Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 8

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 8

அத்தியாயம் – 8

(மக்களே ரியோ கான்வர்சேஷன் ஃபுல்லா ஜாப்பனீஸில் தான் இருக்கும் நான்தான் தமிழ்ல எழுதுறேன்.. கூகுள் மாமா தப்பா சொல்லிடுவாரோனு ஒரு சந்தேகம் அதான் முடிஞ்சவரை தமிழ்ல டைப்புறேன்..அட்ஜஸ்ட் கரோ..)

“நாம இன்னைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கூற அவனை அதிர்ந்து பார்த்தவள்
“எ..என்ன சொல்றீங்க?” என்று கேட்க..

“யா..நாம இன்னைக்கே கல்யாணம் செஞ்சுக்கலாம்..ஆஃப்டர் மேரேஜ் உங்க டாட்கிட்ட பேசலாம்” என்று கூறினான்..

“நா..நா..நான்.. எ..என்ன சொல்ல..அ..அ..அப்பா” என்று அவள் அழ..
அவளை தன்னோடு சேர்த்து அணைத்தவன் உடனடியாக தனது தந்தைக்கு அழைத்து விவரம் சொல்லி அவரை வரவழைத்தவன் அடுத்த இரண்டு மணி நேரத்தில் ரிஜிஸ்டர் ஆபீசில் திருமணத்தை பதிவு செய்தான் தனது தந்தையின் உதவியோடு கூடவே அவனது நண்பர்கள் மற்றும் தேஜுவின் நண்பர்களோடு திருமண ஏற்பாடு செய்து இருந்தான்..
ரியோட்டோவின் தந்தை அவளிடம் வந்து பேசி அவளை நார்மலாக இருக்க வைத்தார்..
ரென்னிற்கு கொலைவெறியே உண்டானது அவள்மேல் ஆனாலும் ரியோவின் தந்தைமுன் எதையும் காட்டிக்கொள்ள முடியாது நின்றான் அவனை அவசரமாக ரியோ வரசொன்ன இடத்துக்கு வந்தவனுக்கு அப்போதுதான் தெரிந்தது இருவருக்கும் திருமணம் என்பது அதனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை..
இவர்களுக்குள் ஏதாவது தவறு நடந்தால் அவள் வெறுத்து பிரிந்து செல்வாள் என எதிர்பார்த்திருக்க அவளோ திருமணத்திற்கு வந்து நிற்க அவனுக்கு கோவம் அதிகமாய் ஆனது அவள்மேல்..
ஆனால் அதை எதையும் முகத்தில் காட்டாமல் நின்றான் ரென்..

திருமணத்தை ரிஜிஸ்டர் செய்த கையோடு ரியோட்டோவின் தந்தை நீட்டிய ஜுவல் பாக்ஸை வாங்கியவன் அதிலிருந்த தாலியை எடுத்து அவளுக்கு அணிவித்தான் மெல்லிசான கழுத்தில் போடும் சாதாரண செயின் போலவே இருந்த அந்த மாங்கல்யம் அவளுக்கு மிகவும் பிடித்து போனது கண்கள் கலங்க அவள் ரியோட்டோவை பார்க்க
“ஐ லவ் இன்டியன் மேரேஜ்” என்று விட்டு அவளது நெற்றியில் முத்தமிட அங்கிருந்தவர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்ப அவளோ வெட்கப்பட்டு தலையை குனிந்து கொண்டாள்..இதை எல்லாம் ரியோட்டோவின் நண்பன் புகைப்படம் எடுத்தான்..
அதன்பின் எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்..

ரியோட்டோவின் தந்தை இப்போதைக்கு தேஜுவின் தந்தைக்கும் மற்றவர்க்கும் திருமண விஷயம் சொல்ல வேண்டாம் எனவும் இருவரின் படிப்பு முடிந்ததும் சொல்லிக்கொள்ளலாம் எனவும் கூற அவர்களுக்கும் அதுவே சரியென பட இருவரும் பழையபடி வேறு வேறு அறைகளிலேயே இருப்பதாய் முடிவு செய்தனர்..
அன்றைய தினம் மகனின் அவசர திருமணத்திற்கு வந்ததால் அவனிடம் பேச நேரமில்லாமல் கிளம்பி விட்டார் ரியோட்டோவின் தந்தை.. போகும் முன் ரியோட்டோவை பார்த்தவர்
“எந்த பிரச்சனையா இருந்தாலும் நீதான் சமாளிக்கனும் பார்த்து இருந்துக்கபா” என்றுவிட்டு கிளம்பினார்..

தந்தையின் பேச்சு புரியாமல் நின்றான் ரியோட்டோ..

“என்ன புரியல.. இப்படிப்பட்ட கேடுகெட்ட நண்பன் கூட இருக்கான் உன் வாழ்க்கையை காப்பாத்திக்கடானு அப்போவே சொல்லி இருக்காரு..நீங்க தான் மக்கு மாதிரி இருந்து இருக்கீங்க” என்று அருந்ததி கூற நினைவிலிருந்து வெளியே வந்தான் ரியோட்டோ.. அவன் திருதிருவென முழிக்க அதை பார்த்து சிரித்துவிட்டான் ஆராஷி..
நிதின் அவளை அதட்ட..

“சும்மா இருங்க அண்ணா.. ஏதோ ஒரு லூசு ப்ரண்டடை நம்பி வாழ்க்கையை தொலைச்சு இருக்காரு.. இவரை திட்டாமலா இருப்பாரு அவங்க அப்பா.. ப்ரண்ட்ட நம்புறதுக்கும் ஒரு அளவு இல்ல.. இப்போதான் புரியுது அக்கா ஏன் இவர விட்டு வந்தாங்கனு..” என்று கோவமாய் கூற

“அதுக்கு இப்படி பேசுவியா நீ? ஆயிரம்தான் இருந்தாலும் அவரு தேஜுவோட புருஷன் அதை மனசுல வெச்சுட்டு மரியாதையா பேசு..சே சாரி ட்டூ ஹிம்” என்று நிதின் கூற முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டவள்..

“ஐயம் சாரி மாம்ஸ்..” என்று கூற ரியோட்டோவிற்கு ஆச்சரியம் ஒரு பக்கம் என்றால் அவளது வருத்தம் அவனை வருத்த..

“ஹே..மை லிட்டில் பிரின்ஸஸ்.. என்னை இவ்ளோ சீக்கிரம் சொந்தமா ஏத்துக்குவீங்கனு நான் நினைச்சுகூட பார்க்கலை.. நீங்க தப்பா எதுவும் சொல்லல.. அப்புறம் எதுக்கு சாரி..நீங்க இப்படி பேசுறது ஐ லைக் இட்” என்று அவளை சமாதானம் செய்ய அவளும் சிரித்தபடி

“சரி மாம்ஸ் அப்புறம் சொல்லுங்க எப்படி அக்காவை பிரிஞ்சீங்க? அக்கா எவ்ளோ அடி அடிச்சாங்க? எப்படி எஸ்கேப் ஆனீங்க?” என்று கேட்க..அவளது தலையை பிடித்து ஆட்டியவன்..

“யூ..நாட்டி கேர்ள்..நான் அடிவாங்குறது உனக்கு அவ்ளோ ஹாப்பியா?” என்று கேட்க..எல்லோரும் ஆச்சர்யமாய் பார்த்தனர் இருவரின் உரையாடலை..

“எல்லாம் ஒரு கடுப்ஸ்தான்.. ஆக்சுவலி நான் உங்கள கரெக்ட் பன்னலாம்னு நினைச்சேன் ஆனா அக்கா ரிசர்வேஷன் பண்ணிட்டா..மை பேட்லக்” என்று கூறிவிட்டு நாக்கை கடித்தபடி அவனை பார்க்க அதில் சிரித்தவன்..

“யூ ரியலி நாட்டி கேர்ள்..சரி கரெக்ட் பண்றதுனா என்ன?” என்று கேட்க..

“அப்படினா உங்களுக்கு தெரியாதா? அது வந்து” என்று அவள் ஆரம்பிக்க

“அரூ” என்று நிதின் அழைக்க

“சா..சாரினா..கொஞ்சம் அட்டாச் ஆகிட்டேன்” என்றாள் அரூ..

“அவர என்னாச்சுனு சொல்லவிடுமா” என்று கூற

“ரைட்டு” என்றபடி அவள் அமைதியாகிவிட மீதி கதையை கேட்க ஆர்வமாய் பார்க்க

“நாளைக்கு ஆராஷிக்கு ஒரு ஆட் ஷூட் இருக்கு அது முடிச்சுட்டு வந்து சொல்றேனே” என்று கேட்க..
அப்போது தான் நேரமாகிவிட்டதை அனைவரும் உணர்ந்தனர்..

“யோவ் மாமா..இப்படி முக்கியமான சீனை நாளைக்கு சொல்றேன் சொன்னா என்ன அர்த்தம்?” என்று அரூ கேட்க..
“ஹேய்..அரூ” என்று அனைவரும் அதட்ட..
“அடபோங்கபா” என்று அவள் சலித்துக்கொள்ள..

“இல்ல பிரின்ஸஸ்.. இப்போ போய் ரெஸ்ட் எடுத்தா தான் நாளைக்கு ப்ரெஷ்ஷா ஷூட் பண்ண முடியும்” என்று கூற..

“நாளிக்கு எனக்கு ஒன்லி ஷூட் இருக்கி அண்ணாக்கு இல்லே.. சோ அவங்கள அனுப்புறேன்” என்று கூறினான் ஆராஷி.. அவனது பேச்சுக்கு அனைவரும் அமைதியாகிவிட முதலில் வருந்தியவன்..
பின்பு தன்னை தேற்றியபடி..

“லெட்ஸ் கோ ப்ரோ” என்று கூறியவன் திரும்பி நடக்க

“நாளைக்கு வர்றேன்” என்றுவிட்டு கிளம்பியவன் திரும்பி
“நான் என் டாட்டரை பார்க்கலாமா?” என்று கேட்க.. சட்டென நின்றான் ஆராஷி..
எல்லோரும் வருத்தமாய் அவனை பார்த்தனர்..

“ம்ம்ம்ம்.. எங்களை அடிவாங்க வைக்காம ஓயமாட்டிங்க போல?” என்றான் சாஹித்யன்..

“கரெக்டுடா அண்ணா நான் நினைச்சேன் நீ சொல்லிட்ட” என்று அவனுக்கு ஆதரவாய் பேசினாள் அருந்ததி..

“உன் ஒருத்தி வாயே போதும்.. நாங்களும் சேர்ந்து அடி வாங்க” என்றான் சாஹித்யன்

“இந்தா அண்ணனுலாம் பார்க்கமாட்டேன் கொன்னுடுவேன்.. நீ ஒலரவே மாட்டியா? நான் ஒலரி இருந்தா இந்நேரம் உன் வண்டவாளம்லாம் தண்டவாளம் ஏறி இருக்கும்” என்று கூற

“அடியேய்.. போதும் நீ அடங்கு” என்றான் சாஹித்யன்..

“நீ அடங்கு மேன்.. உன்ன பத்தி போட்டு கொடுக்க ஒன்னும் இல்லனு துள்ளுறியா?” என்று கேட்க..

“போதும் உங்க சண்டையை நிறுத்துறீங்களா?” என்றான் நிதின் இருவரும் உடனே அமைதியாகிவிட..

“இங்க பாருங்க ரியோட்டோ.. தேஜு உங்ககூட சேர்ந்து வொர்க் பண்ணனும்னு வருவாளா? மாட்டாளானே தெரியல..பாப்பாவ கண்டிப்பா உங்க கண்ணு முன்னாடி கூட்டிட்டு வரமாட்டானு நினைக்கிறேன்..முதல்ல உங்களுக்குள்ள என்ன பிரச்சினை நடந்துச்சுனு தெரிஞ்சாதான் அதுக்கு ஏத்த மாதிரி நாங்க ஹெல்ப் பண்ணவே முடியும்.. இப்போதைக்கு பேபிய பார்க்கமுடியாது நீங்க அதுக்கு வெயிட் பண்ணித்தான் ஆகனும்” என்று கூற ..

“ம்ம்ம்..ஓகே” என்றுவிட்டு ஆராஷியுடன் சேர்ந்து நடந்தான் ரியோட்டோ..

கார் அண்ணாநகர் சாலையில் செல்ல லேசாக தூரல் ஆரம்பித்தது.. அன்று இதேபோல் ஒரு மாலை நேரம் லேசான தூரலில் தன் தூயவளை கண்டது நினைவு வர சட்டென காரை நிறுத்த சொன்னான் ஆராஷி..

“ஈஸ் தேர் எனி இஷ்யூ சார்” (“is their any issue sir”)என்று அவனது பி.ஏ கேட்க

“யெஸ்..ஐ ஜஸ்ட் வாண்ட் ஐஸ்கிரீம்..எஸ்ஸெபஷலி கொர்னேட்டோ..ஐ வில் கோ அண்ட் பை” (“yes..i just want icecream..Especially cornetto..i will go and buy”)என்று அங்கிருந்த ஐஸ்கிரீம் பார்லரை நோக்கி கை காட்டினான்..
ஆனால் அனைவரும் அவனை தடுத்தனர்..
“சார் ப்ளீஸ் யூ ஸ்டே ஹியர்..ஐ வில் பை ஃபார் யூ..இஃப யூ கேம் அவுட் கிரவுட் வில் அப்பியர் சார் இட்ஸ் டேன்ஜர்”(“sir please you stay here.. i will buy for you.. if you came out crowd will appear sir its danger”) என்று பி.ஏ கூறிவிட்டு இறங்க போக..

“நோ நீட்..வில் மூவ்” (“no need..Will move”) என்றவன் ஜன்னலோரம் எதையோ பார்த்தபடி அமர்ந்துவிட்டான்..

அன்று நடந்ததை நினைவுகூர்ந்தவன்.. தனக்குள் ஆயிரமாவது முறையாக சொல்லிக்கொண்டான்..

‘ப்ளீஸ் கம் ஃபேக் ட்டூ மீ மை ஏஞ்சல்’ என்று..

தன்னை தன் வாழ்க்கையை மாற்றி அமைத்தவளை தானே ஓட ஓட விரட்டிவிட்டு இன்று காணும் இடமெல்லாம் அவளை தேடுகிறான்.. தன்னை இப்படி மாற்றியவளை என்று காண்பானோ.. அதுவரை அவன் உயிருள்ள ஒரு ஜடமே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *