அத்தியாயம் – 28
அந்த ஹோட்டல் ரூமை டிசைன் செய்த நிதினின் தங்கையை பார்க்க முடியுமா? என ஆராஷி கேட்க..
அவள் இப்போது ஊரில் இல்லை வேலை விஷயமாக வெளிநாடு போய் இருப்பதாக சொன்னான் நிதின்..மேலும் அவனை அடுத்த நாள் ஊட்டிக்கு கூட்டி சென்றான்.. அவனது ஷுட்டிங் அங்குதான் அதனால் அவனை ஊட்டி அழைத்து செல்வதாக ப்ளான்..
மறுநாள் கிளம்பும்முன் அந்த அறையை அங்குலம் அங்குலமாக புகைப்படம் எடுத்துக்கொண்டான்.. அவன் கிளம்பும் சமயம் அங்கு போலீஸ் வந்து இருந்தது.. அந்நேரம் அங்கிருந்த நிதினிடம் ஏதோ பேச இவனுக்கு ஏதும் புரியாததால் வேடிக்கை பார்த்தபடி நிற்க..
போலீஸிடம் பேசி விட்டு யாருக்கோ ஃபோன் செய்தவன் உடனடியாக பாடிகாட்ர்ஸ் அதிகமாக வேண்டும் என்று கூறிய அடுத்த பதினைந்து நிமிடங்களில் இரண்டு வாகனங்களில் வந்து சேர்ந்தனர் பாடிகார்ட்ஸ்..
அவர்களுக்கு பாதுகாப்பு பணியை பற்றி விவரித்தவன் தானே முன்னின்று ஆராஷியை அழைத்து சென்றான்.. கூடவே சிறிது பதட்டமாய் வேறு இருந்தான் ஏனெனில் மேதா அவனது ஃபோனை எடுக்கவில்லை..அதனால் சிறிது பதட்டம் அவனை தொற்றிக்கொண்டது..
அதுவரை அமைதியாக இருந்த ஆராஷி..
தனக்காக ஒரு ஆண் மேனேஜர் நியமிக்கப்பட்டு இருப்பதை பார்த்தவன் நிதினிடம் வினவினான்..
(டிரான்ஸ்லேட்டட்)
“ஏதாவது ப்ராப்ளமா? எனக்கு யாரோ ஒரு லேடி தானே மேனேஜர் பர்சனல் பி.ஏ னு ஷரத் சார் சொல்லி இருந்தார்.. பட் நீங்க ஏன் ஆள் சேன்ஞ் பண்ணி இருக்கீங்க?” என்றான் ஜாப்பனீஸ்ல..
அதை அவனுக்காக மேதா அப்பாயிண்ட் செய்தவர் ட்ரான்ஸ்லேட் செய்ய அதை கேட்ட நிதின்..
‘இந்த மேதா குட்டிக்கு இதே வேலையா போச்சு’ என்று மனதோடு புலம்பியவன்..
“இல்ல சார் உங்களுக்காக அப்பா அப்பாயிண்ட் பண்ண ஆள் அவங்கள கொரோனா குவாரன்டைன்ல வெச்சு இருக்காங்க அவங்க சைனால இருந்து வந்ததால அவங்கள உடனே அனுப்ப முடியாதுனு சொல்லிட்டாங்க.. அதான் அவங்க குவாரன்டைன் முடிஞ்சு வரவரைக்கும் இவரை உங்களுக்கு மேனேஜர் கம் பர்சனல் பி.ஏ வா அப்பாயிண்ட் பண்ணேன் சார்.. அவங்க வந்ததும் இவர் போய்டுவார்” என்று நிதின் கூற அதை கேட்ட ஆராஷி..
“ஓஓ.. நோ இஷ்யூஸ்.. அவங்க மெதுவாவே வரட்டும்.. அவங்க வரலைனாலும் ஓகேதான்.. பிகாஸ் எனக்கு லேடி கிட்ட செட் ஆகாது மோஸ்ட்லி இவங்க ஷரத் சார் செலெக்ஷன்னு தான் நான் அமைதியா இருந்தேன்..” என்றான்..
“இல்ல சார் அவங்க கண்டிப்பா வந்துடுவாங்க அவங்கள உங்களுக்காக ஸ்பெஷலா எங்க அப்பா அப்பாயிண்ட் பண்ணார் அதனால் அவங்கள கேன்சல் பண்ண மாட்டேன்.. ஏன்னா எங்க அப்பா யோசிக்காம ஒரு முடிவ எடுக்க மாட்டார்” என்று கூற அதை கேட்டவன் தோளை குலுக்கி
“ஓகே.. நோ இஷ்யூஸ்.. கேன் ஐ டேக் சம் ரெஸ்ட்” என்று கேட்டபடி தூங்க போக அப்போது தான் அவனுக்கு அவன் வாங்கிய லாக்கெட் நினைவு வந்தது..அதை பற்றி எப்படி என்ன சொல்லி அவனிடம் கேட்பது என்று எண்ணியபடி சென்றான்..
அவன் உறங்கி எழும் வேளையில் காவல்துறை அதிகாரிகள் வந்திருந்தனர்.. அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தனர் நிதின் மற்றும் அவனது பட்டாளம்..
“என்ன சார் சொல்றீங்க? அந்த பொண்ணு யார் என்னானு தெரியுமா? எந்த ஊர்? இப்போ அவங்க எங்கே?” என்று கேட்க..
“இல்ல சார் அந்த பொண்ணு பத்தின டீடெயில்ஸ் எதுவுமே எங்களால எடுக்க முடியல ஈவன் சிசிடிவி ஃபுட்டேஜ் கூட கிடைக்கல.. ஆனால் கொல்ல வந்தவங்க அந்த ஜாப்பனீஸ் ஆக்டரதான் கொல்ல வந்து இருக்காங்க அதனால அவருக்கு புரெக்ட்ஷன் பலமா போட சொல்லி ஆர்டர் சார்” என்று இன்ஸ்பெக்டர் கூற..
“சரி சார் நான் பாதுகாப்ப இன்னும் பலப்படுத்துறேன்” என்று கூறிய நிதினிடம்..
“அண்ட் எங்களுக்கு அவர விசாரிக்க அனுமதி வேணும் சார்.. அந்த பொண்ண பத்தி அண்ட் யார் அவர கொல்ல ட்ரை பன்றாங்கனு அவர விசாரிச்சாதான் தெரியும்.. இல்லனா எங்க வேலைக்கு பிரச்சினை ஆகிடும் சார்” என்று கேட்க..
“சார் அவருக்கு இங்க பாதுகாப்பு ஏற்பாடு பண்ணுங்க ஆனா officialஆ அவர விசாரிக்க வேணாம் சார் அன்அபீஷியலா விசாரிங்க சார் அதுக்கு நான் அவர்கிட்ட பேசுறேன்.. அவருக்கு டிரான்ஸ்லேட்டர் அரேஞ்ச் செஞ்சு இருக்காங்க எங்க சிஇஓ.. சோ அவர் மூலமா தான் நீங்க விசாரிக்கமுடியும்” என்று நிதின் கூற..
அவர்களும் சரியென கூற..
அவர்களுடன் புறப்பட்டான் நிதின் ஊட்டிக்கு..
சென்னையில் இருந்தது போலவே ஊட்டியில் ஆராஷி தங்கும் அறை சகல வசதியுடனும் அழகிய வேலைப்பாடுடனும் இருந்தது.. அந்த குளிர் காற்றில் அந்த அறையின் அழகில் அப்படியே மெய்மறந்து போனான் ஆராஷி..
வெளியே இருந்து பார்ப்பதற்கு சாதாரண ஒரு மலையாளியின் வீடு போலவே ஓடு போட்டு கட்டப்பட்டு இருந்தது ஆனால் உள்ளே சென்றவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது..
ஃப்ளோர் முழுவதும் கடல் நீர் போலவும் அதில் நடுவில் பியானோவின் சரங்கள் போலவும் சுற்றிலும் கண்ணாடி அறை அதன் நடுவில் ஒரு அழகான ஊஞ்சல்.. அதற்கு நடந்து செல்லவும் பியானோ போலவே இருந்தது.. கருப்பும் வெள்ளையும் பியானோ டிசைன் நடைபாதை..தண்ணீர் தெளிந்த நீலம் கலரில் அலையடிப்பது போலவும் அதில் சின்ன சின்ன மீன்கள் நீந்துவதுபோலவும் அமைக்கப்பட்டு இருந்தது.. கண்ணாடியை தாண்டி பார்த்தால் பசுமை போர்த்திய மலைப்பகுதி.. அத்தனையும் பார்க்க ஏதோ தேவலோகத்தில் இருப்பதுபோல இருந்தது அவனுக்கு..
அங்கு இரண்டு வகை செஃப் அவனுக்காக இருந்தனர்.. ஒருவர் இந்தியா மற்றும் பலதரப்பட்ட நாடுகளில் அந்நாட்டின் ஸ்பெஷல் சமையலை சமைப்பவர்.. இன்னொருவர் ஜப்பானிய முறை சமையல் மட்டுமே செய்பவர்.. இதையெல்லாம் பார்த்தவனுக்கு தான் ஒரு புகழ்பெற்ற நடிகனாகவோ இல்லை பாடகனாகவோ இல்லாமல் இருந்திருந்தால் இதெல்லாம் என்னவென்று கூட தெரியாதே என எண்ணியபடி அந்த ஊஞ்சலில் அமர்ந்தான்..
அன்னைமடி போன்ற மென்மையான பஞ்சு போன்ற ஊஞ்சலில் அமர்ந்து சிறிது நேரம் ஆடியவனுக்கு தூக்கம் வர அதிலேயே தூங்கிபோனான்..