Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 71

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 71

அத்தியாயம் – 71

ரியோட்டோ சரியாக அவனை கேள்வி கேட்கவும் கண்ணீரோடு அமைதியாக முகத்தை குனிந்து கொண்டான்.
அவன் தோளை தொட்டு முகத்தை நிமிர்த்தியவன்
“என்ன பண்ண ஆரா?” என்று அவன் கண்ணை பார்த்து கேட்டவனிடம் அவள் ஃபோனில் பேசியதை கேட்டதில் இருந்து அவளை விரட்டியடிக்க தான் செய்த வேலைகளையும் கடைசியாக அவளை இதழ்முத்தம் இட்டு சண்டையிட்டதையும் கூறியவன் கடைசியாக நேற்று நடந்ததை கூறாமல் விட்டான்.
இதை கேட்ட ரியோட்டோவிற்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. பக்கத்து அறையில் இருந்து கேட்ட அவனது தந்தைக்கும் தான் அதிர்ச்சி.
தன் மகனா இப்படி என?
‘தான் அறிந்தவரை ஆராஷி இப்படி எந்த பெண்ணிடமும் நடந்து கொண்டது இல்லையே? அதும் அவன் இதுவரை தேடிய பெண் அந்த மீராவை கூட அவன் அந்த நேரங்களில் இவ்வளவு நெருங்கியது இல்லையே? ஆனால் ஏதோ ஒரு பெண்
அவளை வேலையை விட்டு துரத்தவென இவன் இவ்ளோ செய்துள்ளானா? அந்த பெண் இவனால் எவ்வளவு மனம் உடைந்து போயிருப்பாள் அவளை கண்டுபிடித்து இவனை மன்னிப்பு கேட்க வைத்தால்தான் இவன் பழையபடி மாறாமலும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமலும் இருப்பான்’ என்று உணர்ந்த ரியோட்டோ
“உன்னோட முன்கோபம் ஒரு அப்பாவி பொண்ண எப்படி பாடா படுத்தி இருக்கு ஆரா.
கொஞ்சம் கூட யோசிக்காமா இப்படியா செஞ்சு வைப்ப?
ஏற்கனவே உங்க சித்தி ஒரு பொண்ண அனுப்பி உன்கிட்ட வேலைக்கு ஆகலைனு தெரிஞ்சும் அதே தப்ப செய்வாங்களா?
அதும் இங்க இருந்து அங்க வந்து உன்னோட அஸிஸ்டெண்ட் யாருனு பார்த்து.
ஏன்டா அந்த பொண்ணு வந்தது ஒருமாசம் கழிச்சுனு சொன்ன அதும் அவ நிதின் சர் ஓட தங்கச்சினு சொன்ன அவ்ளோ நம்பகக்கையான பொண்ணு நிதினோட கம்பெனிக்கு எதிராவே சதி செய்வாளா?
இதெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்கலையே ஆரா நீ?”
என்று அவன் பங்குக்கு அவனை குற்றம் சாட்ட ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் இருந்தவன் இன்னும் குற்ற உணர்ச்சிக்கு ஆளானான்.
அவனது வருத்தத்தை கண்டவன்
‘ஐயோ நான் என்ன செய்யுறேன்’ என்று மனதில் புலம்பியவன் ஆராஷியின் தோள்மேல் கைவைத்து அவனை அரவணைத்து
“கவலைபடாதே ஆரா உன்னோட லேங்குவேஜ் அதனால நீ அவளை தப்பா புரிஞ்சுக்கிட்ட அதனால அவளை துரத்தனும்னு என்ன என்னமோ செஞ்சு வெச்சுட்ட அந்த பொண்ண நேர்ல பார்த்து நீ மன்னிப்பு கேட்டுட்டா உன்னோட குற்ற உணர்ச்சியும் சரியாகும் நீ திரும்ப இந்தியா போய் அந்த பொண்ணுக்கிட்ட மன்னிப்பு கேட்டுடு அப்படியே அவளுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணனும்னாலும் பண்ணிடலாம் நானும் கூட வர்றேன்” என்று கூற அவனை கண்ணீரோடு பார்த்தவன்.

“அவ யாருகிட்டயும் சொல்லாம எங்கேயோ போய்ட்டானா எனக்கு அவகிட்ட இருந்து மன்னிப்பே கிடைக்காது அண்ணா” என்று வருந்த
அதிர்ந்த ரியோட்டோ அப்போ வேற எதையோ பெருசா பண்ணிட்டான் என்று எண்ணியபடி
“அப்போ இன்னும் பெருசா செஞ்சு இருக்க அந்த பொண்ணுக்கு என்ன பன்ன?” என்று கோவமாய் கேட்க.
சற்று தயங்கியவன் முன்தினம் நடந்ததையும் கூற அவன்மேல் கோவமாய் வந்தது ரியோட்டோவிற்கு.

“என்ன ஆரா இது ஏற்கனவே அவளை தப்பா புரிஞ்சு என்ன என்னமோ செஞ்சு வெச்சுட்டு வந்து இருக்கனு பார்த்தா இப்போ துரோகி பட்டத்தையும் கட்டி வெச்சு இருக்க அவளுக்கு?
அவளை பார்த்தா உனக்கு அப்படி தெரிஞ்சுதா ஆரா? அவ அப்படி ஏதாவது நடந்துகிட்டாளா?” என்று அவன் கோவமாகவே பேச
இல்லை என்பது போல தலையசைத்தவன்.

“நா..நான் எத்தனைநாள் யோசிச்சு இருக்கேன் தெரியுமா? நான் தேடின பொண்ணா இவ இல்லனா கூட பரவாயில்லை இவ ஏன் நடிக்காம எனக்கு நார்மலா இன்ட்ரோ ஆகி இருந்தா இவளையே லவ் பண்ணி கல்யாணம் செஞ்சு இருப்பேனேனு தான் யோசிச்சு இருக்கேன். அவளோட கேரிங், அவளோட சிம்பிள்னஸ், அவளோட வேலை அதுல அவளோட டெடிகேஷன்னு எல்லாமே என்னை அவ பக்கம் இழுத்தது. நடிக்க வந்தவமேல ஏன் நமக்கு ஈர்ப்புனு என்மேல எனக்கே வந்த கோவம் அப்படியே அவமேல திரும்பிட்டு” என்று அவன் கலங்கியபடி கூற.

அவனது வருத்தம் பிடிக்காதவனாய்.
“தேடலாம் ஆரா. இப்போ இருக்குற டெக்னாலஜில அவளல கண்டுபிடிக்கிறது என்ன கஷ்டமா? கண்டிப்பா சீக்கிரமே கண்டுபிடிச்சு அவகிட்ட மன்னிப்பு கேட்டு அவளோட ப்யூச்சர்க்கு வழி செஞ்சு கொடுக்கலாம் சரியா? நீ இப்படி உடைஞ்சு போய் உட்கார்ந்தா அவளை எப்படி கண்டுபிடிக்க?” என்று அவனை ஏதேதோ சொல்லி தேற்றினான்.
அன்று முழுவதும் அவனைவிட்டு விலகவே இல்லை ரியோட்டோ.
அவனுக்கு ஆராவின் மேல் கோவம் இருந்தாலும் அவனது நிலை அவன்மேல் கவலை கொள்ள வைத்தது.
ஆனால் எதனால ஆரா அவளிடம் அப்படி ஒரு ஈர்ப்பை உணர்ந்தான் என்றுதான் அவனுக்கு புரியவே இல்லை. கூடவே அந்த பெண் அவனது சித்திக்காக இவனிடம் நடிக்க வந்ததாக கூறி ஃபோன் பேசி இருப்பதும் ஏன் என்று விளங்கவில்லை.
ஆராஷியின் சூழ்நிலையை உணர்ந்தவன் அவனுக்கு ஆறுதலாக அவனுடனே இருந்தான் ஏதேதோ சொல்லி அவனது கவனத்தை கொஞ்சம் கொஞ்சமாக திசை திருப்ப முயற்சி செய்தான் அவனது முயற்சி உணர்ந்தவன் தான் அவனை ரொம்ப கஷ்டப்படுத்துறோம் என்று உணர்ந்து தன்னை தானே சமாதானம் செய்தபடி மேதாவை தேடும் வேலையில் இறங்கினான்.
‘இத்தனை நாள் தேஜுவை தேடினேன் இப்ப மேதாவை தேடுறேன் தேடலே என் வாழ்க்கையா?’ என்று எண்ணியவன் இரண்டு நாட்களில் தன்னை தானே சாமாதானம் செய்துகொண்டு தன்னை நார்மலாக இருப்பது போல காட்டிக்கொண்டு நடந்தான். மேனேஜரை அழைத்து அவனது ப்ரோக்ராம் எதுவாயினும் ஒரு வாரம் கழித்து ஏற்பாடு செய்யும்படி சொல்லி இருந்தான் கூடவே தன்னை யாரும் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று கூற அவனிடம் எப்படி விஷயம் சொல்வது என்று தயங்கினார் மேனேஜர்.

அவர் இப்படி தயங்குபவர் அல்லவே என்று யோசித்தவன்
என்ன விஷயம் என்று கேட்க.
இரண்டு நாட்களில் இந்தியாவில் நடந்த ஃபோட்டோஷூட்டில் இமேஜஸ் அண்ட் வீடியோஸ் செலெக்ட் செய்து தரவேண்டும் என்று கூற அவளோடு எடுத்த புகைப்படம் வீடியோ என்பதால் அவன் இன்னும் வருத்தப்படபோகிறான் என்று அவர் தயங்க
“ஓகே நான் செக் பண்றேன். ஆனா அதை தவிர வேற எந்த வேலையும் செய்ய மாட்டேன் ப்ளீஸ். அண்ட் இப்போதைக்கு அவங்க கான்ட்ராக்ட் கேன்சல் பன்றதா சொல்லி இருக்காங்கல அதை கிராஸ்செக் செய்யுங்க எனக்கு அவங்க கான்ட்ராக்ட் தான் வேணும் எப்பவும்” என்று கண்டிப்புடன் கூற தலையை சொறிந்தபடி அவரும் சரி என்றுவிட்டு சென்றார்.
இதில் அவன் நிறுத்தியபடி அனைவரையும் பார்க்க அமைதியா இருந்தா அது நம்ம அருந்ததி இல்லையே

“உங்களுக்கு வந்த நியூஸ்படி தேஜு அக்காதானே நீங்க தேடின பொண்ணுனு சொன்னீங்க இப்போ என்ன புதுசா மேதாவை தேடி வந்ததா சொல்றீங்க?” என்று கேட்க.

‘இது ஒரு நல்ல கேள்வி’ என்று எண்ணினான் சாஹித்யன்.

அங்கோ
மெடில்டாவிடம் தன் கதையை கூறி முடித்த மேதாவிற்கு அதன்பின் தான் பாரீஸ் சென்றது பின் தன் நண்பன் ஷர்மா அவளை தேடி வந்தது.
அவளை பத்திரமாக பார்த்துக்கொண்டபின் அவளே நிதினை அழைத்து பேசியது என சொன்னாள்.
அதை கேட்ட மெடில்டா

“யுவர் லவ் ஈஸ் அமேசிங் மேதா. இந்த காலத்துல இப்படிலாம் ஒருத்தர் லவ் பண்ணுவாங்களானு தெரியல ஆனா அந்த லவ்க்கு அவர் தகுதகயானவர்தானா?
எவ்ளோ பெரிய பணக்கார வீட்டு பொண்ணு இங்கே வந்து யாருக்கும் தெரியாம தங்கி கவனிச்சுக்க கூட ஆள் இல்லாமல் இருக்கனுமா? அப்படி அந்த லவ் தேவைதானா?” என்று கேட்க.
விரக்தியாக சிரித்தவள்.

“மத்தவங்க பார்க்கிற மாதிரி நீயும் என் லவ்வ தப்பா பார்க்காதே மெடில்டா எனக்கு அவரோட லவ், கிஸ், செக்ஸ் இதெல்லாம் தேவையே இல்ல.
அதெல்லாம் லவ்ல ஒரு பார்ட்தானே தவிர அதுவே லவ் இல்ல.
தூரத்தில இருந்து பார்த்தா கூட போதும் அப்படியே நான் வாழ்ந்திடுவேன்.
ஒரு பொண்ணோட கிரிட்டிகல்லான டைம்ல அப்பாவோ அண்ணாவோ இருந்தா கூட அந்த மாதிரி நேரத்தில அவளுக்கு உதவி செய்ய யோசிப்பாங்க.
அவளை தொடகூட யோசிப்பாங்க ஏன்னா அவங்க டிரஸ்ஸும் ஸ்பாயில் ஆகும் அண்ட் மத்தவங்க மத்தியில கேலியாகும்னு ஆனா அவரு ஒரு முறை இல்ல ரெண்டு முறை அவ்ளோ ஃபேமஸ் பொஷிஷன்ல இருந்து கூட அவரு எந்தவிதமான அருவருப்பும் காட்டாம என்னை குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டாரு. அந்த ஒரு செயல் போதும் காலம் முழுக்க அவர பார்த்தே வாழுறதுக்கு.

எனக்கு தெரியும் அவருக்கு லேங்குவேஜ் ப்ராப்ளம் அதனால அவருக்கு என் பேச்சு செயல் நடிப்பு போல தெரிஞ்சு இருக்கலாம். ஏற்கனவே சூடுபட்ட பூனை திரும்ப பாலை நம்பி குடிக்க யோசிக்கும்.
அந்த மாதிரியான சூழ்நிலையில தான் அவரும் அப்போ இருந்தாரு. இதெல்லாம் எனக்கு பெரிய தப்பாலாம் தெரியல மெடில்டா
ஆனா அந்த நேரம் என் மனசு உடம்புனு ரொம்ப காயப்பட்டுட்டேன் அதை அங்கேயே இருந்து நான் குத்தி கிழிச்சு இன்னும் இன்னும் பெருசு படுத்திக்கவும் விரும்பல அவரை குற்ற உணர்ச்சில தள்ளவும் விரும்பல அதனால தான் நான் யாருக்கும் தெரியாம இங்கே வந்துட்டேன்.
ஆனால் நான் இங்கே இருக்கேன்னு தெரியவந்துடும் சீக்கிரமே” என்று அவள் நீளமாக பேச அதை கேட்ட மெடில்டா

“அப்போ வந்து உன்கிட்ட மன்னிப்பு கேட்பாரு தானே?” என்று கூற லேசாக சிரித்தவள்.

“வரமாட்டாரு” என்று கூற அதிர்ந்த மெடில்டா

“வாட் வரமாட்டாரா? ஈகோவா?” என்று கேட்க
“என்கிட்ட மட்டும் அவர் ஈகோ பார்த்ததே இல்ல மெடில்டா.
அவருக்கு கன்டிப்பா புரியும் நான்
எல்லாத்தையும் விட்டுட்டு வந்து இங்கே இருக்கேன்னா அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்னு.
அதனால அவர் என்னை தேடிவந்து தொல்லை பண்ண மாட்டார் நானா அவர்கிட்ட போற வரை வெயிட் பண்ணுவார்” என்று சொன்னாள் திடமாக.

“அவ்ளோ நம்பிக்கையா அவர்மேல? சப்போஸ் நீ போகலைனா? இல்ல அவரே வந்துட்டா?” என்று
கேட்க.
“நாங்க ரெண்டு பேரும் லவ்வ சொல்லிக்கல. ஆனால் எங்களுக்குள்ள இருக்க லவ் மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. அவர்மேல அதிகமாவே இருக்கு.
எல்லாரும் என்னை சுத்தி இருந்தாலும் என் மனசு அவரைத்தான் தேடும். அவர் மனசு என்னைத்தான் தேடும். நீ கிருஷ்ணா கதை கேட்டது இல்லையா? அவர் லவ் மண்ணது இராதையை ஆனால் கல்யாணம் பண்ணது ருக்மணியை.

ஆனால் ருக்மணியோட காதல் யாருக்குமே தெரியாது இராதையோட காதல் எல்லாருக்கும் தெரியும்.
அவரோட மேதாவும் நான்தான் மீராவும் நான்தான் அதை புரிஞ்சவங்களால தான் எங்க காதலை உணரவும் முடியும்” என்றுவிட்டு அவள் செல்ல பார்க்க அவளை தடுத்தவள்

“மேதா யார் மீரா?” என்று அவள் கேட்க.
“நான்தான்” என்றாள்.
“இது என்ன புது சப்ஜெக்ட்?” என்று அவள் கேட்க.
“பழைய சப்ஜெக்ட்தான் அவர் கூட நான் ஜப்பான்ல இருந்தப்போ நான் அவருக்கு மீரா. அவரோட கஷ்டகாலத்தில நான் அப்பாவ ஸ்பான்சரா அவருக்கு ஏற்பாடு பண்ணப்போ என்னோட பேரை மீரானு தான் சொல்லி அறிமுகமாகி இருந்தேன்” என்று கூற

“உங்க ரெண்டு பேருக்கும் அப்படி என்னதான் இருக்கு? புரியுற மாதிரி சொல்லு மேதா” என்று புரியாமல் கேட்டாள் மெடில்டா.
“ உனக்கு எங்களோட பர்ஸ்ட் மீட்ல இருந்து சொன்னாதான் எங்க ரெண்டு பேரோட லவ் புரியும்.
சொல்றேன் அதுக்கு முன்ன அவர் நான்தான் அவர் த” என்றபடி சொல்ல துவங்கினாள்.

😍😍😍ஹாய் ஒரு சகோதரி கதையை நீக்கவேண்டாம்னு கேட்டு கமெண்ட் செய்து இருந்தாங்க அதனால அவங்க விஷ்க்காக நான் கதையை இப்படியே கன்டினியூ பன்றேன்💜💜. படிச்சுட்டு நிறைகுறைகளை சொல்லுங்க சகோஸ்💜💜❤️❤️

4 thoughts on “வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 71”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *