Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 7

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 7

அத்தியாயம் – 7

இரவும் பகலும் தாயை போல ரியோட்டோ தேஜுவை பார்த்துக்கொள்ள அவளுக்கு ஜுரம் மட்டும் குறைந்த பாடில்லை..

இந்நிலையில் அன்று அவளுக்கு ஜுரம் அதிகமானதால் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று ஊசி போட்டு கூட்டி வந்தான்.. நன்றாக தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று டாக்டர்கள் கூற அவளுக்கென கஞ்சி காய்ச்சி புகட்டி மருந்து கொடுத்து படுக்க வைத்தான்..

அவர்கள் வாழ்வில் விளையாட வந்தது அந்நாள்.. அன்று ரென்னிற்கு பிறந்தநாள் என்று அவனது நண்பர்களை ரியோட்டோவிடம் கேட்காமலே 

அழைத்து வந்துவிட்டான்.. அன்று ஞாயிறும் கூட.. அதனால் வரவழைத்து விட்டான்.. 

ஆனால் அன்று தேஜு வெளியே போகாததால் வந்தவர்களை வெளியேவும் போக சொல்ல முடியாத அளவுக்கு ரென்னின் பேச்சு இருந்தது..

“சாரி ரென்..நான் உன்கிட்ட எனக்கு இருக்குற உரிமையில வரச்சொல்லி சொல்லிட்டேன்..அவங்களும் வந்துட்டாங்க..நா..நான் அவங்கள கூட்டிட்டு வெளியே போய்டுறேன்..நீ அவங்கள கவனி” என்று கூறியபடி சோகமாய் திரும்ப பிறந்த நாள் அதுவுமாய் நண்பனின் சோகமுகம் அவனுக்கு வருத்தத்தை தர அவனை தடுத்தவன்..

“பரவாயில்லை டா அவங்கலாம் இங்கேயே இருக்கட்டும் த்ரீ ஹவர்ஸ்தானே தேஜுவும் டேப்ளட் போட்டுட்டு தூங்குறா..நான் அவ ரூமை பூட்டிடுறேன் கீ என்கிட்டயே வெச்சுக்குவேன்..நீங்க பார்ட்டிய என்ஜாய் பண்ணுங்க” என்றவன் அவர்களுக்காக குக்கி(cookie) செய்ய தயார்படுத்தினான் ஞாபகமாக தேஜீவின் அறைக்கதவை பூட்டி சாவியை அவனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.. அதற்கு முன் தூங்கும் அவளை பார்த்துவிட்டு அவளுக்கு போர்த்திவிட்டு வந்தான்..

ரென்னும் அவனுடன் சேர்ந்து குக்கி செய்தான்.. இவர்களுக்கு ஜுஸ் கலந்தான் ரென் அதில் ஒன்றில் போதை மருந்தையும் இன்னொன்றில் அதே கலரில் இருக்கும் மதுவையும் ஊற்றினான்..

எல்லோரும் மதுபோதையில் இருக்க ரியோ மட்டும் குடிக்காமல் இருந்தான் ரென் எவ்வளவு வற்புறுத்தியும் அவன் குடிக்காததால் அவனுக்கு ஜுஸ் என பொய் சொல்லி மதுவை கொடுக்க நினைத்தான் தேஜுவிற்கு இன்னொரு ஜுஸ் என கொடுத்தான் ஆனால் தேஜுவிற்கு ஜுஸ் ஏற்கனவே கொடுத்துவிட்டதாக சொல்லிவிட்டான் அதனால் ரென் எதிர்பாராத நேரம் ரியோ அந்த ஜுஸை எடுத்து குடித்துவிட்டான் அதனால் அவனை தடுக்கமுடியாத கோவத்தில் மனதில் கருவிக்கொண்டே அதே கலரில் இருந்த மதுவை ரென் அருந்தினான்.. ஜுஸை குடித்த சற்று நேரத்தில் ரியோட்டோவிற்கு போதை ஏற ஆரம்பித்துவிட்டது.. 

அவனது போதையை பயன்படுத்தி ரென் அவனிடமிருந்து தேஜுவின் ரூம் சாவியை எடுக்க முயல என்ன முயன்றும் அவனால் ரியோவிடம் இருந்து சாவியை எடுக்க முடியவில்லை அந்த கோவத்தில் மேலும் மதுவை அருந்தியவன் நண்பர்கள் இருப்பதை உணராது தன் திடீர் திட்டத்தை ரியோட்டோவிடம் செயல்படுத்தினான்..

“உன்கிட்ட ரொம்ப நாளா ஒரு விஷயம் சொல்லனும்னு இருந்தேன் ரியோ.. அந்த தேஜு என்னை ரிஜக்ட் பன்றமாதிரி நடிச்சுட்டு உன்னை லவ் பண்ற மாதிரி ஏமாத்திட்டு இருக்கா” என்று கூற போதையில் அவனை புரியாமல் பார்த்தவன்..

“அப்படிலாம் ஏதும் இல்லடா.. அ..அவ நிஜமாகவே எ..என்ன லவ் பண்றா..அவ எதுக்கு நடிக்கனும்” என்று கேட்டான்

போதையிலும் அவளுக்கு அவனிடம் நல்ல மதிப்பு இருப்பதை கெடுக்க நினைத்தவன்

“நான் சொன்னா நம்ப மாட்டியா? இதை அவளே என்கிட்ட சொன்னா நீ டீக்வாண்டோ காம்ப்டிஷனுக்கு போனப்போ..

பணம் பணத்தோட சேரனும்னு உன்ன லவ் பன்ற மாதிரி நடிக்கிறாளாம் என்னைதான் உண்மையா லவ் பன்றேன்னு சொன்னா..நான் விலகி போனா கூட அவ நெருங்கி வர்றா.. உன்கிட்ட என்னை சேரவே விடமாட்டேங்கிறா..நான் எங்கே இதெல்லாம் உன்கிட்ட சொல்லிடப்போறேனோனு என்னைபத்தி தப்பாவே சொல்லுவா” 

என்று கூற அவனது பேச்சை நம்பியவனுக்கு அவள்மேல் கோவம் வந்தது..

“உன்ன உண்மையா லவ் பன்றவ இப்படியா ஒதுங்கி நிப்பா எங்கேயாவது உன்கூட வெளியே வந்து இருக்காளா? அட்லீஸ்ட் ஒரு கிஸ் கொடுத்து இருக்காளா உன்க்கு? என்னதான் கண்ணியம் காப்பாத்தனும்னா கூட எல்லா நேரமும் அப்படி இருக்கமுடியாதுல இங்கலாம் லவ் பன்றவங்க எப்படி இருக்காங்க.. நீங்க என்ன அப்படியா இருக்கீங்க இது என்கிட்ட சொன்னதே அவதான்” என்று அவளை பற்றி தப்பு தப்பாய் கூறி அவனை நம்பும்படி செய்தவன்

“நான் எவ்ளோ வருஷமா உன்கூட ப்ரண்ட்டா இருக்கேன் நான் என்ன காசுபணத்துக்கு அலையுற ஆளா? ஆனா அவ வெளியே சிம்பிளா காட்டிட்டு உள்ளே பணக்கார வீட்டு பொண்ணுங்கிறமாதிரி தான் நடந்துக்குறா.. நீ வேணா இன்னைக்கு அவள ஹக் பண்ணி செக் பண்ணிபாரு உனக்கே உண்மை புரியும்..எனக்கு உன் வாழ்க்கை முக்கியம்டா பார்த்து கவனமா இருந்துக்க” என்றுவிட்டு கிளம்பினான் ரென்.. அவனுடனே அவனது நண்பர்களும் கிளம்பினர்..அவன் சொன்னதே ரியோவின் மனதில் விடாமல் ஒலித்தது..

 ‘உண்மைதானே அவள் இதுவரை தன்னிடம் ஒரு கிஸ் கூட கேட்டதுஇல்லையே..எப்பவாவது ஒருமுறை கட்டி பிடிப்பா அதும் வெட்கம்னு சொல்லி தூர போய்டுவா ரென் சொன்னா மாதிரி செக் பண்ணி பார்த்திட வேண்டியது தான்’ என்று மனதில் தாறுமாறாக எண்ணியவன் மேலும் கொஞ்சம் மதுவை எடுத்து அருந்தினான் இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு 

இருந்த ரென்

வன்மமாய்

‘ரியோ உன்கிட்ட தப்பா நடந்துக்கபோறான் நீ

அவனவிட்டு பிரிஞ்சு போக போற.. என்னையா கேவலப்படுத்தின உன்ன எப்படி அசிங்கபடுத்துறேன்னு பாருடி’ என்று எண்ணியபடி தன்னிடம் இருந்த கேமிராவை எடுத்தான்.. 

தட்டு தடுமாறிய எழுந்த ரியோ தன் பாக்கெட்டில் இருந்த தேஜுவின் அறையின் சாவியை எடுத்து தடுமாறி திறந்தவன் உள்ளே நுழைந்தான்.. ரென்னின் திட்டம் தெரியாதவளோ ஜுரத்தின் வீரியத்தில் உறங்கி கொண்டிருந்தாள் அவளது அருகில் சென்ற ரியோ தூங்கும் அவளது கள்ளமிள்ளாத முகத்தை பார்த்தான்.. 

அவள் அப்படி செய்யமாட்டாள் என்று ஒருபுறம் மனது சொன்னாலும் போதை கொண்ட மனம் நண்பனது பேச்சையே வேதமாய் எடுத்துக்கொண்டது.. போதை என்னும் பேய் ஆட்க்கொண்டதில் அவளது அருகே சென்றவன் அவளை வருடினான்.. அவனது கன்னத்தை வருட அதன் மென்மை அவனை ஈர்க்க அவளது கன்னத்தில் முதல் முத்தத்தை பதித்தான் அவளோ மாத்திரை உண்டதால் வேறு உலகில் சஞ்சரித்தவள் அவனது இதழ் தீண்டலில் தன்னை குறுக்கி கொண்டாள் இதைமட்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டவன் வஞ்சத்தோடு சென்றுவிட்டான்.. அதை கண்டவன் கண்களோ கள்ளுண்டதை போல ஆனது மேலும் அவன் முன்னேறி அவள் இதழ் தேனை பருக அதில் நினைவு தெளிந்தவள் தெளிந்து அதிர்ந்து அவனை விலக்கி தள்ளியவள்

“என்ன பன்ற ரியோ..விடுங்க என்னை” என்று அவள் விலக பார்க்க 

 போதையின் வீரியத்தில் தன்னிலை இழந்தவன் தன்னை தள்ளியவளை பிடித்து அவள் இதழில் முத்தமிட்டு அவளது தாக்குதலையெல்லாம் தனதாக்கி அவளை தன்வசப்படுத்தினான்.. அவள் அனுமதியின்றி அவளது உடைகளை கிழித்தெறிந்தான்..

“Baby i need u” என்று அவனது ஓசையில் அவளது குரல் அடங்கிபோனது..

அவனிடம் போராடி தடுக்கமுடியாது அவளது உடலும் தொய்ந்து போக அவனது வேகத்தில் இவள் அடித்து செல்லப்பட்டாள்..

அவள் வசம் தன்னை இழந்தவன் அவள் உறக்கத்தை கெடுத்துவிட்டு அவன் உறங்கிபோனான்..

அங்கேயே அமர்ந்து உறக்கத்தோடு தன் பெண்மையை தொலைத்தவள் 

தன்னிலையை நினைத்து அழ ஆரம்பித்தாள்..

தலைமுடி கலைந்திருக்க உடலெங்கும் நகக்கீறல்களுடன் அமர்ந்து அழுது கொண்டே இருந்தவளை பார்த்தபடி தான் கண்விழித்தான் ரியோ..

அவளது நிலை கண்டவன் அலறி அடித்து எழுந்து அமர அப்போது தான் தன்னிலை உணர்ந்தவன் சட்டென அருகில் இருந்த டவலை எடுத்து அணிந்தபடி போர்வையை அவள்மேல் போர்த்தியவனுக்கு என்ன யோசித்தும் இரவு எதனால் இவளது அறைக்குள் வந்தோம் என புரியவில்லை..ஆனால் என்ன நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்துபோனது.

அழுது அழுது சிவந்துபோனவளுக்கு ஜுரம் எங்கு போனது என்று கூட தெரியவில்லை.. அவளது அருகில் சென்றவன் 

“ஶ்ரீ” என்று அழைக்க கோவமாய்

“பேசாதடா நீ.. ஏதாவது பேசின கொன்னுடுவேன்..எவ்ளோ கெஞ்சினேன் விட சொல்லி.. இப்படி பண்ணிட்டியே ரியோ..இப்போ எந்த முகத்தோட நான் எங்கப்பா முகத்துல முழிப்பேன்.. உங்களுக்குலாம் செக்ஸ்னா ஜஸ்ட் லைக் தட் ஆனா இந்தியால அப்படி இல்லனு உனக்கே தெரியும்ல..அப்புறம் ஏன் ரியோ இப்படி பண்ண?” என்று அவள் அழ..

“ஐ..ஐயம் சாரி ஶ்ரீ..நா..நான் வேணும்னு பன்னல.. உனக்காகவே நேத்து டிரிங்க் பண்ணகூடாதுனு இருந்தேன் ஆ..ஆனா மாத்தி குடிச்சுட்டேன் போல.. ஐ..ஐயம் சாரிமா..என்னை நம்பு” என்று கூற..

“எப்படி நம்புறது? நம்பித்தானே இங்க தங்கினேன்..ஆ..ஆனா..அங்க எங்க அப்பா மாப்பிள்ளை பார்த்துட்டேன்னு சொல்லி என்னை அழவெச்சாரு இங்க நீங்க..” என்று அவள் முகத்தை மூடி அழ..

அவளது கரத்தை பிடித்தவன்..

“நாம இன்னைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கூற அதிர்ந்து பார்த்தாள் அவனை..

2 thoughts on “வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *