Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 63

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 63

அத்தியாயம் – 63

வயிற்றில் வலி அதிகம் ஆகிக்கொண்டே போக தான் டாக்டரிடம் சென்றாள் அவரோ திருமணம் ஆகிவிட்டதா எத்தனை குழந்தைனுலாம் கேட்க அவள் என்ன என்று திருதிருவென முழித்தாள்
அதன்பின் தான் இங்கு வேலை செய்வதாகவும் தனது நண்பன் ஜப்பானில் இருக்கிறான் எனவும் கூறியவள் எமர்ஜென்சி கான்டாக்ட் நம்பரில் அவனது பெயரைதான் கொடுத்து அவனது இந்திய நம்பரை கொடுத்து இருந்தாள். டாக்டர் அவளிடம் துருவி துருவி விசாரித்ததை எண்ணியபடி அவள் அமர்ந்து இருக்க அருந்ததி ஃபோன் செய்ய அவளிடம் பார்க்கில் இருப்பதாக சொன்னவள் யோசனையோடே அமர்ந்து இருந்தாள்.

‘இன்னும் ஒரு வாரம்தான் அவருக்கு பி.ஏ வா வேலை இருக்கும் அப்புறம் உடனே வேலைக்கு போய்டனும் இந்த வேலையெல்லாம் அக்காகிட்டயும் அண்ணன் கிட்டயும் விட்டுட்டு.
அதான் நாளைக்கு அக்கா வர்றேன்னு சொல்லி இருக்காளே அவகிட்ட பொறுப்ப ஒப்படைச்சுட்டு போய்டனும்.
ஏற்கனவே அவரை சாதாரண ஆளா ஏமாத்திட்டு இருக்கேன் அவரோட சித்தி எந்த வகையிலும் அவருக்கு ஆபத்து ஏற்படுத்திட கூடாதுனு பார்த்து பார்த்து அவரை பாதுகாத்துட்டு இருக்கேன் அவரை பத்திரமா காப்பாத்தினாலே போதும் திரும்ப அவங்க சதியில இவரு மாட்டிட கூடாது அதுதான் வேணும்.
அவரோட லவ் எனக்கு கிடைக்காதுனு தெரியுது ஆனாலும் மனசு அவர தவிர வேற யாரையும் ஏற்க முடியாது.
இங்கேயே இருந்து எல்லாரையும் கஷ்டப்படுத்துறத விட கண்ணுக்கு தெரியாம இருந்து எல்லோரையும் நிம்மதியா இருக்க வைக்கலாம்.
என்கூட அப்பா மட்டும் இருந்து இருந்தா எல்லாம் அவர் பார்த்துப்பாருனு அமைதியா இருப்பேன் ஆனா அவரும் என்னை பாதில விட்டுட்டு போய்டாரே’ என்று மனதோடு மருகிய படி யோசனையில் இருந்தாள் மேதா. அப்போது முதலில் அவளை தேடி வந்து சேர்ந்தது அவனது ஜிம்மிதான்.
வந்து அவளது மடியில் அமர்ந்து கொண்டவளை பார்த்தவள் லேசாக சிரித்தபடி
“நீ என்னை மறந்துடுவனு நினைச்சுட்டு இருந்தேன் ஜிம்மி செல்லம் ஆனா நீ மறக்காம இருந்ததும் இல்லாம அவர்கிட்ட என்னை காட்டி கொடுக்காமலும் இருந்தல அதுவே போதும்டா.
அம்மா உன்ன விட்டு வந்துட்டேன்னு உனக்கு கோவமா?” என்று தமிழில் பேசியபடி அவளை கொஞ்சிக்கொண்டு இருக்க ஜிம்மியோ அவளது முகத்தை நக்கி அவளது பாசத்தை வெளிபடுத்தினாள்.
அவளது பாசத்தில் அவளை அணைத்து கொண்டாள் மேதா.

அவளை பார்க்க வந்த அருந்ததி தூரத்திலேயே நின்று விட்டாள் ஆராஷியை கண்டதும். அவன் அழகாக உடை அணிந்து அவளை பார்க்க சென்று இருக்க அவளோ அவனும் அவளை காதலிக்கிறான் என்று எண்ணி திரும்பி போய் விட்டாள்.
அன்று தந்தையின் நியாபகம் அதிகம் இருந்ததால் அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்பாக அவளுக்காக அதிக விலையில்லாமல் அவரே டிசைன் செய்த ஒரு புடவையை பரிசாக அளித்து சென்ற புடவையை தான் அணிந்து இருந்தாள்.

அழகிய அடர் பர்ப்பிள் கலர் ஜார்ஜெட் புடவையில் ஆங்காங்கே லேசாக பட்டர்ஃப்ளை டிசைனை கையால் எம்ப்ராயர்டி போடபட்ட சேலை அவளுக்கு அது அழகாக இருந்தது. ஆனால் அந்த அழகு அவளது கண்களுக்கு தெரியவே இல்லையே. அதை உணரும் நிலையிலும் அவள் இல்லையே எங்காவது ஓடி விட வேண்டும் என்றே நினைத்தபடி அமர்ந்து இருந்தாள்.

தூரத்திலேயே அவளது உடையை கண்டவனுக்கு அவளது இன்றைய அதீத அழகு தெரிய அதை தன்னை மயக்குவதற்காக அவள் செய்துள்ளது என்றே எண்ணியவன் அவளை நோக்கி நடக்கும்போதே
‘இன்னைக்கு எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்றேன்’ என்று எண்ணியபடி
அவள் முன் அழகாக தன் வசீகரிக்கும் புன்னகையோடு வந்து நின்றான் ஆராஷி. அவனை கண்டதும் தூரம் நகர்ந்துவிட்டாள் ஜிம்மி. காலமும் நேரமும் ஒருவர் மனதில் காதலையும் இன்னொருவர் மனதில் தீய எண்ணத்தையும் விதைத்ததை யார் சரி செய்வார். ஆரம்பம் முதலே அவளை தவறாக எண்ணியவன் இப்போதும் அதையே தான் எண்ணி கொண்டு அவளை காயப்படுத்த தயாராகி இருந்தான்.

ஏதோ யோசனையில் இருந்தவள் ஜிம்மி சென்றதை கூட கவனியாமல் இருந்தாள் அவளது ராஷியை எண்ணி. அவன் வந்து அவள் முன் நிற்கவும் அவளுக்கு பிடித்த நிற கோட்டில் அவன் அடிக்கடி கனவில் வருவது நியாபகம் வரவும் உண்மையாக வந்து நின்றவனையும் கனவு என்று எண்ணியே அவள் சாதாரணமாக வேறு புறம் திரும்பி கொள்ள ஏமாற்றம் அடைந்த ஆராஷிக்கு கோவமும் சேர்ந்தே வந்தது.
என்கிட்ட வேலை செய்யுறவளுக்கு என்னை பார்த்து அலட்சியம் வேற என்று தவறாக எண்ணியவன் இப்போது அவளிடமிருந்து உண்மையை வாங்கவேண்டும் என்று எண்ணியவன் டக்கென்று தன் அக்மார்க் புன்னகையை வீசி விட்டு அவளது பக்கத்தில் அவளை இடித்தபடி அமர அப்போது தான் கனவு இல்லை என்று உணர்ந்தவள் திடுக்கிட்டு “ச..சர்” என்றபடி எழப்போக அவளது கையை பிடித்து இழுத்து அமரவைக்க முயல அவளோ தடுமாறி அவன் மேலேயே விழுந்தாள்.
அதில் அவனும் தடுமாறி பின்னாலேயே சாய்ந்தான் அவனது தலை இடித்துக்கொள்ளும் என்று அவனது தலைக்கு கீழே கையை கொடுத்தவள் அவன் மேலேயே விழுந்தாள்

அவள் எதிர்பாராமல் அவன்மேலேயே விழ எங்கோ இடித்து கொள்ள போகிறோம் என்று எண்ணியவன் அவளது பாரம் தாங்காமல் கீழே சரிய அந்த நேரத்திலும் அவள் அவனை தாங்கியது ஏனோ ஒரு ஓரமாய் உறுத்தியது. அவளது கழுத்து வளைவில் அவனது முகம் இருக்க அவளது கையோ அவனை கீழே இடித்துக்கொள்ளாமல் தாங்கியபடி இருக்க அவன் நிமிர்ந்தால் விழப்போகும் நேரத்தில் கலைந்த தனது புடவை கலைந்த அவளது நெஞ்சில்தான் முத்தமிட வேண்டும் தலையை பின்னே இழுத்தால் அவளது நெஞ்சாங்கூட்டில் தான் முகம் புதையும் அதனாலேயே அவன் அசையாமல் இருக்க அவனுக்கு அவஸ்தையாகி போனது அந்த ஒரு நிமிடம்.
அதிர்ந்து உடனே சுதாரித்தவள் டக்கென்று அவனது தோளில் கையை ஊன்றி எழுந்து நின்று தனது உடையை சரி செய்தாள் அதை கண்டவன் வேறு புறம் தலையை திருப்பி தன் கூந்தலை கோதி கொண்டான் ஒரு நொடியேனும் அவளை அப்படி பார்த்தது அவன் மனதில் ஆழமாய் பதிந்து போனது.

“ச..சாரி சர் நீங்க இழுத்ததுல பேலன்ஸ் இல்லாம” என்று அவள் கூற
அவனும் “நான் தானே இழுத்தேன் சாரி. எனிவே மேதா கம் ஹியர் சிட்” என்று கூற அவளுக்கோ ஒரு மாதிரி இருந்தது இன்று அவனது நடவடிக்கை.
சற்று இடைவெளி விட்டு அவள் அமர சிரித்தபடி அவனே அவளது தோளோடு உரசியபடி நகர்ந்து அமர்ந்தான்.

அதிர்ந்து அவள் அவனை பார்க்க அவனோ அவளது தோள்மேல் கையை போட்டு அவளை தன் பக்கம் இன்னும் வரும்படி இழுத்தான்.
“சர் என்ன பன்றீங்க?” என்று அதிர்ந்தவள் நெளிந்தபடி விலக பார்க்க முடியாமல் அவனது முகத்தை பார்க்க வசீகரிக்கும் சிரிப்பை வீசியபடி

“ஐ நீட் ட்டூ டாக் ட்டூ யூ மேதா சிட் சைலண்ட்லி(i need to talk to you meena sit silently)” என்று கூற அவளோ அப்போதும் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான்.
திக்கென்று ஆனது அவளுக்கு அவனது பார்வை அதில் அவள் தலையை குனிந்து கொள்ள அவளையே பார்த்தவன்.

“நீ என்னை அவ்ளோ லவ் பன்றியா மேதா?” என்று அவன் கேட்க.
அதிர்ந்தவள்
இவனுக்கு எப்படி தெரியும்? என்று யோசிக்கையிலேயே அவளது தோளின் மேல் இருந்த கையை அவளது தலைக்கு பின் கொடுத்து தன்னை நோக்கி திருப்பியவன்
“யுவர் லுக்கிங் கார்ஜியஸ் டுடே” என்றபடி அவளது கன்னத்தை பற்றி அவளது நெற்றி, கண்கள் கன்னம் என முத்தமிட்டவன் அவள் என்ன என்று உணரும் முன்னே அவளது இதழை பற்றி இருந்தான்.
அதிர்வில் இருந்தவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை ஆனால் அவன் தன் காதலை உணர்ந்து தான் முத்தம் கொடுக்கிறான் என்று எண்ணியவளுக்கு உள்ளுக்குள் நடுக்கமும் வர அவனது முத்தத்தின் வேகத்தில் கூட அவனது கண்கள் அவளையே காண அலைபாய்ந்து கலங்கிய கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
இருவருக்கும் முதல் முத்தம்.
இதுவரை எந்த பெண்ணுக்கும் இதழ் முத்தத்தை தராதவன் முதல் முறையாக ஒரு பெண்ணை தன் இதழால் தீண்டி உள்ளான். சித்தி என்னும் கொடுமைகாரியால் பெண்களை தன்னிடம் நெருங்காமல் தூர நிறுத்தியவன் இன்று காதலா? வேஷமா? என்று தெரியாமலே அவளை முத்தமிட்டு கொண்டு இருக்கிறான்.
அவளது இதழை பருகியவனுக்கு இன்னும் இன்னும் வேண்டும் என்றே தோண்ற அவளது இதழிலிருந்து இரத்தம் வரும்வரை முத்தமிட்டவன் அவள் ரத்தத்தை ருசித்த பின்பே தான் செய்யும் தவறு உறைக்க அவளை விட்டு விலகினான். தன் காதல் அவனுக்கு தெரியாமலே போய் விடுமோ என்று எண்ணியவளுக்கு இன்று அவன் கொடுத்த முத்தத்தில் அவள் காதல் கைசேர்ந்தது என்று எண்ணி மகிழ்ச்சியில் நடுங்கிய கைகளை தனது புடவையை இறுக பிடித்து அவனுக்கு தன் இதழை கொடுத்து கண்மூடி இருந்தாள் அவன் விலகியது கூட தெரியாமல்.
கண்களில் கண்ணீர் உருண்டு ஓடியது அவளுக்கு மகிழ்ச்சியில். ஆனால் அக்கணமே அவளது காதருகே வந்தவன் பேசிய வார்த்தைகள் அமிலமாய் ஆனது அவளுக்கு.

“அங்க அவங்கள பேச வெச்சா என் மனசு மாறும்னு நினைச்சுட்டு நீ கிளாமரா டிரஸ்
பன்னிட்டு வந்து என்னை கவுத்துடலாம்னு ப்ளான் பன்றியா மிஸ் மேதா?” என்று அவன் அடிக்குரலில் அவள் காதருகே லேசாக குனிந்து சொல்ல அவனது பேச்சை உணர்ந்தவள் அதிர்ந்து கண்களை திறந்து நிமிர்ந்து பார்த்தாள் அவனை.
“ராஷி” என்று அதிர்ந்தவளுக்கு அடுத்த வார்த்தை வரவில்லை அவனது கோவமான பார்வையில்.

“நான் பேசி முடிக்கிறவரை ஏதாவது பேசின உன்ன கொன்னுடுவேன்” என்றவன் அவளது அதிர்ந்த முகத்தையும் கலங்கிய கண்களையும் பார்த்தவனுக்கு அந்த கண்கள் ஏதோ செய்ய அதை பார்ப்பதை தவிர்த்தவன் அவளது புடவையின் தலைப்பை கையில் சுற்றியபடி அவளது தோளை மேலும் தன்னோடு இறுக்கியபடி
“என்னடி நடிக்கிறியா? உன் நடிப்புலாம் எப்பவோ சாயம் வெளுத்து போச்சு என் சித்தியால தான் நீ நடிக்க வந்தனு உன் வாயால நீ உன் லவ்வர்கிட்ட பேசின நானே கேட்டேன் அப்போவே உன் வேஷத்தை கலைச்சு இருப்பேன் ஆனா உங்க ப்ளான் என்னனு எனக்கு தெரியனும்ல அதான் அமைதியா இருந்தேன் இப்போதானே தெரியுது கேவலம் பணத்துக்காக என்னை உன் உடம்ப காட்டி மயக்கி என் பணத்தைலாம் புடுங்கறது தானே உன்னோட உன் லவ்வரோட ஐடியா? இப்படி ஒரு கேவலமானவளுக்கு அப்படி ஒரு கேவலமான லவ்வர்” என்று அவன் கூற கூற அவளுக்கு அவன் அவளை மிகவும் தவறாக புரிந்துகொண்டு பேசுகிறான் என்று புரிந்தது ஆனால் எப்படி அவனுக்கு புரியவைப்பாள்.

“ரா..ராஷி நீ நீங்க எ.. என்னை தப்பா” என்று அவள் அவனுக்கு வைத்த செல்ல பெயரில் கூப்பிட அதை கேட்டு மேலும் கோவமானவன்.
அவளது தோளை மேலும் அழுத்த வலியில் அவளுக்கு முகம் சுணங்க அதை கண்டு அரக்கன் போல ரசித்தவன்

“ச்சீ பேசாதே. நீயெல்லாம் ஒரு பொம்பளையா? ஆல்ரெடி ஒரு லவ்வர் எங்கேயோ இருக்கான் அது இல்லாம சி இ ஓ நிதின் சாரை எதை காட்டி மயக்கினியோ குடும்பத்தை கூட பார்க்காம உன் பின்னாடி ஓடி வர்றாரு.
அருந்ததி, நிலவினி சாஹித்யன்லாம் என்ன பண்ணி மயக்கினியோ அவங்க என்னமோ நீ என்னை உண்மையா லவ் பன்றதா சொல்லி உனக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்து நிக்குறாங்க இதுல எனக்கு நீ செல்லமா வேற பேர் வெச்சு கூப்பிடுவியா? நீ வசதியா இல்லனா கூட பரவாயில்லை உன் லவ் உண்மையா இருந்திருந்தா என்னோட மொத்த சொத்தையும் உனக்கே எழுதி கொடுத்து உன்ன கல்யாணம் செஞ்சு இருப்பேன் ஆனா நீ பணத்துக்காக அதும் இவ்ளோ கேவலமாவா இறங்கி வருவ? எஸ், உன்னோட நல்ல குணத்தால நான் ஈர்க்கப்பட்டேன் நான் தேடின பொண்ணு நீயா இருப்பியோனு கூட யோசிச்சேன் ஆனா நீ அதெல்லாம் நடிப்புனு நிரூபிச்சட்டல? காதலிச்சவன் எங்கேயோ இருக்க இங்க நான் தொட்டா முத்தம் கொடுத்தா அப்படியே நிக்குற இதுலேயே தெரியல நீ எல்லாத்துக்கும் இறங்கி போறவனு? ச்சீ.
இப்படித்தான் நிதினையும் உன்கிட்ட இழுத்தியா? வெட்கமா இல்ல உனக்குலாம் அவருக்கு கல்யாணமாகி பொண்டாட்டினு இருக்காங்க வெட்கமே இல்லாம அவரு வாழ்க்கையை நாசம் பண்ணது பத்தாதுனு என் வாழ்க்கையை நாசம் பண்ண இப்படி வந்து இருக்க. நீ உண்மையா ஒருத்தன லவ் பண்ணி இருந்தா அவனை தவிர வேற யார் தொட்டாலும் அருவருப்பா இருந்து இருக்கும் உனக்கு ஆனால் உனக்குதான் அப்படி தோணவே இல்லையே? நானே நிறைய முறை பார்த்து இருக்கேனே நீ நிதினை கட்டிப்பிடிச்சுட்டு நிக்குறத? இப்போ நான் தொட்டப்பவும் அப்படியே தானே இருந்த இதுக்கு பேர் என்னானு தெரியுமா உனக்கு? ச்சை” என்று அவளை உதறி எழுந்து நின்றான்.
அவன் உதறிய வேகத்தில் அப்படியே அங்கிருந்த சுவற்றில் இடித்துக்கொண்டாள் மேதா.
சமாளித்து நிமிர்ந்தவள் கண்களில் நிற்காமல் கண்ணீர் இடித்த இடத்திலிருந்து இரத்தமும் வந்தது.

“கொ..கொஞ்சம் நா..நான் சொ..சொல்றத” என்று முடிக்கும் முன்னே “ஏய்ய்ய்” என்றபடி அவளது கழுத்தை பற்றி

“இன்னும் உன் டிராமவ நான் நம்புவேன்னு நினைச்சிட்டு இருக்கியா? அன்னைக்கு நீ உன் பேபி கிட்ட ஃபோன்ல பேசினத நானே கேட்டேன்டி.
இந்த டிராமா எல்லாம் அவரோட சித்திக்காகதான்னு நீ சொன்னத என் காதால கேட்டேன்டி.
பணத்துக்காக உடம்பு மானம்னு விக்குற நீ அப்போகூட உன்னோட இக்கட்டான நிலைமையில ஹெல்ப் பண்ணேன் உன்ன நல்லா பார்த்துக்கிட்டேன். நீயா வந்து என்கிட்ட உண்மையை சொல்லி தப்பை ஏத்துக்குவனு பார்த்தேன் ஆனா இப்போ யோசிச்சா அதுவும் நீ போட்ட டிராமாவோனு தோணுதுடி?” என்று அவன் கூற. அவனுக்கு எப்படியாவது அவளை விளக்கிவிட வேண்டும் என்று எண்ணியவள்

“நா. நான் அப்படிபட்ட பொண்ணு” இல்லையென்று கூட அவளை கூற விடவில்லை அவன்
“பேசாதனு சொன்னேன்டி உன்ன? இனியும் உன் பேச்ச நம்பி நான் ஏமாற மாட்டேன்” என்றபடி அவளது கழுத்தின் பிடியை அதிகரித்தவன் அவளது கண்கள் சிவந்து மூச்சுக்கு திணற கைகளின் அழுத்தத்தை குறைத்து மேலும் அவளை முறைத்தபடி

“ஒவ்வொரு நாளும் நீ பேசுறது உண்மையா இருக்காதா? ஏதாவது ஒரு விஷயத்தில பொய் சொல்லாம நல்லவளா இருந்திட மாட்டியானு எத்தனை முறை எதிர்பார்த்து இருக்கேன் தெரியுமா? ஆனா நீ என் நம்பிக்கையை பொய்யாக்கி பொண்ணுங்களையே நம்ப கூடாதுனு நான் மாத்தின முடிவ மறுபடியும் எடுக்க வெச்சுட்டல்ல போய் சொல்லு என் சித்திக்கிட்ட நீ இல்ல எப்படிப்பட்ட அழகி வந்தாலும் என்னை மயக்கமுடியாதுனு சொல்லுடி அவங்க திட்டமும் பலிக்காதுனு சொல்லுடி. உனக்கு ஒரு வாரம்தான் டைம் உன்ன நானா வேலையை விட்டு துரத்தினா எனக்குதான் கெட்ட பேர் வரும் அதனால ஒரு வாரம் இருக்குல வேலையை மட்டும் செஞ்சுட்டு என் கண்ணுமுன்னாடி நிக்காம போய்ட்டே இருக்கனும். இனி என் வாழ்க்கையில நான் உன்ன பார்க்கவே கூடாது நம்பிக்கை துரோகி” என்று அவளை உதறியபடி அங்கிருந்து வேகமாய் சென்றுவிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *