அத்தியாயம் – 29
மறுநாள்..
ஏனோ கனவிலும் தன்மேல் மோதிய பெண்ணின் நினைவே அவனுக்கு வந்தது.. அந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் அவனது கனவிலும் அவனை தொடர்ந்து கொண்டே இருக்க.. தூக்கம் கலைந்து எழுந்துவிட்டான்..
எழுந்தவன் ரிப்ஃப்ரஷ்ஷாகி வந்தவன் அதற்குள் வந்துவிட்ட கிரீன் டீயை எடுத்து சுவைத்தபடி அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து காலை வேளையில் அந்த அறையின் அழகை நிதானமாக ரசித்துக்கொண்டு இருந்தான்..
அப்போது கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தனர் நிதின் உடன் அவனது டிரான்ஸ்லேட்டர்.. மற்றும் ஒரு போலீஸ் உடை அணிந்த ஆபீசர்.. அவர்களை பார்த்ததும் ஜாப்பனீஸ்ல காலை வணக்கம் சொன்னான் ஆராஷி..
“குட் மார்னிங் ஆல்” என்று கூற..
பதிலுக்கு குட் மார்னிங் சொன்ன நிதின்..
“ஹி ஈஸ் ஏ ஏர்போர்ஸ் போலீஸ் ஆபீசர்.. ஹி வான்ட் சம் இன்வஸ்டிகேஷன் அபெளட் யுவர் ஏர்போர்ட் மர்டர் அட்டாக்.. ப்ளீஸ் கோ ஆபரேட் ஹிம்” என்று கூற..
“வாட்” என்று அதிர்ந்து எழுந்து நின்றான் ஆராஷி..
“ஹலோ சார்..ஐயம் சுஷாந்த் சிங் ஐபிஎஸ் ஃப்ரம் சிஐஎஸ்எஃப் இன்டியன் ஏர்போர்ஸ் சவுத் ஸோன் செக்டார் இன்ஸ்பெக்டர்.. யூ ஆர் மிஸ்டர்.ஆராஷி ஷிமிஜு ஃப்ரம் ஜப்பான்.. ஆம் ஐ கரெக்ட்? ”(hello sir, I’m sushanth singh from CISF indian airforce south zone sector inspector.. u are mr.aarashi shimizu from Japan.. am i correct?) என்றார் அந்த உயர் அதிகாரி..
“எஸ் ஆஃபீசர்.. ஐயம் ஆராஷி ஃப்ரம் ஜப்பான்.. ஆர் யூ ஸ்யூர் தட் அட்டாக் ஈஸ் ஃபார் மீ.. ஐ டோன்ட் க்நோ ஈவன் இட்ஸ் அட்டாக்..ஐ ஜஸ்ட் திங்க் தே ஆர் லவ்வர்ஸ் போத் ஆர் ப்ளேயிங் தட் டைம் ஷீ ஆக்சிடென்டிலி ஸ்கிட் ஆன் மீ லைக் தட் ஐ தாட் சார்..ஜஸ்ட் நவ் ஒன்லி ஐ க்நோ இட்ஸ் மர்டர் அட்டாக்”(yes.. officer.. I’m aarashi from Japan.. are you sure that attack is for me..I don’t know even its attack.. i just think they are lovers both are playing that time she accidentally skid on me like that i thought sir.. just now only i know it’s murder attack) என்று அவன் கூற..
எல்லோருக்கும் அது அதிர்ச்சியே.. ஏனெனில் யாருக்குமே அப்படி ஒரு கொலை தாக்குதல் சம்பவம் நடந்ததற்கான அறிகுறியே தெரியவில்லை.. அந்த பெண் யார் என்பதும் தெரியவில்லை..
என்பது தான்..
“எஸ் சார்..இட்ஸ் ஃப்யூர்லி மர்டர் அட்டாக் ஃபார் யூ ஒன்லி.. ஆக்சுவலி தட் கேர்ள் சேவ்டு யூ..
தட் மர்டர் அட்டாக் ஃப்ரம் யுவர் மதர் சைட் சார்.. தே அரேஞ்ச் இன்டியன்ஸ் மெர்சினரி(கூலிப்படை) அட் தி பர்ஃபெக்ட் டைம் ட்டூ மர்டர் யூ..ஈஸ் தேர் எனி பிக் இஷ்யூ சார் ஃப்ரம் யுவர் ஃபேமிலி சைட்?” என்று அவர் கூற ..
