Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 72

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 72

அத்தியாயம் – 72

அருந்ததி அப்படி கேட்க
லேசாக சிரித்தவன்.

“எனக்கு நான் இங்க இருந்து போனதுக்கு அப்புறம்தான் நான் தேடின மலையாள பொண்ணு தேஜு அண்ணி இல்லனும் அது மேதா தான்னும் தெரியவந்தது. சரத்ஶ்ரீ சர்க்கு ரெண்டு பொண்ணுங்கனும் தெரியும்.
அதும் இல்லாம அஷ்ஷூ தான் சரத் ஶ்ரீ சர்ரோட இரண்டாவது பொண்ணும்னு தெரியும்.
நான் தேடின மீரா தான் மேதானும் தெரியும்” என்று ஒரு புதிரை போட்டான் ஆரா.

“சுத்தம் நார்மலாவே நீங்க பேசுறது புரியாது இதுல ஏதோ தங்கமலை ரகசியம் மாதிரி சொன்னா புரியவா போகுது. நீங்க ஃப்ளோவா சொல்லுங்க நாங்க பிக்அப் பண்ணிக்கிறோம்” என்றாள் அருந்ததி அதை கேட்ட அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது ஆராஷிக்கும் அவளது பேச்சு சிரிப்பை வரவைக்க அவன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் சொல்ல துவங்கினான்.

ஏற்கனவே குற்ற உணர்ச்சியின் பிடியில் அவன் இருந்ததால் அவனால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. வெகேஷன் முடியும் முன்னமே அவன் திரும்பி இருந்ததால் அவன் செய்ய வேண்டிய வேலைகளும் அடுத்த இர வாரத்திற்கு பின் தான் என்பதாலும் அவனுக்கு தனிமை வேண்டும் என்று அவனே கேட்டதாலும் அவனை தனியே விட்டனர்.
ஜிம்மியை மட்டும் அவனோடு வைத்துக்கொண்டு இருந்தான்.
அவனது தந்தையும் அவனிடம் எதுவும் பேசவில்லை அவரை பார்த்தாலே அவன் மீண்டும் கோவமாகவே சென்றான்.
அதனால் அவரும் அவன் மனசு மாறட்டும் என்று விட்டார்.

ஆனாலும் அவனை தனியே விட மனசு இல்லாமல் அவனை எதையும் யோசிக்க விடாமல் அவனிடம் பேசிக்கொண்டே இருந்தான் ரியோட்டோ.
அன்றைய தினம் மேனேஜர் சொன்னதால் மெயிலை செக் செய்ய அமர்ந்தான்.
அருந்ததியின் மெயிலை ஓபன் செய்தவன் பார்த்தது எல்லாம் அந்த ஆறு மாதங்களில் மேதாவை மாடலாக்கி இவனுடன் எடுத்த வீடியோ எடிட்டும் புகைப்படங்களும்தான்.
அதில் அன்று கேமிராமேன் இவன் கேரவனில் இருந்து மேதா கீழே விழப்போகும் நேரம் எடுத்த புகைப்படமும் இருந்தது அதில் மேதாவை அத்தனை நெருக்கமாக ஆராஷி பார்க்க மேதாவோ தவிப்பாய் அவனை பார்க்க காதலாக இருந்தது.
அதை பார்த்தவனுக்கு மேதாவை பார்க்க பார்க்க இதயம் வலித்தது.
‘இவளா நடிக்க வந்தவள்? இவளையா நாம் தவறாக எண்ணி இருந்தோம்? நிதினையும் அவளையும் தவறாக எண்ணி அவளது காதலனுடன் பேசுவதை தவறாக எண்ணி அவளது நடத்தையை சந்தேகித்து, அண்ணன் சொன்ன மாதிரி ஏன் நான் யோசிக்காமல் போனேன்? ஆனால் நான் கேட்டது?’ ஐயோ என்று மண்டையை பிடித்துக்கொண்டு கம்ப்யூட்டர் மேஜையிலேயே சாய்ந்து படுத்தபடி அவளது புகைப்படத்தை தான் பார்த்தபடி இருந்தான்.
அவனுக்கு பின்னாக பெட் மேல் படுத்தபடி ஜிம்மியும் அவளது புகைப்படத்தை தான் பார்த்தபடி தலையை சாய்த்து படுத்து இருந்தாள்.

கொஞ்ச நாட்களாக ரியோட்டோவிற்கு வேறு ஒரு எண்ணமும் தோன்றி கொண்டே இருந்தது.
மீராவை தேடியபடி இருந்த ஆரா இப்போது அவளை பற்றி யோசிக்காமல் அவனது பி.ஏ வான மேதாவை பற்றியே யோசித்துக்கொண்டு இருப்பதுதான். ஒரு வேளை குற்ற உணர்ச்சியால் இப்படி இருக்கிறானோ என்று எண்ணியபடி இருந்த ரியோட்டோவிற்கு
அன்றைய தினம் அதற்கும் தீர்வு கிடைத்தது.
ஏதோ தோன்ற அன்று டிடெக்டிவ் க்கு ஃபோன் செய்து ஆராஷி இதுவரை தேடிக்கொண்டு இருந்த மீராவை பற்றி கேட்க அவரோ வேறு அவசர வேலையில் இருந்ததால்
அந்த பெண் கிடைத்துவிட்டார் ஆராஷி சர்க்கு ஏற்கனவே சொல்லியாயிற்று என்று மட்டுமே சொல்லி வைத்துவிட்டார்.
இதை கேட்ட ரியோட்டோவிற்கு சந்தோஷமாக இருந்தது.
இனி அவளை வைத்து இவனை சரி செய்து விடலாம் என்று நினைத்தபடி ஆராஷியின் அறையை நோக்கி போனான்.
கதவை தட்டாமலே திறந்து நேராக ஆராஷியை அழைத்தபடி வந்தவன் பார்த்தது ஆராஷியின் கம்ப்யூட்டர் திரையில் இருவரும் இருந்த காட்சியைதான்.
அதை பார்த்த ஆனந்தத்தில் இருவரும் இணைந்துவிட்டனர் என எண்ணிய ரியோட்டோ
“ஹேய் ஆரா ஜிம்மியோட ஓனரை கண்டுபிடிச்சுட்டியா? உங்க ரெண்டு பேரையும் இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குடா ஆரா” என்று அவனை அப்படியே கட்டிக்கொள்ள நினைவு வந்தவனாக நிமிர்ந்த ஆரா புரியாமல்
“என்ன அண்ணா சொல்றீங்க?” என்று கேட்க

“ஐயம் வெரி ஹாப்பி ஆரா” என்று ரியோட்டோ பேச அவனை புரியாமல் பார்த்த ஆரா.

“அவளுக்குத்தான் கல்யாணம் ஆகி ஒரு பேபி இருக்கே” என்று கூற அவ்வளவு நேரம் சிரித்த ரியோட்டோ சிரிப்பு மறைந்து கம்ப்யூட்டர் திரையையும் ஆராவையும் மாறி மாறி பார்த்தவன்
“என்ன ஆரா சொல்ற நீ? அப்புறம் எப்படி நீ மீரா கூட இவ்ளோ க்ளோஸா?” என்று திரையில் இருவரின் நெருக்கத்தை காட்டி அவன் கேட்க. சோகமாக அவனை பார்த்த ஆரா
“உங்களுக்கு அவளை பார்த்து ரொம்ப நாள் ஆனதால அவ முகம் கூட மறந்து போச்சா? உங்களுக்கு இவள காட்டாதது தப்பா போச்சு இவ மேதா என்னோட பி.ஏ” என்றான் ஆரா அவனுக்கு விளங்கும்படி

அதிர்ந்து அவனை பார்த்த ரியோட்டோ
“ஆரா இவ இவ தான்டா மீரா மேதா இல்ல இவ கூட நல்லா பழகி இருக்குற எனக்கு தெரியாதா அவ முகம்? அவளை போய் நான் மறப்பேனா? இவதான்டா மீரா.
நீ தேடிட்டு இருந்த மலையாள பொண்ணு நம்ம சரத்ஶ்ரீ சர்ரோட பொண்ணு உன்னோட ஸ்பான்சர்” என்று கூறிக்கொண்டே போக ஆடிப்போன ஆராஅவனை பிடித்து உலுக்கியபடி.

“அ…அண்ணா என்ன சொல்றீங்க இ…இ…இவதான் மீராவா?” என்று கேட்க அவனது பேச்சில் ஏதோ உள்ளது என்று உணர்ந்த ரியோட்டோ

“ஆமா ஆரா இவதான் மீரா. ஆனா நீ மேதானு சொல்ற அவ எப்படி உனக்கு பி.ஏ வா?” என்று யோசித்தவன் வட்டத்தில் ஜிம்மி விழுந்தாள். உடனே
“இவதான் ஜிம்மியோட ஓனர்.
ஜிம்மி கம் ஹியர்” என்று ஜிம்மியை அழைக்க எழுந்து அவன் அருகில் வந்த ஜிம்மி அவனை பார்த்து வாலை ஆட்ட
அவளை தூக்கியபடி அருகில் இருந்த சேரில் அமர்ந்த ரியோட்டோ தன் மடியில் அவளை நிறுத்தி.

“ஜிம்மி ஷோ யுவர் மாம்” என்று கேட்க ஒரே எட்டில் டேபிள்மேல் ஏறிய ஜிம்மி மேதாவின் புகைபடத்தை முட்டி குரைக்க அதிர்ந்து எழுந்தான் ஆரா.

“அ…அண்ணா இ… இவ மேதா இவ ஒன்னும் வசதியானவலாம் இல்ல” என்று அதிர்ச்சி மாறாமல் அவன் கூற ஏதோ யோசித்தவன்.

“ஆரா…ஆரா மீரா இங்கே இருக்கும்போது அவ எனக்கு ப்ராமிஸ் பண்ணாடா நீ இந்தியா வந்தா உன்னை நல்லா கவனிச்சு உன்னோட சித்தி கிட்ட இருந்து அவ உன்னை காப்பாத்துவேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணினா” என்று கூற
அவனது பதில் இடியென இறங்கியது ஆராவிற்கு.
உடனே தன் மொபைலை அவசரமாக எடுத்து சாஹித்யன் நம்பருக்கு ட்ரை செய்தான்.

மறுமுனையில் எடுத்தவன் கோவமாக ஹலோ சொல்ல ஆராஷியோ
“மிஸ்டர் சாஹித்யன் ப்ளீஸ் ஐ நீட் ஒன் எமர்ஜென்சி இன்ஃபர்மேஷன் டோண்ட் கட் கால்”(மிஸ்டர்.சாஹித்யன் ப்ளீஸ் எனக்கு அவசரமான ஒரு விஷயம் தெரியனும்) என்று பேச மறுமுனையில் அவனது பதட்டமான பேச்சிலும் எமர்ஜென்சி என்று சொன்னதிலும் கோவத்தை விடுத்த சாஹித்யன்

“சொல்லுங்க சர் என்ன எமர்ஜென்சி இன்ஃபர்மேஷன்?” என்று வினவ.

“சரத்ஶ்ரீ சர்க்கு எத்தனை பொண்ணுங்க?” என்று கேட்க இவன் என்ன பையித்தியமா என்பது போல மொபைலை பார்த்தவன்

“ஏன் சர் இதுகூட தெரியாதா உங்களுக்கு? ரெண்டு பேர் அன்னைக்கு பார்ட்டியில பார்த்தீங்களே தேஜூஶ்ரீ அவங்க சரத்ஶ்ரீ சர்ரோட பர்ஸ்ட் டாட்டர்” என்று கூற அதிர்ந்த ஆரா.

“அப்போ செகெண்ட் ஒன்?” என்று கேட்க.
இவனிடம் எதற்காக மேதா தான் என கூற வேண்டும் இவன்தானே அவளை கண்காணாமல் ஓட காரணம் என்று யோசித்தவன்
“ஷி ஈஸ் இன் ஃபாரின் கண்ட்ரி சர் ஐ ஹாவ் ஒன் இம்ப்பார்டண்ட் மீட்டிங் சர்” என்று விட்டு அவனது பதிலைகூட எதிர்பார்க்காமல் கட் செய்திருந்தான்.
“நோ நோ சாஹித்யன் ஐ நீட் ட்டூ க்நோ ஹர் நேம்” என்று அவன் கத்தியது அவனுக்கு கேட்டால்தானே.
மொபைலை எடுத்து பார்த்தவன் அது கட் ஆகி இருந்தது.

தளர்ந்து அமர்ந்த ஆரா ஏதோ யோசனை தோன்ற உடனடியாக அந்த டிடெக்டிவ்க்கு ஃபோன் செய்தான்.
மறுமுனையில் எடுத்த டிடெக்டிவ்
“சர் ஒரு மீட்டிங் சர் கொஞ்ச நேரம் கழிச்சு பேசவா?” என்று கேட்க
“வாட் த ஹெல் ஆர் யூ டூயிங் இடியட்? அடுத்த பத்து நிமிஷத்துல நீ இங்க இருக்கனும் இல்ல உன்ன என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று கோவமாக கத்தியவன் குரலில் எதிர் முனையில் இருந்தவனுக்கு தூக்கிவாரி போட்டது.
இதுக்கு மேல மீட்டிங்காவது மண்ணாவது என்று எடுத்தானே ஓட்டம் ஆராஷியின் வீட்டை நோக்கி.

4 thoughts on “வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 72”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *