அத்தியாயம் – 70
கலங்கி போய் அமர்ந்த ஆராஷி கண்களில் நீர் வழிய நெஞ்சை பிசைந்தவனை பார்க்க எல்லோருக்கும் பாவமாக இருந்தது.
அவனது மேனேஜர்
“ஆரா என்ன ஆச்சு? எதனால இப்படி இருக்க? உடம்பு ஏதாவது சரியில்லையா?” என்று கேட்க.

“நா… நான் அவளை ரொம்ப த… தப்பா புரிஞ்சுகிட்டேன்” என்று அவன் அழுதபடி பேச அவனது பேச்சு புரியாமல் மற்ற இருவரும் குழப்பமாய் அவனையே பார்க்க அவனது பேச்சு புரிந்த மேனேஜர் அந்த பெண்ணை பார்த்து குடிக்க நீர் எடுத்து வரும்படி கூற அவர் உடனே நீர் எடுத்துவர ஓடினார்.
அதற்குள் அவனை ஏதேதோ சொல்லி எழுப்பி சீட்டில் அமரவைத்த மேனேஜர் அவனுக்கு நீரை குடிக்க கொடுக்க அவனுக்கோ ‘தான் இவ்வளவு மோசமாக ஒரு பெண்ணிடம் நடந்து உள்ளோமே என்ற கோவம் அவனல நிம்மதியில்லாமல் ஆக்கியது.
அந்நேரம் அவள் நடிக்க வந்தவள் என்றதையெல்லாம் மறந்தே போனான்.
நேற்றைய தினம் கூட பார்ட்டியில் தான் அவளை தவறாக பேசும்போது சப்போர்ட் செய்ய வந்த நிதின் அவளது கையை பிடிக்க அவளோ தீயில் விரலைவைத்தது போல விலகினாளே? என்னுடைய வார்த்தை அவளை எவ்வளவு காயப்படுத்தி இருந்தால் அவள் இப்படி நடந்து இருப்பாள் அண்ணா என்று அழைத்ததையும் அவரோ மகளை போல அழைத்ததையும் தன் தவறான மொழி புரிதலால் தவறாக எண்ணி அவளை என்னவெல்லாம் பேசி காயப்படுத்தி விட்டேனே இதற்கு எனக்கு மன்னிப்பே இல்லையா? அவள் நடிக்கவந்தவள் என்று அவள் வாயாலேயே கேட்டேனே? ஆனால் இதுவரை நடந்ததுக்கு அவள் காரணம் இல்லை என்றல்லவா ப்ரூவ் ஆகி இருக்கிறது.
அவள் இருந்தவரை எனக்கு உதவியாக அல்லவா இருந்தாள்?
அப்படியானாள் அவள் எதுக்கு நடிக்க வந்தவள் என்று சொல்லவேண்டும்.
இதெல்லாம் ஏன் தனக்கு முன்பே புரியாமல் போனது.
முதல்முறையாக ஒரு பெண்ணை தான் இந்த அளவுக்கு காயப்படுத்தி உள்ளோமே தன் தாய் தன்னை மன்னிப்பாரா?
எங்கே தேடுவேன் அவளை?
எங்கே சென்றாளோ? அவளிடம் எந்த முகத்தை வைத்து நான் மன்னிப்பு வேண்டுவேன் அவளிடம்?’ என்றெல்லாம் எண்ணியவனுக்கு அவன்மீதே வெறுப்பு தோன்றியது.
மீண்டும் தன்னை யாரோ அதே புதைகுழியில் தள்ளுவது போல ஒரு உணர்வு அவனுக்கு.
நினைக்க நினைக்க நெஞ்சம் வலித்தது. வலித்த நெஞ்சத்தை நீவி விட்டு கொண்டான்.
அவனை அப்படி பார்த்து பதறிபோனார் மேனேஜர்.
“என்ன ஆரா? என்ன செய்யுது? எங்கேயாவது லேண்ட் பண்ண சொல்லவா? எனி மெடிக்கல் எமர்ஜென்சி?” என்று கேட்க
இல்ல “அதெல்லாம் ஒன்னுமில்ல” என்றவனுக்கு யோசனையெல்லாம் மேதாவின் மேலேயே இருந்தது.
தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சி அவனை வேறு எதையுமே யோசனை செய்ய விடவில்லை.
