Skip to content
Home » அபியும் நானும்-20 நிறைவு பகுதி

அபியும் நானும்-20 நிறைவு பகுதி

🍁20
      ராஜேஷ் அபிமன்யு கீர்த்தனா மூவரையும் ஒன்று சேர்க்கும் நாளும் சில வருடம் கழிந்து வந்தது. ஆம் எட்டு வருடம் கழித்து தமிழகம் திரும்பினாள் கீர்த்தனா…  அவளோடு அபிநயாவும்.

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  


         இங்கு ஒரு ஸ்பெஷல் பள்ளியில் ‘சிறப்பு கதை சொல்லி’யாக அபிநயா அழைத்து இருக்க கீர்த்தனா அபியை முன் உதாரணம் படுத்தும் விழாவை மறுப்பாளா? அவள் பள்ளியில் பணிப்புரியும் ஸ்டெல்லா ஆண்டர்சனுடன் தமிழகம் வந்து இறங்கினாள்.
          தனியாக அவ்வறையில் இருந்த கீர்த்தனா, அடுத்த நாள் அபிநயா இங்கே இருந்து விழா சிறப்பித்து, அதற்கு மறுநாளே ஆஸ்ட்ரேலியா சென்றிட வேண்டும் என்று யோசனையில் படுத்து கொண்டாள்.


       அபிநயா தான் வரும் பொழுது பார்த்த கார்ன் எடுத்து சுவைத்து கொண்டு இருக்க, கீர்த்தி கண்களில் அவள் சிறுவயதில் கார்ன் உணவினை உண்டா நினைவில் கண்ணீர் சுரந்தன.

        அப்படியே உறங்கும் அன்னையினை அணைத்து கொண்டு விழி நீரை டிசு பேப்பர் கொண்டு துடைத்து அணைத்து கொண்டு அபிநயா உறங்கினாள்.

 தனது மீட்டிங் எல்லாம் கேன்சல் செய்த ராஜேஷ் வீட்டில் எங்கோ கிளம்ப ஆயத்தமானான். அதனை கண்ட கேத்ரீன் “என்ன ஆச்சு மீட்டிங் எல்லாம் கேன்சல் செய்து எங்க கிளம்பற” என்று ஜூஸை கொடுத்தபடி கேட்டாள்.

      “மல்லிகா மிஸ் தெரியுமா? அவங்க ரொம்ப வருஷம் கழிச்சு போன் செய்தாங்க. அபி கீர்த்தனா பற்றி பேசனும் சொல்லி, இதோ இந்த ஹோம் நடத்தற ஸ்கூலுக்கு வர சொன்னாங்க அதான்” என்றான்.

        இத்தனை வருடத்தில் கேத்ரீனுடன் ராஜேஷ் இந்தளவு பகிரும் அளவிற்கு அவர்கள் அன்பு மாறியிருந்தது.

     “ராஜேஷ் கொஞ்சம் டைம் கொடுக்கிறீயா நானும் அபிஷேக்கை கிளம்பி, உன் கூட வர்றேன். அபி கீர்த்தனா எங்க இருக்காங்கனு நானும் விசாரிக்கறேன்” என்றதும் சரி என்று தலை அசைத்தான்.

      கேத்ரீன் எட்டு வயது அபிஷேக் கிளம்பி ராஜேஷ் காரினை எடுத்தான்.

சாண்டல் நிற பெரிய கவுன் அணிந்து அபிநயா தன் கை வளையலை பார்த்தபடி வர, அந்த அறையின் கார்பெட் தடுத்து விழ போனவளை கீர்த்தி கை பிடித்து நிறுத்தினாள்.

     “அபி கவனமா நட” என்றதற்கு வாயை பன்(bun) போல செய்து வாயை ஊத, அபிநயாவின் விளையாட்டில் சிரிப்பு வந்தாலும் முறைக்க, அபியோ கண்களை சுருக்கி உதடு பிதுக்கினாள்.

    “கேப் வந்திடும் அபி அந்த பொட்டு எடுத்து வை” என்று கீர்த்தி சொல்ல அவளோ பொட்டு எடுத்து மேல் நெற்றியில் வைத்து அமர, கீர்த்தனா அதை சரியாக இரு புருவத்தின் மத்தியில் வைத்து, மகள் அழகை இரசித்து நெட்டி முறிக்க எதுக்கு செய்றாங்க என்பது போல பார்த்தாள் அபிநயா.

   அதற்குள் கேப் வந்திட கிளப்பினார்கள்.

    ஹோம்மில் இருந்த ஸ்பெஷல் குழந்தைகள் வரிசையாக அமர வைத்து இருக்க, அடுத்த இருக்கையில் ஸ்பெஷல் குழந்தைகள் அவர்கள் பெற்றோர்களுடன் அமர்ந்து இருந்தனர். அவர்களை கண்டு ராஜேஷ் கண்ணீர் வாடித்தான்.

     “என் அபி கூட நான் இப்படி இருந்து இருக்கனும் கேத்ரீன்… வாழ்க்கையில் நிறைய தப்பு பண்ணி இருக்கேன்” என்றான்.

     “என்ன ராஜேஷ் இது கண்ணை துட… பையன் பார்க்கிறான் பாரு… நீ மட்டுமா நானும் தான்… இப்ப வருந்தி என்ன செய்ய.? நாம முன்னே தெளிவா யோசித்து இருக்கனும். மனைவிக்கு துரோகம் பண்ற நீயும்… அடுத்தவளின் கணவனிடம் ஒரு செக்யுர்டு லைப்பை நானும், யோசித்து இருக்க கூடாது… எல்லாம் நடக்கனும் இருந்து இருக்கு… விடு.. அந்த மிஸ்ஸை பார்த்தியா….? கீர்த்தி அபிநயாவை பற்றி தகவல் சொன்னாங்களா?” என்றாள் கேத்ரீன்.

    “இல்லை உட்காருங்க கொஞ்ச நேரம் கழித்து வர்றேன்னு சொன்னாங்க அவ்வளவு தான்” என்றான் ராஜேஷ்.

     இங்கு அபிமன்யு ஸ்பெஷல் சைல்டு விழா என்றாலே தேடி பிடித்து கிளம்புவான். இன்று கீர்த்திகாவுக்கு தெரிந்த இடமாக இருக்க, அவனும் குடும்பத்தோடு கிளம்பி இருந்தான். இவர்கள் பேச்சை கேட்டு வறட்டு புன்னகை ஓரத்தில் நின்று சென்றது.

      அவனின் பார்வை கீர்த்தனா அபியை தான் தேடியது என்றும் போல்…

     கீர்த்திகா அவனை தனியாக அமர வைத்து விழாவில் தெரிந்தவரை பார்த்து பேச போக, அபிமன்யு ராஜேஷை பார்த்ததும் கிளம்பிட இருந்தான். அவனால் கேத்ரீன் அவர்களின் மகன் என்பதை காண முடியவில்லை… தான் விரும்பியவள் வாழ வேண்டிய வாழ்க்கை அது, அவனுள் வலியை தர எழ முயற்சிக்க, அதே நேரம் விழா ஆரம்பிக்க, பின்னால் இருந்தவர்கள் அமர சொல்ல வெறுப்பாக அமர்ந்தான்.

அங்கே சாண்டல் கவுன் அணிந்து வந்தவளும், சிவப்பு வண்ண காட்டன் சேலையில் கீர்த்தனா கண்டதும், அபிமன்யு அப்படியே சிலையாக அமர்ந்தான். கண்கள் கலங்கி இருந்தன.

     ராஜேஷ் அதே போல தான் இருந்தான். என்ன கூடவே கண்ணீர் வற்றாமல் வடிய ஊமையாக அழுதான்.

    கேத்ரீன்  தான் “கண்ட்ரோல் ராஜேஷ் அதான் பார்த்தாச்சே, பேசுவோம், நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போவாம்” என்றதும் தலை ஆட்டினான்.

        அங்கே சிறப்பு விருந்தினர் பேசியது, ஸ்பெஷல் சைல்டு ஆடிய நடனம், பாட்டு, கதை என்ற பேச்சுக்கு எல்லாம் அபிநயாவை தான் பார்த்து இருந்தான் ராஜேஷ்.

      அதுவும் அபிநயா காற்று மாசு பற்றி ஒரு கதை வடிவில் சொல்லி முடிக்க அரங்கம் அதிர கைதட்டல் வலுத்தன.

      கீர்த்தியிடம் மல்லிகா மிஸ் ஏதோ பேச கீர்த்தனா கண்கள் விரிந்து பின்னர் தலை அசைத்து பரவாயில்லை என்றபடி கண்கள் ராஜேஷ் இருக்கும் திசை பார்க்க, அடுத்து பார்வை திருப்ப அபிமன்யுவை கண்டதும் திகைத்தாள். அதே நேரம் கீர்த்திகா தான் அபிநயாவிடம் அறிமுகம் ஆனாள்.

கீர்த்தனா தான் முன்பு சந்தித்ததை சொல்லி, அபிக்கு உங்களை போல ‘கதை சொல்லி]’யாக வர ஆசை ஈடுபாடு இருக்க, அவள் இப்படி வளர ஒரு காரணம் கீர்த்திகா என்றாள்.

கீர்த்திகா வந்து அபிநயாவிடம் பேசி அறிமுகமாக இருந்தவளுக்கு இது இன்ப அதிர்ச்சியாக மாறியது.

     கீர்த்தனா தான் கீர்த்திகா பேசபேச தன்னை ஒருவன் ஊடுருவி பார்ப்பதை போலவே உணர்ந்தாள்.

     ஒன்று ராஜேஷ் என்று வெளிப்படையாகவே தெரிந்தாலும், தன்னை மனுவும் பாரக்கின்றான் என்பதை கீர்த்தனா மட்டுமே அறிந்து இருந்தாள்.

     விழா முடிந்து மல்லிகா மிஸ் கீர்த்தனா அருகே வந்து “மன்னிச்சுடு கீர்த்தி ரொம்ப வருஷம் தேடினார். நீ அங்கேயே இருந்தா சொல்லி இருக்க மாட்டேன். ஆனா இங்க வந்ததும் சொல்லனும்னு தோனுச்சு… உனக்கு தொந்தரவு இருக்காது என்றதும் தான் வர சொன்னேன்.” என்றார்.

    “பரவாயில்லை மிஸ்… அபியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ராஜேஷ் கண்ணில் தெரியுது” என்றவள் அவனை நோக்கி அபியை அழைத்து சென்றாள்.

          ‘நீ வேண்டாம் வேண்டாம் என்ற குழந்தை எப்படி வளர்ந்து இருக்கின்றாள் பார்’ என்பது போல நிமிர்வோடு… கர்வத்தோடு… நீ இல்லாமலே அவளை ஒரு சிறப்பு விருந்தினராக கொண்டு வந்து இருக்கின்றேன் இங்கு.’ என பெருமை கொண்ட முகத்தோடு வந்து நிற்க, ராஜேஷ் கண்கள் இருவரையும் கண்டு கலங்கியது.
“வாவ் உன் பையனா ராஜேஷ்? சோ ஸ்வீட்….7 வயசா 8 வயசா? பேர் என்ன? நீங்க எப்படி இருக்கீங்க கேத்ரீன்?” ராஜேஷிடம் ஆரம்பித்து கேத்ரீனிடம் கேட்டாள்.

  “நல்லா இருக்கோம் கீர்த்தனா… அபி நல்லா வளர்ந்து இருக்கா…” என்ற கேத்ரீன் தீடீரென கீர்த்தனா கை பற்றி “மன்னிச்சுடு கீர்த்தனா… உன் வாழ்க்கை இப்படி திசை மாறி போக, ஒரு விதத்தில் நானும் காரணம்” என்று வருந்தினாள்.

    “கேத்ரீன் என்ன பண்ற? இது பொது இடம். என் வாழ்க்கையில் நீ எதுவும் பண்ணலை.. அப்படியே நடந்து இருந்தாலும், எனக்கு யார் மேலயும் வருத்தம், கோவம் இல்லை… இப்படி பேசாதீங்க…” என்றவள் அபிஷேக் பார்த்து பேச்சை திசை திருப்பினாள்.

   “அபி…அபி…” என்ற படி ராஜேஷ் பேச முடியாது மகளை கட்டி அணைக்க முடியாமல் தவித்து அழுதான்.

   கீர்த்தி தான் “ராஜேஷ் அவளுக்கு ஏதும் சொல்லாதே புரிந்து புரியாம குழம்புவா ப்ளிஸ்” என்று அபிநயா அபிஷேக் விளையாடும் தருண்ம் உரைத்தாள். அபிநயாவும் அபிஷேக் அங்கு இருந்த ஊஞ்சலில் ஆட போனார்கள்.

   “மல்லிகா மிஸ் மூலமா நீ என்னை தேடியது தெரியும்… அப்பா அம்மா இறந்தது தெரியும்… உனக்கு ஆண் குழந்தை அதுவும் அபிஷேக் பெயர் வைத்ததும் தெரியும்.. நான் ஆஸ்திரேலியாவில் தமிழ் கற்று கொடுத்து அபிநயாவை வளர்த்து கொண்டு இருந்தேன். எனக்கு ஆண்டர்சன் ஸ்டெல்லா உதவியா இருந்தாங்க… இப்ப வரை நிம்மதி இருக்கு. நான் வாழற லைப் அந்த நாட்டில் தனித்து இருப்பது எல்லாம் சாதாரணம். அதனால எனக்கு வேற பாதிப்பு இல்லை… நீயே பாரு நான் சந்தோஷமா இருக்கேன்” என்றவாறு ராஜேஷ் கேத்ரீன் மனம் வாடாது பேசினாள்.

    ராஜேஷ் தான் அப்பொழுதும் குற்ற உணர்வில் மிதந்தான். “சாகற வரை இந்த குற்ற உணர்வு போகாது கீர்த்தனா உன்னை விரும்பி வந்து காதலிச்சது நான். உன்னை விட்டு விலகியதும் நான்” என்றான் அழுகையுடன்.

மூவரும் அமைதியாக “மாம் பேபி பாருங்க செம கியூட்டா இருக்கு என் டிரஸ் இழக்கறா” என்றபடி தூக்க தெரியாமல் அபிநயா 4 வயது பெண் குழந்தையை தூக்கி கொண்டு வந்தாள்.

   “ஏய் யாரு பாப்பா இது” என கீர்த்தனா வாங்கி முத்தம் வைத்தாள்.

   “சோ ஸ்வீட் பாப்பா… உங்க மம்மி எங்க” என்றதும் கையில் இருந்த பிஸ்கேட் கீர்த்தனா புடவையில் பூசினாள் குழந்தை.

கீர்த்திகா ஒடி வந்த “சாரி உங்ககிட்ட வந்துட்டாளா அவர்கிட்ட தான் பார்த்துக்க சொன்னேன்” என திரும்ப அபிமன்யு இந்த பக்கமே பார்ப்பதை கண்டு, கீர்த்தனா தான் ஏதோ ஒரு குற்றவுணர்வில் இருந்தாள்.

     ராஜேஷ் கீர்த்தனாவை பார்த்து இருந்த குற்றவுணர்வு.. கீர்த்தனாவுக்கு அபிமன்யுவை பார்த்து தோன்றியது.

     அவன் காதலை சொல்லி கெஞ்சி பேசி, தான் அவன் தந்தை முன் அவனை மறுத்து பேசியது, எல்லாம் தோன்ற இவன் மனதை உடைத்து காயப்படுத்தியது நினைத்து மனம் வலித்தது.
அவனோ நேராக இவர்கள் பக்கம் வந்தவன்

   “கீர்த்திகா… எனக்கு வேலை இருக்கு கிளம்புறேன் நீ பேசிட்டு வா” என்றவன். அபிநயா அருகே வந்து “காட் பிளஸ் யூ டா… உன்னை பார்த்ததும் மனசு நிறைந்துடுச்சு” என்று அபிநயா நெற்றியில் ராஜேஷ் கொடுக்க தயங்கிய முத்தத்தை ஒரு தந்தையாக முத்தமிட்டு வேகமாக கிளம்பிட முனைந்தான்.

“மனு கீர்த்தனா நினைவு இல்லையா நீ.. இவங்க கூட பேசியிருக்க” என்றாள் கீர்த்திகா.

“மறக்க முடியுமா? நல்லாவே நினைவுயிருக்கு. நான் கிளம்புறேன் கீர்த்திகா” என்றான் அபிமன்யு.

ராஜேஷ் அமைதியாக இருந்தான்.
சாதாரணமாக கூட பேச விடாமல் செய்து விட்டோமே என வருந்த கீர்த்தனா அபிமன்யு போனதும் “நீங்களும் கிளம்புங்க கீர்த்திகா… அவருக்கு தலைவலி போல..” என குழந்தை கன்னத்தில் முத்தமிட்டபடி உரைத்தாள்.

” குழந்தை பெயர் என்ன” என கீர்த்தனா கேட்க கீர்த்திகாவோ “அபிநயா…” என்றவள், அபிமன்யு சொல்லாத அவனின் காதலி கீர்த்தனா என்றும், அபிநயா மீது அவன் கொண்ட பாசமும், அந்நொடியில் புரிந்தது.

அடுத்த நொடி, அபிமன்யுவை எப்படி தனிமையில் விட்டேன்? அவனின் உண்மை காதல், வலி கொடுத்து இருக்குமே! என்று கீர்த்திகா யோசிக்க, கீர்த்தனாவோ “அவரை பாருங்க போங்க” என்று அனுப்ப முயல, கீர்த்திகா கஷ்டப்பட்டு  முறுவலோடு விடை பெற்று கிளம்பினாள்.

போகும் பொழுது அபிநயா கீர்த்தனா இருவரையும் மாறி மாறி பார்த்தே..

அபிமன்யு காரில் ஸ்டீயரிங் சாய்ந்தவன், கீர்த்திகா வந்து அவன் தலையில் கை வைக்க நிமிர்ந்தவன் கண் கலங்கி இருக்க கண்டாள்.

“அது டஸ்ட் கண்ல பட்டுடுச்சு அதான்” என சமாளிக்க காரில் அமர்ந்த கீர்த்திகா “கீர்த்தனா… கீர்த்தனா தானே மனு.. நீ காதலித்த பொண்ணு?” என்று தோளை தொட உதடு மடித்து ‘ஆம்’ என்பதாய் தலை அசைத்து உடல் குலுங்க அழுதான்.

“சாரி மனு உன்னை இங்க கூட்டிட்டு வந்து கஷ்டப்படுத்திட்டேன்.” என்றாள் கீர்த்திகா.

“இல்லை கீர்த்திகா… அவளை பார்க்க ரொம்ப வருஷம் ஆசைப்பட்டேன். அவ லைப் எப்படி இருக்கோனு தவித்து இருக்கேன். இப்போ நேரில் பார்த்ததும் சந்தோஷம் தான். அதுவும் அபிநயா உன்னை மாதிரி மாறி இங்க கெஸ்ட்டா கூட்டிட்டு வந்து இருக்கா பார்றேன்.. தட்ஸ் கீர்த்தனா. ரொம்ப பெருமையா இருக்கு…” என்றான் அபிமன்யு.

“அப்போ கீர்த்தனாகிட்ட பேசாம வந்துட்டீங்க?” குழம்பி கேட்டாள்.

“அவளுக்கு ராஜேஷ் எதிர்ல நின்று சந்திக்கற தைரியம், என்னை பார்க்க முடியாம தவிச்சா… என் காதலை மறுத்து என்னை அப்பா முன்னால் பேசியது.. இதெல்லாம் யோசிச்சு என்னை பேஸ் பண்ண தயங்குறா… அதான் அவ மேல கோபம் இருப்பது போல வந்துட்டேன்” என்றதும் கீர்த்திகா பார்க்கும் பக்கம் பார்வை திருப்ப கீர்த்தனா எல்லாம் கேட்டப்படி நின்றுயிருந்தாள்.

” சாரி… பாப்பா கோல்டு செயின் என் சேலையோட மாட்டி இருந்துச்சு போல” என்று கொடுக்க கீர்த்திகா தான் வாங்கி “மனு பேசு” என வற்புறுத்தினாள்.

அவன் சிலை போல அப்படியே இருக்க “தேங்க்ஸ் மனு… கடவுளுக்கு கூட வாழ்க்கை முழுக்க நான் நன்றி சொன்னது இல்லை. ஆனா நான் தினமும் நன்றி சொல்லறேன் என்றால் அது உங்களுக்கு மட்டும் தான்… என் அபிநயா இப்படி சீப் கெஸ்ட்டா மாற, இந்த மனு மட்டும் தான் காரணம். அதை என்றைக்கும் மறக்க மாட்டேன்” என்றாள் கண்கள் கலங்க கீர்த்திகாவை பார்த்து வர்றேங்க என்பது போல முகம் மலர்ந்தாள். அபிமன்யுவோ

ராஜேஷ் கேத்ரீன் அவர்களின் பையன் அபிஷேக் ஒருபுறம் அழைத்து, அவர்கள் கூட இருக்க சொல்லியதை தவிர்த்து… அபிமன்யு கீர்த்திகா அவர்கள் மகள் அபிநயா இருக்க, நிறைவாய் அபிநயாவை அழைத்து கீர்த்தனா நடை போட்டாள்.

எங்கள் வாழ்வில் அபியும் நானும் மட்டுமே என்பதாய்…. அதில் முன்புயிருந்த அதே அழுத்தம் இருந்தது.

                          🍁நிறைவு🍁

– பிரவீணா தங்கராஜ்

நன்றி மகிழ்ச்சி.

சொல்ல வந்ததை சரியா சொன்னேனா தெரியலை இங்க நான் கீர்த்தனா லைப் தான் எடுத்து சொல்ல வந்தேன்.

சிலர் மறுமணம் பண்ணி இருக்கலாம் கேட்கலாம். ஆல்ரெடி “புன்னகை பூக்கட்டுமே” நாவல் அந்த கான்சப்ட் தான்.

பெண்ணுக்கு ஆண் துணை வேணும் என்றால் மனுவிடம் கீர்த்தனா சேர்த்து வைத்திருக்கலாம். பட் இங்க ஒரு பெண் ஸ்பெஷல் சைல்டு தனியா வளர்த்து ஆளாக்க முடியும் என்பது தான் என் கருத்து.

எப்பவும் என் ஸ்டோரில sad அதிகம் இருக்காது. அதான் இதுலயும் பட்டும் படாமலும் ஆனா தெளிவா சொல்லி இருக்கேன்னு நம்பறேன்.

இது வரை படித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி…. ஆதரவுக்கும் நன்றி.  

1 thought on “அபியும் நானும்-20 நிறைவு பகுதி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *