அத்தியாயம் – 75
இறந்துபோன பெண்ணை பற்றி விசாரிக்க அவர் ஆராஷியின் அன்னை என்பதும் ஆராஷியின் தந்தையின் எக்ஸ் லவ்வர் யார் மூலமோ பிறந்த குழந்தையை ஆராஷியின் தந்தைக்கு பிறந்ததுதான் என்று போலி டாக்குமெண்ட்ஸ்ஸை ரெடி செய்து அவரை மிரட்டி அவரது வாழ்வில் வந்தவர் தான் மியோ(mee-oh).
ஆனால் அவரை நம்பாமலே இருந்தார் ஆராஷியின் தாய் சகுரா(sakura).

பின்புதான் சொத்து எல்லாம் அவரது பெயரில் இல்லை எல்லாம் ஆராஷியின் தாய் பேரில் இருப்பதாகவும் அவர் இறந்தாலோ அல்லது அவர் விருப்பப்படி வேறு யாருக்காவது எழுதினாலோ அதன்மூலம் இவருக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்று அறிந்தவர் கணவருக்கு தெரியாமல் அவரை வெளியூர் அனுப்பியவர் அவரிடம் நேரிடையாக சொத்தை அவர்பேரில் எழுதும்படி கேட்க அவர் மறுத்துவிட்டார் அதனால் தான் அவரை அடைத்து வைத்து சித்ரவதை செய்து அவர் எப்படியோ தப்பி வரும் போது அவரை லாரி ஏற்றி கொன்றுவிட்டார்.
போலீஸ் மூலம் தகவல் அறிந்து ஆக்சிடெண்ட் என்று கேள்விப்பட்ட ஆராஷியின் தந்தை ஓடி வர ஆராஷியை கவனித்து கொள்வது போல அவனை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார் மியோ.
ஏற்கனவே தாயின் வாழ்வில் பங்கு போட்டதால் அவரிடமிருந்து ஒதுங்கியே இருந்தான் ஆரா.
அதற்கு அவர் விட்டால்தானே?
அவனை பணையமாக வைத்தே சகுராவை மிரட்டியபடி இருந்தார்.
தன் கணவனும் தன் பேச்சை நம்பாமல் மியோவிற்கே சப்போர்ட் செய்து பேச அவர்முன் பஞ்சவேஷம் தரித்து அவரை முழுவதுமாக அவர்வசம் வைத்திருந்தார்.
ஆராஷி சகுராவின் ஜாடையில் இருக்க மியோவின் மகனோ அவரது ஜாடையிலேயே இருக்க ஆராஷியை விட அந்த பையன்மீதே அவருக்கு பாசம் அதிகமாக இருந்தது.
அதனால் அவர் மியோவினால் ஆராஷியையும் அவனது தாய் சகுராவையும் அவ்வளவாக கவனிக்காமல் இருந்தார்.
அவரது பெயரில் சகுராவின் தந்தை எழுதி வைத்திருந்த சொத்துக்களை எல்லாம் லாவகமாக அவரது கண்ணீரை காட்டி காட்டி அவருக்கே தெரியாமல் அவரது பெயரில் மாற்றி இருந்தார் எப்போதோ.
ஆனால் சகுராவோ இவரை எப்போது அழைத்து வந்தாரோ அப்போதே அவரது பெயரில் இருக்கும் சொத்துக்களை எல்லாம் ஆராஷியின் பெயரிலும் அதையும் அவன் அப்போது பயன்படுத்தும் அதிகாரத்தை கொடுக்காமல் அவனுக்கு திருமணம் ஆகி அவனது மனைவியோடு தான் அந்த சொத்துக்களை ஆளமுடியும் என்றும் இடையில் அவன் மனம் பிழன்றால் மட்டுமே அது அவனது தந்தைக்கு வந்து சேரும் என்று எழுதிவைத்துவிட்டார்.
மியோவின் தீய எண்ணம் தெரிந்தே அவர் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து இருந்தார்.
ஆராஷியின் திருமணம் நடைபெறும் போது அவனுக்கு மியோவை பற்றியும் தெரியவரும் அவனது வாழ்வுக்கும் எந்த தீங்கும் நேராது என்று எண்ணி அதனை செய்திருந்தார் அதனை அறிந்த கோவத்தில் தான் அவரை கொலை செய்ய திட்டம் போட்டதே அவர்.
இதையெல்லாம் தனது பாடிகார்ட் மற்றும் டிடெக்டிவ் மூலம் அறிந்த சரத்ஶ்ரீ சர் இதைப்பற்றி ஆராஷியின் தந்தைக்கு புரிய வைக்க வேண்டும் என்று அவர் நினைத்து அவரை தனியே சந்தித்து அவருக்கு புரியும்வகையில் ஆதாரங்களோடு விளக்கம் அவர் கண்முன் வைக்க மனைவி ஏதோ ஆக்சிடெண்ட்டில் இறந்ததாக இருந்தவர் இதெல்லாம் இவரது சதி என்று உணர்ந்தவருக்கு அடுத்த இடியாக வந்தது அவர் பேரிலிருந்த சொத்துக்களை அவர் பெயரில் மாற்றியதும் ஆராஷி காணாமல் போனதும்.
எந்தவித ஆதரவும் இல்லாமல் தன் மகனையாவது அந்த சதிகாரியின் பிடியில் இருந்து தப்ப வைக்கவேண்டும் என்று எண்ணியவருக்கு உதவி செய்தது சரத்ஶ்ரீயும் அவரது பணபலமும் அவரது மகளும்தான் ஆனால் மேதா தன் இருப்பை காட்டி கொள்ளாததால் அவளும் அங்கிருந்தது இன்றுவரை அவனுக்கு தெரியாது.
அப்போது அவனை எப்படி காப்பாற்றினார்கள் எங்கிருந்து காப்பாற்றினார்கள் என்பதை ரகசியமாகவே வைத்திருந்தனர்.
அதன்பின் சில வருடங்கள் அவனை யாராலும் மாற்றவே முடியவில்லை மனநலம் பாதிக்கப்பட்டவன்போலவே ஆகிவிட்டான் அவனுக்கு யார் தன்னை நெருங்கினாலும் தீப்பார்வையாலே அவர்களை தூர நிறுத்தினான்.
பெண்களை முற்றிலும் அறவே வெறுத்தான்.
மியோவை வெறுத்து அவரிடமிருந்து ஆராஷியை அழைத்துக்கொண்டு தனியே வந்து விட்டார்.
அவனை எதை செய்து சரிசெய்ய என்று எண்ணியபடி அவனை அவனது அன்னையின் ஆசைப்படி நடிகனாக்க முயற்சி செய்தார்.
ஆனால் அதிலும் தோல்வியே அவருக்கு கிடைத்தது.
பெண்களோடு மட்டுமல்ல ஆண்களோடு நடிக்கவும் அவன் பயம் காட்டி ஒதுங்கினான்.
சைக்கார்டிஸ்ட் டாக்டரிடம் அழைத்து சென்றும் அதற்கும் அவன் ஒத்துழைக்க மறுத்தான்.
ஆனால் அவனது தாயின் ஆசை என நடிப்புக்கான எல்லாவற்றையும் பயிற்சி எடுக்க ஆரம்பித்து இருந்தான்.
வருடங்கள் கடந்தும் அவனால் இதில் நிலைபெற முடியவில்லை.
அதனால் அவனது திறமையை நம்பி ஸ்பான்சரும் வரவில்லை அவனது சித்தி மியோ வரவும் விடவில்லை.
எப்படியாவது அவனை கொன்றே தீரவேண்டும் அவன் இறந்தால் சொத்து தன் மகனுக்கு வரும் என்று அவனை அழிப்பதற்கு எல்லா விதமான வேலைகளையும் செய்து கொண்டு இருந்தார்.
கூடவே தனது மகனை நடிகனாக்கும் வேலையில் இறங்கி இருந்தார்.
ஆராஷியின் தந்தையின் மகனாக இருந்தாலும் ஆராஷி அவனது தாயின் அழகோடு பிறந்ததால் அவன் வளர வளர அழகானவாகவும் கம்பீரமாகவும் இருந்தான்.
ஆனால் மியோவின் மகனோ அழகு குறைவுதான் நடனமாடுவதிலும் குரல்வளத்திலும் சிறிது குறைந்தவன்தான் ஆராஷியை விட மூன்று வயது சிறியவனும் கூட.
படிக்க வேண்டிய வயதில் அவனை இதெல்லாம் செய்ய சொல்லி பாடாய் படுத்திக்கொண்டு இருந்தார் மியோ.
இப்படியே இரண்டு வருடம் செல்ல ஒருநாள் மேதாவிடம் ஆராஷியை பற்றி பேசினார் சரத்ஶ்ரீ.
தற்செயலாக அவனது தந்தையை அவனுக்கு ஸ்பான்சர் செய்ய சொல்லி ஒரு பெரிய கம்பெனியிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கும்போது சந்தித்தாகவும் தாங்கள் காப்பாற்றிய அந்த பையனுக்கு எந்தவித உதவியும் கிடைக்காதபடியும் அவனை கொஞ்சம் கொஞ்சமாக மன உலைச்சலுக்கு ஆளாக்கி கொண்டு இருக்கிறார் அவரது சித்தி என்றும் அவரால் எதுவும் செய்யமுடியவில்லை என்று புலம்பியதாகவும் அவனுக்கு அவர்மூலம் ஏதாவது உதவி செய்தால் உடனே அந்த பையனை கொன்றுவிடுவேன் என்றும் நேரடியாகவே மிரட்டி வைத்துள்ளார் அதனால் அவனுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் அவரால் எதுவுமே செய்ய இயலவில்லை என்றும் அவனது உயிரை காப்பாற்ற தனியாக தங்கவைத்துள்ளதாகவும் அவன் மிகுந்த மன உலைச்சலில் உள்ளதாகவும் தேவையான நேரத்தில் அவனுக்கு அவனது அம்மாவின் சொத்தும் உபயோகிக்க முடியவில்லை என்று புலம்பியதாக கூறினார்.
சிறிது நேரம் யோசித்த மேதா.
“அப்பா ப்ளீஸ் நாமளே அவருக்கு ஸ்பான்சர் பண்ணலாமா?” என்று கேட்க அவளை யோசனையோடு பார்த்தார் சரத்ஶ்ரீ.
“ப்ளீஸ்பா என்னை என்னோட மானத்தையே காப்பாத்தினவருக்காக நான் இதுகூட செய்யலனா எப்படிபா? நானும் அங்கேயே படிக்கலாம்னு ப்ளான் பண்ணி இருக்கேன்” என்று கூறியவளை உற்று பார்த்தார் சரத்ஶ்ரீ.
“என்ன விஷயம் அஷ்ஷு குட்டி? இவ்ளோ மெச்சூர்டான பொண்ணு அக்கா வெளிநாடு போய் படிக்கிறானு இவளையும் ஜப்பானுக்கு கூப்பிட்டா மட்டும் பயந்து ஓடுவா இப்போ என் பொண்ணு ஜப்பான் போய் படிக்கிறேன்னு சொல்றா? இதெல்லாம் நம்புற மாதிரி இல்லையே? என்ன விஷயம் கண்ணம்மா? அதும் அப்பாக்கு தெரியாம?” என்று அவர் கிடுக்குபிடி போட்டு கேட்க.
அவரிடம் தான் அந்த பையனை விரும்புவதாகவும் ஆனால் அவனை அவனது சித்தியிடமிருந்து காப்பாற்றி அவனை நல்ல நிலமைக்கு முன்னேற்றிய பிறகே தன் விருப்பத்தை சொல்வேன் அதுவரை இந்த விஷயம் யாருக்கும் தெரியவேண்டாம் என்றும் மற்ற ஸ்பான்சர்க்கு அவனது சித்தியை பற்றி தெரியாது அதனால் அவர்கள் அவனுக்கு ஸ்பான்சர் செய்ய வாய்ப்பு இல்லை அவரை பற்றி தெரிந்த நாமளே ஸ்பான்சர் செய்தால் அவருக்கு உதவியாக இருக்கும் அவரது சித்தியாலும் எதுவும் செய்ய முடியாது என்று அவள் கேட்க அவர் ரொம்பவும் ஆச்சர்யம் பட்டார்.
எதனால் அந்த பையன்மேல் அவளுக்கு ஈர்ப்பு வந்தது என்று கேட்க அவள் சொன்ன காரணம்
ஒரு பொண்ணை எப்படிப்பட்ட சூழ்நிலையில அதும் மென்சஸ் டைம்ல பெத்தவங்களே கூட அவளை ஒதுக்கித்தான் வைப்பாங்க ஆனா அவளுக்கு அந்த நேரம் தேவைபடுறது ஆதரவுதான் அதும் அவள்கிட்ட எதையும் எதிர்பார்க்காம அவளை அந்த நேரத்தில புரிஞ்சு அவகிட்ட நடந்துக்கிற விதமும் தான் அவளோட மனசுல ஆணிவேரா பதியும். அந்த வகையில தான் அவன் அவளோட மனதில் பதிந்தான் அதும் இல்லாமல் இப்போது அவனுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நான் அவனுக்கு உதவவேண்டும் என்று அவள் கூற அவளை எண்ணி பெருமையாக இருந்தது அவருக்கு.
ஒரு பெண்ணை அவளது மிகவும் இக்கட்டான நேரத்தில் காத்த ஆண்மைதனத்தை தான் தன் மகள் விரும்பியுள்ளாள் என்றும் இப்போது அவனுக்கு உறுதுணையாக அவள் இருக்க நினைக்கிறாள் என்று சொன்னதும் நினைக்கையிலேயே அவருக்கு பெருமையாக இருந்தது.
சந்தோஷ களிப்பில் அவளை அணைத்துக்கொண்டார்.
“உன்ன நினைச்சு பல சமயம் நான் ஆச்சரியம் பட்டு இருக்கேன்டா அஷ்ஷுமா உன்னைவிட பெரியவள் உன் அக்காக்கு கூட உன்கிட்ட இருக்கிற பக்குவம் இல்ல ஆனா நீ எதை எப்படி செஞ்சா எப்படி போகும்னு யோசிச்சு அதுக்கு ஏத்தமாதிரி கொண்டு போறியே உன்னோட விருப்பம்கூட எப்படிப்பட்டதுனு பிரம்மிப்பா இருக்கு எனக்கு.
கண்டிப்பா உன் சாய்ஸ் தப்பா போகாது.
ஆனால் எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு அதுக்கு ஒத்துக்கிட்டா தான் நான் இந்த ஐடியாக்கு ஓகே சொல்லுவேன்” என்று அவர் பீடிகை போட அவனை வேண்டாம் என்று சொல்லிவிடுவாரோ? என்று கவலையாய் பார்த்தாள்.
அவளது தலையை ஆதரவாய் வருடியவர்.
“அவனை நான் வேணாம்னு சொல்ல மாட்டேன்டா அஷ்ஷுமா.
உன்னோட சாய்ஸ் அவன். அந்த சாய்ஸ்ஸ செலெக்ட் செய்யறதுக்கு முன்ன நீ எவ்ளோ யோசிச்சு இருப்பனு எனக்கு தெரியும்.
ஆனால் என்னோட கேள்வி இதுதான் இப்போ உனக்கு சின்ன வயசு இது ஜஸ்ட் இன்ஃபாக்ச்சுவேஷனா கூட இருக்கலாம்ல. படிக்க போறேன்னு சொல்ற இடத்துல வேற யார்மேலயாவது உனக்கு க்ரஷ் வந்து உன்னோட லவ் மாற சான்ஸ் இருக்குல்ல? அதனாலதான் நான் கேட்கிறேன் என் கண்டிஷனுக்கு ஓகேவானு?” என்று அவர் கேட்க.
அவரை தீர்க்கமாய் பார்த்தவள்
நான் சரத்ஶ்ரீ யோட பொண்ணுப்பா எனக்கு லவ் ஒருத்தர் மேல ஒருமுறைதான் வரும்.
அது சாகுறவரை மாறாது அவரே என்னை வேணாம்னு சொன்னாகூட அவர் நல்லா இருக்க என்னவெல்லாம் செய்வேனோ அதை தூர நின்னு செய்வேனே தவிர வேற ஒரு வாழ்க்கைக்கு என் லைஃப்ல இடம் தரமாட்டேன்” என்றாள் முடிவோடு.
அவளை தோளோடு அணைத்தவர் அவளது நெற்றியில் முத்தமிட்டு
“ஐயம் சோ ப்ரவுட் ஆஃப் யூ பேபி.
என் கண்டிஷன் இதுதான்.
ஆல்ரெடி நீ பிஸினஸ்ஸை பார்க்குற அளவுக்கு பெரிய ஆளா ஆகிட்ட அதனால அந்த பையனோட ஸ்பான்சர் நீதான் உன் பேர்லதான் நான் ஸ்பான்சர்ஷிப் கொடுப்பேன் அந்த பையனோட ஸ்பான்சர்ஷிப் சம்பந்தப்பட்ட எல்லா வேலையும் நீ உன் கன்ட்ரோல்ல தான் மேனேஜ் செய்யனும். போய் பேசுறது நான் பேசுறேன் ஆனா சீக்ரெட்டா உன்னைதான் எல்லா அதிகாரத்துக்கும் ஆளா வைப்பேன் அதுக்கு ஓகேனா எனக்கும் ஓகே.
எனக்கும் என் பொண்ணு எப்படி பிஸினஸ்ஸ ஹாண்டில் பண்ணுவானு நானும் பார்க்கனும்ல?” என்று அவர்கூற
“அப்பா” என்று சிணுங்கியபடி அவரது தோளில் சாய்ந்து கொண்டாள் அவரும் சிரித்தபடி அவளை அணைத்துக்கொண்டார்.
அடுத்து வந்த நாட்களில் சரத்ஶ்ரீ ஆராஷியின் தந்தையை சந்தித்து பேசி அவனுக்கு ஸ்பான்சராக சம்மதம் பெற்று அக்ரிமெண்ட் சைன் செய்தனர். அவர்மேல் இருந்த நம்பிக்கையில் ஆராஷியும் அவனது தந்தையும் அவர் சொல்லியதை மட்டும் வைத்து அக்ரிமெண்ட் சைன் செய்து இருந்தனர் அதனால் மேதா ரகசியமாக ஆராஷிக்கு ஸ்பான்சர் ஆனாள்.
அவனது அனைத்து வேலைகளையும் அவளது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தாள்.
அவர்களது அக்ரிமெண்ட் படி ஆராஷியை டெபுயூட் செய்யும் முன் பாதுகாக்க வேண்டும் என்று முதலில் இடத்தை மாற்றினாள். அவளுக்காக சரத்ஶ்ரீயும் அவரது நண்பனும் வாங்கிய அப்பார்ட்மெண்ட் பக்கத்திலேயே அவனுக்கான இடம் வாங்கப்பட்டு அதில் வீடு அவனது ப்ராக்டிஸ்க்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் எல்லாம் மரவீடு போல அமைக்கப்பட்டது.
அவனை உடனே இடம் மாற்றவேண்டுமானால் அதற்காக இந்த ஏற்பாடு அது கொரோனா காலம் என்பதால் அங்கு மாஸ்க் அணிந்தபடி தான் இருக்க வேண்டும்.
வாயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரியை வாட்ச்மேனாக நியமித்தனர்.
அதுவும் இல்லாமல் அவனுக்கு தந்தையை விட நல்ல நண்பனாக ஒருவன் துணை வேண்டும் என்று சரத்ஶ்ரீ கூறியதால் முதலில் ஒருவரை அவனது டான்ஸ் மாஸ்டராக நியமனம் செய்ய அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் அவருடன் ஒண்டாமல் இருக்க வேறு யோசனை செய்தனர் அதில் மேதாவே அவனுக்கு டான்ஸ் மாஸ்டரை தேர்வு செய்ய அப்போது வந்தவன்தான் ரியோட்டோ அங்கு ஒரு சிறுவனிடம் அவன் நடந்து கொண்ட முறையை பார்த்தவள் அவனையே ஆராஷியின் டான்ஸ் மாஸ்டராக தேர்வு செய்தாள் கூடவே தன் தந்தையிடம் அவள் சொன்ன அறிவுரை என்னவெனில்
மாஸ்டராக போனால் எத்தனை பேராக இருந்தாலும் அவருடன் நெருங்க முடியாது அவரை இந்த சூழ்நிலையிலிருந்து வெளிவர வைக்க அவருடனே இருந்து இன்ப துன்பங்களை பகிரும்படி ஒரு சகோதரனாக இருந்தால் நல்லது என்று கூற அவளது யோசனையின் படி சரத்ஶ்ரீ அப்படியே ஆராஷியின் தந்தையிடம் கூற அவருக்கும் அது சரியென பட ரியோட்டோவை பற்றி விசாரிக்க அவனது கதையை கேள்விபட்டவர் ஆராஷியை பற்றி ஓரளவு சொன்னவர் முழுதுமாக அவனே சொன்னால்தான் சரி என்று அவர் கூறாமல் அவனது சம்மதம் பெற்று அவனை ஆராஷியின் சகோதரனாக தத்து எடுத்துக்கொண்டார்.
அன்று முதல் ஆராஷியை நெருங்க ரியோட்டோ முதலில் முயலவில்லை.
விட்டு பிடிப்பதுதான் நல்லது என்று எண்ணியவன் அவனும் சோகமாக இருப்பது போல காட்டிக்கொண்டு சுற்ற அதனை கவனித்த ஆராஷியே ஒருநாள் அவனிடம் சென்று பேசினான்.
அப்போது அவனது கடந்தகாலத்தை கூறியவன் மேல் அவனுக்கு ஓரளவுக்கு பரிதாபமும் நம்பிக்கையும் வந்தது.
அதனால் அவனும் தன்னை பற்றி மேலோட்டமாக சொல்லி இருந்தான்.
இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக ஆறுதலாய் மாறி இருந்தனர்.
அதனால் ரியோட்டோ மட்டுமே அவனுடன் இருக்க முடிந்தது வேறு யாரையும் அவன் அருகில் வர விடவில்லை.
ஆனால் அதே சமயம் அவனை நடிகனாவதை தடுக்க மியோ பெரிய பெரிய சதிகளை செய்தபடி இருந்தார்.
ஆராஷி சற்று சாதாரணமாக இருந்த நேரம்தான் அவனது பக்கத்து அப்பார்ட்மெண்ட்டில் வந்து சேர்ந்தாள் மேதா.
ஏற்கனவே பக்கத்து ஃபோர்ஷனில் ஷர்மாவின் குடும்பம் இருந்தது.
ஆனால் அவனது தந்தை இந்தியாவில் தொழில் நடத்தி வருவதால் அங்கும் இங்குமென அலைந்தபடி இருந்தார் அதனால் அவளுக்கு அப்போது தெரியாமலே போனது அவர் தன் தந்தையின் தோழன் என்பது.
பார்த்த முதல்நாளே ஷர்மாவும் மேதாவும் நல்ல நண்பர்கள் ஆயினர்.
அவனிடம் ஏனோ அவளது எல்லா இரகசியங்களையும் கூறி இருந்தாள். அவனுக்கோ ஆச்சரியம் இப்படி ஒரு பெண்ணால் ஒருவனை காதலிக்க முடியுமா என்று?
அடுத்து வந்த நாளில் ரியோட்டோவிடமும் அவளுக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டு விட்டது அந்த சம்பவத்தால்.
அன்றைய தினம் மலையாளிகள் கொண்டாடும் கேரளத்தின் ஸ்பெஷலான ஓணம் பண்டிகை.
அதனால் அழகாக பட்டு பாவாடை சட்டை அணிந்து முகத்தில் மாஸ்க்கும் அணிந்து இருந்தாள் மேதா.
அவளுக்கு பிடித்த அவளது வளர்ப்பு நாய் ஜிம்மியும் அவளையே சுற்றி சுற்றி வருவாள் எப்போதும்.
டோக்கியோவின் அழகான அமைதியான வீட்டின் பக்கத்து ஃபோர்ஷனில் குடியிருந்த மனநலம் குன்றிய சிறுவன் செய்த அட்டகாசத்தால் அவளது உணவை ஆசையாக சாப்பிட வந்த ஜிம்மி வேகமெடுத்து பின்னோக்கி ஓட.. அந்த இரும்பு படிகளில் உள்ள சந்தின் வழியே மறுபுறம் இருந்த அந்த மரவீட்டின் மேல் பகுதியில் கத்திக்கொண்டே விழுந்தது..
எங்கு நாய்க்குட்டி விழுந்து விடுமோ என பயந்து பிடிக்க போனவளும் மற்றதை மறந்து “ஜிம்மி” என்று கத்தியபடி படிகளில் இறங்கி அந்த மரவீட்டுக்கு சொந்தமான வீட்டின் வாசலை நோக்கி ஓடினாள்..
சத்தம் கேட்டு மேலே பார்த்தவன் சட்டென அவளது குரலையும் கேட்டவன் ஓடிச்சென்று நாய்க்குட்டியை பிடிப்பதற்குள் மரவீட்டிலிருந்து வழுக்கி அங்கிருந்த நீச்சல் குளத்தில் விழுந்தது ஜிம்மி..
உடனே உடனே ஏற்பட்ட அதிர்ச்சிகளில் ஜிம்மி நீந்துவதையும் மறந்து போனது..
உடனே நீச்சல் குளத்தில் பாய்ந்தவன் ஜிம்மியை தூக்கிக்கொண்டு வெளியே வர அது ஓஓவென கத்தியது அவனது பிடியில்.. அவன் கையில் வேறு இரத்தமாக இருக்க உடனே தூக்கிக்கொண்டு அங்கிருந்த இன்னொரு டெண்ட்க்குள் நுழைந்தான்.. அது ஒரு மெடிக்கல் கேம்ப் டெண்ட்.
அதற்குள் சத்தம் கேட்டு வந்த அவனது சகோதரனும் அவனை பார்க்க அவனும் ஜிம்மியை தூக்கிக்கொண்டு மெடிக்கல் கேம்ப் டெண்ட்க்குள் ஓட அதற்குள் கேட்டிலிருந்து காலிங் பெல் சத்தம் வர அவன் கேமிராவை பார்க்க அழுதபடி அங்கே கையை பிசைந்துகொண்டு நின்றிருந்தாள் அவள்..
அங்கு சென்று ரியோட்டோ பார்க்க அவளோ தமிழில் கெஞ்சி கொண்டு இருந்தாள் செக்யூரிட்டியிடம்.
“சர் ப்ளீஸ் என் ஜிம்மி விழுந்துட்டா அவளை நான் பார்க்கனும் விடுங்க ப்ளீஸ்” என்று அழுதபடி பேச அவளை உள்ளே விடாமல் அவளது பேச்சு புரியாமல் அவர் ஜாப்பனீஸில் பேசியபடி இருந்தார்.
அப்போது தான் ஜாப்பனீஸ் கிளாஸில் சேர்ந்து இருந்த மேதாவிற்கு அவரது பேச்சு புரியவில்லை.
அவளது தமிழை கேட்டு அங்கு வந்த ரியோட்டோ வாட்ச்மேனிடம் விசாரிக்க அவரும் “இந்த பெண் ஏதோ பேசுறாங்க புரியல ஆனா அழுதுட்டே இருக்காங்க” என்று ஜாப்பனீஸில் கூற
அவள் அருகில் வந்தவன்
“யாரு பாப்பா நீ?” என்று அவனுக்கு தெரிந்த தமிழில் கேட்க அப்போது தான் அவளுக்கு உயிரே வந்தது உடனே அவனிடம் ஓடியவள்.
“சர் சர் என்… என்னோட ஜிம்மி த…தவறி விழுந்துட்டா” என்று அவனை பார்த்து அழுதுகொண்டே கூற அவள் ஜிம்மி என்றதில் நாய்க்குட்டியை சொல்கிறாள் என எண்ணியவன்
“ஓ அது உன்னோட நாய்க்குட்டியா?”என்று கேட்க.
ஜோராக ஆமாம் என தலையை ஆட்டியவள்
“அவ… அவளுக்கு அடி பட்டு இருக்கும் போல பார்க்கனும் கேட்டேன் ஆனா இவர் உள்ள விடமாட்டேங்கிறார் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க?” என்று அவனது உதவியை நாட
“ஓகே ஓகே அழாதே பேபி இரு நான் பேசுறேன் அவர்கிட்ட” என்றபடி வாட்ச்மேனிடம் சொல்லி அவளை உள்ளே விட உள்ளே வந்தவளிடம்
“அங்கே மெடிக்கல் கேம்ப்ல இருக்கு” என்று கூற
“domo arigatogozaimasu”(ரொம்ப நன்றி) என்றுவிட்டு
அவன் சொன்ன திசையில் ஓடினாள். அவள் பின்னேயே ஓடினான் ரியோட்டோ.
ஓடியவள் அங்கே கேம்ப் திரையை விலக்க அங்கு உடம்பில் இரத்தத்துடன் இருந்த ஜிம்மியை பார்த்து மீண்டும் அழ ஆரம்பித்து விட்டாள்.
அவளை விநோதமாய் பார்த்த ஆராஷி யார் என்று பார்க்க அவளது அழுத கண்கள்தான் அவனுக்கு தெரிந்தது.
அந்த கண்கள் அவனை ஏதோ செய்தன அவளை அழவேண்டாம் என சமாதானம் செய்ய துடித்த மனதை விநோதமாய் யோசித்தான் அவன்.
அவள் பின்னே வந்த ரியோட்டோ
“அடிப்பட்டது என் தம்பிக்கு உன்னோட ஜிம்மிக்கு இல்லமா அழறத நிறுத்துமா” என்று அவளிடம் பேச அவன் அவளிடம் வேறு பாஷையில் பேசுவதை ஆச்சர்யமாய் பார்த்தான் ஆராஷி.
ரியோட்டோ சொன்னதும் கலங்கிய கண்களோடு அவனை பார்க்க அவனது கையில் வழியும் இரத்தத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அதை பார்த்ததும் அவளுக்கு மேலும் அழுகை வர
“என்னால தானே அவருக்கு அடிப்பட்டு இருக்கு” என்று அழ ஆரம்பித்து விட்டாள்.
Super😍
Mikka nandri sago💜💜❤️❤️
Ada kadavuley athukkum oru alugauaa😂😂😂😂
Andha pilla apdi than azhugachiya iruku enna seiya
Mikka nandri sago💜💜❤️❤️
Ada kadavuley athukkum oru alugaiaa😂😂😂😂
Andha pilla apdi than azhugachiya iruku enna seiya
Mikka nandri sago💜💜❤️❤️
😂😂😂😂