Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 10

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 10

அத்தியாயம் -10
அன்றைய தினம் அவனுடனே இருந்ததால் ரியோட்டோவால் நிதினின் அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை..
அதனால் ஃபோன் செய்து சொல்லிவிட நிதினும்
“பரவாயில்லை இப்போ நீங்க அவர்கூட இருக்குறதுதான் நல்லது” என்றுவிட்டு வைத்துவிட்டான்..
சிறிது நேரம் மனம் வருந்தியவன் அப்போது தான் யோசிக்க தொடங்கினான்.. சரியாக ஷூட்டிங் சமயத்தில் ரியோட்டோ ஏன் அப்படி சொல்லி என் கவனத்தை ஷூட்டிங்கில் பதிய வைத்தான் என்று யோசிக்க..சட்டென்று பொரி தட்ட ஹர்ஷத்தை பார்த்தவன்..
“ஹவ் யூ க்நோ அபெளட் மீ ஹர்ஷத்?(உனக்கு எப்படி என்னை பத்தி தெரியும் ஹர்ஷத்)” என்று கேட்க.. ஹர்ஷத் கூலாக
“பிஃபோர் ஐ அப்பாயிண்டட் யுவர் பர்சனல் மேனேஜர் ஆல் டீடெயில்ஸ் ஐ க்நோ சார் (உங்ககிட்ட வேலைக்கு சேரும் முன்னமே உங்கள பத்தி தெரியும் சார்)” என்று கூற..யோசனையாய் பார்த்தவன்
“சோ.. யூ க்நோ வேர் ஈஸ் ஷீ..ஆம் ஐ ரைட்(அப்போ உனக்கு அவ எங்க இருக்கான்னு தெரியும்..நான் சொல்றது சரிதானே)?” என்று அவனை கூர்மையாக பார்த்து கேட்க..
“சீரியஸ்லி ஐ டோன்ட் க்நோ அபெளட் மேம் சார்..இஃப் ஐ க்நோ ஐ இன்ஃபார்ம் யூ சார்(நிஜமாகவே மேடம் பத்தி எனக்கு தெரியாது சார்..தெரிஞ்சா உங்ககிட்ட சொல்லி இருப்பேன் சார்)” என்று அவன் கூற..
“ஓகே ஆஸ்க் அப்பாயிண்ட்மெண்ட் வித் மிஸ்டர்.நிதின் இம்மீடியட்லி”(சரி உடனே நிதினை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கு) என்று கூற..
“எஸ் ஸார்” என்றவன் நிதினுக்கு ஃபோன் செய்ய அவன் மதியம்போல வருமாறு சொல்லிவிட அங்கேயே படுத்துவிட்டான் ஆராஷி..
“சார்.. இட்ஸ் கிரவுண்ட் சார்” என்று ஹர்ஷத் அவனை எழுப்ப முயல..
“ஐ க்நோ ஹர்ஷத்.. பட் இட்ஸ் எனாஃப் ஃபார் மீ..டோன்ட் டிஸ்டர்ப் அன்டில் ஐ கம்”(எனக்கு தெரியும் ஹர்ஷத்.. ஆனா எனக்கு இது போதும்..நானா வர்றவரைக்கும் தொந்தரவு செய்யாதீங்க) என்று விட அவனை விட்டு சற்று தூரம் தள்ளி நின்றனர் அனைவரும்..
ரியோட்டோ வும் சேர்த்து தூர நின்றான்..
அவனுக்கு அப்போது தேவை ஆறுதலே.. காலை ஃபோனில் பேசிய ஹர்ஷத் தன்னிடம் வந்து
“சார் இதை சார்கிட்ட சொல்ல சொன்னாங்க..யாரோ ஒருத்தர் அவங்க பார்த்துக்கிட்டேதான் இருக்காங்க.. அதை மனசுல வெச்சுட்டு நடிங்கனு சொல்ல சொன்னாங்க” என்று கூறியவனை ஆச்சர்யமாய் பார்த்தான் ரியோட்டோ..
அவள் ரியோட்டோவிடம் கூறிய வார்த்தைகள் தான்..
“அவருக்கு இந்த மாதிரியான வார்த்தைகள் தான் ஜெயிக்கனும்னு வெறிய கொடுக்கும் போராடனும்னு வெறிய கொடுக்கும்..” என்று அவள் கூறியது இன்னும் அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டேதான் இருந்தது..
உடனே தலையாட்டியவன் அதையே ஆராஷியிடம் கூற அவனுக்கு இது அவள் தன்னை பார்க்கின்ற உணர்வை கொடுக்க அடுத்த முறை நடித்துவிட்டான்..
“ஹர்ஷத்”
“சார்”
“காலையில உங்ககிட்ட ஃபோன்ல பேசினது யாரு?” என்று கேட்க அவனோ திருதிருவென முழிக்க ஆரம்பித்தான்..
“சார்..அது..அதுவந்து..” என்று இழுக்க..
“ஈஸ் ஷீ? மேதா?” என்று அவன் கேட்க..
“நோ சார்.. ஐ டிடின்ட் சீ ஹர் அண்ட் ஷீ டோன்ட் க்நோ மீ..தென் ஹவ் கேன் ஷீ டாக் ட்டூ மீ சார்..”( இல்ல சார்..நான் அவங்கள பார்த்தது இல்ல அப்புறம் அவங்களுக்கும் என்னை யாருனே தெரியாது..அப்புறம் எப்படி சார் அவங்க என்கிட்ட பேசுவாங்க) என்று ஹர்ஷத் கூற..
“தென் ஹூ டோல்ட் தட் லைன்ஸ்?” (அப்போ யார் அந்த வரியை சொன்னது) என்று அவன் விடாமல் கேட்க..
“நி…நிதின் சார்” என்று அவன் கூற..
ஒருவேளை அண்ணனிடம் எல்லாம் கூறி இருப்பாள் போல என்று நினைத்தவன்
“ஓஓ..” என்று விட்டு அமைதியாகிவிட அவனுக்கு அப்போது தான் மூச்சே வந்தது..
அங்கே படுத்திருந்தவன் அருகில் சென்று படுத்துக்கொண்டது அவனது செல்ல நாய் ஜிம்மி..
அதனை வருடியவன்..
“உன்னை போல அவளும் என்கிட்ட வந்துட்டா திரும்ப போகவே விடமாட்டேன்.. கண்ணுகுள்ள வெச்சு பார்த்துப்பேன்” என்றுவிட்டு எழுந்தவன் ஒரு பெருமூச்சை விட்டு எழுந்து ஃபார்மல் உடைக்கு மாறியவன் கிளம்பினான் நிதினை சந்திக்க.. போகும்வழியில் பாதுகாப்பு அதிகமாக இருப்பதை உணர்ந்தவன் இதை பற்றியும் நிதினிடம் பேச வேண்டும் என்று குறித்துக்கொண்டான்..
சரியாக நிதின் அப்பாயிண்மெண்ட் கொடுத்த நேரத்திற்கு அங்கு சென்றவர்களுக்கு உணவும் வந்து சேர்ந்தது.. நிதினின் செக்ரெட்டரி வந்து..
“சார் உங்களுக்கும் சேர்த்து தான் லன்ச் சொல்லி இருக்காரு அவர்கூட லன்ச் ஷேர் பண்ணிக்க கூப்பிட்டாரு சார்” என்று கூற ஹர்ஷத் அதை மொழிபெயர்க்க தலையாட்டியவன் அமைதியாக நடந்தான் அவனுடன் ரியோட்டோவும் ஹர்ஷத்தும் நடக்க பாடிகார்ட்ஸ் வெளியவே நின்றனர்..அவர்கள் அருகில் வந்தவன் அவர்களை உண்ண செல்லுமாறு கூறிவிட்டே வந்தான்
நேரே டைனிங் ஹால்க்கு அழைத்து செல்லப்பட்டனர் மூவரும் அவர்கள் அந்த அறைவாசலில் வரும் நேரம் லிப்ட் கதவு திறக்க அதிலிருந்து வந்தான் நிதின்..
வந்தவன் அவர்களை வரவேற்று டைனிங் ரூமிற்குள் அழைத்து சென்றான்..
அங்கிருந்த புகைப்படங்களை பார்த்தவன் அப்படியே நின்றுவிட்டான்..சிறு வயது முதல் தற்போது வரை மேதா தேஜு நிதின் என அனைவரும் எடுத்த புகைப்படங்கள் அழகாக பொருத்தி வைக்கப்பட்டு இருந்தன..
“இது வீட்டு ஆளுங்க மட்டுமே சாப்பிடுற டைனிங் ஹால் அதான் எங்க இஷ்டப்படி பிக்ஸ் அரேஞ்ச் பண்ணி இருக்கோம்.. நீங்க இந்த வீட்டு மாப்பிள்ளை அவரு உங்க தம்பி அதான் இங்கேயே சாப்பிட கூட்டிட்டு வந்தேன்..உங்களுக்கு எதும் சிரமம் இல்லையே?” என்று நிதின் கேட்க ஹர்ஷத் டிரான்ஸ்லேட் செய்ய
“தேங்க்ஸ் ஃபார் திஸ் மச் ஆஃப் அட்டாச் வித் அஸ்( இந்த அளவுக்கு எங்களோட ஒத்துமையா ஆனதுக்கு நன்றி)” என்றான் ரியோட்டோ..
உணவு பரிமாறப்பட அனைத்தும் ஆராஷிக்கு பிடித்த உணவு வகைகள் அதை கண்டவனுக்கு உள்ளம் நெகிழ்ந்து போனது..கூடவே அவனது சந்தேகமும் வலுத்தது..
“நல்லா சாப்பிடுங்க ஆராஷி.. என்னதான் உங்க மேல கோவம் இருந்தாலும் நீங்க எங்களோட வேர்ல்ட் வைட் ப்ராண்ட் அம்பாசிடர்.. உங்க ஹெல்த் ரொம்ப முக்கியம் எங்களுக்கு.. ரொம்ப இளைச்சு போன மாதிரி இருக்கீங்க” என்றான் நிதின் அதை கேட்ட ரியோட்டோ வாய்க்குள் சிரித்துக்கொண்டான்..
ஹர்ஷத் மொழிபெயர்த்ததை கேட்ட ஆராஷிக்கு அவ்வளவுதானா? என்று ஆகிவிட்டது..
ஒரு வலி நிறைந்த புன்னகையை உதிர்த்தவன் அமைதியாக உண்ண மற்றவர்களும் உண்டனர்..
அவர்கள் உண்டு முடித்ததும் பக்கத்து அறைக்கு செல்ல அங்கே சிறிது நேரம் ஓய்வெடுக்க சொன்னான் நிதின் ஆனால் வேண்டாம் என்று இருவருமே மறுத்து விட..
“சரி என்ன விஷயமா என்னை மீட் பண்ண கேட்டீங்க?” என்று ஆராஷியை பார்த்து கேட்க..
“எப்போ உங்களுக்கு ஃபோன் பண்ணா அஷு?” என்று கேட்டான் ஆராஷி.. அதை ஹர்ஷத் மொழிபெயர்க்க கேட்ட நிதினுக்கு அதிர்ச்சியாகி போனது..
‘அவ பேசினது இவனுக்கு எப்படி தெரியும்?’ என்று அவன் யோசிக்க..
“எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு நடக்குது இன்னைக்கு.. வீட்டு மாப்பிள்ளைக்கு பிடிச்சதை சமைக்காம மாப்பிள்ளையோட தம்பிக்கு பிடிச்சத சமைச்சு இருக்கீங்க..செக்யூரிட்டி ரொம்ப டைட் பண்ணி இருக்கீங்க..எனக்கு ஷேடோலாம் ஏற்பாடு பண்ணி இருக்கீங்க? அண்ட் இன்னைக்கு என்னோட ஷூட் பார்க்க வேற வந்தீங்க?” என்று அவன் அடுக்க அதிர்ச்சியானான் நிதின்..
‘இவன் எதையும் கவனிச்சு இருக்கமாட்டான்னு நினைச்சா..பயபுள்ள எல்லாத்தையும் நோட் பண்ணி இருக்கே’ என்று மனதில் புலம்பியவன்..
“சீ..மிஸ்டர்.ஆராஷி.. எனக்கு யாரும் ஃபோன்லாம் பண்ணல.. எனக்கு தோணுனதால இதெல்லாம் நான் செய்ய சொன்னேன்..ஏன்னா நீங்க எங்க கம்பெனியோட ப்ராண்ட் அம்பாசிடர்.. அவரு மருமகன் அதுக்காகதான்” என்று நிதின் கூற..
அமைதியாக கேட்டவன் ஒரு விதமான பார்வையை நிதின்மேல் வீச அவனது கண்ணை பார்க்கமுடியாமல் ரியோட்டோவை பார்த்தவன்..
சட்டென..
“ஆமா சார் நேத்துதான் இவரு எங்கவீட்டு மாப்பிள்ளைனு தெரியவந்தது.. அப்போ மாப்பிள்ளைய பாதுகாக்கிற பொறுப்பு எனக்கு இருக்குல அதான் எல்லா ஏற்பாடும்” என்று கூற ஒருவகையில் அதற்கும் சேர்த்து தான் அவன் அந்த ஏற்பாட்டையெல்லாம் செய்திருந்தான்.. ஆனால் சாப்பாடு விஷயத்தில் மாட்டிக்கொண்டான்..
“ஓஓ.ஐ சீ..அப்போ ஷூட் பார்க்க ஏன் யாருக்கும் தெரியாம வந்தீங்க?” என்று கேட்க..
‘மேதா மா இப்படி மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கறியே?’ என்று மனதில் புலம்பியவன் ஆராஷியின் கூர் பார்வை தன்மேல் இன்னும் இருப்பதை உணர்ந்து..
“உங்கள எதைவெச்சு எங்க அப்பா ப்ராண்ட் அம்பாசிடரா செலெக்ட் பண்ணாருனு தெரிஞ்சுக்கதான்..” என்று கூற அவன் புரியாமல் பார்த்தான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *