Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 9

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 9

அத்தியாயம் – 9

“என்ன ஆச்சு ஆரா?” என்று அவனது அறைக்கதவை திறந்து கொண்டு வந்தான் ரியோட்டோ..

அவன் அமைதியாகவே இருக்க..அவனது தோளில் கை வைத்தவன்..

“ரெண்டு பேரும் தொலைச்ச புதையலை இங்க வந்து தேடுறோம்ல?” என்று கேட்க..
ஒரு பெருமூச்சை விட்டவன்.. வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்களை கண்டபடி..

“நீ நண்பனை நம்பின உன்ன நம்பி வந்தவள நம்பல.. நான் எனக்காக எல்லாம் செய்தவளை கேவலப்படுத்திட்டேன்.. என் மூஞ்சியிலேயே முழிக்கக்கூடாதுனு எங்கேயோ ஒளிஞ்சு இருக்கா.. அவளோட இந்த நிலமைக்கு நான்தானே காரணம்.. அதை நினைச்சா தான் ரொம்ப வலிக்குதுனா” என்று வலியோடு அவன் கூற.. அவனது தோளில் ஆறுதலாய் தட்டியவன்

“எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்டா.. வெயிட் பண்ணு வருவா..போய் தூங்குடா நாளைக்கு ஷூட் இருக்கு.. இது அவளுக்காக நீ செய்யுற ஷூட் தமிழ்நாட்டுல..சோ..கவனமா செய்” என்றுவிட்டு
“இவ உன்னை பார்க்கனும்னு ஒரே அடம் அதான் கூட்டிட்டு வந்தேன்” என்று கூற சட்டென திரும்பி பார்த்தான் ஆராஷி..
கதவின் ஓரம் நின்றிருந்தாள் அவனது உயிரினும் மேலானவள்..

அவன் அவளை பார்த்ததும் கோவத்தில் முகத்தை திருப்பிக்கொண்டாள்.. அதை பார்த்தவனுக்கு சிரிப்பு ஒருபக்கம் வேதனை ஒருபக்கம் சேர
“பேபிமா” என்று ஓடிச்சென்று அவளை தன் மார்போடு அணைத்துக்கொண்டான்..
அவளும் கோவத்தையெல்லாம் மறந்து அவனது அணைப்பை ஏற்றுக்கொண்டாள்..

“நீயும் அவளைப்போலத்தான்ல எவ்ளோதான் நான் கோவமா இருந்தாலும் வருத்தமா இருந்தாலும் என் மனசை மாத்த ட்ரை பண்றீங்கள்ள..” என்றபடி அவளுடன் சிறிது நேரம் விளையாடினான்..
அவள்தான் அவனது செல்ல நாய் ஜிம்மி.. அதை பார்த்த ரியோ அங்கிருந்து கிளம்பி
சென்றான்.. அவனுக்கு நினைவெல்லாம் தன்னவள் மேலே தான்..
‘வீட்டில் என்னவெல்லாம் அமர்க்களம் அடித்தாளோ? என்கூட சேர்ந்து ஓர்க் பண்ணுவாளா மாட்டாளா? என் பொண்ணை எப்போ பார்த்து அவகூட நானும் விளையாட’ என்று தான் எண்ணினான்..
ஆனால் நம்பிக்கையை விடாமல் இருந்தான்..

சிறிது நேரம் அவளுடன் விளையாடியவன் அவள் அப்படியே உறங்கிவிட அவன் உறக்கத்தை தொலைத்தவன் தன்னவளை தான் பேசிய வார்த்தைகளை எண்ணி தன்னைத்தானே நொந்து போனான்.. இரவு முழுவதும் அவன் தூக்கத்தை பறித்தவளோ தன் மொபைலில் வந்த அன்றைய தினம் நடந்த ஃபன்ஷன் ஃபோட்டோவில் அவனைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்..
என்றுமே வாடாத முகம் இப்போதெல்லாம் வாடியே இருக்கிறது.. நடிப்புக்காக மட்டுமே புன்னகைக்கிறது அவனது எப்போதும் சிரித்தமுகம்.. சற்று மெலிந்தார்போல இருக்கிறானே சரியாக சாப்பிடுகிறானோ? இல்லையோ? என்ற பரிதவிப்பு.. அந்நேரம் அங்கு மணியை கூட பார்க்காமல் அழைத்துவிட்டாள் தன் அண்ணன் நிதினுக்கு..

உறக்கத்தில் இருந்த நிதினோ மூனு மணிக்கு யாருடா இது என்று எடுக்க..
“ஹாஹாலோ” என்று தூக்க கலக்கத்தில் ஹலோவை சொன்னவன்..
“அ..அண்ணா” என்று அவள் குரல் கேட்ட அடுத்த நொடி.. துள்ளியெழுந்து அமர்ந்தான்..

“என்ட மோளே..மேதா..எங்கென இருக்க? ஞான் எங்கெல்லாம் உன்ன தேடி அலையுறேன் தெரியுமோ? எங்கடா இருக்க? சுகந்தன்னே?ஒன்னும் ப்ராப்ளம் இல்லேதானே?” என்று இடைவிடாது கேள்வி மேல் கேள்வி கேட்க..
அவனது பாசமழையில் கண்ணீர் முட்டிக்கொண்டு வர..அதை அடக்கியபடி..

“நா..நான் இப்போ ஃபோன் பண்ணது as a founder ah” என்றாள்..

உடனே தன்னை திருத்திக்கொண்டவன்
“எஸ் மேம்” என்றான்..

“இனாகிரேஷன் ஃபங்ஷன் நல்லபடியா எந்த பிரச்சனையும் இல்லாம நடந்துச்சா? நம்ம வேர்ல்ட் வைட் ப்ராண்ட் அம்பாசிடருக்கு என்ன ஆச்சு? நீங்க அவரை சரியா கேர் பன்றது இல்லையா?” என்று கேட்க..

‘அதானே பார்த்தேன்..புள்ள ஆசையா ஃபோன் பண்ணுச்சுனு பார்த்தா அவ ஆளுக்காக ஃபோன் பண்ணி இருக்காளா?’ என்று எண்ணியவன் அவள் ஹலோ ஹலோ என்று இரண்டுமுறை கத்தியபின்..

“அவரு ப்ராண்ட் அம்பாசிடர் தானே மேம்.. அந்த அளவுக்கு அவரை கேர் பண்றோம் மேம்..நீங்க சொன்ன ஒரே ரீசன்க்காக அவருக்கு டைட் செக்கியூரிட்டி போட்டு இருக்கோம்..அவரோட டையட்டிஷியன் ஜாப்பனீஸ் ஃபுட் சஜ்ஜஸ்ட் பன்றவராவும் ஜப்பான் ஹோட்டல்ல வேலை செஞ்ச செஃப்ப சமைக்க ரெடி பண்றவராவும் அதும் அவருக்காக காரம் இல்லாம செய்யுற ஆளா அப்பாயிண்ட் பண்ணி இருக்கோம்..இன்னும் எப்படி மேம் கேர் பண்றது?” என்று கேட்க..

“ஆள் கொஞ்சம் இளைச்சு இருக்காரு..அது என்னானு விசாரிங்க..அண்ட் அவருக்கு செக்கியூரிட்டி இன்னும் கொஞ்சம் டைட் பண்ணுங்க..எங்கேயும் தனியா போக விடாதீங்க செக்யூரிட்டியோட சேர்த்து ஷேடோவும் அரேஞ்ச் பன்னுங்க..அவருக்கு ஆபத்து இருக்கு உஷாரா இருங்க..அவரோட பிரதர்க்கும் சேர்த்து செக்கியூரிட்டி டைட் பண்ணுங்க.. அவங்களை எங்கேயும் தனியா விட்டுடாதீங்க?” என்று கூற..

“மேம்.. அவரு பாடிய மெயின்டெயின் பண்ணாதானே அவருக்கு ஃபிலிம் சான்ஸ்லாம் வரும் அது அவருக்கும் தெரியுமே..அண்ட் மே பி இந்த கிளைமேட் கூட செட் ஆகாம இருக்கலாம்.. அவரை தங்க வெச்சு இருக்க ஹோட்டல் நம்ம ஹோட்டல்தான் அதுல வி.வி.ஐ.பி சர்வீஸ் எப்படி இருக்கும்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்ல..அவரை நீங்க ரொம்ப நாள் பார்க்காததால ஒல்லியான மாதிரி தெரிவாரு..செக்கியூரிட்டி டைட் பண்றேன் மேம்..இன்னைக்கு ஈவ்னிங்கூட அவரு ஐஸ்கிரீம் வாங்க போகணும்னு கேட்டு இருக்காரு ஆனா அவருக்கு நீங்க அப்பாயிண்ட் பண்ண பி.ஏ அவரை போகவிடலை அதனால கோச்சுகிட்டு ஐஸ்கிரீம் வேணாம்னு சொல்லிட்டாராம்..” என்று கூற..

“என்ன..மழையில ஐஸ்க்ரீமா? அவரோட வாய்ஸ் அஃபெக்ட் ஆகாது..என்ன பழக்கம் இது?” என்று கேட்க..

“எல்லாம் அவங்க லவ்வரோட பழக்கம்தான் மேம்” என்று கூற.. அடுத்த நொடி அமைதியாகிவிட்டாள்..

“மேம் ஆஸ் ஏ ஃபவுண்டர் நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் நான் ஆன்சர் பண்ணிட்டேன்.. இப்போ நான் என் தங்கச்சி கிட்ட பேசலாமா? நான் கேட்ட கேள்விக்கு அவ பதிலே சொல்லல..” என்று பேச.. அவளுக்கு உருகிவிட்டது.. தந்தையாய் தன்னை தாங்குபவனிடம் அதற்குமேல் கெத்து காட்ட முடியவில்லை.. பாசத்தால் மட்டுமே அவளை வீழ்த்த முடியும்..உடனே அவள்..

“அ..அண்ணா..அதெல்லாம் நான் நன்னாயிட்டு இருக்கேன்.. நீங்க என்ன பத்தி விசனப்பட வேண்டாம்..நீங்க தேடுறது தெரிஞ்சு தான் இத்தனை நாள் ஃபோன் பண்ணாம இருந்தேன்.. ஆ..ஆனா இ..இ..இன்னைக்கு ஃபங்ஷன் ஃபிக்ஸ்லாம் பார்த்ததும் உங்ககிட்ட பேச தோணுச்சு அதான் விளிச்சு”
என்று அவள் கூற.. அவள் எதற்காக ஃபோன் செய்தாள் என்பதை உணர்ந்தவன்..

“உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? அவரோட அண்ணா ரியோட்டோ தான் நம்ம தேஜுவோட ஹஸ்பண்ட்..” என்று கூறியவன் அன்றைய தினம் நடந்ததை கூற அதிர்ச்சியாய் கேட்டுக்கொண்டு இருந்தாள் ரெனி ஃபேஷன்ஸ்ஸின் ஃபவுண்டரும் அவனது தங்கையுமான மேதா..என்கிற மேதஷ்வினி..

“ஈவ்னிங்கூட வீட்டுக்கு வந்ததும் தேஜு ஒரே கத்தல் நான் அவனோடலாம் வேலை செய்ய மாட்டேன்..உடனே இந்த கான்ட்ராக்ட்ட கேன்சல் பன்னுங்கனு.. அதை ஃபவுண்டர்கிட்ட சொல்லிக்கனு சொல்லிட்டேன்..நீ என்னம்மா முடிவு எடுக்கப்போற?” என்று கேட்க..
சிறிது நேரம் யோசித்தவள்..
நாளைக்கு அவர் மீதி கதையை சொல்லும்போது நான் ஃபோன் பன்றேன் அதை கேட்டுட்டு என் முடிவ சொல்றேன்.. அவசரப்பட்டு முடிவு செய்ய இது விளையாட்டு இல்லன்னா மூனு பேரோட வாழ்க்கை யோசிச்சுதான் முடிவு பண்ணனும்..நான் நாளைக்கு சொல்றேன்னா..வேற ஏதாவது சொல்லனுமா?” என்று அவள் கேட்க..

“எப்போடா இந்தியா வருவ? உன்ன பார்க்கனும் போல இருக்கு.. அவரும் சரியே இல்லடா உன்னைத்தான் தேடுறார்..” என்று கூற..

“உங்களையெல்லாம் பார்க்க கண்டிப்பா வருவேன் சேட்டா..நான் ஒரு புது புராஜெக்ட் ல சைன் பண்ணி இருக்கேன் அதுல தான் இப்ப முழுநேரமும் வேலை..கண்டிப்பா வருவேன்..இப்போ வைக்கிறேன்” என்று உடனே கட் செய்துவிட்டாள்..
அவனைபற்றி பேசுவதை கேட்கும் அளவுக்கு மனம் திடமாய் இல்லையே..
அவன் அவளை பேசியதுதான் நினைவில் வந்து அவளை கலங்க வைக்கிறது..
ஆனால் அந்த வார்த்தையை பேசியவன் பேசிய நாளிலிருந்து இன்றுவரை உயிருடன் மரித்துக்கொண்டு இருக்கிறான் என்பதை பேதை அவள் அறிவாளா?
அவனை பற்றிய விவரம் எல்லாம் சொல்லும் அவனது ஷேடோ அவன் மனதை அவளிடம் சொல்வானா?
அவள் ஃபோன் கட் செய்ததும் பெருமூச்சு விட்டவன் நாளை தானும் சென்று ஆராஷியை பார்க்கவேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டான்..

மேதா உறக்கத்தை பறித்து சென்றவனைதான் எண்ணியபடி இருந்தாள்..
இப்போதும் அவளால் அவனை வெறுக்கவே முடியவில்லையே
என்ன மானங்கெட்ட மனசோ என்று தன்னையே நொந்தவள் மனம் போகும் போக்கிலேயே விட்டுவிட்டாள்.. ஆனால் அவனை சந்திக்க நேர்ந்தால் தன்னால் பேசிய வார்த்தையின் வலியை தாங்க முடியாமல் அவனை எங்கு ஏதாவது பேசி கஷ்டப்படுத்தி விடுவோமோ என்று பயந்தே அவனைவிட்டு ஒதுங்கி நிற்கிறாள்.. ஊர் ஊராய் ஓடி ஒளிகிறாள்..
(இவங்க எப்போ சேர்ந்து நான் எப்போ கதையை முடிக்க)

இரவெல்லாம் உறங்காமல் இருந்தவன் அதிகாலையே எழுந்து கிளம்பிவிட்டான்..
அவனை பார்த்ததும் எழுந்த ஜிம்மியை பார்த்தவன் அவளுடன் சிறிது நேரம் கழித்துவிட்டு அவளை அறையிலேயே விட்டவன் அவளுக்காக தமிழில் முதன்முறையாக நடிக்கப்போகும் ஒரு ரீமிக்ஸ் சாங்கை ஜாப்பனீஸில் எழுதி கொடுத்ததை ஒருமுறை பாடிப்பார்த்தான்..

(உனக்கென வாழுகின்றேனே
உயிரினை தாங்குகின்றேனே
உனக்கிந்த கோபம் ஏனோ
காயம் ஏனோ
என்னிடம் வா அன்பே
என்னிடம் வா அன்பே
உனக்கென உருகினேன்
என்னிடம் வா அன்பே
உயிரில் கரைகிறேன்
என்னிடம் வா அன்பே
அனலென எறிகிறேன்
என்னிடம் வா அன்பே
அலையாய் உடைகிறேன்
என்னிடம் வா
நீ இல்லை என்றால்
எனக்கென யாரும் இல்லையே
ஏன் இதை செய்தாய்
துணை என யாருமே இல்லையே)
இந்த பாடலின் வரிகள் சரியாக புரியாவிட்டாலும் அதில் இருந்து ஏதோ ஒன்று அவனோடு தொடர்புடையது போலவே தோன்றியது..
காலை ஐந்தரை மணிக்கெல்லாம் ரெடியாகி அமர்ந்துவிட்டான்..
மனமோ அவளையே எண்ணி எண்ணி உருகியது..உட்கார்ந்தவன் தனக்கு இன்னும் நேரம் இருப்பதை உணர்ந்தவன் அப்படியே கண்மூடி அவளை தான் முதன்முதலில் பார்த்த நிமிடங்களை எண்ணியபடி படுக்க அப்படியே உறங்கிவிட்டான் கனவில் யாரோ நாலுபேர் அவனை துரத்துகின்றனர் கொல்வதற்காக அதில் அவன் ஒரு குறுகிய சந்தில் ஓடும்போது ஒருவன் கத்தியால் பின்னால் இருந்து குத்த வர யாரோ பாய்ந்து கத்திகுத்தை வாங்கி கொள்கிறார் அவன் யாரென திரும்பி பார்க்க அவள்தான் தன்னவள் என உணர்ந்தவன்
“அஷு” என்று கத்தியபடி அவளை தாங்குகிறான்.. அதில் அவன் கத்தியபடி எழ முகமெல்லாம் வேர்த்து விட்டது.. இவனது சத்தம் கேட்டு எழுந்து வந்த ரியோட்டோவும் என்னவென்று விசாரிக்க அவன் கனவை கூற..
“அஷு.. அவளுக்கு ஏதோ ஆகுறமாதிரி இருக்குனா” என்று அவன் வருந்த..
“அது நீ அவளையே நினைச்சுட்டு படுத்தல அதனால அப்படி கனவு வந்து இருக்கும் ஆரா.. இந்தா முதல்ல தண்ணிய குடி” என்றபடி அவனுக்கு நீரை கொடுக்க வாங்கி அருந்தியவன்
“எனக்கு அவளை பார்க்கனும் போல இருக்குனா” என்று கூறி வருந்த..
அவனும் வருந்தினான்..
“சீக்கிரமே வந்துடுவா” என்றபடி அவனுக்கு ஆறுதல் கூறியவன் அவனை தனியே அனுப்ப மனமில்லாமல் அவன் தடுத்தும் அவனும் அவனுடனே கிளம்பினான் ஷூட்டிங்குக்கு..
அதற்குள் ஹர்ஷத்தும் வந்து சேர்ந்தான்..
முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றவர்கள்..
அங்கே இருந்த ட்ரான்ஸ்லேட்டரிடம் அவன் அந்த பாடல் வரிகளுக்கு அர்த்தம் கேட்க அவர் அர்த்தம் கூறியதும் அவனுக்காகவே எழுதியதை போல உணர்ந்தான்.. அப்போதிலிருந்து அவனால் சரியாக டான்ஸ் ப்ராக்டிஸும் செய்ய முடியவில்லை.. ஷூட்டும் குறித்த நேரத்தில் முடிக்கமுடியவில்லை.. அவளுக்கு சொன்னது போலவே நிதினும் வந்திருந்தான் ஆராஷிக்கு தெரியாமல்..
எப்பொழுதும் எந்த ஷாட் எப்பேர்ப்பட்ட கடினமான ஷாட்டாக இருந்தாலும் ஒரிரு டேக்கில் ஓகே செய்பவன் இன்று பத்து பதினைந்து டேக் வாங்கி இருந்தான்..டைரக்டரும் மொழி தெரியாததால் சொதப்புகிறார் என நினைத்தனர்.. இதை கவனித்த நிதின் ஹர்ஷத்க்கு ஃபோன் செய்து ஏதோ சொல்ல அவனும் ரியோட்டோ காதில் ஏதோ சொல்ல தலையை ஆட்டிய ரியோட்டோ ஆராஷியிடம் சென்று பேசினான்..
அவனது பேச்சை கேட்டவன் மனதில் தன்னவளை நிலைநிறுத்தி அடுத்த ஒரே டேக்கில் அந்த பாட்டுக்கான டான்ஸ்ஸை ஆடி முடித்தான்..
அனைவரும் அவனை பாராட்ட அனைவருக்கும் நன்றி கூறியவன் தனக்கு ஓய்வு தேவை என்று கூறிவிட்டு அத்தனை டேக் வாங்கியதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டு கிளம்பினான்..
நேரே தான் வாங்கிய புது ஆபீஸிற்கு சென்றவனை பார்க்க வந்திருந்தார் அவன் ஏற்பாடு செய்த டிடக்டிவ்..
“எனிக்கு நல்லா தமில் கத்துக்கனும்.. முதல்ல அவளை தேடனும்..நான் அவங்கோ ப்ரண்ட்ஸ்ஸ கான்டாக்ட் பண்ண சொன்னேனே என்ன ஆச்சு டிடெக்டிவ்..அவ எங்க இருக்கா?” என்று தன் டிடெக்டிவ் விடம் தன் அதே அறைகுறை தமிழில் கேட்டான்..

“சார்.. தமிழ் கத்துக்க ஒரு டீச்சரை அரேஞ்ச் பண்ணி இருக்கேன் சார்..அண்ட் அவங்க ப்ரண்ட்ஸ் யாருக்கும் இப்போ மேடம் எங்க இருக்காங்கனு தெரியலையாம் சார் அவங்களும் மேடம்மை தேடிட்டு தான் இருக்காங்க..அண்ட் உங்க மேலயும் அவங்க ரொம்ப கோவம்ல இருக்காங்க..” என்று கூறினான் அவன்.. அதைகேட்டு விரக்தியில் சிரித்தவன்..

“அவங்க என்னை கொன்னா கூட பரவால்லே.. இத நீங்க சொல்ல நான் உங்கள அப்பாயிண்ட் பண்ணலே.. சோ..ஃபைண்ட் ஹர் இம்மீடியட்லி..ஐ ஜஸ்ட் நீட் ஹர்..என்றவன் ஹர்ஷத் என்று கூற அவனது பி.ஏ வந்து நிற்க..

“அரேஞ்ச் ஒன் மீட் வித் ஹர் ப்ரண்ட்ஸ்” என்றுவிட்டு கிளம்பியவன்..

அன்று அவளை கேவலப்படுத்தி உதறிய இடத்திற்கே சென்று அமர்ந்தான்..அவனை நிமிர்ந்து பார்த்த அவனது செல்லப்பிராணி அவளை அழைத்து வரவில்லை என்று உணர்ந்து அவனை கூட காணாமல் முகத்தை திருப்பிக்கொண்டது..
அதை பார்த்தவன் மனம் மேலும் கனத்து போனது..

“I felt ur true love dear..Please come back to me and forgive all my mistakes and give life to me as a mom” என்றபடி வாய்விட்டு புலம்பியவன் தன் வலித்த நெஞ்சை நீவினான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *