Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 61

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 61

அத்தியாயம் – 61

அடுத்த இரண்டு நாட்களில் மேதா தனது ஆரோக்கியத்தை நன்றாக சரிசெய்து கொண்டாள்.
அதுபோல நடித்தாள் ஏனெனில் நாளுக்கு நாள் அவளது வயிற்று வலி அதிகம் ஆகிக்கொண்டே போனது அதை பற்றி யாரிடமும் சொல்லாமலே இருந்தாள் அவள்.

அவள் உடல்நலம் சரியானதும் அடுத்ததாக மும்பை மற்றும் பஞ்சாப் முறை திருமணங்கள் என்பதால் அங்கேயே செல்லாமல் அந்த திருமணங்களை பற்றி நன்கு தெரிந்த ஆட்களை இங்கு வரவைத்து இருந்தான் நிதின் திரும்பவும் இவர்களை தனியாக அனுப்பி அவன் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டான். மேலும் செலவு அதிகம் ஆனாலும் பரவாயில்லை இங்கேயே செட் போட்டுக்கொள்ளும்படி கட் அண்ட் ரைட்டாக கூறி விட்டான்.
அதனால் சற்று ஏமாற்றம் இருந்தாலும் தனது வேலையை சரியாக செய்தாள் அருந்ததி.
ஷூட் இல்லாமல் இருந்த இரண்டு மூன்று நாட்களையும் தனது பாடல் பதிவிற்காக பயன்படுத்தி கொண்டான் ஆராஷி.
ஏனெனில் இந்த ஷூட் முடிந்ததும் அவனது புது ஆல்பம் சாங் பிரபல ஹாலிவுட் சிங்கருடன் இணைந்து வெளியிட இருப்பதால் அவன் அந்த ப்ராக்டிஸ்ஸில் இருந்தான் அடுத்தடுத்த வேலைகளில் அவன் பிசியாகிவிட இந்திய மொழியில் ஒரு பாடல் பாடுவதற்கும் அவனை புக் செய்து இருந்தனர் அதனால் அதற்கு தகுந்த வேலைகளிலும் இருந்தான்.
அந்த பாடலின் வரிகளை மேதாவை ஜாப்பனீஸில் எழுதி கொடுக்கும்படி கேட்டு இருந்தான் அதனால் அவள் அந்த வேலைகளில் பிசியாக இருந்தாள்.
இடையில் இவர்கள் இருவரை வைத்து நார்த் இண்டியன் வெட்டிங் ஷூட்டை முடித்துவிட்டாள் அருந்ததி ஒவ்வொரு திருமண முறையிலும் அவள் ஒவ்வொரு மாதிரி அவனை ஈர்த்தாள் என்பதே உண்மை ஆனால் அவள்மேல் வரும் ஈர்ப்பை தடுக்க அவள்மேல் கோவத்தை வளர்த்து கொண்டே போனான் ஆராஷி.

இப்படியே இரண்டு மாதங்கள் கழிய ஒருநாள் அவளுக்கு ஃபோன் செய்தான் அவளது நண்பன் ஷர்மா.
அப்போது தான் அருந்ததியிடம் எடிட்டிங் வேலையை பற்றி பேசிவிட்டு ஆராஷியின் மியூசிக் வேலையை பற்றிய நோட்ஸ் எடுத்தபடி உள்ளே வந்தவள் அந்த நோட்ஸ்ஸை அவனிடம் நீட்டுவதற்காக வெயிட் செய்தாள் அவனோ ஒர்க் அவுட் செய்கிறேன் என்று நேரத்தை வேண்டுமென்றே அவளை காக்க வைத்து கொண்டு இருந்தான்.
அந்நேரம் ஃபோன் வர இவன் வருகிறானா என பார்த்தாள் அவன் வராததால் ஃபோனை எடுத்துக்கொண்டு வாசலுக்கு சென்றவள் அங்கேயே நின்று பேசிக்கொண்டு இருந்தாள்.
“சொல்லுடா எப்படி இருக்க?” என்று கேட்க
“பாருடா பி.ஏ மேடம்க்கு என்னையெல்லாம் நியாபகம் இருக்கா? உங்க வேலையில பிஸியா இருக்கீங்களா?” என்று கேட்டான்.
“நீயுமாடா? ஏன் இப்படி?” என்று அவனிடம் கேட்டாள்.
“இங்க ஒருத்தன ப்ராஜெக்ட் ல மாட்டி விட்டு போனோமே அவன் இருக்கானா? இல்ல வேலை டார்ச்சர் தாங்கமுடியாம போய் சேர்ந்துட்டானானு ஒரு வார்த்தை ஃபோன் பண்ணி கேட்க தோணுதா உனக்கு ஃபிகர பார்த்ததும் பசங்கதான் ப்ரண்ட்ட கழட்டி விட்டுட்டு போவாங்க ஆனா இங்க எல்லாம் தலைகீழா நடக்குது.
இவ ஆள பார்த்ததும் ப்ரண்ட்ட கழட்டி விட்டுட்டா இதெல்லாம் கேட்க யாருமே இல்லையா?” என்று அவன் அழுவது போல நடிக்க சிரித்தவள்

“போதும்டா ஓவர் ஆக்டிங் உடம்புக்கு ஆகாது ஒழுங்கா பேசு இல்ல ஃபோனை கட் பண்ணு எனக்கு வேலை இருக்கு” என்றபடி ஆராஷி வருகிறானா என திரும்பி பார்த்தாள் ஆனால் அவன் அப்போது தான் மும்முரமாக த்ரெட் மில்லில் ஓடுவது போல நடந்து கொண்டு இருந்தான்.

“ஏன் சொல்லமாட்ட? என் வேலையை விட்டு உன் வேலையை செஞ்சுட்டு இருக்கேன்ல இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவ.
டேப்லெட்ஸ் ஒழுங்கா எடுக்கறியா? இல்லையா?
இந்த ஜப்பான் மூக்கன் என்னை பாடா படுத்துறான் பேபி நீ சொல்லி கொடுத்த மாதிரி எல்லாம் கரெக்ட்டா தான் டிசைன் பண்ணினேன் ஆனால் அவுட்புட் சரியா வரமாட்டேங்குதுடி அதான் நீ ப்ரீனா ப்ரோக்ராம் ல என்ன எரர்னு செக் செய்வனு தான் தாயே ஃபோன் பண்ணேன் கொஞ்சம் செக் பண்றியா பேபி வீடியோ கால் வர்றேன்” என்று கூற
ஆராஷி வருகிறானா என பார்த்தாள் அவன் வந்த பாடாய் இல்லை அதனால் வீடியோ கால் செய்ய சொன்னாள்.
அவன் வருகிறானா என வாசலிலேயே நின்றவள் வீடியோ காலை பேசியபடி இருக்க அவள் அப்படி என்னதான் பேசுகிறாள் என்று தெரிந்து கொள்ள வந்தவனை அவள் கவனிக்க வில்லை.
வீடியோவில் பார்வையை பதித்தவள் உடனடியாக எரர்ரை கண்டுபிடித்து ப்ரோக்ராமில் சேஞ்சஸ் சொல்ல அவனும் அதன்படி செய்ய ப்ரோக்ராம் ரன் ஆனது.
இவள் பேசுவதை கேட்டவனுக்கோ ஷாக்காகிவிட்டது.
‘என்ன இவ ஏதோ ப்ரோக்ராம்லாம் பேசுறா யாரு இவ?’ என்று தான் யோசிக்கலானான்.
அவள்மேல் அவனுக்கு சந்தேகம் வலுக்க துவங்கியது.
அதற்குள் அவனிடம் பேசியவள் இவன் வெளியே வந்து சேரில் உட்கார்ந்து அவளையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்தவள் காலை உடனே கட் செய்துவிட்டு உள்ளே வந்தாள்.
சேரில் அமர்ந்த வண்ணம் கருப்பு நிற பனியனும் டிராக் பேண்ட்டும் அணிந்து இருந்தவன் வியர்வையை துடைத்துவிட்டு தலை முடியை கோதிவிட்டு ஹீரோ வில்லனை நிமிர்ந்து பார்ப்பது போல பார்த்த அவனது துளைக்கும் பார்வையை காணமுடியாமல் அவன் அருகில் வந்தவள் பேச்சு தடுமாறியது.

‘ப்பா என்ன இப்படி பார்க்குறான் இவன் பார்வையில எல்லாரும் விழுறதா சொல்றது இதனாலதானா இப்படி பார்த்தா யார்தான் விழமாட்டாங்க’ என்று மனதில் எண்ணியபடி அவன் அருகில் வந்தவள் தான் எடுத்த நோட்ஸ்ஸை பற்றி விளக்கம் கூற வர பேச்சு திக்கி தினறி வந்தது அவளுக்கு.
அவளை பார்த்தபடியே ஏசியின் குளுமையை ஜாஸ்தி செய்தவன் சட்டென்று தனது பனியனை கழட்டி அவளிடம் நீட்டினான்.

திக்கென்று ஆனது அவளுக்கு.
“ச..சர்” என்று அதிர்ந்து அவனை பார்த்து கேட்க
“கோ அண்ட் கெட் அநெதர் டீஷர்ட் இட்ஸ் சோ ஸ்வெட்டி” என்று கூறியபடி அவளை பார்க்க

“அ..அது அது வந்து” என்று அவள் இழுக்க
“யுவார் மை பி.ஏ அண்ட் மேனேஜர் ஆல்சோ ஹெல்ப்பிங் மை டிரஸ் சேன்ஞ் ஆல்சோ பார்ட் ஆஃப் யுவர் ஜாப்னா?” என்று கூற
திணறியவள் கைகள் உதற
அந்த பனியனை வாங்கியபடி அவனது அறைக்கு சென்றாள் அங்கு சென்று அவனது வார்ட்ரோபை திறந்தவள் அவனுக்கு ஒரு டீஷர்ட்டை தேர்ந்தெடுத்தபடி
திரும்ப அவள் பின்னேயே நின்றிருந்தான் ஆராஷி.
அதில் அதிர்ந்தவள் பின்னாடி வேகமாக நகர வார்ட்ரோபின் பிடியில் அவளது தலை வேகமாக இடித்துக்கொண்டது.
ஆவென அலறியவள் தலையை தேய்க்க கையை உயர்த்த அவளது கையை பிடித்து மேலே உயர்த்தியபடி அவளை பார்க்க அவளோ பதட்டமாக
“ச..சர்” என்று கூறியபடி அவளது கையை உருவ பார்க்க அவளால் முடியவில்லை இன்னொரு கையை எடுத்து அவனை தள்ள நினைத்தபடி டீஷர்ட்டை வைத்திருக்கும் கையை உயர்த்த
அவளது பதட்டத்தை பார்த்து கோவமானவன் அந்த கையையும் பிடித்து சுவற்றில் அழுத்தியபடி
“யார் நீ?” என்றான் அவளை உற்று பார்த்து.
அவளுக்கோ அவனது செய்கையில் மேலும் அதிர்ச்சி அவனோ வெற்று உடம்போடு வேறு அவளை சுவற்றில் சாய்த்து நிற்க வைக்க அவளுக்கு உயிரே போய்விட்டது. இதுவரை அவனை அப்படி அவள் கண்டது இல்லையே.
உடையை அவள் எடுத்து வந்து கொடுத்தாலும் ரூமிற்குள் அல்லது பாத்ரூம் சென்று உடை மாற்றுவானே தவிர அவளது முன் மாற்ற மாட்டான் அப்படிபட்டவன் இப்படி வந்தால் அவள் என்ன செய்வாள் பாவம். அதிலும் அவளை ஊடுருவி பார்த்து வேறு கேள்வி கேட்க அவளுக்கு இதயமே துடிப்பை நிறுத்திவிட்டது போலானது.
‘அச்சோ கண்டுபுடிச்சுட்டானா என்னை’ என்று பயந்தவள் அதில் வார்த்தை வராமல் அவனை பார்க்க.

“ப்ரோக்ராம் பத்திலாம் பேசுற யார்கிட்ட பேசின யார் நீ என்கிட்ட நீ நடிக்கிறியா?” என்று அவன் கேட்க
அவளுக்கு அப்போது தான் அவனது பேச்சு புரிந்தது ஷர்மாவிடம் பேசியதை பாதி கேட்டுவிட்டு தன்னை சந்தேகம் படுகிறான் என்று உணர்ந்தவள்.

“நா..நான் சாப்ட்வேர் இன்ஜினியரிங் ஸ்டூடண்ட் சர் என் ப்ரண்ட் தான் ஃபோன் பண்ணாங்க ப்ரோக்ராம் சரியா ரன் ஆகலைனு டவுட் கேட்டாங்க அ..அதான் நான் செக் செஞ்சேன். நான் சாப்ட்வேர் கம்பெனில தான் வேலை செய்துட்டு இருந்தேன் சர் நி..நிதின் சர் தான் உங்களுக்கு டிரான்ஸ்லேட்டர் வேணும்னு வர சொன்னாங்க” என்று அவள் குனியப்போக அவளால் முடியவில்லை அவனது வெற்று உடல் அவளுக்கு அவ்வளவு அருகாமையில் இருக்க குனிந்தால் அவனது உடல்தான் தெரிந்தது அதனால் மீண்டும் நிமிர்ந்து அவனையே பரிதாபமாக பார்த்தபடி கூற அப்போதும் அவளை நம்பாமல் பார்த்தவன் அவளது கண்கள் அவனை நேருக்குநேர் பார்த்தபடி கூறியதை உணர்ந்தவன் அவளது பேச்சில் உண்மை இருப்பதாக நினைத்து அவளது இடது கையில் இருந்த அவனது டீஷர்ட்டை வாங்கியவன்.
அவளை விடுத்து உடையை திரும்பி அணிய ஆரம்பித்தான் அவன் விட்டது தான் தாமதம் அப்படியே திரும்பி நின்று கொண்டாள் மேதா.
உடையை மாட்டியவன் திரும்பி நின்ற அவளை பார்க்க இப்படி ஒரு பெண்முன் உடையை கழட்டி அவளை சுவற்றோடு சாய்த்து நெருங்கியபடி நின்றது அவனுக்கும் முதல்முறையே இதுவரை பெரும்பாலும் தொடாமல் நடிக்கும் சீனில் தானே நடித்து இருக்கிறான்.
இருந்தாலும் அவளிடம் தனது படபடப்பை காட்டாமல் இருக்கவே அவளது கையை பிடிமானமாய் பிடித்து நின்றான்.
அதில் இருவரது நெருக்கம் அதிகமாக இருப்பதை உணர்ந்தவன் சட்டென தனது சந்தேகத்தை கேட்க அவளது பதிலில் அவனுக்கு நம்பிக்கை வரவில்லை என்றாலும் அவளது நெருக்கத்தை தாங்க முடியாமலே அவளை விட்டு விலகினான்.
யாரிடமும் தோன்றாத உணர்வுகள் இவளிடம் தோன்ற அதை காதல் என்று உணராதவன் அவள் அவனை மயக்குவதற்காகவே இப்படி நடிக்கிறாள் என்று எண்ணியபடி கோவமாய் வெளியே சென்றான்.
அவன் வெளியே சென்றதை உணராத மேதா அவனது நடையில் ஷூவின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள் அவனை.
தனது நெஞ்சை நீவி விட்டுக்கொண்டவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது
‘என்னாச்சு இவருக்கு இப்படிலாம் நடந்துக்க மாட்டாரே?’ என்று தான் யோசித்தபடி அவளும் வெளியே வர அவன் அங்கு ஃசோபாவில் அமர்ந்து இருந்தான் அவனுக்கும் அவளை பார்க்க ஒரு மாதிரியாக இருக்க அவன் பார்வையை அவள் கொண்டு வந்து வைத்த டேப்லெட்டின் மீது பதித்தவன் அதை எடுத்து பார்க்க ஆரம்பித்து விட்டான்.
அதை பார்த்தவள் விட்டால் போதும் என்று வெளியே ஓடியே போய்விட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *