அத்தியாயம் – 92
- Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அவனது கோபமுகத்தை பார்த்தவனுக்கு பேசவே வரவில்லை “ஆரா” என்று அவனது கையை பிடித்தான் ரியோட்டோ.
அவனது அழுத்தத்தில் உணர்வு வந்தவன் ஹர்ஷத் கழுத்திலிருந்த கையை எடுத்தவன் கோபப்பார்வையில்
“அவ ப்ரண்டுனு பார்க்கிறேன் இல்ல நீ சொன்ன வார்த்தைக்கு உன்ன கொன்னு இருப்பேன்.
உனக்கு என் காதல் என்ன அவ்வளவு சீப்பா தெரியுதா? இல்ல என்னை பார்த்தா இவ இல்லனா இன்னொருத்தினு போறவன் போல தெரியுதா?
அவ யாருனு தெரியும் முன்னேயே அவள வேற ஒரு பொண்ணா நினைச்சு அவள என்கிட்ட இருந்து தூர நிறுத்தப்போய்தான் நான் அவள பிரிஞ்சு தண்டனையை அனுபவிச்சுட்டு இருக்கேன்.
உனக்கு தெரியும்தானேடா அவ என்னை எவ்ளோ லவ் பன்றானு? அப்புறமும் எப்படி இப்படி சொல்ல மனசு வந்தது உனக்கு?” என்று அவனது சட்டையை பிடித்து உலுக்க அவனது கையை தட்டி விட்டவன்
“ஏன்னா அவ அதைத்தான் விரும்புறா” என்று ஹர்ஷத் கத்தினான்.
அவனை புரியாமல் பார்க்க
“எனக்கு மட்டும் ஆசையா என்ன? இப்படி ஒரு காதலை பிரிச்சுவிட அவளே தான் இந்த லவ்வால நீங்க கஷ்டப்பட கூடாதுனு ஓடிட்டு இருக்கா? நீங்க வேற யாரையாவது கல்யாணம் செய்யுற வரை அவள் உங்க முன்ன வரமாட்டா.
விதி அவ வாழ்க்கையில காதலையும் உங்க மூலமா தான் கொடுத்துச்சு கஷ்டத்தையும் கொடுத்துச்சு
போதும் அவளை விட்டுடுங்க அவ எங்கேயாவது கஷ்டப்பட்டுட்டாவது என் கண்முன்ன இருந்துட்டு போகட்டும் அவள விட்டுடுங்க சர் ப்ளீஸ்” என்று ஆராஷி முன் தன் உயிர் தோழிக்காக கைகூப்பி நின்றான் ஹர்ஷத் ஷர்மா.
“இங்க என்னதான் நடக்குது ரெண்டு பேரும் ஏதாவது புரியுற மாதிரி சொல்லுங்க?
நீங்கதான் ஷர்மாவா?
ஏன் என்கிட்ட சொல்லல? அப்படி என்ன பிரச்சனை என் மேதாக்கு?” என்று நிதின் கேட்க ஆராஷிக்கு இதில் ஏதோ தன்னால் மேதாவிற்கு பெரியதாக பாதிப்பு நடந்து இருக்கிறது ஒரு வேளை தனது சித்தியால் அவளுக்கு வேறு விதமான ஆபத்து நடந்து இருக்குமோ? என்ற எண்ணமே ஓட அது தெரியாமல் விடக்கூடாது என்று எண்ணியவன்.
“ப்ளீஸ் நான் பேசி முடிச்சுடுறேன் மிஸ்டர் நிதின் நீங்க உங்க கேள்வியை அப்புறமா கேளுங்க ப்ளீஸ்” என்றபடி ஹர்ஷத்திடம் திரும்பியவன்
“இந்த ஜென்மத்தில அவளை தவிர என் லைஃப்ல வேற யாரும் இல்ல.
எனக்குனு நான் ஆசைப்பட்ட ஒரே ஆள் அவ தான் அவளுக்கு ஏதாவது ஒன்னுனா என்னால அதை தாங்கவே முடியாது அவள நான் கண்டிப்பா காப்பாத்துவேன் ப்ளீஸ் என்னால அவளுக்கு ஏதாவது ஆபத்தா? என்னானு சொல்லுங்க ப்ளீஸ் உங்ககிட்ட கெஞ்சி கேட்கிறேன் ஹர்ஷத் சொல்லுங்க ப்ளீஸ்” என்று அவன் முன் அவளுக்காக கெஞ்சி நிற்கும் ஆராஷியின் துடிப்பு பார்க்க ஹர்ஷத்துக்கே ஒரு மாதிரி ஆகிப்போனது.
எல்லோரும் ஏதோ பெரியதாக உள்ளது என்று அமைதியாக நின்றிருந்தனர்.
அவர்கள் பேசுவது புரிய வேண்டும் என்று டிரான்ஸ்லேட்டரை யாருமே கழட்டவில்லை.
அவனது துடிப்பை காண சகியாமல் அவனும் சொல்லிவிட்டான்.
இந்த விஷயம் தெரிந்தாலாவது அவன் அவளை விட்டு விலகி வேறு வாழ்வை அமைத்துக்கொள்வான் அவளது ஆசைப்படி என்று எண்ணியவன் தன் தோழிக்காக அவளது ஆசையை நிறைவேற்ற நடந்ததை அவனிடம் கூறினான்.
“நீங்க பர்ஸ்ட் டைம் இந்தியா வந்தப்போ உங்கள கொல்ல வந்தாங்க நியாபகம் இருக்கா?”
என்று கேட்க
அப்போது குறுக்கிட்ட நிதின் நீதானேடா அவளை இவரு வர்றதுக்கு முன்னாடியே கூட்டிட்டு போய்ட்ட?” என்று கூற
“இல்ல” என்று மட்டும் சொன்னவன் ஆராஷியை பார்க்க
“எஸ் அது நான் யாருக்கோ என்னவோ ஆச்சுன்னு இருந்தேன் அப்புறம் தான் ஏர்போர்ட் போலீஸ் சொல்லி எனக்கு தெரியும் அது அட்டம்ட் மர்டர்னு அதும் என்னை கொல்லனு அப்போ என்னை ஒரு பொண்ணு காப்பாத்தினதா சொன்னாங்க நானும் அந்த பொண்ணு யாருனு கூட விசாரிக்க சொன்னேன் வெயிட்” என்று பேச்சை நிறுத்தியவன்
“அப்போ என்னை காப்பாத்தின பொ…பொண்ணு மேதாவா?” என்று கேட்க
“ம்ம்ம்” என்று தலையை ஆமென ஆட்டியவன் தனது லேப்டாப் பேக்கை திறந்து
அவன் தன்னவளுக்காக வாங்கிய அந்த பெண்டென்ட்டை எடுத்து ஆராஷியிடம் நீட்டினான்.
அதை பார்த்த ஆராஷிக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம், மகிழ்ச்சி
அவன் அவளுக்காக வாங்கியது அவளிடமே சென்றுள்ளது என்று ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்காமல் போனது அடுத்து ஹர்ஷத் சொன்ன வார்த்தைகளில்.
“அன்னைக்கு நடந்த மர்டர் அட்டெம்ட்ல மேதாவோட வயிற்றில் கத்தி ஆழமா இறங்கிடுச்சு.
நான் உடனடியா அவளை ஜப்பான்க்கு கூட்டிட்டு போய்ட்டேன் அந்த கத்திக்குத்தால அவளது கர்ப்பப்பை பயங்கரமா பாதிக்கப்பட்டு போச்சு அவளாள ஒரு குழந்தையை சுமக்குற அளவுக்கு இல்லை அடிக்கடி வயிற்று வலியில துடிப்பா அதனால எங்க ஃபேமிலி டாக்டர்கிட்ட தான் செக் செய்தோம் அதிலே அவளுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லைனு சொல்லிட்டாங்க இந்த விஷயம் அவளுக்கு நீங்க அவளை அவமானம் படுத்தி அனுப்பின அன்னைக்குத்தான் அவளுக்கு தெரியும் அதனால தான் அவ உங்கள விட்டு பிரிஞ்சு போய்ட்டா”
என்று அவன் பேச பேச அனைவருக்கும் அதிர்ச்சி
அதிர்ச்சியின் உச்சத்தில் வேகமாக ஹர்ஷத்தின் சட்டையை பற்றிய நிதின்
“என்னடா சொல்ற நீ? என்ட மோளுக்கு என்ன ஆச்சு? நீ எந்த டாக்டர் கிட்ட காட்டின அவங்க ஏதாவது தப்பா சொல்லி இருப்பாங்க. என் மேதா எங்கடா இருக்கா? என் குழந்தை எவ்ளோ கஷ்டத்தைடா தாங்குவா? நீயெல்லாம் என்னடா ப்ரண்ட் இதையெல்லாம் எங்க கிட்ட மறைச்சு வெச்சு யாரோ போல இங்க வந்து இருந்து இருக்க” என்று கண்ணீரோடு கேள்வி கேட்க அவனால் பதிலே சொல்ல முடியாது கலங்கி நின்றான்.
அவனிடமிருந்து ஹர்ஷத்தை பிரித்த ஆராஷி கோவமாக அவனை தன் பின்புறம் நிறுத்தி
“எனக்கு இப்போ உண்மை என்னானு தெரியனும்” என்று நிதினை முறைத்தபடி கூறியவன் ஹர்ஷத்திடம் எதையும் கேட்கவில்லை அவனை கூர்மையாக பார்த்தபடி நின்றான்.
அவனது பார்வை உடலில் குளிரை பரப்ப
“அன்னைக்கு ஒரு ப்ராஜெக்ட்ல நடந்த மிஸ்டேக் விஷயமா நான் அவசரமா மேதாவ ஜப்பான் கூட்டிட்டு போக வேண்டி ஆகிடுச்சு அதனால நான் என்னோட சொந்த ப்ளைட்ட எடுத்துட்டு வந்து இருந்தேன் அவளை அழைச்சுட்டு போக எங்களுக்கு டேக் ஆஃப் டைம் மாறினதால் நாங்க அங்க வெயிட் பண்ண வேண்டியதா போச்சு அப்போதான் நீங்க வந்தீங்க இங்க உங்கள தூரத்தில இருந்து பார்த்துட்டு வர்றேன்னு அவ பர்மிஷன் கேட்டா ஆனா நான் கொடுக்கலை அதனால கோச்சுகிட்டு அங்கேயே நின்னுட்டு இருந்தா நான் ஏதோ ஃபோன் வந்ததுனு கொஞ்சம் தான் தள்ளி நின்னு பேசிட்டு இருந்தேன் அதுக்குள்ள நீங்க ஏதோ ஜூவல் ஷாப்ல இருந்து வரும்போது யாரோ ஒருத்தன் உங்கள பார்க்குறதையும் ஃபோன்ல ஏதோ பேசுறதையும் கவனிச்சவ உங்கள எச்சரிக்கை செய்ய தான் வந்தா அதுக்குள்ள அவன் கத்தியை எடுக்கவும் அவ உங்களுக்கு பின்னாடி வந்து கத்தி குத்து வாங்கிகிட்டா
நான் திரும்பும்போது தான் அவ உங்களுக்கு பதிலா கத்தியால் குத்தப்பய்டு விழப்போனவள நான் வந்து தாங்கிட்டேன் அவ உங்களுக்கு பின்னால விழுந்ததுல நீங்க தடுமாறி உங்க பொருளும் விழ அதுக்குள்ள பாடிகார்ட்ஸ் வந்து உங்கள கூட்டிட்டு போய்ட்டாங்க அடிப்பட்டத யாருக்கும் சொல்லக்கூடாதுனு அதுக்கும் ப்ராமிஸ் வாங்கிட்டா அதனால அங்க இருந்த எங்க அப்பாவோட ப்ரண்ட் இன்ப்ளூயன்ஸ்ல அவளுக்கு இரகசிய மருத்துவம் பார்த்து உடனே நான் ஜப்பான் கூட்டிட்டு போய் அங்க ஹாஸ்பிடல்ல வெச்சு அவளுக்கு வையித்தியம் பார்த்தோம்.
ஒரு மாசம் என் வேலையெல்லாம் விட்டு நானும் மெடில்டாவும்தான் அவளை பார்த்துக்கிட்டோம்.
அதனால தான் அவள் ஒரு மாசம் கழிச்சு இவருக்கு டிரான்ஸ்லேட்டரா வந்தா அப்பவும் அடிக்கடி அவளுக்கு வயிற்றுவலி இருந்துட்டு இருந்தது அதைதான் நான் சண்டை போட்டு செக் செய்ய வெச்சேன் அவளோட ரெகுலர் டாக்டர்க்கிட்ட செக் பண்ணா உங்களுக்கு தெரியவரும் அதுனால நீங்க பயப்படுவீங்கனு தான் அவள எங்க ஃபேமிலி ப்ரண்ட் டாக்டர் கிட்ட செக்கப் செய்ய வெச்சேன் அவங்க பெரிய டாக்டர் தான் அவங்க ஒன்னுக்கு மூனு முறை அவளை செக் பண்ணிட்டு தான் இந்த விஷயத்தையே சொன்னாங்க.
இந்த விஷயத்தை அன்னைக்கு வீட்டுல பார்ட்டி நடந்தது இல்லையா? அன்னைக்குதான் அவகிட்ட சொன்னாங்க அன்னைக்கு முன்னாடி நாள்தான் எனக்கும் சொன்னாங்க.
அதனால தான் நான் உடனே கிளம்பி வந்தேன் அதுக்குள்ள இவரு அவளை ரொம்ப தப்பா பேசவும் இதையே காரணமா வெச்சு அவ இவரோட வாழ்க்கையில இருந்து விலகனும்னு என்கூட உடனே கிளம்பிட்டா இவருக்கு ஒரு வாழ்க்கை அமைச்சுக்குற வரை அவ இவர் முகத்தை பார்க்க மாட்டார் நானும் எவ்வளவோ பேசி பார்த்துட்டேன் மெடிசன்ஸ் எடுத்து சரி பண்ண ட்ரை பண்ணலாம்னும் சொல்லிட்டேன் ஆனா அவளோட முடிவுல இருந்து அவ மாறமாட்டா” என்று கூறி முடிக்க இடி விழுந்தது போல அனைவரும் அதிர்வோடு அசையாமல் இருக்க முதலில் நினைவு வந்தவனாக ஆராஷி பேசினான்.
“இப்போ என்ன நான் அவ ஆசைப்படி வேற யாரையாவது கல்யாணம் செஞ்சு சந்தோஷமா வாழணும் அதை பார்த்து அவ சந்தோஷம் படணுமா?” என்று அவன் ஹர்ஷத்தை பார்த்து கேட்க அவனை பார்த்த ஹர்ஷத் ஆமாம் என தலையை ஆட்டினான்.
“நிஜமாகவே நீங்க அவளோட ப்ரண்ட்டா ஹர்ஷத்?” என்று ஆராஷி கேட்க அவனை அதிர்ந்து கோவமாய் பார்த்தான் ஹர்ஷத்
“கோவம் வருதா? உங்களுக்கு இதே கோவம் அந்த பையித்தியக்காரி இப்படி ஒரு முடிவு எடுத்தப்போ ஏன் வரல?” என்று கேட்க
அவனை புரியாமல் பார்த்தான் ஹர்ஷத்
“எனக்கு கோவம் வரலைனு நினைக்குறீங்களா? நான் அவளோட சண்டை போடலைனு நினைக்குறீங்களா? நான் எவ்ளோ பேசினேன்னு எனக்கும் அவளுக்கும் தான் தெரியும்” என்று அவன் முடிப்பதற்குள்
“அப்போ இதே பிரச்சினை ஆராஷிக்கு வந்து இருந்து அவனால ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆகமுடியாதுனு தெரிஞ்சா நீ அவனை விட்டு போய்டுவியாடினு ஏன் கேட்கல?” என்று கிட்டத்தட்ட அந்த ரூமே அதிர கத்தினான் ஆராஷி.