அத்தியாயம் – 60
அருந்ததி அறைக்குள் வரும்வரை அவளது அருகில் அமர்ந்து இருந்தவன் அருந்ததி வந்ததும் அவன் வெளியே சென்றுவிட்டான்.
அருகில் இருந்த இன்னொரு அறைக்கு சென்றவன்
நூறாவது முறையாக எண்ணினான்
‘இவளுக்கு ஏன் நாம இவ்ளோ மெனக்கெட்டு வேலை செய்யுறோம் அவ சாதாரண வேலை செய்யுறவ அதும் அவ நல்லவ மாதிரி நடிக்கிறவ அவளுக்காக நாம ஏன் இப்படி செய்யணும்’
என்று எண்ணியவனுக்கு ஒருவேளை இவ அவளா இருப்பாளா? என்ற சந்தேகம் வர அடுத்த நொடியே வேகமாக மறுத்தான்
‘ச்சே அவ எப்படி இவளா ஆகமுடியும் அவ ரொம்ப நல்லவ நடிக்க தெரியாதவ அதும் அவ பேரு வேற இவ பேரு வேற அவ பணக்கார வீட்டு பொண்ணு இவ வேலை செய்து தான் சம்பாரிக்கனும்’ என்று எண்ணியவன் இருவரையும் ஒன்றாக எண்ணிய தன் மனதை காரி துப்பி அடக்கி விட்டு படுக்க சென்றான் அப்போதும் அவள் அப்பா என்று தன் கையை பற்றியபடி உறங்கியது தான் மனதில் வந்தது.
‘எதுக்கு என்னை அப்பானுகூப்பிட்டா ஒருவேளை அவளோட அப்பா மாதிரி இருக்கேனோ’ என்று எண்ணியபடி தன்னையே கண்ணாடியில் பார்த்தவன்
அதிர்ந்து எழுந்து நின்றான்.
‘ஏன்டா ஆரா உனக்கு அவ்ளோ வயசாகிடுச்சாடா? உன்ன விட ஒரு மூணு நாலு வயசு சின்ன பொண்ணு அப்பானு கூப்பிடுற அளவுக்கு? ஏன்டி எனக்கு வயசான ஃபீல் கொடுத்திட்டியேடி’ என்று எண்ணியவன் அதற்கும் அவள்மேல் கோவப்பட்டான்.
அவளையே சிந்தித்து இரவு முழுவதும் அவளுடனே கழிந்ததால் உறங்காத வகழிகள் உறக்கத்திற்கு கெஞ்ச உறங்கியும் போனான்.
மேதா உறங்குவதை பார்த்தபடி வந்த அருந்ததி பார்த்தது அவளது வயிற்றின்மேல் ஹாட்பேக்கை வைத்து அதை தன் கைககால் பிடித்து கொண்டு அமர்ந்து இருந்த ஆராஷியை தான் அவளை பார்த்ததும் புன்னகைத்தவன் அவளது கையை எடுத்து ஹாட்பேக்கை பிடித்து இருக்கும்படி செய்தவன் எழுந்து சென்று விட்டான்.
அவளையே பார்த்தபடி அமர்ந்தவளுக்கு யோசனையெல்லாம் மேதா மேல் தான்.
அப்பா இறந்த பிறகு அவளது மனதின் கஷ்டத்தையெல்லாம் ஓரங்கட்டிவைத்துவிட்டு எங்கள் கண்முன் சிரித்தபடி நடமாடியவள் எவ்வளவு ஏங்கி இருக்கிறாள் தந்தையின் பாசத்தை அந்த நடிகனிடம் தேடும் அளவிற்கு.
அண்ணாவிடமும் எங்கள் எல்லோரிடமும் மறைத்து கொண்டு நடமாடினாளே என்று தான் எண்ணினாள்.
தோழியாய் இருந்தவர்கள் குடும்பமாய் மாறியதால் அவளால் சுதந்திரமாக அவர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்று அந்த உயிர்தோழியும் அறியாது போனாள்.
உணவும் காஃபி, டீ, ஜூஸ் எல்லாம் அவர்கள் அறைக்கே வரும்படி ஏற்பாடு செய்துவிட்டு சென்றிருந்தான் ஆரா.
அவனை எண்ணி மெச்சி கொள்ளவும் தயங்கவில்லை அருந்ததி.
இவள் ஏன் அவனுக்காக இவ்வளவு இறங்கி செல்கிறாள் என்பதும் புரிந்தது அருந்ததிக்கு.
அப்படியே அவளை பார்த்தபடி அமர்ந்தவள் அப்படியே உறங்கினாள்.
நன்றாக தூங்கி எழுந்த மேதாவிற்கு முதலில் நியாபகம் வந்தது தனது உடையின் கறை தான்.
மற்றதை மறந்தவள் அலறி அடித்து எழுந்து தனது உடையை செக் செய்தாள்.
தனது உடை மாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்தவள் சுற்றி முற்றி பார்க்க.
அப்போது தான் அவள் ஆராஷி யின் ரூமில் இருப்பதை உணர்ந்தவளுக்கு நடந்தது எல்லாம் நினைவு வர அவனது செயல்களை எண்ணியவளுக்கு மேலும் அவள் மனதில் அவன்மேலான காதல் இன்னும் இன்னும் ஆழமாய் இறங்கியது.
எழ முயற்சி செய்தவள் தண்ணீர் இருக்கிறதா என பார்த்தாள் ஆனால் அங்கு இல்லை அவளது வலது பக்கம் கையை பெட்டில் ஊன்றி அருந்ததி தூங்கி கொண்டிருப்பதை பார்த்த மேதா இடது பக்கமாக லேசாக நகர்ந்து எழுந்தாள்.
எழுந்தவள் மெதுவாக நடந்து வந்தாள் வெளியே.
ஆராஷியின் முகத்தில் எப்படி முழிப்பது அவளுக்கு கூச்சமாக இருப்பதாக எண்ணியபடி அவள் வெளியே வர
தூங்கி கொண்டிருந்த ஆராஷி ஏதோ தோன்ற எழுந்தவன் நேரே மேதாவை படுக்க வைத்திருந்த அறையை நோக்கி தான் வந்தான்.
அவளை கண்டதும் அவசரமாக வந்தவன்
“என்னாச்சு மேதா உடம்பு ஏதாவது பண்ணுதா? வாஷ்ரூம் போகணுமா? மயக்கம் வருதா?” என்று பதறியபடி வந்து கேட்டபடி அவள் அனுமதி இல்லாமலே அவளை தோளோடு சேர்த்து பிடித்திருந்தான் எங்கே அவள் மயங்கி விழுந்துவிடுவாளோ என்று.
அதில் கூச்சத்தில் நெளிந்தவள்
“இ..இல்ல சர் எதுவும் இல்ல த..தண்ணீர் குடிக்க வந்தேன் சர்” என்று அவள் அவனது அணைவிலிருந்து வெளிவர நெளிய அதை கண்டுகொள்ளாதவன் அவளை அழைத்து வந்து அங்கிருந்து சோபாவில் அமர்த்தியவன் அவளுக்கு அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ஓபன் செய்து பருகவைத்தான்.
கூச்சத்தில் பருகியவளுக்கு புரையேற இருமியவளுக்கு தலையை லேசாக தட்டிவிட்டான்.
அவளது இருமல் சத்தத்தில் எழுந்த அருந்ததி அவளை காணாமல் பதறி எழுந்து வெளியே வந்தவள் அங்கு ஆராஷியும் மேதாவும் இருப்பதை பார்த்துஅவளது அருகில் வந்தாள்
“மேதா ஆர் யூ ஆல்ரைட்? ஏதாவது வேணும்னா என்னை குரல் கொடுத்து இருக்கலாமே அவரை ஏன் டிஸ்டர்ப் பன்ற?” என்று கூறியபடி அவளது அருகில் வந்தவள் புரையேறி இருமியதில் நனைந்து இருந்த அவளது உடையை டிஸ்யூ எடுத்து துடைத்துவிட்டாள்.
அவனும் அங்கேயே நின்று அவளையே பார்த்தபடி இருக்க அருந்ததியின் செயலில் மேலும் நெளிந்தாள் மேதா.
அதில் அவள் தயக்கமாய் ஆராவை பார்க்க அதுவரை அவளை பார்த்தபடி இருந்தவன் அப்போதும் அவனது பார்வையை மாற்றாமல் பார்த்துக்கொண்டு இருந்தான் அவன் வேறுபுறம் பார்க்காமல் இருந்ததால் அவள்தான் பார்வையை வேறுபுறம் திருப்ப வேண்டி இருந்தது அவளது உடை ஈரமானதால் அருந்ததி அவளை உடைமாற்ற சொல்ல
தலையை ஆட்டியவள் எழ லேசாக அவள் தடுமாற அருந்ததி பிடிப்பதற்குள் அவளையே பார்த்திருந்தவன் தாவி அவளை தாங்கியபடி அருந்ததியை பார்த்தவன்
“அவ எவ்ளோ வீக்கா இருக்கா நீங்க என்னடானா இவ்ளோ அசால்ட்டா இருக்கீங்க அவளை கைபிடித்து கூட்டிட்டு போகணும்னு தெரியாதா உங்களுக்கு?” என்று அவளிடம் கத்த திருதிருவென முழித்த அருந்ததி
“சர் நா..நான் பிடிக்க வந்தேன் அதுக்குள்ள நீங்க பிடிச்சுட்டீங்க” என்றாள் பதட்டமாய் மேதா அவனை பார்த்து “எ..எனக்கு ஒன்னுமில்ல சர் ஐயம் ஆல்ரைட் சர்” என்று கூற அவளை அருந்ததியிடம் விட்டவன் கோவமாய் தனது ரூமிற்கு சென்றுவிட்டான்.
அதை பார்த்த அருந்ததி
“ஆனாலும் உன் ஆளுக்கு ரொம்ப தாண்டி.
அவனுக்கு முன்ன நான் உன் ப்ரண்ட்டி என்னைகூட உன் பக்கத்தில விட மாட்றாரு. அண்ணாகிட்ட ஏதேதோ பேசி அண்ணாவையே உன்ன அவர் பொறுப்புல விட்டுட்டு போக வெச்சுட்டாரு. நான் பார்த்துக்கிறேன்னு சொல்லியும் நம்பாம வந்து என்னையே திட்டிட்டு போறாரு.
எனக்கும் கோவம் வரும்டி அப்புறம் நான் என்ன கேட்பேனு எனக்கே தெரியாது பார்த்துக்க” என்று கூறியபடி அவளை உள்ளே அழைத்து சென்று பெட்டில் அமரவைத்தாள்
அவளது பேச்சை கேட்டு சிரித்த மேதா
“நான் நேத்து ரொம்ப டென்ஷன்ல இருந்ததை பார்த்தால அவருக்கு ஒரு கேரிங்டி விடு” என்று கூறியபடி உடை மாற்ற எழ முயற்சித்தவளை தடுத்து அமர வைத்தவள்
“நானே போய் வேற டிரஸ் எடுத்துட்டு வர்றேன் நீ அமைதியா உட்காரு தாயி போன சிவபெருமான் திரும்ப வந்து நெற்றிக்கண்ண திறந்திட போறாரு” என்றுவிட்டு அவளுக்கு வேறு உடையை தேடி எடுத்து வந்தவள் அவளுக்கு உடைமாற்ற உதவ உடையை மாற்றியவள் வெளியே வர அதற்குள் அவர்களுக்கான உணவும் ஜுஸூம் வந்து இருந்தது.
பார்த்தியா உன் ஆளோட அக்கறையை என்றபடி அவளுக்கு உணவை ஊட்ட வர தடுத்து தானே உண்டாள் மேதா.
காலை அவன் உணவை ஊட்ட அமைதியாக உண்ட மேதா இப்போது தான் ஊட்டுவதை மட்டும் தடுப்பதை உணர்ந்தவள் அவள் தங்களிடமிருந்து வெகு தூரம் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டாள் அதில் மனம் நொந்தாலும் அவளுக்கு தேவையானதை செய்தாள்.
மருந்தை உண்ட மேதா சிறிது நேரத்திலேயே உறங்கிவிட அறைக்குள் இருப்பது போராக இருக்க கொஞ்சம் வெளியே நடப்போம் என்று வெளியே வந்தாள் அருந்ததி.
அப்போது வெளியே வந்த ஆராஷி மீண்டும் அவளை திட்ட ஆரம்பித்து விட்டான்.
“அவளை பார்த்துக்காம எழுந்து நீங்க பாட்டுக்கு வெளியே வந்தா இவ்ளோதானா உங்க ப்ரண்ட்ஷிப்? அவ பாட்டுக்கு எழுந்து மயக்கம் வந்தா என்ன ஆகுறது?” என்று அவன் திட்ட கோவம் வந்தவள்
“ஸ்டாப் இட் சர். நீங்க சொன்ன மாத்திரையை கொடுத்ததும் அவ தூங்கிட்டா எவ்ளோ நேரம் தூங்குறவ கிட்ட உட்கார்ந்து இருக்குறது கொஞ்சம் வெளியே வாக் போலாம்னு வந்தா இப்படி திட்டுறீங்க உங்களவிட எனக்கு அவமேல அக்கறை இருக்கு சர்” என்று அவளும் திரும்ப திட்ட நேரே அவளை சென்று பார்த்தவன் டாக்டர் அவள் இரண்டு நாள் தொடர்ந்து தூங்குவாள் ஈன்று சொன்னது நியாபகம் வர சரியென அவனது அறைக்கு சென்றவன் லேப்டாப் ஒன்றை தூக்கி கொண்டு வந்தபடி அருந்ததியை பார்த்தவன்
“நீங்க வாக் போய்ட்டு வாங்க அதுவரை நான் இங்க இருக்கேன் அவ சடனா அலறினா நீங்களும் இல்லனா கஷ்டம்” என்றுவிட்டு ரூமிற்குள் சென்று தூங்கும் மேதாவின் அருகில் அமர்ந்தவன் லேப்டாப்பை திறந்து கொண்டு காதில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு அமர்ந்து விட்டான்.
“ஷ்ப்ப்ப்பாபா இவரோட முடியல. அடியே மேதா உன் ஆளு படுத்துறான்டி” என்றுவிட்டு வெளியே சென்றாள் அவள் சென்றதும் மேதாவை பார்த்தவன் கூந்தல் முடி சிலது முகத்தில் பட்டு பறக்க உறங்கியபடி இருந்தவளுக்கு ஜூரம் இருக்கிறதா என நெற்றியில் கை வைத்து பார்த்தவன் ஜூரம் இல்லாமல் ஜில்லென்று இருக்க ஏசியை சமநிலையில் வைத்தவன் அவளது முகத்தில் பறந்து கொண்டிருந்த முடியை அவளது காதோரம் ஒதுக்கி விட்டான்.
சட்டென அவன் மனம் அவனை இதெல்லாம் நீ ஏன் செய்யுற என காரிதுப்ப அமைதியாக தான் பாடவிருக்கும் புதிய பாடலின் இசையை ஆன் செய்துவிட்டு அமர்ந்துவிட்டான்.
சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த அருந்ததி அவனை முறைத்தபடியே தான் வந்தாள்.
வந்தவள் மேதாவை பார்க்க அவள் இன்னும் உறங்கி கொண்டிருக்க அவளது தலையை வருடியவள் அவளுக்கு உணவு கொடுக்க வேண்டிய நேரம் என உணர்ந்து உணவை ஆர்டர் செய்தவள் அவளுக்கும் அவனுக்கும் சேர்த்தே ஆர்டர் செய்தாள்.
அவள் வந்ததும் அவன் எழுந்து சென்றுவிட இவள் உணவுக்கு ஆர்டர் செய்துவிட்டு மேதாவை எழுப்பிக்கொண்டு இருந்தாள் இப்படியே இரவு வரை கழிய சற்று தெளிவாக இருந்தாள் மேதா. மறுநாள் கிளம்புவதற்கு டிக்கெட்டை புக் செய்த அருந்ததி அதை ஆராஷியிடமும் கூற அவனும் சரியென அமைதியாகிவிட்டான்.
மறுநாள் மேதா அருந்ததி ஆராஷி பாடிகார்ட்ஸ் என அனைவரும் கிளம்பினர் ஒன்றாகவே இப்போது மேதா தெளிவாக இருந்ததால் அவள் அமைதியாக அருந்ததியிடம் பேசியபடி வர அவளை பார்த்தவன் இவள் பக்கம் சாயும் தன் மனதை தட்டி அடக்கி வைத்துவிட்டு வேறு வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
ஏர்போர்ட்டில் இறங்கிய பின் ஆராஷிக்கு வேறு காரும் அருந்ததி மேதாவிற்கு வேறு காரும் என அவளை அழைத்து செல்ல நிதினே வர அதை பார்த்தவன் ‘ஒரு எம்ப்ளாயி யை பார்க்க கூட்டிட்டு போக ஓனரே வர்றது இங்கதான் பார்க்கிறேன் அவ்ளோ மயக்குற வித்தை கத்து வெச்சு இருக்கா’ என்று எண்ணியவன் அருகில் வந்த நிதின் அவனுக்கு நன்றி கூற சரியென தலையாட்டியவன் கிளம்புவதாக சொல்லிவிட்டு விருட்டென தனக்கென வந்த காரில் ஏறி சென்றுவிட்டான்.
‘என்ன இப்படி கிளம்பிட்டாரு நாம அவருக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலையே?’ என்று எண்ணியபடி அவள் போகும் அவனையே பார்க்க
“போதும்டி உன் ஆளு எங்கேயும் ஓடிடல” என்று அருந்ததி கூற அவன் அவளை பார்க்கும் நேரம் அவள் நிதினிடம் பேச திரும்பி கொள்ள அதை பார்த்தவன் மீண்டும் அவள்மேல் கோவத்தை தான் வளர்த்தபடி கிளம்பி இருந்தான்.