எப்படியாவது அவளை தேடி கண்டு பிடித்து அவளின் காலில் விழுந்தாவது மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் அவளது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் செய்யனும் என்ற ஒன்றுதான் அவனுக்கு தோன்றி கொண்டே இருந்தது.
எப்போது ஜப்பான் வந்து இறங்கினான் எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்பது கூட அவனுக்கு தெரியவில்லை இயந்திரம் போல வந்தவனை அப்போது தான் மீட்டிங் முடித்து வந்த அவனது தந்தை பார்க்க வந்தார்.
ஆனால் எதையோ பறிகொடுத்தது போல அமர்ந்து யாரையும் அருகில் சேர்க்காமல் இருந்தவனை பார்த்தவருக்கு உள்ளுக்குள் ஆபாய சங்கு அடிக்க அடுத்த நொடி ரியோட்டோவிற்கு அழைத்துவிட்டார்.
தன் சொந்த வேலையாக அவனது தந்தையின் ஊருக்கு சென்று இருந்தவன் அவரது ஃபோனால் உடனே அங்கிருந்து புறப்பட்டான்.
அவனுக்கு அழைத்த பின்பு தான் அவனது மேனேஜரை அழைத்து விஷயத்தை கேட்டார்.
அவருக்கும் முழுமையாக எதுவும் தெரியாததால் கேட்டால் எதையும் கூறவில்லை என்ற பதில் தான் வந்தது.
கூடவே
இரவுதான் வந்து சேர்ந்தான் ரியோட்டோ அதுவரை அவர் தந்தையால் அவனை நெருங்கவே முடியவில்லை.
ரியோட்டோவிற்கு ஏதோ பெரியதாக நடந்து இருக்கிறது என்று மட்டும் புரிந்தது ஆனால் அது என்ன என்று தெரியவில்லை ஆனால் இந்தியாவில் தான் நடந்து இருக்கிறது என்று மட்டும் புரிந்தது.
உடனே இந்தியாவிற்கு நிதினின் பி.ஏ விற்கு கால் செய்ய அவன் இங்கு இல்லை வெளிநாடு சென்று இருப்பதாக கூறி சாஹித்யனுக்கு கால் கனெக்ஷன் செய்ய எடுத்தவன் கூறியதை ரெக்கார்ட் செய்து கொண்டான் ஏனெனில் அவன் இவன் தமிழ் பேச அவனும் தமிழிலியே நடந்ததை சொன்னான் எப்படியும் பாதிதான் புரியும் என்பது புரிந்தது ரியோட்டோவிற்கு அதனால் அவன் பேசும்போதே ரெக்கார்ட்டை ஆன் செய்தவன் பேசி முடித்ததும் ஆட்டோ டிரான்ஸ்லேட்டரை கனெக்ட் செய்து அவன் பேசியதை கேட்டான்.
கேட்க கேட்க ஆராஷி எதனால் இப்படி இருக்கிறான் என்பது புரிந்தது. கூடவே மேனேஜர் மூலமாக மேதாவின் மேல் எந்த தவறும் இல்லை என்று ஆனதும் புரிந்தது.
எந்த பெண்ணையும் தன்னை நெருங்காமல் அவள் ஒருவளை எண்ணி இத்தனை நாளாய் அவள் ஒருத்தியை தேடி திரிந்தவன் இப்போது அவனது பிஏ விற்க்காக இப்படி வருந்துகிறான் என்றால் அவள்மேல் இவனுக்கு ஏதாவது ஈர்ப்பு வந்து இருக்கும்போல அவள் இவனை ஏதோ ஒரு வகையில் ஈர்த்துள்ளாள் என்பது புரிந்தது ரியோட்டோவிற்கு.
ஆனால் அது ஈர்ப்பு அல்ல வெறும் குற்ற உணர்வு தான் என்றுவிட்டால என்று எண்ணியவனுக்கு ஆராஷி எப்போதும் ஒரு புரியாத புதிரே.
இதையெல்லாம் கேட்ட பிறகு ஆராஷியின் மனநிலையை ஓரளவுக்கு யூகித்தவன் அவனை காண சென்றான்.
அவனது அறைக்கதவை தட்டியவன் கதவை திறக்க ரியோட்டோவை பார்த்த ஆராஷி அவ்வளவுதான் அத்தனை நேரமும் அவன் அடக்கி வைத்திருந்த சோகம் எல்லாம் தாயை கண்ட கன்றை போல ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான்.
“ஆரா..இங்க பார் ஒன்னுமில்ல இதுல உன் தப்பு எதுவும் இல்ல உனக்கு அவங்க பாஷை புரியல அவ்ளோதான் அந்த சூழ்நிலை உன்னை அப்படிலாம் பேச வெச்சுடுச்சு இதுக்கு நீ இப்படி ஆகலாமா?” என்று அவனை பேசியபடி ஆறுதல்படுத்த
மடைதிறந்த வெள்ளமாய் அவனிடம் பேசினான் ஆராஷி.
பக்கத்து அறையில் நின்று இதை கேட்டுக்கொண்டு இருந்தார் ஆராஷியின் தந்தை.
“இல்ல அண்ணா நா நான் அந்த பொண்ணை எவ்ளோ கஷ்டப்படுத்திட்டேன் தெரியுமா? அவளை அவளோட நடத்தையை த..தப்பா பேசி அவளுக்கு திருட்டு பட்டம் கட்டி நான் எவ்ளோ கொடூரமானவன்.
ஒரு பெண்ணை இவ்ளோ கேவலமா நடத்தி இருக்கேனே நான் எவ்ளோ கேவலமானவன்.
அ..அம்மா என்னை மன்னிக்கவே மாட்டாங்க.
பொண்ணுங்கள எப்படி மதிக்கனும்னு சொல்லி கொடுத்தாங்க ஆனா நான் நான் ஒரு பொண்ண அவளோட பேச்சை மதிக்காம அவளையே குற்றவாளி ஆக்கி கண்காணாத இடத்துக்கு துரத்தி விட்டுட்டேனே?
இந்த பாவத்துக்கு எனக்கு மன்னிப்பே கிடையாதுனா
அவளை நான் எங்கேனு தேடுவேன்? போய்ட்டாளே…
இப்படி ஒரு கேவலமான எண்ணம் இருக்கிறவன மன்னிக்கவே கூடாதுனு போய்ட்டாளே அவகிட்ட நான் எப்படி மன்னிப்பு கேட்பேன்.
அது எனக்கு கிடைக்குமா?
எத்தனை நாள் அவளை தப்பா புரிஞ்சு கேவலமா பார்த்து வெச்சேன் இப்போ அவளோட பார்வையில நான் கேவலமானவனா தெரிவேனே? அவ கலங்கி நான் தப்பு பண்ணலனு பார்த்த பார்வையை அசால்ட்டா தட்டிட்டு அவமேல பழியை போட்டுட்டேனே இந்த பாவத்துக்கு நான் உலகம் பூரா இருக்கும் சர்ச்ல போய் பாவமன்னிப்பு கேட்டா கூட சரியாகாதே” என்று அவன் பாட்டில் புலம்ப ஆரம்பித்து விட்டான்.
அவனை தேற்றும் வழி தெரியாமல் இருந்தான் ரியோட்டோ.
அந்நேரம் கதவு தட்டப்பட ஆராஷியோ முகத்தை துடைத்து கொண்டு திரும்பி நிற்க
“எஸ்” என்றான் ரியோட்டோ.
மேனேஜர் உள்ளே வந்தார்.
“சொல்லுங்க சர்” என்றான் ரியோட்டோ ஆராஷியை ஒரு பார்வை பார்த்த மேனேஜர்.
“இன்டியன் பாடிகார்ட்டும் அவங்க வந்த ப்ளைட்டும் கிளம்பியாச்சு.
அங்க பி.ஏ வா இருந்த மேதா மேடம்கிட்ட இருந்ததுனு சாரோட திங்க்ஸ் கொடுத்தாங்க கிளம்பும் அவசரம்ல என் பேக்லேயே வெச்சுட்டேன்.
அதான் இப்போ எடுத்து வந்தேன். ஒன்ஸ் செக் செஞ்சுக்கோங்க” என்றுவிட்டு அங்கிருந்த மேஜைமீது வைத்தார்
“ஓகே சர் நான் செக் பன்றேன்” என்று கூற அவர் சென்றார்.
அவர் சென்றதும் அதுவரை அவனையே பார்த்தபடி நின்றிருந்த ஜிம்மி அந்த பொருட்களை வாசம் பிடித்தவள் மேதாவின் வாசம் வீச அதன் அருகில் சென்று குரைத்தாள்.
அவளது சத்தத்தில் இருவரும் அவளை நோக்கி திரும்ப அங்கிருந்த பொருட்களை ஜிம்மி குடைவது தெரிந்தது.
கண்களை துடைத்தபடி திரும்பி பார்த்தவன் அந்த பொருட்களை பார்த்து உடனே அதனிடம் நெருங்கினான்.
அந்த டேப்லெட்டை எடுத்து பார்த்தவன் அது அவனுடையது இல்லை என்று உணர்ந்து டைரியை பார்த்தான்.
அதில் ஒன்றை எடுத்து பார்க்க அதிலே அழகாய் அவனது அன்றாட வேலை மற்றும் அவனுக்கு பிடித்த உணவு பிடிக்காத உணவு எது அவனது உடலுக்கு செட் ஆகும் ஆகாது என்று தெளிவாக எழுதி இருந்தாள் ஜாப்பனீஸிலும் ஆங்கிலத்திலும்.
புதிதாக யாரேனும் படித்தாலும் ஈஸியாக புரிந்து கொள்ளும் வகையில்.
அதை பார்த்து விரக்தியாக புன்னகைத்தவன் அதை ரியோட்டோவிடம் கொடுத்துவிட்டு அடுத்த டைரியை எடுத்தான் ஆனால் அது பூட்டு போடும் வகையில் வடிவமைத்து இருந்த டைரி அதனால் அது பூட்டு போடப்பட்டுஇருந்தது.
“இது அவளுடையதாக இருக்கும் மாற்றி கொண்டு வந்து கொடுத்துவிட்டனர்”
என்று கூறியபடி அதை வைத்தவனை பார்த்த ரியோட்டோ
“அதை எடுத்து பாரேன் ஆரா அவ எதுக்காக நடிக்க வந்தானு அதுல ஏதாவது ரீசன் எழுதி இருக்கலாம்ல?” என்று கூற.
“அவளை பத்தி எனக்கு முழுசா தெரியாதுனா எனக்கும் அவளுக்கும் ஆக்டர் பி.ஏங்கிற உறவ தவிர பர்சனல் உறவு இல்லையே அப்படி இருக்கும்போது தெரியாதவங்க டைரிய படிக்கிறது தப்பு”என்றபடி
அந்த டேப்லெட்டையும் அந்த டைரியையும் எடுத்து தனது பீரோவில் சேஃப்டி லாக்கரில் வைத்தவன் கண்கள் கலங்கியது மீண்டும்.
அப்படி அவன் கலங்குவதை பார்த்தவன்
“எனக்கு என்னமோ நீ வெறும் குற்ற உணர்ச்சியில தவிக்ககறமாதிரி தெரியலையே ஆரா. வேற என்னமோ நடந்து இருக்கு அவளோட வேஷத்தை கலைக்க ஏதோ ப்ளான் வெச்சு இருக்கேன்னு சொன்னியே என்ன ப்ளான் அது என்ன பண்ண நீ அவள?” என்று சரியாக பாயிண்ட்டை பிடித்து கேட்டான் ரியோட்டோ.
🧡🧡🧡🧡🧡
Mikka nandri sago💜💜
Super super sis👍👍👍👍👍 Eagerly waiting for next part of the story
Thank u so much sago🥰🥰🥰 ella epi kum cmt pannadhuku thanks a lots😍😍🥰🥰
Sis…. Ipdiye story ah stop panna poringalaaa.. Pls… We are waiting for ur next ud… Ipdi paathi la niruthittu again part 2 pottaaa neraia perukku story continuity erukathu pls… Naa recent ah thaa story padikka arambitchen… Comments kaga story ah stop panna poringanna yengala maari padikira aalungaluku yenna solution nu sollunga🙄🙄🙄
Acho comments kaga stop pannala sis part1 Kindle la pottu irukken adhanala than stop panna parkiren.. nan site laye ippothan eludha start panni iruken adhukulla reach aaga mudiyadhunu theriyum kandippa.. aana kadhai perusa pogavum mudichutu 2 part ah podalamnu than yosichen kandippa unga cmt ah nan think pandren sis thanks for ur valuable comments dear❤️❤️💜💜