எதும்னா மெஸேஜ் பண்ணுங்க.. இல்லனா மெயில் போடுங்க..கால் எடுக்க ஆகாது அங்க ரெஸ்டிரிக்ஷன் அப்படி அதான்..” என்று கூற..

“நம்மகிட்ட இல்லாத வேலையா? யாருக்கோ நீ கைகட்டி நின்னு பதில் சொல்லனுமா? கேட்டா தத்துவமா பேசுவ சரி..நான் பார்த்துக்குறேன்..நீ போய்ட்டு சீக்கிரம் வரப்பாருமா” என்றபடி அவளை அழைத்து சென்றான்..
உண்டுவிட்டு கிளம்பும்போது அவள் அவளுக்கு பதிலாக நியமித்த ஆள் பற்றிய விவரங்கள் அனைத்தும் அவனிடம் கூறியவள் கிளம்ப கணவன் மனைவி இருவருக்கும் ஏதோ உறுத்த..
“மேதா பார்த்து பத்திரம்” என்றனர்.. சிரித்தவள்..
“சரிங்கண்ணா..சரிங்கண்ணி..” என்றுவிட்டு கிளம்பிவிட்டாள்..
போகும்போது வாட்ச்மேனிடமும் பாசமாய் பேசிவிட்டே கிளம்பினாள்..

அவளது வீட்டுக்கு போனவள் தனது உடைமைகளை எடுத்து வைக்க அப்போது தான் உள்ளே வந்தான் அவளது தோழன் ஷர்மா..
“கிளம்பலாமா?” என்று கேட்டபடி அவளது பேக்கிங்க்கு ஹெல்ப் செய்ய..
“ஷர்மா.. ஒரு ஹெல்ப்டா” என்று கேட்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *