26
எப்போதுமே, ஒழுக்கமாக வளர்ந்தவர்கள் மன சோர்வடையும் நேரங்களில் அவர்கள் மூளை வேலை செய்யும் திறனை இழக்காது. அதனால் முன்னிலும் அதிகமான ஒழுக்கமான நடவடிக்கைகளையே மேற்க் கொள்வார்கள். அதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன சோர்விலிருந்து வெளியே வந்து தங்களை முன்னிலும் மேலாக காத்து கொள்வார்கள்.
ஆனால் ஏதேனும் ஒரு சின்ன கெட்ட பழக்க வழக்கங்கள் இருப்பவர்கள் அத்தகைய மன சோர்வான தருணங்களில் மூளையின் செயல் திறன் குறைந்து என்ன செய்வது என்னும் வகை அறியாது முன்னிலும் அதிகமாக கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி போவார்கள்.
உடல் பயிற்சி மேற்க் கொண்டால் எடை குறையும். ஆனால் எந்நேரமும் நிவி நிவி என்று ஓலமிடுகின்ற மனதை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதே நேரத்தில் வயலில் இறங்கி வேலை செய்தால் உடலும் குறையும், அவளிடமிருந்து மனதை வேறு வழியில் திசை திருப்பி களைத்து உறங்க முடியும்.
தீர்மானித்து விட்டான் என்ன செய்ய வேண்டும் என்பதை.
அடுத்ததாக அதற்கான திட்டமிடுதல்.
நபார்ட் வங்கியின் எழுவத்தி அஞ்சு சதவிகித மானியத்துடன் கூடிய கிராம பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில் கடன் தொகைக்கு விண்ணப்பித்தான். டெல்டா மாவட்டங்களில் குருவை சம்பா சாகுபடி பற்றி தெரிந்து கொண்டான். கடன் தொகையில் மாட்டு பண்ணை கோழி வளர்ப்பு என்று அது ஒரு புறம் என்று தன்னுடைய உடல் உழைப்பை மூலதனமாக கொண்டு செயல் பட தொடங்கி விட்டான்.
இதில் அவனுக்கு உறுதுணையாக இருந்தது ஒன்று பொன்னி. மற்றொன்று அடுத்த கிராமத்தை சேர்ந்த வரதராஜன்.
தன்னுடைய தம்பியும் அவன் பெற்று வைத்திருந்த புத்திர சிகாமணியும் சேர்ந்து உழைக்காமல் கஷ்டப்படாமல் வந்த சொத்தில் நன்றாக ஆண்டு குடி கூத்து என்று அனுபவித்து பார்த்திருந்தவள் பொன்னி. அன்று கூட குடித்து விட்டு தான் அப்பனும் பிள்ளையும் வண்டியில் போய் அடிபட்டு சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்கள். அதற்கு நேர்மாறாக இத்தனை படித்தவனாக இருந்தும் நேரிடையாக வயலில் இறங்கி வேலை செய்யும் அருள் அவளுக்கு புதிது என்றால் அவன் அவளை வாய் நிறைய ஆத்தமார்த்தமாக அம்மா என்று அழைப்பதோ புதிதிலும் புதிது. அவளை
அப்படி யாருமே அழைத்தது இல்லை.
யார் அதிகமாக மன்னிக்க படுகிரார்களோ அவர்கள் அதிகமாக அன்பு செய்வார்கள் என்பது உண்மை அல்லவா..!
அதிகமாக மன்னிப்பு பெற்றவள் பொன்னி. அதனால் அவள் அருளை மிக அதிகமாகவே அன்பு செய்தாள். இங்கு வந்த புதிதில் இவ்வளவு உடல் உழைப்புக்கு பழக்கப்பட்டிராத அருள் உடல் வேதனை தாங்கமால் இரவுகளில் அரற்றும் போது அவள் தான் அவன் கால்களை பிடித்து விடுவாள் அவன் எவ்வளவு தடுத்த போதும்.
அருளுக்கு உள்ளூர் கல்லூரியில் வேலை கிடைத்த போது அவன் திட்டமிட்ட வேலைகளை பொன்னியே கங்காணியாக நின்று செய்து முடிப்பாள்.
அடுத்ததாக வரதராஜன். முதன் முதலில் அங்கு சுற்றுவட்டார விவசாயிகள் கூட்டத்தில் இவன் ஒன்றும் அறியாதவனாக கலந்து கொண்ட போது அவனை யார் என்ன எவர் என்று கேட்டு அவன் மாணிக்கத்தின் மகன் என்பதை அறிந்து அவனுடைய அப்பாவின் வயது ஒத்த பெரியவர்கள் அடடா இவன் நம் மாணிக்கத்தின் மகன் என்று தோளில் நட்போடு கை போட்டு அவனை அவர்களில் ஒருவனாக அங்கீகரித்து கொண்டார்கள்.
வரதராசனோ அவனை ஒரு சிஷ்யனாகவே ஸ்வீகாரம் செய்து கொண்டார். அடிப்படையில் விவசாயம் மற்றும் நீர்பாசன பொறியாளனான அருள் புது வித விவசாய முறைகளில் பழமையான பயிர்களையே விவசாயம் செய்ய தொடங்கினான்.
கோவை வேளாண் ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் வரதராஜனின் ஆலோசனையுடன் பழைய கால விளைப் பொருகளை விளைவித்தான். மாப்பிள்ளை சம்பா, சீராக சம்பா, கருப்பு கவுனி, சிவப்பு கவுனி பூங்காறு, குள்ளக்காறு ஒத்தடையான் காட்டுயானம் தூயமல்லி என்று விதவிதமாக மாற்றி போட்டு பயிரிட்டு பார்த்தான். இவைகள் நீரிழிவு நோயை கட்டுபடுத்தகூடியது மற்றும் மருத்துவ குணங்கள் கொண்டது.
இவ்வளவு விஷயத்திலும் அவனுக்கு வரதராஜனின் ஒரே மகள் செல்வி தான் உறுதுணையாக இருந்தாள். அவளும் அவனுடன் கல்லூரியில் பணியாற்றி கொண்டு இவனை போலவே தந்தைக்கு தொழிலில் உதவி செய்து கொண்டிருப்பவள். இணையத்தில் தேட வேண்டியதை அவளே அவனுக்கும் அவளுக்குமாக தேடி தருவாள்.
நகரத்தில் ஏதேனும் வாங்க, விற்க, கொண்டு செல்ல, விவசாய கூட்டங்களுக்கு சென்று வர என்று எந்நேரமும் அவள் அருளுடனே இருப்பாள். அடுத்தவர்கள் பார்வையில் இருவரும் மிகவும் பொருத்தமான ஜோடி என்று தோன்றும் அளவிற்கு இருவரும் எந்நேரமும் கல்லூரியிலும் கூட சேர்ந்தே இருந்தார்கள்.
அருள் அவன் ஊர் பக்கம் போகவே நேரமில்லாமல் இங்கேயே உழைத்தான். அதனால் அவனை காண சரோஜா மட்டும் வந்து செல்வாள். இன்னும் பொன்னியின் மீதான மனவருத்தம் மாணிக்கத்திற்கு முற்றிலுமாக குறையாததால் அவர் இங்கு வருவதை தவிர்த்தார். இவனை காண வரும் சரோஜா பொன்னியிடம் அருளின் திருமணத்தை பற்றியும் நிவேதிதா அவனை தூக்கி எறிந்து போனதையும் சொல்லி மூக்கை சிந்துவாள். பொன்னி ஆறுதல் கூறும் வகையில் எல்லாம் கூடி வந்தால் செல்வியை அருளுக்கு திருமணம் செய்து வைப்பதாக சொல்லுவாள். அவர்கள் இருவரின் எண்ணமும் இந்த விஷயத்தில் ஒன்றாகவே இருந்தது.
பொன்னியின் கவனிப்பும் நல்ல இயற்கை வகை உணவு முறையும் உடல் உழைப்பும் சேர்த்து அவன் மிக எளிதாக உடல் எடை குறைந்து போனான். மழையிலும், வெயிலிலும் சோர்வடையாமல் உழைத்தான் என்றால் சோர்ந்து போகும் நேரங்களில் எல்லாம் கண்ணாடி முன்பு நின்று தன் கையால் இடுப்பு மடிப்பை பிடித்து பார்த்து கொள்வான்.
இப்போது அவனை பார்க்கும் பெண்கள் எல்லோரும் மீண்டும் ஒருமுறை திரும்பி பார்க்காமல் போவதில்லை என்றான போது மனது ஏங்கும் இப்போது நம்மை நிவி ஒருமுறை பார்க்க கூடாதா என்று? தான் கட்டிளம் காளையாக உருமாறி நிற்பதை பார்க்கும் நிவியின் கண்களில் தோன்ற கூடிய திகைப்பை அவன் கற்பனையில் கண்டு வந்தான்.
அவனுடைய வயல்களில் குறைந்த நீர் பயன்பாட்டில் அதிக மகசூல் கொடுக்க கூடிய பயிர்களை விளைய வைத்து அதை ஆராய்ச்சி செய்து வருகிறான்.
அவன் விவசாய கருத்தரங்குகள் பயிற்சி பட்டறைகளுக்கு எல்லாம் போகும் போது அழைக்க வசதியாக இருக்கட்டும் என்று தன்னுடைய பெயரை சுருக்கி அபீசியல் பெயராக கொடுத்திருப்பது எம்.ஏ.எம்.வர்மன்.
அப்படியாகவே இங்கு அறியபட்டிருந்தான் அவன்.