“யா..சம் இஷ்யூஸ் ஈஸ் தேர்.. பட் ஷீ டிட் திஸ் மச் ஐ டிடின்ட் எக்ஸ்பெக்ட் திஸ்.. ஐ வில் மேனேஜ் திஸ் சார்.. மே ஐ க்நோ தட் கேர்ள் டீடெயில்ஸ் ப்ளீஸ்.. ஐ வாண்ட் ட்டூ தேங்க் ஹர்.. அண்ட் ஆல்சோ ஐ வாண்ட்டூ க்நோ ஹவ் ஈஸ் ஹர் ஹெல்த்?” என்று ஆராஷி கேட்க..
“தட்ஸ் தி ப்ராப்ளம் ஃபார் அஸ் ஆல்சோ சார்.. பிகாஸ் வி கேனாட் ஏபில் ட்டூ கெட் ஏ ஸ்மால் இன்ஃபர்மேஷன் அபெளட் ஹர்.. வி ட்ரைட் வித் மெனி வேய்ஸ் பட் டில் வி டிடின்ட் கெட் எனி இன்ஃபர்மேஷன் அபெளட் ஹர் சார்..தட்ஸ் வொய் வி கேம் ஹியர் ட்டூ ஆஸ்க் யூ சார்?” என்று அவர் கூற..
(டிரான்ஸ்லேட்டட்)
“எனக்கு அது மர்டர் அட்டாக்னே நீங்க சொல்லி தான் தெரியும் சார்.. நான் அந்த பொண்ணு முகத்தைகூட பார்க்கலை.. என்மேல வந்து விழுந்துட்டாங்கனு தான் நினைச்சேன்.. ஆனா..ஆனா அவங்க என்னை காப்பாத்தி இருக்காங்கனு இப்போ நீங்க சொல்லி தான் தெரியுது..நான் அவங்க பின்னாடி தான் பார்த்தேன் சார் முகத்தை பார்க்கலை”
“அது பக்கா மர்டர் அட்டாக் சார்.. ஏன்னா கூலிப்படை பையனை நாங்க தேடிட்டு இருக்கோம்..அந்த பையனோட பாஸ் பெரிய ரவுடி அண்ட் கொலைகாரன் சார்.. அவங்க உங்கள டார்கெட் பண்ணி இருக்காங்கனா கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் சார்.. அவங்க டார்கெட்ட அவ்ளோ சீக்கிரம் அவங்க விடமாட்டாங்க.. உங்க ஃபேமிலி இஷ்யூஸ் சரி பண்ணுங்க இல்லனா லீகலா கம்ப்ளைன்ட் கொடுங்க நாங்க ஆக்ஷன் எடுக்குறோம்.. அண்ட் அந்த பொண்ணு யார் என்னானு நாங்களும் விசாரிச்சிட்டு தான் இருக்கோம்.. தகவல் கிடைச்சதும் உங்களுக்கு இன்ஃபர்மேஷன் தர்றோம்.. உங்களுக்கு செக்யூரிட்டி டைட் பண்ண சொல்றோம்.. அண்ட் டோன்ட் கோ அவே வித்அவுட் செக்யூரிட்டி சார்” என்றுவிட்டு அந்த போலீஸ் ஆபீசர் கிளம்பி விட..
அவன் அருகில் வந்த நிதின்..
“என்ன சார் இது உங்க ஃபேமிலியே உங்கள கொல்ல ட்ரை பன்றாங்களா? நீங்க கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்ல..யார் அவங்க?” என்று கேட்க..
ஒரு பெருமூச்சை விட்டவன்..
“என்னோட அம்மா” என்று கூற.. அதை டிரான்ஸ்லேட் செய்தவரும் சேர்ந்து அதிர..
“வாட்” என்று அதிர்ந்து நின்றான் நிதின்..
அமைதியாக தலையை ஆட்டியவன்
“ம்ம்.. அவங்களுக்கு நான் முன்னேறினது பிடிக்கலை அதான்..கம்ப்ளைன்ட் லாம் வேணாம் மிஸ்டர் நிதின்.. இதை நானே ஹாண்டில் பண்ணிக்கிறேன்..நான் கேட்கிற டீடெயில்ஸ் மட்டும் கொஞ்சம் கலெக்ட் பண்ணி கொடுங்க ” என்றுவிட்டு திரும்பியவன் அந்த ஊஞ்சலில் சென்று அமர்ந்து கொண்டான்..
“என்ன சார் இவ்ளோ அசால்ட்டா சொல்றீங்க?” என்று கேட்க..
சிரித்தவன்
“இது சகஜம்தான்.. பயப்பட தேவையில்லை விடுங்க நான் பார்த்துக்கிறேன்” என்றான் ஆராஷி..
“ஐ நீட் சம் ப்ரைவசி ப்ளீஸ்” என்று அவன் கூற..
அவனது நிலைய யோசித்தவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்..
அனைவரும் சென்றுவிட தன்மேல் விழுந்த பெண்ணை பற்றிதான் யோசித்து கொண்டு இருந்தான்.. கூடவே தன்னவள் நினைவும் அவனுக்கு சேர்ந்தே வந்தது..
தன்னை காப்பாற்ற அன்று அவள் பட்ட கஷ்டம் இன்றும் அவனது நினைவில் ஆழ பதிந்து இருந்தது.. தன்னை காப்பாற்ற துணிந்த ஒரு பெண்.. அன்றும் இன்றும்.. ஒருவேளை அவளே இவளாக இருக்குமோ? ச்சே ச்சே இருக்காது..என்று எண்ணியபடி தன் நினைவில் மூழ்கியவனுக்கு அவளது அழுது சிவந்த கண்கள் நினைவுக்கு வந்தது..
‘இனி எதற்கு வாழவேண்டும் யாருக்காக வாழவேண்டும் தாயாய் வந்தவர் தன்னை இப்படி மாற்ற முயலும்போது தன்னால் வாழவா முடியும்’ என்று எண்ணிய
ஆராஷி தன் கை நரம்பை அறுத்துக் கொண்டான்..
அதே நேரம் வழக்கம்போல ரியோவ பார்க்க மேதா வருவா.. அவ எப்போதும் மாஸ்க் போட்டு இருப்பா எப்பவும் அப்போ கொரோனா டைம்ங்கிறதால..ரெகுலராக அவ வர்றதால செக்யூரிட்டி அவளை உள்ளே விடுவாரு அன்னைக்குனு பார்த்து ஆராஷி யோட அப்பா வெளியே போய் இருப்பார்.. ரியோவும் மேனேஜர்கிட்ட அன்னைக்கு நடந்த டெத் த்ரட் சம்பவம் பத்தி மீட் நடத்தி பேசிட்டு இருப்பான்.. அந்நேரம் அவ ரியோட்டோ ரூம்க்கு வந்து கதவை தள்ள அங்கே கையை அறுத்துக்கிட்டு மயங்கி விழுந்து இருப்பான் ஆராஷி..
அவளுக்கு பார்த்ததும் பதட்டம் வர “சார் சார்” என்று பதறியவளுக்கு வார்த்தையே வரவில்லை ஓடிச்சென்று அவனை தட்டி எழுப்ப முயன்றவள் அவனது கையில் அதிகமாக இரத்தம் வெளியேறுவதை கண்டு உடனே அவளது காட்டன் ஷாலை எடுத்து அங்கிருந்த குழாயில் நனைத்து அவனது கையில் கட்டு போட்டவள் அவன் மயக்கத்தில் இருக்க..
“ஹெல்ப்..ஹெல்ப்..எமர்ஜென்சி ஹெல்ப்..” என்று அலறினாள்..
அவளது அலறல் கேட்டு ரியோட்டோவும் மற்றவர்களும் ஓடிவர அங்கு அழுதபடியே அவனை தட்டி எழுப்பி கொண்டு இருந்தாள் மேதா..
“ஆரா..” என்று அலறியபடி வந்தவன் மேனேஜரை பார்த்து
“கால் தி ஆம்புலன்ஸ்” என்று கத்திவிட்டு
“என்ன ஆச்சு கிட்” என்று கேட்க..
“நா..நான் உங்கள பார்க்க உங்க..ரூ..ரூம்க்கு உள்ள வந்தேன் அ..அப்போ இவரு..கை..கையெல்லாம் ரத்தம்..ம..மயங்கி இருந்தாரு” என்று அழுதபடி அவள் கூற ரியோட்டோவிற்கு புரிந்து போனது அவன் தற்கொலைக்கு முயன்றுள்ளான் என்று..
உடனடியாக அவனை தூக்கியபடி வெளியே ஓடிவர அவனுடனே வந்தாள் மேதாவும்..
அதற்குள் ஆம்புலன்ஸ் வர அதில் அவனை ஏற்றியவன் அவனும் ஏற அப்போது தான் மேதாவை பார்த்தான் அவள் துடிப்பதை கண்டு அவளையும் தன்னுடன் வருமாறு சொன்னவன் அவளை ஏற சொல்ல அவசரமாக ஏறியவள் அவன் அருகில் அமர்ந்து கைகளை தன்னுடன் எடுத்து வைத்துக்கொண்டாள்.. மயக்கத்திலும் அவளது கையை பற்றிக்கொண்டான் ஆராஷி..
அவனது கையில் சுற்றியிருந்த ஈரத்துணியை எடுத்ததும் இரத்தம் பீறிட்டு வர மீண்டும் அந்த துணியையே வைத்து சுற்றினர்..
அவளது கண்களில் இருந்து நீர் அருவியாய் கொட்ட ரெடியாக அழாமல் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டாள்..
லேசாக நினைவு வர கண்ணை திறந்த ஆராஷி பார்த்தது கண்கள் சிவந்து கலங்கி தன் கையை பிடித்தபடி அலங்கோலமாய் அமர்ந்து இருந்தவளை தான் உடனே மயக்கம் வர மயங்கிவிட்டான்..
அப்போது அவளை பார்த்த அந்த சில நொடி நேரம்தான் அவனது மனதில் அவள் அழியா ஓவியமாய் பதிந்து போனாள்..
மேனேஜரிடம் அப்பாவிற்கு தகவல் சொல்லும்படி கூறியவன் கிளம்பினான்..
அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்
ஆம்புலன்ஸில் இருந்து இறங்கும்போதும் அவளது கையை பிடித்தபடி இருந்தவனை பார்த்தவர்கள் அவளையும் உடன் இறங்கும்படி சொல்லிவிட்டு அவனை தூக்கினர்..
அவனது பிடி தளர்ந்து போனது உடல் சில்லிட துவங்கி இருந்தது அவளுக்கு பயம் கண்களை கட்டியது..
இருப்பினும் அவனோடு இறங்கினாள் எமர்ஜென்சி வார்டினுள் நுழைய அனுமதி இல்லாததால் அவனிடமிருந்து கையை பிரித்து உள்ளே கொண்டு செல்ல அனுமதித்தவள் அதுவரை அமைதியாக இருந்தவள் ஓவென அழ ஆரம்பித்துவிட்டாள்.. ரியோட்டோவிற்கும் அழுகைதான் தன் தம்பி இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டானே என..
உள்ளே எடுத்து செல்லப்பட்ட ஆராஷிக்கு முதலுதவி துவங்கியது.. அவனது பல்ஸ் ரேட் மிகவும் பலவீனமாக இருந்தது..
உடலும் சில்லிடத்துவங்கி இருந்தது.. இரத்தப்போக்கு அதிகம் ஆகி இருந்ததால் உடனே இரத்தம் வேறு ஏற்ற வேண்டி இருந்தது.. அவனது கையில் இருந்த துணியை பிரித்து எடுக்க இரத்தம் அதிகமாய் வெளியேற முதலுதவி செய்து கட்டு போட்டனர்..
இதயத்துடிப்பு குறையத்துவங்க உடனடியாக அவனுக்கு சிகிச்சை துவங்கியது..
ஆனால் அதற்கு அவனது உடல் ஒத்துழைக்கவில்லையே..
வாழவே கூடாது என அவன் மனம் உருபோட்டு இப்போது மருத்துவத்திற்கு அவனது உடல் ஒத்துழைக்க மறுக்கிறதே..