அத்தியாயம் – 74
மீராவிடம் யோசனை போக ச்சே அவள்கிட்ட நம்ம கதையை சொன்னோமே அவளுக்காவது நான் எங்க கல்யாண ஃபோட்டோ காட்டி இருக்கலாம் அப்பவே கண்டுபிடிச்சு இந்நேரம் தேஜுவோட மன்னிப்பையாச்சும் கேட்டு இருப்பேன். எவ்ளோ பெரிய பாவி நான்
எனக்குலாம் பாவமன்னிப்பே இல்லையா?
எங்கேயோ இருந்த நான் இங்கே வந்து ஏன் சேரணும்? ஏன் ஆராக்கு அண்ணனனா ஆகணும்? ஏன் இப்படி அண்ணன் தம்பி ரெண்டு பேரும் அக்கா தங்கையை ஒரே மாதிரி வதைக்கனும்? இதெல்லாம் விதியோட விளையாட்டா? இல்ல குடும்பமா குற்ற உணர்ச்சியில தத்தளிக்கவா?
ஏன்? ஏன்? ஏன்? மண்டை வெடித்துவிடும் அளவிற்கு அவனுக்குள் ஆயிரம் கேள்விகள்
எப்படி அவனை தேற்றிக்கொள்ள போகிறான் எப்படி ஆராவை தேற்றுவான்.
இப்போது தான் என்ன செய்வது? ஆராஷியின் காதல் முடிந்துபோனது என விட்டுவிட வேண்டுமா? இல்லை தான் செய்த அதே தவறை அவனையும் செய்ய விடாமல் காத்து மீராவுடன் அவளை சேர்த்து வைக்க வேண்டுமா? அப்படி நடந்தால் அவன் தேஜுவின் முகத்தில் முழிக்க வேண்டி வருமே? அவளை எப்படி எதிர்கொள்வான்? இப்படியெல்லாம் யோசித்து யோசித்து அவனுக்கு உலகமே இருண்டுவிடும் போலானது. ஒரு குடியால் அதன் சதியால்தன் வாழ்க்கையை இழந்தவன் இன்று மனது அழுத்த மீண்டும் அந்த மதுவை நாடினான்.
இத்தனை வருடம் குடிக்காதவன் இன்று குடித்தான். மனதில் எரியும் எரிமலையை மதுவை கொண்டு அணைக்க நினைத்தால் அது அணைந்து விடுமா?

காலம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சோதனைகளை
வைத்து விட்டு அதன் போக்கில் நகர்ந்தது.
இங்கு ஆராவோ தான் தனியாக இருக்கவேண்டும் என்று கூறியதால் அவனது தந்தையும் வெளியே சென்று விட தனிமையில் இருந்த ஆராவிற்கோ மனது ரணமாய் வலித்தது.
‘எல்லா சூழ்நிலையிலும் அவனை காத்தவளுக்கு தான் செய்தது வெறும் பாவம் மட்டுமே.
இன்னும் கொஞ்சம் சிரமமாக தேடி இருந்தால் இப்போது தெரிந்த விஷயங்கள் அப்போதே தெரிந்து இருக்குமே? இந்த வீணாப்போன டிடெக்டிவ்வை நம்பி உண்மையை கண்டறியாமல் அவளை எப்படியெல்லாம் வதைத்து விட்டோம்? இந்த பாவத்திற்குலாம் நான் எங்கு சென்று பரிகாரம் தேடுவேன் என்ன செய்து மேதாவின் மன்னிப்பை வேண்டுவேன்.
என் காதல் பொய்யாய் போனதா? என்னால் ஏன் அவளை உணரமுடியவில்லை?
மீராவும் மேதாவும் ஒன்றுதான் என்று ஏன் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை?
ஆனால் மேதாவிடம் மட்டுமே எனக்கு ஒரு ஈர்ப்பு வந்ததே அது எதனால் அவள்தான் மீரா என்று என் உள்மனதுக்கு தெரிந்து இருந்ததோ? அதனால்தான் அவளை மட்டும் உரிமையாய் தொட்டு உரிமையாய் அவளை முத்தமிட்டேனோ? நான்தான் அதை உணராமல் போனேனோ?’ என்று எண்ணி எண்ணி வருந்தியவனை வந்து உரசினாள் ஜிம்மி.
அதில் நினைவு வந்தவன் அவளை அணைத்தபடி
“உனக்கு கூட அவளை தெரிஞ்சு இருக்கு அதான் என்னைகூட உதாசீனம் பண்ணிட்டு அவகிட்டவே போனியா? நான் தான் அதையெல்லாம் கண்டுபிடிக்காம பொறாமையில கோவம் வளர்த்து அவளை வதைச்சுட்டேனா? எனக்கு அவகிட்ட இருந்து மன்னிப்பே கிடைக்காதா ஜிம்மிமா?
உன் அம்மா என்னை மன்னிக்கவே மாட்டாளா?” என்றபடி கலங்கிய கண்களோடு அவளை பார்க்க என்ன நினைத்தாளோ தெரியவில்லை அவனது முகத்தை நக்கி முத்தமிட்டாள் அவனது ஜிம்மி.
அவளை அப்படியே அணைத்துக்கொண்டவன் கலங்கிபோய் இருந்தான்.
அவனிடமிருந்து விலகிய ஜிம்மி அவனுக்கு பக்கத்தில் சென்று படுத்துக்கொண்டது.
அவளது அருகிலேயே தரையில் படுத்தவன் பார்வை இலக்கில்லாமல் இருந்தது. அதில் அவளுக்கான ஒரு தேடலும் இருந்தது.
இதையெல்லாம் எப்படி சரிசெய்ய போகிறேன் என்று எண்ணியபடி அவனது கடந்தகாலத்துக்கு சென்றது அவனது எண்ணங்கள்.
அவனது பதினேழாம் வயதில் அவன் ஒரு இந்திய பெண்ணுக்கு உதவினான் என்று அவனது தாயிடம் கூற அவரும் “நல்லது செஞ்ச ராஷி பெண்ணுங்களை எப்பவும் நீ நல்லபடியா நடத்த பழகணும்”
என்று கூறியவருக்கு தெரியவில்லை அவன் விரைவிலேயே பெண்கள் என்றால் தீயாய் சுடுவான் என்று.
அன்று அவன் உதவியதை தந்தையிடம் கூறிய மேதா “அவருக்கு ஒரு தேங்கஸ்கூட சொல்லாம வந்துட்டேன்ப்பா” என்று வருந்த
“அப்பா விசாரிக்க சொல்றேன்மா. கிடைச்சதும் நன்றி சொல்லலாம்” என்று கூற அவளும் அமைதி ஆனாள்.
அன்று அவளை தனியாக அனுப்பியது தான் அதன் பின்னர் சரத்ஶ்ரீ அவளை எங்கும் தனியே அனுப்புவதில்லை.
அவளும் பயத்தில் எங்கும் தனியே செல்வதுமில்லை.
அவளை கண்ட பின் அவனுக்கும் அவளை திரும்ப பார்க்க வேண்டும் போல் இருந்தது ஆனால் தனது குடும்பத்தில் நடந்த குளறுபடிகளால் அவனால் அதன்பின் அந்த பெண்ணை பார்க்கவே முடியவில்லை.
அன்று அப்பாவும் மகளுமாக ஊரை சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அவர்கள் இருவரும் பார்த்தது ரோட்டில் ஒரு பெண்மணி தள்ளாடி நடக்க அவருக்கு ஏதோ ஆபத்து என்பது போல அவர் ஓட எங்கிருந்தோ வந்த ஒரு லாரி அவரை மோதி கீழே தள்ளிவிட்டு வேகமாக சென்று விட்டது.
அதை கண்டதும் கார்ட்ஸ் இவர்களை பாதுகாக்க ஓடி வர அவரை கண்டு அதிர்ந்த மேதா அவரது அருகில் ஓடி சென்று “அம்மா அம்மா” என்று அலறியபடி அவரை மடிதாங்கினாள்.
அவரோ இரத்தம் வழிய அவளை பார்த்து எதுவும் பேச முடியாது மயக்கநிலையிலும் “ராஷி” என்றுதான் முனுமுனுத்தார்.
அழுகையாக வந்தது மேதாவிற்கு தன் தந்தையை பார்த்து “அப்பா அப்பா ஹெல்ப் பண்ணுங்க இவங்ககிட்ட பேசுங்க. ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் பண்ணுங்க” என்று கதற அவரும் உடனடியாக செயல்பட்டு ஆம்புலன்ஸ் க்கு ஃபோன் செய்தார்.
உடனே அங்கே வந்த ஆம்புலன்ஸ்ஸில் அவரை ஏற்ற அவரோ மேதாவின் கையை விடாமல் பற்றி இருந்தார்.
சரத்ஶ்ரீ அவளது கையை பிரிக்க முயல தடுத்த மேதாவோ
“நாமளும் போகலாம்பா அவங்களோட ப்ளீஸ் எனக்கு அவங்ககூட இருக்கனும் போல இருக்கு” என்று அவள் கூற சரி என்றபடி தாமதிக்காமல் அவளையும் ஆம்புலன்ஸ்ஸில் ஏற்றியவர் தானும் ஏறினார்.
உடனே அவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு அவரது கன்னத்தில் நர்ஸ் தட்ட விழித்தவர்.
மேதாவையும் அவளது தந்தையையும் பார்த்து
“என் மகன் ராஷி.. ஆராஷி அவனை கா..காப்பாத்துங்க.
என் ஹஸ்பண்டோட எக்ஸ் லவ்வர் தான் என்னை கொ… கொல்ல சதி செஞ்சா… அவகிட்ட இருந்து என் என் மகனை காப்பாத்துங்க ப்ளீஸ் ப்ளீஸ் அவனோட லைஃப்” என்றபடி நர்ஸ் பார்க்காத நேரம் மேதாவின் கையில் ஒரு பேப்பரை தந்தவர் தன் கடைசி மூச்சை விட்டிருந்தார்.
அவரை சோதித்த நர்ஸ்ஸும் டாக்டரும் அவர் இறந்துவிட்டார் என்று கூறிவிட
அந்த பேப்பரில் இருந்த ஒரு குட்டி புகைப்படமும் அவர் எழுதி இருந்ததும் புரியாமல் அவள அழுதபடியே தந்தையை பார்க்க அவர் அந்த கடிதத்தை வாங்கி படித்து பார்த்தவர் அதிர்ந்தார். ஆனால் அதை முகத்தில் காட்டாமல் அமைதியாக இருந்தார்.
இது பெரிய விஷயம் என்பதால்
இதை வேறு விதமாக தான் டீல் செய்யவேண்டும் என்று எண்ணியவர் அவளது கையிலிருந்த புகைப்படத்தை கேட்டார் அதை பார்த்தவள் அழுகையோடே “அப்பா இ… இவரு இவரு” என்று இழுக்க
“யாருமா” என்று கேட்க
“இவர்தான்பா நான் சொன்னேன்ல அன்னைக்கு எ எனக்கு ஹெல்ப் பண்ணவர்னு” என்று அழுதபடியே கூற அவரும்
புரிந்தவர் போல
“ஓ அவரா சரிமா நான் பார்த்துக்கிறேன் நீ அழாதே” என்றபடி அவளை சமாதானம் செய்ய அவளுக்கு அழுகை நின்றபாடில்லை.
ஹாஸ்பிடலுக்கு சென்றதும் இவரது விவரத்தை மட்டும் கொடுத்துவிட்டு கார்ட்ஸ் உதவியுடன் மேதாவை அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டார்.
ஆனால் யாரும் அறியா வண்ணம் அங்கு ஒரு பாடிகார்ட்டை மட்டும் உளவு பார்க்க சொல்லிவிட்டு சென்றார்.
அழும் மேதாவைதான் அவரால் சமாதானமே செய்ய முடியவில்லை ஒரு தாய் அவளது கண்முன் உயிரைவிட்டது அவளுக்கு அவளது தாயின் நியாபகம் வந்துவிட அவளது அழுகை அதிகமாகி கொண்டே போனது.
ஏதேதோ சமாதானம் செய்து அவளை உறங்கவைப்பதற்குள் அவருக்கு போதும் போதுமென்றானது.
Interesting
Mikka nandri sago❤️💜😍
Achoooo paaavam… Ohhh appo aarashi oda amma vaium ivaluku therium pola…
Ama theriyum pola💜💜😍😍mikka nandri sago