Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 65

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 65

அத்தியாயம் – 65

அவனது ஜப்பான் மேனேஜர் சொன்ன செய்தி இதுதான்.

அவன் இதுவரை தேடிய மீரா என்னும் பெயர் கொண்ட மலையாள பெண் வேறு யாருமில்லை அவனது ஸ்பான்சர் ஷரத் ஶ்ரீ சாரின் மகள்தான் என்றும் அவரது உண்மையான பெயர் வேறு என்று மட்டுமே கூறி வைத்துவிட அவனுக்கு அதிர்ச்சி ஏனெனில் இன்று அவளைதானே பார்ட்டியில் பார்க்க போகிறான்.
அவன் கேள்விபட்டவரை அவளுக்கு யாரோ ஒரு ஃபாரின்காரரோடு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் இருப்பதாகவும் இப்போது அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் அவர் இன்று ஊட்டிக்கு பிஸினஸ் பார்ட்டி மற்றும் மீட்டிங்காக வருவதாகவும் தான்.
‘இதுவரை தான் தேடியவள் ஒரு குழந்தைக்கு தாயா?
ஆனால் அவள் கண்களில் எனக்கான காதல் இருந்ததே? எனக்கான தேடல் இருந்ததே? ஒருமுறையாவது அவளது முகத்தை பார்த்திருந்தால் தனக்கு திருப்தியாக இருந்து இருக்குமே ஆனால் அவளை ஒரு குழந்தைக்கு தாயாகவா பார்க்க வேண்டும் அப்படியானால் அவள் காட்டிய பாசம் அவளது பேச்சு அவளது ராஷி என்ற அழைப்பு அதெல்லாம் பொய்யா? அவள் என்னை விரும்பவே இல்லையா?’
என்று வேதனை அடைந்தவன்.
ஆனால் மேதா மேல் தான் தனக்கு அந்த பெண்ணின் மேல் ஏற்பட்டது போலொரு ஈர்ப்பு ஏற்பட்டதே தவிர இப்போது அந்த தேஜுவை பார்க்க போகும் ஆர்வம்கூட வரமாட்டேன் என்கிறதே?

‘ஏன் தன் வாழ்க்கையில் மட்டும் எல்லாமே ஏமாற்றமாக இருக்கிறது?
தான் தேடியவளும் பொய்யாய் போனாள் தன் தாயும் தன்னைவிட்டு போனாள் அன்னையின் இடத்திற்கு வந்தவளும் தன் வாரிசுகளுக்காக ஆளை கொல்லும் பேயாய் மாறிபோனாள் தான் தேடியவள் பெயரும் பொய் தன்னை தேடி வந்தவளும் தன்னை ஏமாற்றி சென்றுவிட்டாள்’ என்று எண்ணியவனுக்கு
தன்மீதே கழிவிரக்கம் வர இன்னும் எத்தனை பெண்கள் தன் வாழ்க்கையில் ஏமாற்ற முயல்கிறார்கள் என்று எண்ணி வருந்தியவனுக்கு அவன்மீதே கோவம் வந்தது.

கோவம் வருத்தம் தன்மீதே கழிவிரக்கம் என கொண்டவன் அப்படியே உறங்கி போனான்.
மறுநாள் மாலைதான் பார்ட்டி என்பதால் அவனை யாரும் எழுப்பவில்லை.

அருந்ததியிடம் ஏற்கனவே மேதா மறுநாள் மாலைதான் வருவேன் என்று சொல்லி இருந்ததால் பார்ட்டிக்கு வேண்டிய ஏற்பாடுகளை அருந்ததியும் சாஹித்யனும் நிலவினியும் பார்த்தனர் தன் பங்குக்கு மேதாவும் ஃபோன் மூலம் அவள் பொறுப்பேற்ற வேலைகளை செய்து கொண்டு இருந்தாள் வந்தவர்கள் மேதா மேடம் அனுப்பியதாக கூறியபடி வேலைகளை செய்ய மிகவும் மெனக்கெட்டு கொண்டு இருக்கிறாள் என்றே எண்ணினான் நிதின்.

தேஜூவை காலையிலேயே கூட்டி வந்த அருந்ததி அவளது குழந்தையோடு கொஞ்சி விளையாடி கொண்டு இருந்தாள்.
நிதின் அவளை கண்டதும் கண் கலங்கியவள் ஒன்றரை வருடம் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாதவளை தன் கண்காணிப்பில் தான் வைத்திருப்பதாக மேதா சொல்லவும் அவளுக்கு நிகழ்ந்ததை சொல்லவும் அதிர்ந்து போன குடும்பத்தாரிடம் அவளை பழையது எதையும் பேசி மனம் வேதனை அடைய வைக்க வேண்டாம் என்று கேட்டு இருந்ததால் எல்லோரும் தேஜூவிடம் வழக்கம்போலவே பேசினர் அதனால் அவளுக்கு முதலில் குற்ற உணர்ச்சி இருந்தாலும் பெரியவளாய் தன்னை தாங்கி தனக்கு இத்தனை நாட்கள் ஆறுதலாய் இருந்தவளுக்காகவேணும் தான் சாதாரணமாக இருப்பது போல் தன்னை பழக்கி கொண்டாள்.
எல்லாவற்றையும் தாங்கி கொள்ளும் மனநிலையை அவளுக்கு கொடுத்து இருந்தாள் மேதா அதனால் அவளால் இப்போது எதையும் தாங்கி கொள்ளும் மனப்பக்குவம் வந்து விட்டிருந்தது.
தன் வாழ்வில் அவசர அவசரமாக நடந்தேறிய முடிவுகளை ஓரந்தள்ளி இப்போது எதையும் யோசித்து செய்யும் மனப்பான்மையை வளர்த்து கொண்டிருந்தாள்.
அவளது குழந்தைக்காக குழந்தைக்காக என்று குழந்தையை கைகாட்டியே அவளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இருந்தாள் மேதா.

இப்போது யார் என்ன சொன்னாலும் அதை உதறி தள்ளிவிட்டு தன் வேலையை மட்டும் பார்க்கும் வேலையை புரிந்து கொண்டிருந்தாள் தேஜூ. அதை புரிந்த மேதா தான் அவளை இங்கே வந்து பொறுப்பை தட்டி கழிக்காமல் வேலை செய்யும்படி கூறி இருந்தாள் அதனால் தான் அவள் நீண்ட காலம் கழித்து இப்போது வருகிறாள்.

துன்பமான தருணத்தில் தன்னை தாயாய் தாங்கி தன்னை தேற்றிய மேதாவை நினைத்து பெருமையாய் இருந்தது அவளுக்கு.
சின்ன பெண் அவளுக்கு இருக்கும் நிதானம் கூட தனக்கு இல்லையே என்றுதான் எண்ணினாள் மேதா அப்படியே தன் தந்தையை போன்று வேலையில் சுட்டி பாசத்தில் சர்க்கரை கட்டி என்று மனதில் எண்ணியவள் பார்ட்டிக்கு ரெடியாகினாள் தனது ஒன்றரை வயது மகளோடு.
ஊட்டியில் இருந்த தங்களது அரண்மனையிலேயே பார்ட்டி ரெடி செய்து இருந்தனர்.

அன்று மாலை வந்து இறங்கினாள் மேதா தனது சோகத்தையெல்லாம் மூட்டை கட்டி இன்று ஒருநாள் வைத்துவிட வேண்டும் என்ற முடிவோடு தன்னை சாதாரணமாக வைத்துக்கொண்டாள்.
‘இறைவா மேலும் என்னை சோதிக்காதே’ என்று மனதில் எண்ணியவளுக்கு தெரியவில்லையே அவளது இறைவன் இன்றைய தினம் அவளுக்கு பெரிய சோதனையெல்லாம் வைத்திருக்கிறார் என்று. கழுத்தில் காயம் தெரியகூடாது என்று எண்ணி காலர் வைத்த உடையை அணிந்து இருந்தாள்.
முகமும் ஓரளவுக்கு தெளிவாக வைத்திருந்தாள் ஆனால் எப்போதும் சிரித்த முகமாய் சுறுசுறுப்பாக வேலை செய்யும் மேதாவாக அவள் இல்லை.
அப்போது தான் அவனுக்கான வேலைகளை செய்ய அவள் அனுப்பிய ஆள் அங்கு இல்லாததை உணர்ந்தாள்.
அவன் கிளம்ப வேண்டுமே என்ற எண்ணத்தில் உடனே கிளம்பி அவனது அறை இருக்கும் இடத்தின் அருகில் வந்தாள் ஆராஷி அவளை அவன் முன் வரக்கூடாது என்று கூறியதால் அவள் வெளியேயே அவனுக்கு மறைவாக நின்றாள் அங்கிருந்தபடி அவள் அவனுக்கு உதவியாக இருக்க ரெடி செய்த ஆளுக்கு ஃபோன் செய்து பேசினாள் ரெடியாகி கொண்டு இருந்த ஆராஷி அங்கு யாரோ மறைந்து நின்றிருப்பதை பார்த்தவன் யாரென தன் ஜன்னலின் ஸ்கீரனை திறந்து பார்த்தான்.
அங்கு கேட்ட குரல் மேதாவின் குரல்தான் என்று உணர்ந்து இவளுக்கு அறிவே இல்லையா திரும்ப திரும்ப வந்து நிக்கிறாளே? என கோவம் கொண்டவன் அவளை மீண்டும் திட்ட வெளியே வர திரும்பியவன் காதில் அவளது பேச்சு விழ சட்டென நின்றான்.
அவர் ஹிந்திகாரர் என்பதால் அவள் ஆங்கிலத்தில்தான் பேசிக்கொண்டு இருந்தாள் அதனால் அவளது பேச்சு அவனுக்கு புரிந்தது.

“எல்லாம் எடுத்துட்டீங்களா? சரி சீக்கிரம் வந்து அவருக்கு தெரியாம என்னை மீட் பண்ணுங்க” இதைதான் அவன் கேட்டது. அவள் கேட்டது அவன் பார்ட்டியில் தேஜுவிற்கும் நிதினுக்கும் கொடுப்பதற்காக வாங்கி வைத்த கிஃப்ட் மற்றும் பூங்கொத்து ஆனால் அவன் கேட்டதோ வேறு.

‘என்ன எடுத்துட்டியானு கேட்கிறா? யாரை கேட்கிறா? எதுக்கு அவளை எனக்கு தெரியாம மீட் பண்ண சொல்றா?’ என்றவன் அவளையே கேட்டுவிடலாம் என வெளியே வந்த நேரம் அவனை அழைத்து செல்ல கார் வந்துவிட நேரமாகி விட்டது என்று வந்து அழைத்தனர்.

‘எப்படியும் சிக்காமலா போய்விடுவாள் கேட்டு கொள்ளலாம் அவ மட்டும் ஏதாவது தப்பு பண்ணானு தெரியட்டும் இருக்குது அவளுக்கு’ என்று எண்ணியபடி கிளம்பியவன்
தன் சோகத்தை தன்னுள் புதைத்தவன் மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக்கொண்டு கிளம்பினான்
அவனுக்காக உள்ளே லைட்பர்ப்பிள் நிற ஷர்ட்டும் அதன்மேல் க்ரே நிற கோட்டும் என மேதா அவனுக்காக வடிவமைத்த உடை அது என்பதை அறியாமலே அணிந்தவனுக்கு ஏனோ அந்த உடை பிடித்து இருந்தது. ஆனால் அதையும் ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை.

மேதாவும் அவனது கண்ணில் படாதவாறு அவளது வேலைகளை செய்து கொண்டு இருந்தாள் தேஜுவிடம் அறிமுகம் செய்யப்பட்ட ஆராஷி அவளை பார்க்க அவளது முகத்தில் அவனை ஒரு செலிபிரிட்டியாக மட்டுமே பார்த்த பார்வை இருந்தது இதற்கு முன் அறிமுகமான சாயல் இல்லை
அவளது கண்களும் வேறு போலவே தோன்றியது ஒருவேளை திருமண வாழ்க்கைக்கு பிறகு மாறி விட்டாளோ என்னவோ என்று தான் நினைத்திருந்தான். அவளது குழந்தையை வாங்கியவன் அவளோடு சிறிது நேரம் அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியாக இருந்தான் தூரத்தில் வேலையாட்களோடு நின்றபடி அவனை பார்த்த மேதாவிற்கு அவனது சிரித்த முகம் ஏதோ ஒரு வகையில் மகிழ்ச்சியாக இருந்தது.
அவர்களோடு சேர்ந்து அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் அப்போது நிதின் மேதாவை புகைப்படம் எடுக்க தேட அவனை தடுத்த ஆராஷி
“இது ஃபேமிலி பார்ட்டி தானே இதுல எதுக்கு எம்ப்ளாயிலாம்?” என்று அவன் ஆங்கிலத்தில் கேட்க
“அவளும் எங்க ஃபேமிலி மெம்பர்தான் மிஸ்டர் ஆராஷி நீங்க எப்படி அவளை இப்படி சொல்லலாம்” என்றாள் தேஜு ஜாப்பனீஸில் கோவமாக.
அவளை ஒரு எதிர்பார்ப்போடு திரும்பி பார்த்தவன் முன் கையில் குழந்தையோடு நின்றவளை பார்த்து புஸ்ஸென்று ஆனவன்.

“தெரியும் பட் ஷி ஈஸ் ஜஸ்ட் எம்ப்ளாயி ஹியர். தட்ஸ் இட் அவ உங்க லாங் சைட் ரிலேடிவ் தானே?” என்றபடி அவன் நிதினை பார்க்க அவன் பேசியது புரியாததால் நிதின் முழித்தபடி தேஜுவிற்கு கோவம் வருமளவுக்கு ஏதோ சொல்லிவிட்டான் என்று உணர்ந்த நிதின்
“தேஜு அவருக்கு நம்மள பத்தியும் நம்ம சொந்தத்தை பத்தியும் எதுவும் தெரியாதுல அதான் அப்படி பேசிட்டாரு. நீ குழந்தைக்கு சாப்பிட கொடு நேரமாகுது பாரு” என்று அவளை அனுப்பியவன் அவளது துணைக்கு சாஹித்யனை அனுப்பினான்.
ஆராஷியிடம் திரும்பி
“மேதாவும் எங்க குடும்ப பொண்ணு தான் சர் அதான் அவ கோச்சுகிட்டா மன்னிச்சிடுங்க” என்று கூற அவனை தவறான புரிதலோடு பார்த்தவன்

“இல்ல எனக்கு புரியல ஆஃப்ட்ரால் ஒரு எம்ப்ளாயிக்கு போய் நீங்க ஏன் இவ்ளோ ஓவரா சப்போர்ட் பன்றீங்க?” என்று கேட்க அருந்ததி கோவமாய் திரும்பினாள்
அவன் பக்கம் ஆல்ரெடி அங்கு ஏதோ தவறாக நடக்கிறது என்று உணர்ந்த மேதா அவன் கோவமான முகத்தை கண்டு அங்கு போகலாமா? வேண்டாமா? என்று எண்ணியவள் அருந்ததியின் கோவமான முகத்தை கண்டு நொடியும் தாமதிக்காமல் அவனை மறைத்தவாறு அவள் எதிரில் நின்றாள்.

2 thoughts on “வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 65”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *