அத்தியாயம் – 48
உடை மாற்றி வந்தவன் அடுத்த ஷூட் என்ன என்று விசாரிக்க அடுத்ததாக தமிழ் முறைப்படி திருமண ஷூட் என்று கூற அடுத்தநாள் அதற்கான ஷூட் என்பதால் அதை பற்றி தனது டேப்பில் எடுத்து பார்க்க ஆரம்பித்தான்.
அதிலும் பலவகையான திருமண சடங்குகள் காட்டப்பட இதில் எது என்று புரியாமல் நின்றான் ஆரா.
அதற்குள் உடைமாற்றி அவனது அடுத்தநாளுக்கான ஷெட்யூலுடன் வந்தாள் மேதா.
அவளை பார்த்தவன்
‘இவ எண்ண இப்போதான் ஏஞ்சல் மாதிரி இருந்தா இப்போ சாதாரணமா இருக்கா? இவ உண்மையாவே இப்படிதானா? இல்ல நம்ம முன்னாடி நடிக்கிறாளா?’ என்று யோசித்தபடி அவளை பார்த்தான்.
அவன் அருகில் வந்தவளுக்கு ஏதோ போல் இருந்தாலும் அவளது ஆளுமையான குணம் எதையும் காட்டிக்கொள்ளாமல் அவனது கையை பார்த்தவள் அவன் எதை பார்க்கிறான் என்று புரிந்ததும் அடுத்த நாள் எந்த முறைப்படி கல்யாணம் சீன் என்று புரியாமல் இருக்கிறான் என்று புரிய அவனுக்கு புரியும்படி சீன்களை சொன்னவளைதான் பார்த்தான் ஒன்று ஐயர் முறைப்படி திருமணம் இன்னொன்று சாதாரண திருமணம் என்று கூறியதும் அதைப்பற்றி அவள் விளக்கம் தர அவனும் அவளை அந்த சீனில் பொருத்தி பார்த்தான் அவனது கற்பனையில் அவள் அழகாக தெரிந்தாள் தான் ஏன் இப்படியெல்லாம் யோசனை செய்கிறோம் என்று அவனுக்கே புரியாமல் போனது.
அவனது பார்வை அவளுக்கு குறுகுறுப்பு கொடுக்க அதுவரை அவனது கண்களை பார்க்காமல் விளக்கம் கொடுத்தவள் ஒரு மூச்சை விட்டு அவனது கண்ணை பார்த்து விளக்கம் தர அவனது பார்வையை மாற்றிக்கொண்டான் அவன் அவன் கூலிங்கிளாஸ் அணிந்து இருந்ததால் அவனது பார்வை வேற யாருக்கும் தெரியாமல் போனது.
அவளது விளக்கத்தை கேட்டு அவனுக்கு புரிந்தது.
“ஓகே ஐ அண்டர்ஸ்டான்ட். லெட்ஸ் கோ ஹோம்” என்று விட்டு கிளம்ப அவனுடனே கிளம்பினாள் மேதா. எப்போதும் முன் சீட்டில் அமரும் ஆராஷி அன்று பின் சீட்டில் அமர தான் எங்கு அமர்வது என்று விழித்தாள் மேதா.
வந்த புன்னகையை மறைத்தவன்
“Do you have any issues to sit next to me?”(என் பக்கத்தில் உட்காருவது உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?)
என்று கேட்க
“நோ சர் இட்ஸ் நாட் லைக் தட் எனிமோர் ஆஸ் ஆ எம்ப்ளாயி ஹவ் கேன் ஐ சிட் வித் யுவர் நெக்ஸ்ட் தட்ஸ் வொய் ஐ திங்க்கிங்”
என்று கூற.
“தட்ஸ் நாட் ஏ பிக் இஷ்யூ” என அவனும் கூற சரியென மண்டையை ஆட்டியவள் அவனது பக்கத்து சீட்டில் அமர்ந்தாள்.
வீட்டுக்கு வந்ததும் அவன் ஜிம்மியை பார்த்து கைநீட்ட அது நேரே அவனுக்கு பின் வந்து கொண்டிருந்த மேதாவை நோக்கி ஓடியது.
அதனால் கோபமானான் ஆரா.
அவளோ அவனை கண்டுகொள்ளாமல் ஜிம்மியோடு விளையாட
அவளை முறைத்தான் ஆராஷி.
‘என்னோட நாய்குட்டியை கூட இவ வசியம் பண்ணி வெச்சு இருக்கா இவ இவகிட்ட என்னத்தை பார்த்து மயங்கினாளோ? என்னை கண்டுக்காம இருக்காளே?’ என்று தன் ஜிம்மி மீதும் சேர்த்தே கோபப்பட்டவன் கோவமாக ரூமிற்குள் சென்றுவிட்டான்.
ஆனால் அதை கவனிக்காத மேதாவோ ஜிம்மியோடு விளையாடி கொண்டு இருந்தாள்.
நீண்ட வருடம் கழித்து சந்திக்கும் தன் தோழியை பார்த்த ஜிம்மிக்கு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
மேதாவிற்கும் அவளை அவனிடம் விட்டு வந்தது வருத்தமே ஆனால் தன்னை மறக்காமல் இருந்த ஜிம்மியின் பாசத்தில் நெகிழ்ந்து போனாள் மேதா.
ஜிம்மியோடு சற்று நேரம் விளையாட மீண்டும் கதவை வேகமாக திறந்து கொண்டு வந்தான் ஆரா.
அப்பொழுது தான் அவனை
கவனித்தாள் மேதா.
அவனது கோபமான முகத்தை பார்த்து ஜிம்மியை அவனிடம் போக சொன்னாள் மேதா அதுவும் அவள் சொன்னதுபோலவே வர அவளை பார்த்தவன்
“உங்க வேலை முடிஞ்சதுனா நீங்க கிளம்பலாம்” என்று ஜாப்பனீஸில் சொல்லிவிட்டு ஜிம்மியை தூக்கிக்கொண்டு வேகமாக உள்ளே சென்று கதவை அடைத்துவிட்டான்.
முகத்தில் அறைந்தாற்போல அவன் செய்தது ஒரு மாதிரியாக இருந்தாலும் ஜிம்மி அவனை விட்டு தன்னிடம் ஓடி வந்ததுதான் காரணம் என உணர்ந்தவளுக்கு புன்னகை வர அதை மறைத்தபடி அங்கிருந்து கிளம்பினாள்.
ஜிம்மியை உள்ளே தூக்கி வந்தவன் அவளை இறக்கி விட்டு அவளையே முறைத்தான் அவனது பார்வை புரிந்ததோ என்னவோ தலையை குனிந்து கொண்டு அமர்ந்துவிட்டாள் அவனது ஜிம்மி. அவ்வப்போது தலையை நிமிர்ந்து நிமிர்ந்து பார்க்க அவளது பார்வை அவனது கோவத்தை குறைக்க அவளை தூக்கி கொஞ்ச ஆரம்பித்துவிட்டான் அவளும் அவனோடு விளையாட ஆரம்பித்து விட்டான்.
அன்றைய தினம் இரவு உறக்கமே அவனுக்கு வரவில்லை காலைமுதல் நடந்த விஷயங்களை தான் எண்ணிக்கொண்டு இருந்தான்.
அளவான மேக்கப்பில் அவளது அழகிய முகமும் அந்த உடையிலும் அவளது ஆபரணங்களிலும் அவ்வளவு அழகாக இருந்தாள் நடிப்பாக இருந்தாலும் அவன் முத்தம் கொடுத்தது போல நடிக்கத்தான் சொன்னாள் அருந்ததி ஆனால் அவளை தன்னைவிட்டு வேலையை விட்டு ஓட செய்யவே முத்தம் கொடுப்பது போல நடிக்க போனவன் அவளது அழகில் லயித்து முத்தமிட்டுவிட்டான்.
அதை நினைக்கையில் அவனுக்கு ஏதோ ஒரு மாதிரியாகவே இருந்தது அவன் இதுவரை முத்தம் கொடுப்பது போல நடித்து இருக்கிறானே தவிர உண்மையாக முத்தமிட்டது இல்லை.
ஆனால் அவளை முத்தமிட்டது ஏதோ ஒரு மாதிரி இருந்தது.
அந்த நேரத்தில் தன் அண்ணனுக்கு ஃபோன் செய்தவன் நடந்ததை சொல்ல அவனுக்கோ ஆச்சரியம் ஆராஷி ஒரு பெண்ணை முத்தமிட்டானா என்றுதான்.
“ஆரா ஆர் யூ சீரியஸ்? நீ ஒரு பொண்ணுக்கு கிஸ் பண்ணி இருக்கடா அதும் அவளை வெறுப்பு ஏத்த இந்த மாதிரி பன்ற ஆள் இல்லையே நீ?” என்று ரியோட்டோ கேட்க
“அதைதான் அண்ணா நானும் யோசிச்சுட்டு இருக்கேன். எனக்கே ஒரு மாதிரி இருக்கு நீங்க வேற என்னை மேலும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்காதீங்க நா..நான் அவளை வெறுப்பு ஏத்ததான் செஞ்சேன்” என்று கூற.
“ஆரா நீ எதுக்கும் அந்த பொண்ணுகிட்ட இருந்து விலகியே இரு.
எனக்கு என்னமோ நீ அந்த பொண்ண லவ் பண்றியோனு தோணுது?” என்று கூற
“ஓஓஓ… அண்ணா ப்ளீஸ் ஷட்அப் எனக்கு அவளை பார்த்தாலே கோவமா வருது அவளைபோல ஒரு பொண்ண நானாவது லவ் பன்றதாவது.
நடிச்சுட்டு இருக்கவமேல லவ் வேற வருமா? இனிமேல் இப்படி பேசாதீங்கனா” என்று கூறி அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் ஆரா.
ஆனாலும் ஏதோ ஒரு ஓரம் அவள் அழகும் குணமும் அவனுக்கு ஈர்ப்பை கொடுப்பதை உணர மறுத்தான்.
எதையும் யோசிக்ககூடாது என்று எண்ணியபடி உறங்கிபோனான்.
மறுநாள் அதிகாலையில் எழுந்தவன் உடற்பயிற்சி செய்துவிட்டு அவனது லேப்டாப்பில் நேற்றைய கிளிப்ஸ்ஸை செக் செய்தான் உண்மையான காதல் ஜோடிகளின் திருமணம்போல தோன்றியது அவனுக்கே.
இருவரும் அவ்வளவு அழகாக தெரிந்தனர். அவள் மட்டும் அன்று ஃபோனில் அவள் நடித்துக்கொண்டு இருப்பதாக சொல்லாவிட்டால் இந்நேரம் அவன் அவள்மேல் காதலில் விழுந்திருப்பானோ என்னவோ?
கிளாசிக் லுக்கில் அவனை அவனுக்கே அவனை பிடித்து போனது.
எடிட் செய்யப்பட்ட பின் அவளது இதழ்வரை மட்டுமே காட்டி இருந்தாள் அருந்ததி குறும்புக்காரிபோல பேசினாலும் வேலையில் அவளது டெடிகேஷன் அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது.
அதற்குமேல் அவன் திரும்பி இருக்க அவள் சாய்ந்து அவனை பார்ப்பது போல இருக்க அதில் அவளது இரு கண்களும் அழகாய் அவனை காதலோடு பார்த்தது.
அவளது முகத்தை காட்டாமல் அழகான புகைப்படமும் வீடியோவும் எடுத்திருந்த அருந்ததியின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை அவனால்.
இன்றைய ஷூட்
பற்றி ஏற்கனவே பார்த்திருந்ததால் இன்றைய தினம் என்னவெல்லாம் நடக்கபோகுதோ என எண்ணியபடி அமர்ந்திருக்க அப்போது தான் உள்ளே வந்தாள் மேதா.
சாதாரண உடையில் எந்த அலங்காரமும் இல்லாமல் இருக்கும் அவளது முகம் அழகாக தான் தெரிந்தது அவனுக்கு.
வந்தவள் அவனுக்கு காலை வணக்கத்தை வைக்க அவனும் அமைதியாக இருந்தான்.
அவள் அவனது ஷெட்யூலை சொல்ல வாயெடுக்க அவனோ
“ஒன் க்ரீன் டீ ப்ளீஸ்” என்று கேட்க
அவள் கிட்சன் பக்கம் பார்த்தாள் அங்கு செஃப் இல்லை. அப்படியே அவள் அவன் பக்கம் திரும்ப அவள் முன் ஒரு குறிப்பு நோட்டை நீட்டினான்.
அதில் செஃப் வெளியே போய் இருப்பதாகவும் அவர் கிளம்புவதற்குள் வந்துவிடுவதாகவும் அதுவரை சாமாளிக்கும்படி கேட்டு நோட் எழுதி இருந்தார் செஃப்.
அதை படித்தவள்.
“ஓஓ.. ஓகே சார் ஐ வில் ப்ரிப்பேர்” என்றுவிட்டு சென்று அடுத்த பத்து நிமிடத்தில் அவனுக்கு க்ரீன் டீயும் அவனுக்கான சிற்றுண்டியும் எடுத்து வந்தாள்
அவனுக்கும் லேசாக பசிப்பது போல இருந்தது ஆனால் ஷூட் இருப்பதால் க்ரீன் டீ மட்டும் அருந்திவிட்டு கிளம்பலாம் என்று எண்ணி இருந்தான் ஆனால் செஃப் இல்லாமல் போக பசியும் அதிகம் ஆகியது அதனால் தான் டீ வேண்டும் என்று அவளிடம் சொன்னான் ஆனால் அவளோ கூடவே பசியறிந்து உணவூட்டும் அன்னை போல கையில் சிற்றுண்டியோடு வர ஆச்சரியம் தான் அவனுக்கு.
அவள் கொண்டு வந்து வைத்ததை மிச்சம் வைக்காமல் உண்டவன் அவள் ஏதாவது சாப்பிட்டாளா இல்லையா? என யோசித்தான் ஆனால் எதுவும் கேட்கவில்லை.