Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 57

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 57

அத்தியாயம் – 57

கார்ட்ஸ் அங்கேயே நின்றுவிட கார் உள்ளே சென்றது வாசலில் கார் நிற்க மேதாவை எழுப்ப முயன்று தோற்று போனான் அவன் டாக்டர் சொன்னது நினைவு வர
மீண்டும் அவளை தூக்கியபடி நடந்தான் கோழிகுஞ்சு போல் அவனது மார்பில் தலையை சாய்த்து தூங்கி கொண்டு இருந்தாள் மேதா டிரைவரிடம் டோர் கீயை கொடுத்து திறக்க சொன்னவன் அவர் திறக்க அவளை உள்ளே தூக்கி போய் பெட்டில் படுக்க வைத்தான்.
குருவிபோல அவள் சுருண்டு கொள்ள போர்வையை அவளுக்கு போர்த்தியவன் டிரைவரிடம் அவரையும் அங்கேயே தங்கிவிட கேட்டான் ஆனால் அவரோ வீட்டில் தன் மகள் மட்டுமே இருப்பாள் அவளுக்கு பாதுகாப்பு தான் தான் என்று கூற சரியென நன்றி கூறி யோசித்தவன் ரெஸ்டாரண்ட் ரிஷப்ஷன் க்கு ஃபோன் செய்து உணவை ஆர்டர் செய்தவன் பார்சலும் சொன்னான் அவரை சிறிது நேரம் இருக்க சொன்னவன்உணவு வந்ததும் அவரிடம் கொடுத்து அனுப்பினான் காலை வரும்படி.
அவரும் கிளம்பிவிட கஞ்சி வர லேட் ஆகும் என்று கூறியவர்கள் அது வருவதற்குள் கார்ட் ஒருவர் வந்து கதவை தட்ட திறந்தவன் பார்சலை வாங்கி கொண்டு அவர்களை சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கும் படி சொல்லி அனுப்பினான்.
சிறிது நேரத்தில் கஞ்சி வர அதை தூக்கத்திலேயே அவளுக்கு புகட்டியவன்
அவள் உண்டதும்
ரிஷப்ஷன் க்கு ஃபோன் செய்து லேடியை ஹெல்ப்க்கு அனுப்ப சொல்ல அவர்களும் ஒரு பெண்ணை அனுப்பி வைத்தனர். அதுவரை மாஸ்க் அணிந்தபடியேதான் இருந்தான் ஆராஷி.
வந்த பெண்ணிடம் மேதாவிற்கு உடல்நிலை சரியில்லை என கூறி உடை மாற்றி விடும்படி அவன் உதவி கேட்க கஞ்சியும் அதற்குள் வந்துவிட்டது.
அவனை ஒருமாதிரியாக பார்த்த பணிப்பெண் அவன் கூறியது போலவே அவளுக்கு உடை மாற்றிவிட அதுவரை வெளியே இருந்தவன் உடை மாற்றிவிட்டேன் என அந்த பெண் சொல்ல நன்றி கூறிவிட்டு அவரை போக சொன்னவன் கஞ்சியை அவளுக்கு ஊட்டிவிட சென்று அவள் அருகில் அமர்ந்து அவளை தன் தோள்மேல் சாய்த்தபடி அவளுக்கு தூக்கத்திலேயே ஊட்டி விட அதையெல்லாம் அங்கிருந்து செல்லும்முன் கழட்டிய மேதாவின் உடைகளை அங்கிருந்த கிளீனிங் பாக்சில் எடுத்து போட்டபடி பார்த்த பணிப்பெண் எதுவும் பேசாமல் அமைதியாக சென்றுவிட்டார்.
தூக்கத்திலேயே அவளுக்கு கஞ்சியை ஊட்டியவன் அவளுக்கு வாய்துடைத்து முகத்தையும் துடைத்துவிட.
அவனது மார்பில் சாய்ந்தபடி “அப்பா” என்றுதான் முனகினாள்.

அவளது முனகலை கேட்டவன்
“மேதா மேதா” என்று அழைக்க
“ம்ம்” என்றவள்.
“ஐ மிஸ் யூ அப்பா” என்றுவிட்டு மீண்டும் அமைதியாகி போனாள்.
அதை பார்த்தவன் தூக்கத்தில் புலம்புகிறாள் என்று தட்டி கொடுத்து அவளது கன்னத்தை தட்டி மாத்திரையை முழுங்க வைத்தவன் அவளை படுக்க வைத்துவிட்டு அவன் சாப்பிட அமர்ந்தான்.
அவனும் சாப்பிட்டுவிட்டு தனது அன்றாட எக்சர்சைஸ் எல்லாம் முடித்துவிட்டு வர மணி பன்னிரெண்டு ஆகி இருந்தது. அவளை சென்று பார்த்தவன் அவள் முகத்தை சுருக்கியபடி உறங்குவதை பார்த்தவன் ‘ரொம்ப பெயின்ல இருக்காளோ?’ என்று அவளது அருகில் சென்று ஹாட்பேக்கை எடுத்து அவளது வயிற்றில் வைத்து அவளது ஒருகையை எடுத்து அதை பிடித்துக்கொண்டு இருக்கும்படி வைத்தவன் ஏதோ ஒரு யோசனையில் அவளது புருவங்களை நீவி விட்டான் அதனால் அவள் அமைதியாக தூங்குவாள் என்று தோன்றியது அவனுக்கு.
ஆனால் அவனுக்கு அவனை நினைத்தே ஒருவித யோசனையாக இருந்தது
‘இவளுக்கு ஏன் நாம இப்படியெல்லாம் செஞ்சுட்டு இருக்கோம்? ஜஸ்ட் ஒரு எம்ப்ளாயிக்காக நாம இவ்ளோ செய்யனுமா? இவ வேஷம் போட்டு நடிச்சு எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்கா ஆனால் நாம அவளுக்கு வேலை செஞ்சுட்டு இருக்கோம் ஒருவேளை இதுவும் நடிப்பா இருக்குமோ?’ என்று யோசித்தவன்
‘ச்சே ச்சே இந்த விஷயம்ல பொண்ணுங்க ரொம்ப சென்சிடிவ் அதும் அந்த நேரத்தில அவளோட வலி அழுகை பயம் எல்லாமே நிஜமாதான் இருந்துச்சு அதுலையும் அவளுக்கு நாம அங்க போறதே தெரியாதே அவ அருந்ததி வருவானு தானே இருந்தா.
அதும் டிரஸ் ஃபுல்லா ப்ளட் ஸ்டெயின்ஸ்ஸோட ஒரு பாய் முன்ன இருக்குறது எவ்ளோ uncomfortable. நாம எழுந்து போக சொன்னப்போகூட அசிங்கம் பட்டுகிட்டு நகரவே மாட்டேன்னு தானே இருந்தா டாக்டர் கூட அவளுக்கு அல்சரா இருக்கும்னு வேற சொன்னாங்களே அதுக்கும் சான்ஸ் இருக்கே நானே இவ நிறைய முறை திங்காம வேலை செய்யுறத பார்த்து இருக்கேனே? அன்னைக்கு கூட ஷூட் ல இவ மயக்கம் போட்டு விழுந்ததால தானே ஷூட்டிங்கே கேன்சல் ஆகி ஹீரோயின மாத்த வேண்டி ஆச்சு’ என்று யோசித்தவன்
‘ஆனா இவள அப்படி பார்த்ததும் ஏன் சடனா எனக்கு அந்த ஜப்பான்ல பார்த்த பொண்ணு நியாபகம் வரணும் அதே அழுகை பயம் ஆனா அவ வேற இவ வேற தானே அப்புறம் ஏன் எனக்கு இவள பார்த்தா அந்த பொண்ணு நியாபகம் வருது? ஏதோ ஒருவகையில இவ ஏன் அவள நியாபகபடுத்திட்டே இருக்கா?’ என்று ஏதேதோ யோசித்தவன் கடைசியாக
‘எதுவோ ஒன்னு ஒரு பொண்ணு இக்கட்டான சூழ்நிலையில அவளுக்கு ஒரு ஆணோட உதவி கண்டிப்பா இருக்கனும் இது அம்மா நமக்கு சொல்லி கொடுத்தது அதையே நாம கண்டிப்பா எப்பவும் ஃபாலோ பண்ணனும்’ என்று முடிவு செய்துவிட்டு தனது மொபைல் ரிங் ஆகவும் வெளியே சென்றான்.
அந்த நேரத்தில் யார் ஃபோன் என்று யோசித்தபடி எடுத்தவன் நிதின் என்பதை பார்த்ததும் எடுத்து பேசினான்.
“எஸ் மிஸ்டர் நிதின் எனி இம்பார்டண்ட்? ஆன் திஸ் டைம்?” என்று கேட்க

“ஐ ஐ ஜஸ்ட் காலட் ஆஸ்க் அபெளட் மேதா ஆராஷி சர்? ஹவ் ஈஸ் ஷி? அருந்ததி ஸ்டில் டிடின்ட் பிக் எ கால் சோ ஐ கால்ட் யூ” (i just called ask about medha aarashi sir? How is she? Arundhadhi still didn’t pick a call so I called u?) என்று கூற
திரும்பி அவளது அறையை பார்த்தவன்
‘ஆப்ட்ரால் ஒரு எம்ப்ளாயி இவ அதும் தூரத்து சொந்தம் இவளுக்காக இவரு ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறாரு?’ என்று யோசித்தவன்
“ஷி ஈஸ் ஸ்லீப்பிங் நார்மலி நத்திங் வாஸ் சீரியஸ் ஷி ஈஸ் ஓகே சர்” என்று கூற மறுமுனையில் நிம்மதியாய் ஒரு பெருமூச்சு விட்டவன்

“ஓஓ ஓகே சர் யு ஆல்சோ டேக் கேர் யுவர் ஹெல்த் சர் குட் நைட்” என்றுவிட்டு உடனே கட் செய்து விட்டான்.
மொபைலையே பார்த்தவன்
‘என்ன ஆச்சு இவருக்கு? இந்த அருந்ததி இன்னைக்கு பார்த்தா இப்படி தூங்கணும் இவளால எனக்கு நைட் டியூட்டி ஆகிடுச்சு’ என்று எண்ணியபடி அவனது மெயில்ஸ் செக் செய்ய மீண்டும் அழைப்பு வந்தது
‘இப்போ யாருடா?’
என்றபடி பார்க்க அவனது அண்ணன் ரியோட்டோ.
உடனே எடுத்தவன் இன்னும் தூங்காம இருக்கியே என்று ரியோட்டோ கேட்டதும் நடந்ததை கூற அவனுக்கோ ஆச்சரியம் சினிமாவை தவிர நிஜத்தில் எந்த பெண்ணிடமும் அதிகம் பேசாத ஆரா ஓரமாய் ஒதுங்கி போகும் ஆரா யாரையும் தொட்டு பேசாத ஆரா இப்போது அதும் பெண்களின் முக்கியமான சூழ்நிலையில் அவளுக்கு உதவி செய்துள்ளானா? அதும் அவளை தொட்டு தூக்கி அதனால் தனது நிலையையும் மாற்றி கொஞ்சமும் அசிங்கம் பார்க்காமல் என்று யோசிக்க
அப்போது தான் ஆரா அவனுக்கு இது அம்மா சொல்லி கொடுத்தது அதும் இல்லாமல் ஏற்கனவே அவன் இதேபோல் ஒரு சின்ன பெண்ணுக்கு உதவி உள்ளான் என்று கூற
அவனுக்கு சப்பென்று ஆனது.

ஆனாலும் ஒரு பக்கம் ‘இவன் அந்த பெண்ணிடம் காதல் வசப்பட்டு இருக்கிறானோ அது இவனுக்கே புரியவில்லையோ? என்று யோசித்தவன் அவன்தான் அந்த பெண்ணை தேடிக்கொண்டு இருக்கிறானே அதனால் இந்த பெண்ணை லவ் பண்ண சான்ஸ் கம்மிதான்.
ஆனா எனக்கு ஏன் இவன் சொல்றதெல்லாம் வெச்சு அந்த பொண்ணும் இந்த பொண்ணும் ஒன்னுனு தோணிட்டே இருக்கு? அப்படி மட்டும் இது நிஜமா இருந்தா நீ ரொம்ப லக்கி ஆரா’
என்று யோசித்தபடி அவளது நலம் விசாரித்துவிட்டு அவனையும் பாதுகாப்பாய் இருக்கும்படி கூறிவிட்டு வைத்தான்.
ரியோட்டோவுடன் பேசிவிட்டு வைத்தவன் நேரத்தை பார்க்க மணி ஒன்றாகி இருந்தது.
ரூமில் ஏதோ சத்தம் வர எழுந்து சென்று அவளை பார்க்க கதவை திறக்க அப்போது தான் எழுந்த மேதா எங்கு இருக்கிறோம் என்றுகூட உணராமல் அங்கிருந்த டேபிளின் மேல் இருந்த சானிட்டரி பேடை எடுத்தபடி பாத்ரூம் நோக்கி நடக்க அவளால் நிற்கமுடியாமல் தள்ளாடியபடி
“அரூ ஹெல்ப் மீ” என்று தாழ்ந்த குரலில் பேசியபடி விழப்போக ஓடிவந்து அவளை பிடித்தான் ஆரா.
அருந்ததி தான் தன்னை தாங்கினாலோ என்று நிமிர்ந்து அவளை பார்க்க அங்கோ ஆராஷி முகம் தெரிய அதிர்ந்து விலகப்போனவளை
விலக முடியாதபடி பிடித்தவன்

“யூ ஆர் நாட் வெல் மேதா பி கேர்ஃபுல் டோன்ட் கெட் ஹெசிடேட் வித் மீ” (you are not well medha be careful don’t get hesitate with me)என்று கூறியபடி அவளை தாங்கியபடி நேராக நிருத்த
அப்போது தான் தான் எங்கே இருக்கிறோம் என்று பார்த்தாள்.
அது அவன் தங்கி இருக்கும் அறை என்பது விளங்க அவசரமாக விலகியவள் முடியாமல் கூட சுவற்றில் கையை ஊன்றியபடி
“சா..சாரி சர் நான் தெரியாம உ..உங்க ரூம்க்கு வந்துட்டேன் போல” என்றபடி அடுத்த அடி எடுத்து வைக்கமுடியாமல் கால்கள் தள்ளாட தலையை சிலுப்பி அவளை தன்னிலை அடைய வைத்தபடி விழப்போக அவளை மீண்டும் தாங்கியவன்.

“நீங்க தெரியாமலாம் வரல நான் தான் உங்கள இங்க தூக்கிட்டு வந்தேன்”
என்று கூற அதிர்ந்து அவனை பார்த்தாள் அவள்.
“ஐ மீன் உங்க ப்ரண்ட் அருந்ததி ஃபோனே எடுக்கல டோர் லாக் ஓபனும் பண்ணல ரிசப்ஷன்ல அந்நேரம் போய் ஃபோன் நம்பர் கேட்டதால தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க அவங்களையே ஃபோன் பண்ண சொன்னோம் அதையும் அருந்ததி எடுக்கல அதனாலதான் உங்களுக்கு உடம்பு முடியலனு இங்கே தங்க வெச்சேன் உங்க அண்ணன் சொன்ன அப்புறம்தான்” என்று கூற மாலை நடந்தது அப்போது தான் அவளுக்கு நியாபகம் வந்தது அவளால் தனியாக நிற்க கூட முடியவில்லையே ஆனால் இப்போது பேட் மாற்ற வேண்டுமே என்ன செய்வது? என்று சங்கடமாய் யோசித்தாள்.
அவளது எண்ணம் புரிந்தவன்போல அவளை ஒரு கையால் தாங்கியபடி இன்னொரு கையால் அங்கிருந்த ஜூஸை எடுத்து “இருங்க இந்த ஜூஸ் கொஞ்சம் குடிங்க அப்புறம் வாஷ்ரூம் போகலாம் கொஞ்சம் ஸ்ரெந்த் வரும்” என்றபடி அந்த எனர்ஜி டிரிங்கை எடுத்துக்கொண்டு அவளை அழைத்து வந்து கட்டிலில் அமரவைத்து அவளது வாயருகே கொண்டு சென்று வைத்தான்.
ஒரு கையில் பேட் கவர் இருக் அதை மறைத்தபடி இன்னொரு கையால் அதை வாங்க முற்பட அவளது நடுங்கும் கையை பார்த்தவன்
“நானே குடிக்க வைக்கிறேன் நீங்க ரொம்ப டவுனா இருக்கீங்க” என்றுவிட்டு அவனே அவளுக்கு ஜூஸை குடிக்க வைத்தான். சங்கடமாய் அவனை பார்க்காமல் கொஞ்சம் குடித்தவள் போதும் எனக்கூற
“ஒழுங்கா குடிங்க டாக்டர் நிறைய ஜூஸ் தர சொல்லி இருக்காங்க” என்று அதட்டியபடி அதை முழுவதும் அவளை பருக வைத்தான்.
ஓரளவு தெம்பு வந்தது போல இருந்தது அவளுக்கு ஆனால் என்ன சொல்லிவிட்டு வாஷ்ரூம் செல்வது என்று அவள் யோசிக்க அதை பார்த்தவன் அவளை மேலே எழுப்பி வாஷ்ரூம் அருகே கூட்டி சென்றான் அவளை உள்ளே விட்டு திரும்பியவன் அவள் கதவை சாத்த போகும் நேரம் கதவில் கைவைத்து தடுத்தவன்
“டோர் நான் வெளியே லாக் பண்ணிக்கிறேன் உங்களுக்கு மயக்கம் வந்துட்டா நான் ஓபன் பண்ண ஆகாதே அதான் நீங்க உங்க வேலை முடிச்சுட்டு கதவை க்நாக் பண்ணுங்க நான் ஓபன் பன்றேன்” என்றுவிட்டு அவளது பதிலை கூட எதிர்பாராமல் அவன் கதவை வெளியே தாழிட அவளால் உள்ளே தாழிட முடியாமல் போனது அவளுக்கு இப்படி ஒரு சங்கடமான சூழ்நிலை வரும் என அவள் கனவிலும் நினைக்கவில்லையே.
‘இவருகிட்டேயே எனக்கு இப்படி ஒரு நிலையில திரும்ப திரும்ப மாட்டிவிடுறியே ஆண்டவா அவரு முகத்தை பார்க்கவே எனக்கு சங்கடமா இருக்கே?’ என்று எண்ணியபடி அவளது வேலையை முடித்தவள் கையை கழுவிவிட்டு முகத்தையும் கழுவியவள் அப்போது தான் கவனித்தாள் அவளது உடை மாற்றப்பட்டு இருப்பதை.
அவளுக்கோ மயக்கம் வராத குறை.
நெஞ்சோடு உடையை இறுக்கி பிடித்தவளுக்கு கண்கள் கலங்கி அழுகையே வரும்போல ஆனது. அதிலும் உடை முட்டி வரை மட்டுமே இருந்தது.
ஆனால் ஆராஷி தனக்கு உடை மாற்றி இருக்க மாட்டான் என்று நம்பினாள். ஆனால் அவளது உடை மாற்றப்பட்டு அதும் புது உடை அணிந்து இருப்பதை பார்த்தவளுக்கு மயக்கம் வருவது போல் இருந்தது சமாளித்து நின்றாள் அதற்குள் உள்ளிருந்து எதுவும் சத்தம் வராததால் கதவை தட்டினான் ஆரா.
“மேதா” என்று அழைக்க
அதில் தெளிந்தவள்
“ஒரு நிமிஷம் சர்” என்றுவிட்டு மீண்டும் தண்ணீரை முகத்தில் அடித்தவள் அங்கிருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்தபடி வந்து கதவை தட்ட ஆராஷி திறந்தான்.
அவளால் நடக்கமுடியாது என்று நினைத்தவன் அவளை கைதாங்கலாக அழைத்து வந்து பெட்டில் அமரவைத்து அவளை பார்க்க அவளோ அந்த மயக்க நிலையிலும் யோசனையாய் உடையை பார்த்தபடி அமர்ந்து இருக்க புரிந்தவன் அவளது தோளில் கிடந்த டவலை எடுத்து அவளது காலின்மேல் விரித்து போர்த்தியவன்
“உங்களுக்கு டிரஸ் திங்க்ஸ் எல்லாம் உங்க அண்ணா ஆள்கிட்ட கொடுத்து விட்டாங்க ரூம் சர்வீஸ் கேர்ள் வந்து உங்களுக்கு டிரஸ் சேன்ஞ் பண்ணிவிட்டாங்க” என்று கூறியபடி அவளை பார்க்க அவனது பதிலில் தான் அவளுக்கு உயிரே வந்தது.

நிமிர்ந்து “தே தேங்க்ஸ் சர் அண்ட் சாரி ஃபார் பாதரிங் யூ” என்றுவிட்டு மீண்டும் தலையை கவிழ்த்து கொண்டாள்.
அவளுக்கு மிகவும் சங்கடமாக உணர்கிறாள் என்று உணர்ந்தவன்

“தட்ஸ் நாட் ஏ பிக் இஷ்யூ யூ ஆர் மை ரெஸ்பான்ஸிபிலிட்டி சோ ஐ டேக் கேர் ஆஃப் யூ ஓகே டோண்ட் வொர்ரி எனிதிங் ஜஸ்ட் ஸ்லீப்” என்று கூறியபடி அவளை படுக்கவைக்க முயல அதிர்ந்து போனவள் பின்வாங்க போக அவளை பார்த்தவன்.
“எனக்கும் பொண்ணுங்கள இந்த டைம்ல எப்படி ஹாண்டில் பண்ணனும்னு தெரியும் மேடம் என்னை பார்த்து பயப்படவேண்டிய அவசியம் இல்ல ஓகே” என்று கூற
“இ..இல்ல சர் நா..நான் தப்பாலாம் நினைக்கல..நான்தான் உங்களுக்கு வேலை செய்யனும் நீங்க போய் எனக்கு வேலை செய்யுறதா? அதான் ஐயம் சாரி சர்” என்று அவள் திக்கி திணறி பேச

“நான் ஒன்னும் நீங்க நல்லா கூட ஹெல்ப்க்கு ஆள் இருக்கும் போது உங்களுக்கு வேலை செய்யல நீங்க உடம்பு முடியாம இருக்கீங்க அதும் ஹெல்ப்க்கு ஆள் இல்லாம இருக்கீங்க இதுல நான் ஹெல்ப் பன்றதால ஒன்னும் ஆகிடாது இங்க நீங்க எம்ப்ளாயி நான் ஆர்டிஸ்ட்லாம் வேணாம் வீ ஆர் ஜஸ்ட் நார்மல் ஹியூமன்ஸ் ஓகே” என்றபடி அவளை அலேக்காக தூக்கியவன் பெட்டில் அவளை வாகாக சாய்ந்துபடுக்க வைத்துவிட்டு டவலை ரிமூவ் செய்தவன் பெட்ஷீட்டை போர்த்திவிட்டு ஹாட்பேக்கை மீண்டும் ஹீட் செய்துஎடுத்து அவளது வயிற்றில் வைத்தவன் அவளது ஒரு கையை எடுத்து முதலில் செய்தது போல செய்ய அவளுக்கு தான் சங்கடமாகி போனது இவ்வளவு பெரிய ஆக்டர் சிங்கர் அவளுக்கு இப்படியெல்லாம் வேலை செய்வது அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் வெட்கமாகி போனது.

“பசிக்குதா? ஏதாவது சாப்பிடுறீங்களா? பெயின்கில்லர் வேணுமா?” என்று கேட்க
எதுவும் வேணாம் என்று தலையை ஆட்டியவள் பசியாக இருந்தாலும் வலியில் எதுவும் சாப்பிட பிடிக்காமல்
“இ..இப்போதானே சர் ஹ
ஜூஸ் குடிச்சேன் அதுவே போதும்” என்று கூற அவளது சோர்ந்த முகமே அவளது பசியை உணர்த்த அவன்
“டேப்லட் போடணும் தூங்கிடாதீங்க” என்றுவிட்டு வெளியே சென்றவன் இரண்டு இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் கப்பை எடுத்து அதில் ஹாட்வாட்டரை ஊற்றி கலந்தவன் அதை எடுத்து கொண்டு வந்து அவளது முன்பு நீட்டினான்.
“கஞ்சி ஆல்ரெடி உங்களுக்கு ஊட்டிட்டேன் திரும்ப அதையே சாப்பிட பிடிக்காது அதான் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் செஞ்சு கொண்டு வந்தேன் சாப்பிடுங்க எனக்கும்தான் பசிக்குது கம்பெனி கொடுங்க” என்றபடி அவளிடம் கொடுக்க அதை பிடிக்கவும் அவளால் முடியவில்லை அதனால் அவளது அருகில் பெட்டிலேயே அமர்ந்தவன் சாப்ஸ்டிக்கில் நூடுல்ஸை அழகாக சுருட்டி அவளது வாயருகே கொண்டு செல்ல அவளோ தயக்கமாய் வாயை திறந்தாள் அவளுக்கு ஊட்டியவனை பார்த்தவள்
“எனக்கு கொஞ்சம் சூடு ஆறட்டும் நீங்க சாப்பிடுங்க சர்” என்று கூற
“ரெண்டு பேரும் ஒன்னாவே சாப்பிடலாம்” என்றபடி இரண்டு கப்பையும் ஒரே கப்பாக மாற்றியவன்
அவனும் சாப்பிட்டபடியே அவளுக்கும் கொடுக்க அவளுக்கு முகமெல்லாம் சிவந்து போனது அவனது செய்கையில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *