Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 38

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 38

அத்தியாயம் – 38

அவள்மேல் சாயும் மனதை கட்டுப்படுத்த அவள்மீதே கோவத்தை காட்டிக்கொண்டு இருந்தான் ஆராஷி..
அவனது கோவத்தையெல்லாம் தாங்கியபடி இருந்தாள் அவளது காதல் அதையெல்லாம் தாங்க வைத்தது..

இதனால் அவளுக்கும் அவளது தோழன் ஷர்மாவிற்கும் மனகஷ்டமே வந்தது..

ஒருநாள் இரவு..
நீண்ட நாளாக அவளிடமிருந்து ஃபோன் வராததால் அவனே அவளுக்கு ஃபோன் செய்தான்..
அப்போது தான் ஆராஷி அடுத்த நாளின் வேலைகளை பற்றி கேட்டுவிட்டு அதில் கொஞ்சம் சந்தேகம் இருப்பதாக சொன்னவன் அவளை காத்திருக்கும்படி சொல்லிவிட்டு வந்து கேட்பதாக சொல்லி வாஷ்ரூம் சென்று ரிப்ரஷ்ஷாக போனான்…

அந்நேரம் ஃபோன் வர எடுத்து அட்டென் செய்தவள்
“என்னடா இப்போதான் உனக்கு என் நியாபகம் வந்துச்சா?”

“எனக்காவது அதாச்சும் வந்துச்சுங்க மேடாம்க்கு அதுகூட வரலையே? ஃபிகர பார்த்தவுடன் ப்ரண்ட கழட்டி விட்டுட்டா ஒருத்தி அவளையெல்லாம் என்னத்த சொல்ல?”

“மறக்கலாம் இல்லடா… காலையில இருந்து இங்க வேலை முடிச்சுட்டு அப்புறம் அண்ணாவீட்டுக்கு போயி ஆபீஸ் வேலையெல்லாம் முடிச்சு தூங்கவே லேட் ஆகிடுதுடா… அந்த பிசியிலதான் ஃபோன் பண்ணமுடியலடா..சாரி பேபி” என்று அவள் கூறிக்கொண்டு இருக்க அவளுக்கு பின்னால் வந்து நின்றவனுக்கு அவள் பேசுவது புரியவில்லை ஆனால் பேபி என்றது மட்டும் புரிய யாராக இருக்கும் என எண்ணியவன் அவளை தொந்தரவு செய்யாமல் அவனது ட்ரான்ஸ்லேட்டரை ஆன் செய்து கேட்டான்…

அவள் பேசுவது மட்டுமே அவனுக்கு புரிந்தது ஆனால் எதிரில் பேசுவது யாரென தெரியாததால் அவளது பேச்சுதான் அவனுக்கு கேட்டது…

“ஆமா அவருக்கு எப்போதான் நீதான் மேதானு சொல்ல போற? எப்போதான் உன் லவ்வ அவருக்கு சொல்ல போற?”

“புரிஞ்சுக்கும்போது புரியட்டும்டா.. அதுவரைக்கும் நான் இப்படியே இருக்கேன்…எனக்கு புடிச்சு இருக்கு ஆனா சொல்றதுக்கு தயக்கமும் இருக்கு… என் மனசு புரியும்போது புரியட்டும்… அதுவரைக்கும் நான் நானாவே இருந்துக்கிறேன்…”

“கடைசிவரைக்கும் அவரு புரிஞ்சுக்கவே இல்லனா அதுவரைக்கும் காத்துகிட்டு இருப்பியா பேபி”

“எவ்வளவு காலம் கடந்தாலும் நான் காத்திட்டு இருப்பேன் பேபி… என்னை என் காதலை புரியலனாலும் பரவாயில்லை… அதுக்காக நான் மாறமாட்டேன்… கடைசிவரைக்கும் இப்படியே இருந்துட்டு போய்ருவேன்” என்று அவள் பேசுவதை கேட்டதும் ஏதோ மாதிரி ஆகிவிட்டது ஆராஷிக்கும் ஷர்மாவிற்கும்…

“உனக்குனு ஒரு லைஃப் இருக்கு பேபி… அதையும் பார்க்கனும் அப்பா நீ எல்லாத்தையும் பார்த்துப்பனு நம்பி எல்லா பொறுப்பையும் உன்னை நம்பி விட்டுட்டு போய் இருக்காரு… அதுக்கு உனக்குனு ஒருத்தர் வேணும் பேபி..தனியாளா உன்னால எவ்ளோ நாள் மேனேஜ் பண்ண முடியும்? அவரை பொறுத்தவரை நீ ஜஸ்ட் அசிஸ்டெண்ட் அவ்ளோதான்… அவருக்காக நீ லைஃப் ஸ்பாயில் பண்ணிக்கிறது எனக்குனு இல்ல அண்ணாக்கும் பிடிக்கல பேபி… அண்ட் நீ காசு ரொம்ப வேஸ்ட் பண்றமாதிரி எனக்கு ஃபீல் ஆகுது”

“ சி பேபி… என்னோட ரோல்ல நான் சரியாதான் இருக்கேன்…என்னை பத்தி நீங்க கவலைபட வேணாம்…
லவ்ல ரெண்டு பேரும் லவ் பண்ணியே ஆகணும்னு இல்ல…
ஆயுசுக்கும் என் ஒருத்தி லவ்வே போதும்…
நீங்கலாம் சேர்ந்து என்னோட டிராமாவ டேக் ஓவர் பண்ணாம இருந்தாலே போதும்… காசு விஷயம்லாம் நான் எப்படி ரிட்டன் எர்ன் பண்ணனும்னு எனக்கு தெரியும் என் டிராமாவ கெடுக்காதீங்க” என்று அவள் கூற இதை கேட்டவனுக்கு சுருக்கென்றது…

‘ஆக இவளும் பணத்துக்காக அலைபவளா? அதுவும் ஏற்கனவே அவளுக்கு ஒரு காதலன் இருந்தும் நடிக்கிறாள்’ என்ற எண்ணம்தான் அவனுக்கு உதித்தது…
நல்லவள் என்று ஒரு நொடியில் ஏமாந்து தன்னை அவள் வசம் இழந்து விடுவோமோ என்று எண்ணியவனுக்கு அவளது பேச்சுகள் எல்லாம் டிராமாவாகவே தெரிந்தது…
அவளது அக்கறை எல்லாம் நடிப்பாகவே தோன்றியது…

எதையும் முழுதாக புரிந்து கொள்ளாமல் எதையும் முழுவதும் கேட்காமல் அவனே அவளை பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்…

‘ஏன் இந்த பெண்கள் காசுக்காக இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்கள்’ என கோவம் கொண்டவன் வேகமாக ட்ரான்ஸ்லேட்டரை வீசியெறிய அது கீழே உடைந்து சிதறியது…
ஒரே ஒரு நொடியில் அவனது நம்பிக்கையை குலைத்தவள்மேல் கோவம் வந்தது…
ஆனால் அவனுக்கு அவளது நாடகத்தின் முழு விவரமும் வேண்டும் என்பதால் அமைதியாக இருக்க முடிவு செய்தான்…
ஏதோ விழுந்த சத்தத்தில் திரும்பியவள் ஆராஷியை கண்டதும் ஃபோனை கட் செய்துவிட்டு அவனை பார்த்தவள் கீழே விழுந்த ட்ரான்ஸ்லேட்டரை பார்க்க அது உடைந்து விட்டிருந்தது… அவள் அதை பார்த்து அப்படியே அவனை பார்க்க,
“tsumazuite ochite kowarete shimatta (அது கால்ல மாட்டி கீழே விழுந்து உடைஞ்சுடுச்சு)” என்று அவன் கூற..

“ஓஓ.. ஓகே சார்..ஐ வில் சேன்ஞ் இம்மீடியட்லி” என்றுவிட்டு அதை சுத்தம் செய்ய போனாள்…
அதிலிருந்த கூர்மையான கம்பி அவளது கையை பதம் பார்த்தது…
அதில் அவள் “ஸ்ஸ்ஸ்” என்று கையை உதற ஒரே ஒரு வினாடி அவனது உள்ளம் பதறியது ஆனால் எல்லாம் நடிப்பு என்ற வார்த்தை அவனை அப்படியே நிற்க வைத்தது.
அவளது வலியை நின்று ரசிக்க வைத்தது.

அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ வேறு புறம் பார்த்துகொண்டு இருந்தான்.
இரத்தம் சொட்டியது அவளது உள்ளங்கையில்… அந்த வலியை பொறுத்து அவள் அதை சுத்தம் செய்து விட்டு கையில் தனது கர்சீப்பை நீரில் நனைத்து சுற்றிக்கொண்டு வந்தாள் ஆனால் இரத்தம் நிற்கவில்லை… அதை பார்த்தவனுக்கு உள்ளிருந்த இரக்க குணம் வெளியே வர…

“kaette i yo, ashita wa shigoto o onegai surukara, kega no chiryo ni byoin ni itte ne (நீங்க கிளம்பலாம் நா…நான் நாளைக்கு என்னோட வேலையை கேட்டுக்கிறேன்… காயம்க்கு ஹாஸ்பிடல் போங்க)” என்றான்.

“ie, daijobudesu, tada no kegadesu, yaku de yoku narimasu, shigoto wa owarimasu, sensei, asa satsuei wa arimasu ka?(இல்ல பரவாயில்லை சார்… இது சாதாரண காயம்தான் மருந்து போட்டா சரியாகிடும்… நான் வேலையை முடிச்சுட்டே போறேன் சார் காலையில உங்களுக்கு ஷூட் இருக்கே?)” என்றாள்.

“deteike to wa itte inai, i want some peace, will you please get-out, I’m not in right mind, ashita hayaku katte hashi noda(கிளம்புங்கனு சொல்றேன்ல… ஐ வாண்ட் சம் பீஸ்…வில் யூ ப்ளீஸ் கெட்அவுட்… ஐயம் நாட் இன் ரைட் மைண்ட்…நாளைக்கு சீக்கிரம் வாங்க கேட்டுக்கிறேன்)” என்றுவிட்டு வேகமாக உள்ளே சென்றுவிட்டான்…

திடீரென ஏன் இந்த கோவம் என புரியாமல் நின்றவள் கையில் இரத்தம் அதிகமாக வீட்டுக்கு கிளம்பினாள்… ஆனால் சரியாக அவள் வெளியே வரும் நேரம் அவளை பார்த்துவிட்டாள் அருந்ததி அவளை கண்டதும் காயத்தை மறைக்க அவள் முயல அதையும் பார்த்துவிட்டவள் அவளை நோக்கி ஓடிவந்தாள்…

“என்னடி இது? என்ன ஆச்சு? எப்படி காயம் பட்டது?” என்று பதறி கேட்க…

“ஒன்னும்இல்லடி… ட்ரான்ஸ்லேட்டர் உடைஞ்சுடுச்சு அதை எடுக்க போனேன் கம்பி அறுத்துடுச்சு” என்று கூறி

“இவ்ளோ இரத்தம் வருது ஒன்னும் இல்லனு சொல்ற? வா முதல்ல ஹாஸ்பிடல் போலாம்” என்றவள் அதோடு நில்லாமல் நிதினுக்கு ஃபோன் செய்ய மொத்த கும்பலும் வெளியே ஓடி வந்தது… கோவமாக மாடிக்கு போனவன் பால்கனியில் நின்று இதையெல்லாம் பார்க்க…

‘எப்படி எல்லாரையும் நடிச்சு ஏமாத்தி வெச்சு இருக்கா பாரு… சாதாரண வேலைக்காரிக்கு எப்படி ஓடி வர்றாங்க பாரு…இவெல்லாம் காசுக்காக என்ன வேணா பன்ற கேரக்டர்’என்று மனதில் அவன் பொரும… அவள்மேல் கோவம் அதிகமாக ஆகியது…

அங்கு காயம்பட்டவளுக்காக ஒரு குடும்பமே துடித்து போனது.. நிதினோ
“எந்தா மோளே இப்படி கூடவா அடிப்பட்டுட்டு வருவ? அங்கதான் க்ளீன் பண்ண மெய்ட் இருக்காங்களே? நீ ஏன் வேலை செஞ்சு அடிப்பட்டு வர்ற?” என்றபடி அவளை அழைத்து சென்று வையித்தியம் பார்க்க…
காயத்தின் வலியோடு அவளுக்கு வயிறும் சேர்ந்து வலிக்க ஆரம்பித்தது…
பல்லை கடித்து வலியை அடக்க ஒரு நொடியில் கண்கள் சிவந்து மூக்கும் சிவந்து கலங்கிய நிலையில் வலியில் முகம் சுருங்க அவளுக்கு காயம்தான் அதிக வலி கொடுக்கிறது என்று
எண்ணி நிதினின் மனைவி ஓடிச்சென்று அவளுக்கு ஜுஸ் கொண்டு வந்தாள்… அவளிடம்
“கொஞ்சமா குடிடா… வலி கம்மி ஆகும்… காயம் பெருசா? நாம வேணா ஹாஸ்பிடல் போலாமே?” என்று கேட்க…

கஷ்டப்பட்டு வலியை சமாளித்தவள் அந்த ஜுஸை பருகிவிட்டு
“இல்ல அண்ணி வலி பரவாயில்லை… ஹாஸ்பிடல் லாம் வேணாம் அண்ணி…மருந்து போட்டாலே சரி ஆகிடும்” என்று அவளது அண்ணியை சமாதானம் செய்தவள் போல தனக்கும் சமாதானம் சொல்லிக்கொண்டு வலியை பொறுத்துக்கொண்டாள்… அவளுக்கு மருந்து போட்டு கட்டு போட்ட அருந்ததிக்கு கோவம் வந்துவிட்டது…

“இதுக்குத்தான் அன்னைக்கே இவள இந்த வேலையை செய்ய ஒத்துக்காதீங்கனு சொன்னேன் கேட்டீங்களா? இப்போ பாருங்க?” என்று அவள் நிதினை திட்ட,

“அரூ… என்னை திட்டு வாங்கிக்கிறேன் அண்ணனனை ஏதும் பேசாதே” என்றாள் அவ்வளவு வலியிலும்…

“ஆமாண்டி…நீ என்ன பண்ணாலும் ஏன் எதுக்குனு கேட்காம உன் பின்னாடி நாய் மாதிரி சுத்துறோம்ல அதான் இப்படி பேசுற?” என்று அவளையும் கோவமாய் பேச…

“அவ்ளோ கஷ்டப்பட்டு என்கூட இருக்கவேணாம் போ… என் வாழ்க்கையை பார்த்துக்க எனக்கு தெரியும்? என்னை புரிஞ்சுக்கிட்டவங்க என்கூட இருந்தா போதும்” என்று மேதாவும் கோவமாய் பேச…

“ஓஓஓ.. போறோமே… எங்களுக்கு என்ன வந்துச்சு உனக்குத்தான் எங்க பாசம்லாம் உனக்கு இளக்காரமா இருக்குல…நாங்க போறோம்… வாங்க அண்ணா போலாம் அவங்க வாழ்க்கையை பார்த்துக்க அவங்களுக்கு தெரியுமாம்… நாமளாம் போலாம் வாங்க அண்ணா” என்று அருந்ததியும் கோவமாய் பேச…

“கொஞ்சம் அமைதியா இருங்க ரெண்டு பேரும் என்ன பேச்சு இதெல்லாம் பிரிஞ்சு போ… தனியா போனு… நமக்குள்ள எப்போ இந்த பாகுபாடு பாக்குறதுலாம் வந்தது?” என்று சாஹித்யன் கேட்க…
சனாவும் அதையே பேச… இருவரும் அமைதியானார்கள்…
நிதின் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…

“என்ன அண்ணா அவங்க இப்படி பேசுறாங்க நீங்க கண்டிக்காம அமைதியா இருக்கீங்க?” என்று கேட்க..

“அதான் அவங்களே அவங்க வாழ்க்கையை முடிவு பண்றாங்களாமேடா நடுவுலபேச என்ன இருக்கு? நான் ஏன் கேட்கணும் நான் வெறும் சாதாரண சி.இ.ஓ.. என் வேலையை நான் செய்யுறேன் அவ்வளவுதான்” என்று நிதின் பேச எல்லோரும் உறைந்து நின்றது ஒரு நிமிடமே… அடுத்த நிமிடம்…

“அண்ணா என்னனா நீங்க? இப்படிலாம் பேசுறீங்க? எங்களுக்கு நீங்கதான் அண்ணா… உங்களோட நிழல்லதான் நாங்க இருக்கோம்… நா..நான் ஏதோ ஒரு கோவத்தில அப்படி பேசிட்டேன் மன்னிச்சிடுங்க அண்ணா ப்ளீஸ்” என்று மேதா பேச அருந்ததியும் மன்னிப்பு கேட்க… அனைவரும் நிதினிடம் மன்னிப்பு கேட்க நிதினின் மனைவி அவனை சமாதானம் செய்ய அமைதியாக எழுந்து சென்று விட்டான் நிதின்…
எல்லோரையும் கிளம்பும்படி சொன்ன நிதினின் மனைவி “நிதின் காலைக்குள் சமாதானம் ஆகிவிடுவார் நீங்கலாம் எதுவும் பேசாம இருந்தா போதும்” என்றுவிட்டு மேதாவை பார்த்தவள்…

“வர வர நீ ஒரு மாதிரி நடந்துக்குற மேதா” என்றுவிட்டு உள்ளே சென்று விட்டாள்…
மேதாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது…
“சாரி கைய்ஸ்…நா..நான் பேசினது தப்புதான் மன்னிச்சிடுங்க” என்று கைகூப்பி மன்னிப்பு கேட்க…

“பையித்தியமா நீ… போ..போய் ரெஸ்ட் எடு அரூ டிபன் எடுத்துட்டு வருவா” என்று அவளை கண்டித்தான் சாஹித்யன்…
அதில் இருவரையும் அரூ முறைக்க…

“இல்லனா எனக்கு பசிக்கல ஜுஸ் குடிச்சதே போதும்” என்றுவிட்டு அவளது வீட்டை நோக்கி நடந்தாள் கண்களில் கண்ணீரோடும் உடம்பில் வலியோடும்…
போகும் அவளது தோற்றம் மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்க இங்கு நடந்த கூத்தையெல்லாம் புரியவில்லை என்றாலும் பார்த்து நின்றவனுக்கு அவள்மேல் கோவம் இன்னும் அதிகம்தான் ஆகியது…

‘எப்படியெல்லாம் நடிக்கிறா? அப்படி என்ன பண்ணி இவங்களலாம் மயக்கினாளோ?’ என்று எண்ணியபடி அவள்மேல் கோவத்தை வளர்த்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *